இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 28 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 07-05-2024

Total Views: 19256

“அபி மா தலைவலினு சொன்னியே என்று இந்தா இஞ்சி போட்டு டீ கொண்டு வந்திருக்கேன்.” என்று பார்வதி சூடான டீயை கொண்டு வந்து மருமகளின் அறையிலேயே கொடுக்க

“நானே வந்து போட்டுப்பேன்ல ம்மா..” என்று அபி வாங்க பாத்ரூமிலிருந்து தன்னை சுத்தம் செய்து வந்த அபிநந்தன் அம்மா பேசியது கேட்டு

“லாஷா என்னாச்சு அம்மா தலைவலினு சொல்றாங்க…” என்றிட

“ஆமா நந்து ஆஃபிஸ் வேலை கொஞ்சம் ஜாஸ்தி… அதான்” என்றிட

“நந்தா உனக்கும் டீ கொண்டு வந்திருக்கேன் எடுத்துக்கோ… அபி நைட்டு டிபன் வேலை நான் பார்த்துக்கிறேன் நீ ரெஸ்ட் எடு.” என்று சொல்லி சென்றார் பார்வதி.

காலையில் வைத்து காய்ந்த மல்லிகை சரத்தை எடுத்து போட்டவள் பின்னியிருந்த தலையை அவிழ்த்து நெற்றியின் இரண்டு பக்கவாட்டிலும் கையை வைத்து அழுத்திக் கொண்டே பார்வதி வைத்து சென்ற தேநீரை பருகிக் கொண்டு இருக்க தனக்கு வைத்த தேநீரை உறிஞ்சியபடியே டேபிளில் எதையோ தேடி எடுத்தான் அபிநந்தன்.

தேநீர் குடித்து விட்டு அபி ஆயாசமாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்திட அவள் பின்னால் வந்து நின்று கையில் இருந்த தைலத்தை இதமாக அவளுக்கு தேய்த்து விட்டு அவளும் கண்ணை மூடி ரசித்தாள் அவனின் அக்கறையை… 

“இப்போ ஓகேவா லாஷா” என்று மென்மையாக கேட்க

“ம்ம்… ஃபீல் பெட்டர் நந்து… நந்தூ.. நீங்களும் அம்மாவும் சேர்ந்து வீட்ல என்னை முழு நேர சோம்பேறி ஆக்கிட்டீங்க தெரியுமா?” என்று அபி சொல்ல

“ம்ம் பரவாயில்ல லாஷா அதான் அதுக்கும் கோசேர்த்து ஆஃபிஸ் வேலை உனக்கு அதிகமா இருக்கே…” என்று சொல்ல

“ஆமா நந்து… நான்கூட அந்த ப்ரதீப் சும்மா ஏதோ கல்யாணம் முடிஞ்ச உடனே பொண்டாட்டியை கடத்திட்டு ஹனிமூன் போவேன்னு சவால் விடுறான்னு பார்த்தா இங்க இருக்கிற கொடைக்கானல் போனவன் இன்னும் ஆளை காணோம் பாருங்க…” என்று சொல்ல மௌனமாக சிரித்தான் அபிநந்தன்.

“ஸ்ஸ் சாரி நந்து… அவன் கூட போயிருக்க அச்சுவை நான் எதுவுமே சொல்லலை… அந்த ப்ரதீப் தான்… இவ்வளவு நாள் ஆஃபிஸ் வொர்க் எல்லாத்தையும் அவனே பார்த்துட்டு இப்போ மொத்தமா என் தலையில கட்டிட்டு போன கடுப்பு தான்…” என்று சமாளிப்பாக சிரித்துக் கொண்டே சொல்ல

“நான் எதுவும் தப்பா நினைக்கல லாஷா.. ஆனா ப்ரதீப் அவரோட ஹனிமூன் ப்ளானோட நம்மையும் சேர்த்து தான் வரச் சொல்லி கூப்பிட்டாரு ஆனா நாம தான் வரலைனு சொல்லிட்டோம்.” என்று நினைவு படுத்திக்

“அது அம்மாவை எப்படி தனியா விட்டுட்டு போறது நந்தன்?” என்று கேட்டவை

“நீ கொஞ்ச நேரம் தூங்கு…” என்று சொல்லி விட்டு வெளியேறினான் அறையை விட்டு…

இன்னும் அக்சயா படிப்பு முடியாத காரணத்தால் “விடுமுறை உள்ள போதே எங்காவது வெளியூர் போயிட்டு வந்திடுங்க அப்பறம் அக்சயா காலேஜ் போகனும் நீ ஆஃபிஸ் போகனும் உங்களுக்குனு டைம் இல்லாத மாதிரி தோணும்…” என்று மோகன்ராம் சொல்ல அதன் படியே கொடைக்கானலில் உள்ள தங்கள் கெஸ்ட் ஹவுஸ் செல்ல திட்டமிட்ட ப்ரதீப்

“அபி நீங்களும் நியூ மேரிட் தானே… வாங்க நாம நாலு பேரும் அப்படியே ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம்.” என்று கேட்க

“இல்ல ப்ரதீப் ஆன்டி அங்கிள் தனியா இருந்து பழகினவங்க ஆனா அம்மா அப்படி இல்ல அச்சுவும் நந்துவும் கூடவே இருந்து பழகிட்டாங்க இப்போ அச்சு மேரேஜ் ஆகி போனதே அம்மா ஃபீல் பண்றாங்க இப்போ நாங்களும் உங்களோட ட்ரிப் வந்தா… வேண்டாம் நீங்க முதல்ல போய்ட்டு வாங்க அப்பறம் நானும் நந்துவும் போறோம்…” என்று தன்னோடு மட்டுமின்றி தன் தாயையும் சேர்த்து யோசித்த தன்னவளை பெருமிதமாக பார்த்தான் அபிநந்தன்.

அதன் படி ப்ரதீப் அக்சயா ஒருவாரம் தங்குவதற்கு திட்டமிட்டு செல்ல அங்கோ பத்மாவதியின் சொந்தங்கள் நிறைய பேர் இருக்க இவர்கள் வந்தது தெரிந்து ஒரு நாளுக்கு ஒருவர் தங்கள் வீட்டிற்கு விருந்துக்கு அழைக்க

“சொந்தங்களை மறுக்க முடியாது ப்ரதீப்… எல்லாரும் நம்ம மேல உள்ள அன்புல தானே கூப்பிடுறாங்க… எனக்கு அம்மா அப்பா அண்ணன் தவிர வேற எந்த சொந்தமும் தெரியாது யார் வீட்டுக்கும் போனதும் இல்ல.. ஆனா இப்போ இதெல்லாம் எவ்வளவு ஜாலியா இருக்கு தெரியுமா?” என்று அக்சயாவும் சொல்ல மறுப்பானா அவன்… அழைப்பார்கள் அனைவர் வீட்டிற்கும் சென்று தன் மனைவிக்கு இன்னும் இன்னும் நிறைய சொந்தங்களை அறிமுகம் செய்தான் ப்ரதீப்.

ஆனால் திருமணத்திற்கு முன் அலுவலக வேலைகளை மொத்தமாக கவனித்துக் கொண்டு இருந்த ப்ரதீப் இப்போது விடுமுறையில் இருக்க மொத்த பொறுப்பும் அபி தலையில் இறங்க அதை தவிர 

அபிலாஷாவின் நாட்கள் அவளவனின் அன்பில் கரைந்து பார்வதி அக்கறையில் நெகிழ்ந்து அழகாய் நகர்ந்தது அபிலாஷாவின் வாழ்க்கை…

எப்போதாவது எதையாவது காரணம் காட்டி அழைக்கும் அவளின் சித்தி அத்தை இவர்களிடம் கூட மனம் நோகாமல் அவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்குமாறு பேச நன்கு கற்று வைத்திருந்தாள் அபிலாஷா.

இதில் ஏற்கனவே நிச்சயம் செய்து வைத்திருந்த பவியின் திருமணம் நிகழ தன் கணவன் குடும்பத்தோடு சென்று தன் திருமணத்தில் அவள் செய்தது போலவே இவளும் அவள் திருமணத்தில் இறுதி வரை உடன் இருந்து நல்லபடியாக புகுந்த வீட்டில் விட்டு வந்தாள் அபிலாஷா.

முகில் ப்ரதீப் இருக்கும் போது அடங்கி ஒடுங்கி இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவன் அவன் இல்லாத நேரத்தில் வம்படியாக வந்து பேச்சு வளர்க்காமல் அவனுக்கு தரப்படாத பொறுப்புகளையும் அழகாக செய்து தான் ஒரு பெரும் திறமைசாலி என்று நிரூபிக்க போராடினான். 

ஆரம்பத்தில் என்னவோ செய் என்று கண்டு கொள்ளாமல் இருந்த அபிலாஷா அவன் கொஞ்சம் அதிகப்படியாக இவளின் வேலையிலும் ‘இப்படி முடிவு எடு அபி…’ என்று சொல்லி விட

“உனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் பாரு முகில்…” என்று தட்டி வைத்தாள் அபிலாஷா.

மோகன்ராம் தன் மகன் தன் நிறுவனத்தின் பொறுப்புகளை ஏற்காது தனியாக தொழில் துவங்கி தன் காலில் நிற்க ஆசை என்று சொல்லிட தன் உதவிக்கு அபிநந்தனுக்கு தன் கம்பெனியில் தனக்கு அடுத்த அதிகாரத்தை கொடுத்து வைத்திருந்தார் மோகன்ராம்.

ஒருவழியாக ஒரு வாரம் என்று கொடைக்கானல் சென்ற ப்ரதீப் அக்சயா இருவரும் இருபது நாட்கள் கழித்து வந்திருக்க இன்னும் ஐந்தாறு நாட்களில் கல்லூரி விடுமுறை முடிந்து அக்சயா மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்க அவளுக்கு வேண்டிய அனைத்தும் தேடி தேடி வாங்கி குவித்தான் அவளின் மணாளன்.

கல்லூரி சென்றால் “தினமும் சென்று அம்மாவை பார்க்க முடியாது அதனால என் மருமக மனசு வருந்துவா லீவ் முடியிற வரை அச்சுவை அவ வீட்டுக்கு கூட்டிட்டு போய் கூட தங்கிட்டு வா” என்று ப்ரதீப்பிடம் சொல்லி அக்சயாவோடு அங்கு அனுப்பி வைத்தார் பத்மாவதி.

வீட்டிற்கு விருந்துக்கு வந்த மாப்பிள்ளை என்று பார்வதி பார்த்து பார்த்து கவனிக்க அபிநந்தன் நட்போடு பழகினான். அபிலாஷா ப்ரதீப் செய்த விளையாட்டு தனங்களை எல்லாம் சொல்லி சொல்லி வம்பிழுக்க அவளோடு துணை சேர்ந்து அக்சயாவும் கலாய்த்து தள்ளினாள். 

ப்ரதீப் அக்சயா அங்கு தங்கி இருக்கும் போதே பவி மற்றும் அவள் கணவனுக்கு அபிலாஷா குடும்பத்தினர் விருந்து வைக்க ஜெனி கீர்த்தனா சதீஷ் மட்டுமின்றி சந்தியாவும் வந்து கலைகட்டியது அபிநந்தன் இல்லம்.

விடுமுறை முடிய அக்சயா வழக்கம் போல அவளின் கல்லூரி படிப்பை தொடர ப்ரதீப் தினமும் அவளை கல்லூரியில் இறக்கி விட்டு அலுவலகம் செல்வான். மாலை தனக்கு நேரம் இருந்தால் வந்து அழைத்துச் செல்பவன் வேலையில் மாட்டிக் கொண்டால் அவளுக்குத் தகவல் தந்து கேப் புக் செய்து பத்திரமாக வீட்டிற்கு வரவழைத்திடுவான்.

அன்று வார விடுமுறை என்று வழக்கம் போல சந்தியா அபிநந்தன் வீட்டிற்கு வர பார்வதியும் அபிநந்தனும் மட்டுமே இவளை வரவேற்று பேசிக்கொண்டு இருக்க இவளுக்காக தேநீர் தயாரித்து கொண்டு வந்தார் பார்வதி.

அதை வாங்கியவள், “என்ன அத்தை எப்பவும் உங்க மருமக தான் உள்ளே வந்த உடனே டீ வேணுமா காஃபி வேணுமா ஸ்நாக்ஸ் எதுவும் பண்ணட்டுமானு அவ்வளவு உபசரிப்பா… இப்போ இன்னைக்கு எங்கே ஆளையே காணோம்? எங்கேயும் வெளியே போயிருக்காளா?” என்று சந்தியா கேட்க 

“அவளுக்கு உடம்பு சரியில்லை சந்தியா… ரூம்ல ரெஸ்ட் எடுக்கிறா…” என்று பார்வதி சொல்ல

“என்னாச்சு அத்தை டேய் அபி நீ கூட சொல்லவே இல்லை?” என்று சந்தியா கேட்க

“ஆக்சுவலா நான் ஏற்கனவே உன்கிட்ட இதுபற்றி பேச நினைச்சேன் சந்தியா நீ கைனாக் தானே அவளை கொஞ்சம் செக் பண்ணு…” அபிநந்தன் சொல்ல

“நந்தா… அதெல்லாம் வேண்டாம் ப்பா இதெல்லாம் இயற்கையா வர வலிதான் சில பெண்களுக்கு இப்படி தான் இருக்கும். ஒரு குழந்தை பிறந்தா சரியாகிடும்.” என்று பார்வதி சாதாரணமாக சொல்ல

“அத்தை என்ன இப்படி சொல்றீங்க? என்ன பிரச்சினை?” சந்தியா மீண்டும் கேட்க

“இல்ல சந்தியா அபி வீட்டுக்கு தூரம் ஆகிருக்கா… அதான் வயிறு வலிக்குதுனு சொல்றா… அடிவயித்துல எண்ணெய் தேச்சு வெந்தயம் முழுங்க சொல்லி சொன்னேன். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்…” என்று பார்வதி சொல்ல

“பாரு சந்தியா ரெண்டு மூணு மாசமா அவளுக்கு பெய்ன் வருது. ஆனா அம்மா இதையே சொல்லிட்டு இருக்காங்க.. அவளும் இவர்களுக்காக அவ பெய்ன் மறைச்சிட்டு சும்மா ரெஸ்ட் மட்டுமே எடுக்கிறா… நீ போ என்னனு பாரு” என்று அபிநந்தன் உறுதியாக சொல்ல சந்தியா அறைக்கு சென்றாள்.

சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்த சந்தியா “அபி… அபிலாஷாவை நாளைக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு வா ஒரு ஸ்கேன் பண்ணி பார்க்கனும்…” என்று சந்தியா சொல்ல

“என்ன சந்தியா அபிக்கு என்னமா பிரச்சினை? ஐயோ கடவுளே! இது தெரியாம நான் கை வைத்தியத்தை பார்த்துக்கிட்டு இருந்திருக்கேனே…” என்று பார்வதி புலம்ப

“அத்தை பயப்படாதீங்க… பெருசா எதுவும் இருக்காது. இதுவே என்னோட டவுட் கிளியர் பண்ணிக்க தான்…” என்றிட

“என்ன ப்ராப்ளம் சந்தியா சொல்லேன்…” என்று அபிநந்தன் தவிப்பாக கேட்க

“அபி… நீ ஃபர்ஸ்ட் ரிலாக்ஸாகு… இது என்னோட டவுட் தான்.. ஒருவேளை உண்மையா இருந்தா அது என்னனு நான் சொல்றேன்… நாளைக்கு மறக்காம ஹாஸ்பிடல் வந்திடு.” என்று சொல்லி விட்டு இன்னும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு சென்றாள் சந்தியா.

தொடரும்…




Leave a comment


Comments


Related Post