இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 26 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 07-05-2024

Total Views: 19897

அத்தியாயம் 26

இந்தர் வெளியேறியதும் அவன் தூக்கி எறிந்த தாவணியை பார்த்து கதறி துடித்தாள் பெண்ணவள்.

ஏதேதோ எண்ணங்கள் வந்து போக இன்னும் அதிகமாக அழுகையில் கரைந்தவளை தேற்ற யாரும் அருகில் இல்லை.

தேற்ற வேண்டியவனும் கோபமாக பின் கட்டிற்கு செல்ல அங்கு ஒரு கல்லின் மேல் தலை குனிந்து அமர்ந்து இருந்தான் வாசுதேவன். 

அவனை யோசனையாக பார்த்து சென்ற இந்தர், வாசு... இங்க என்ன பன்ற... அங்க அவ்ளோ வேலை இருக்கே....?" என்க.

அவனின் குரலை கேட்டவன் பட்டென எழுந்து அவனை அணைத்துக் கொள்ள இந்தரோ அதிர்ந்தான்.

அவனின் கண்ணீர்த் துளிகள் இந்தரின் சட்டையை நனைக்க அவனை முகத்தை திருப்பி பார்க்க அவனோ நிமிர்ந்தானில்லை.

"ஏய்.... இங்கப்பாருடா... என்ன ஆச்சு.... அவ.. அதான்... உன் பொண்டாட்டி திரும்ப ஏதாச்சும் சொன்னாளா.... இன்னைக்கு அவ மண்டைய உடைக்கிறேன் பாரு...." என்க.

"சுரேன்...அமைதியா இரு... அதெல்லாம் ஒன்னும் இல்ல... எனக்கு என்மேலதான் கோபம்... ஒரு சின்ன பொண்ணு என்னைய ஏமாத்தற அளவுக்கு நான் ஏமாளியா இருந்துருக்கேன்னு நினைக்கும்போது என்மேலதான் எனக்கு வருத்தம்...." என்க.

"டேய்... இடியட்... லூசா.. நீ... அவ ஏமாத்தினா அதுக்கு நீ என்ன பண்ணுவ விடு பார்த்துக்கலாம்.... உனக்கு அந்த சுசிலாவையே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்..." என்க.

"சுரேன்... அதெல்லாம் ஒன்னும் வேணாம்... இதுதான் என் தலையெழுத்துன்னு நான் வாழ பழகிக்கிறேன்..." என்க.

"பைத்தியம் மாதிரி பேசாத... அவ உனக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவ... அவள பார்த்தாவே எனக்கு அவ்ளோ ஆத்திரமா இருக்கு...." என்க.

"சுரேன்... நீ என்னைப்பத்தின கவலைய விடு... நீ அருவிய நல்லா பார்த்துக்க... பாவம் அவ எத்தனையோ கஷ்டத்த பார்த்துட்டா.... நீயும் அவள கஷ்டப்படுத்தாத..."என்க.

"அவளுக்கு இன்னும் என்மேல கோபம்டா..."என்றான் அவன்.

"யார் சொன்னா அப்படின்னு... நீ ஊருக்கு வரலன்னு எவ்ளோ அடம்பிடிச்ச ஆனா நீ எப்போ வருவ உன் முகத்த பாக்கலாம்னு அவ காத்துட்டு இருந்தா தெரியுமா...." என்க.

"ஓ அதனாலதான் உன்ன கட்டிக்க சம்மதம் சொன்னாளா..." என கேட்டான் அவன்.

"அது பெரியப்பாவோட பிடிவாதம்டா...." என்றான் அவன்.

"யார் வேணா சொல்லி இருக்கட்டும்.... எப்படி இவ சரின்னு சொல்லலாம்... எனக்கு விருப்பம் இல்லன்னு இவ சொல்லி இருக்கனுமா இல்லையா....?" என கேட்க.

"அவளுக்கே பல பிரச்சனைடா சுரேன்...." என்றான் அவன்.

"ஆமாடா... அவ பல பிரச்சனைல மாட்டிட்டு தனியா கஷ்டப்பட்டுட்டு இருப்பா... நீங்க எல்லாம் முடிஞ்ச பிறகு போங்க... ஆமா அவகிட்ட தப்பா நடந்துகிட்டானே மார்க்கெட்ல ஒருத்தன் அவன் வெளிய வந்துட்டானா...." என கேட்க.

"இல்ல இன்னும் வரல..."என்க.

"ம்ம்ம்ம் ஊருக்கு போறதுக்குள்ள அவன நான் பார்க்கனும்..." என்றான் அவன்.

"நீ எதுக்கு கேக்கறேன்னு புரியுது.... ஆனா இப்ப அதுக்கு நேரம் இல்ல பெரியப்பா நமக்கு வேற வேலை கொடுத்து இருக்காரு..." என்க.

"என்ன சொல்ற நீ...?" என கேட்டான் சுரேன்.

வாசுதேவன் அவன் அறிந்த விஷயங்களை கூற.

"ஓ அதுதான் ஊர்ல இருந்து யார் போன் பண்ணாலும் தனியா வந்துடறது... அவருக்குன்னு அங்க வீட்டுல ஒரு தனி ரூம் இருக்குடா... அதுக்குள்ள நானோ இல்ல அம்மாவோ இதுவரைக்கும் போனதும் இல்ல எங்கள அந்த ரூமுக்குள்ள உள்ள விட்டதும் இல்ல.." என்க.

"நீ சொல்றதெல்லாம் வச்சு பார்த்தா நமக்கும் அம்மாங்களுக்கும் தெரியாம ஏதோ பன்றாரு..." என வாசு கூற.

"இருக்கலாம் இப்போலாம் அடிக்கடி அவரோட பர்சனல் ரூமுக்கு போய்டறாரு... அங்க இருந்து வெளிய வர அதிக நேரம் புடிக்குது...." என்க.

"ம்ம்ம்ம்... நீ ஊருக்கு போய் அந்த ரூம்ல என்ன இருக்குன்னு பாரு... ஒருவேளை அந்த வஜ்ரவேலுவ பத்தி ஏதாச்சும் கிடைக்க வாய்ப்பு இருக்கு..." என்க.

"ம்ம்ம்ம்... என்றவன் அவன எந்த ரூம்ல அடைச்சு வச்சிருக்கீங்க...?"என கேட்டான் சுரேன்.

அது என்றவன் வா என அவனையும் அழைத்துக் கொண்டு அந்த தேங்காய் கொட்டி வைக்கும் அறைக்கு அழைத்து செல்ல.

அங்கு முகமெல்லாம் ரத்தத் துளிகளோடு அரை மயக்கத்தில் இருக்க அவன் கன்னத்தை தட்டி எழுப்பினான் இந்தர்.

மெல்ல விழிகளை திறந்து பார்த்தான் அவன்.

"உனக்கு ஏன்டா இந்த தேவை இல்லாத வேலை... இப்போ உயிருக்கு போராடறது யாரு...?" என கேட்க

"அண்ணா... இதமட்டும் நான் பண்ணலன்னா அவன் என் அம்மாவ கொன்னுடுவேன்னு மிரட்டினான்... எனக்கு வேற வழி தெரியில... எனக்குன்னு இருக்கறது அவங்க மட்டும்தான்..." என திக்கி திணறி பேச "இவன விட சொல்லு வாசு..." என்றான் இந்தர்.

"டேய்... அப்பா ஒத்துக்க மாட்டாரு... யார் சொன்னாலும் எடுபடாது..." என்க.

"அவன் சொன்னத கேட்டதான... அவன் அம்மாவ பணயக் கைதியா வச்சு இவன பிளாக்மெயில் பண்ணியிருக்கான்... அவனுக்கும் உங்களுக்கும் பெருசா ஒரு வித்தியாசமும் இல்ல... இப்போ இவன் செத்துப் போய்ட்டா அவன் அம்மா அனாதையாக மாட்டாங்களா...?" என கேட்க.

"இந்தர்... ப்ளீஸ்... அப்பா எது செஞ்சாலும் ஒரு காரணம் இருக்கும்... நீ இங்க வந்தே இருக்க கூடாது நீ வா முதல்ல..." என்க.

"முடியாது... நான் ஒரு டாக்டர் ஒரு உயிர் போறத என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது..." என்றவன் அவனுக்கு முதலுதவி செய்யப்போக

"துரை இங்க என்ன பன்றாரு...?" என கேட்ட குரலில் இருவரும் திடுக்கிட்டு திரும்பினர்.

தர்மனும் சக்கரவர்த்தியும் நின்றிருக்க அப்பா என அழைத்தான் வாசுதேவன்.

"இங்க என்னடா பன்றீங்க ரெண்டு பேரும்... உங்களுக்கு இதெல்லாம் தேவை இல்லதாதது... நீங்க இதுக்குள்ள
வராதீங்க..." என்றவர் "என் முடிவுல தலையிடற வேலைய இன்னையோட நிறுத்திக்க சொல்லு உன் அண்ணன..." என வாசுவிடம் கூறினாலும் பார்வை என்னவோ இந்தரிடம்தான் இருந்தது.

"வாசு...என்னால இத அனுமதிக்க முடியாது...ஒரு உயிரோட மதிப்பு என்னென்னு ஒரு நாளைக்கு ஹாஸ்பிடல் வந்து பார்க்க சொல்லு..." என்றான் வாசுவிடம் அவனும் பார்வையை சக்கரவர்த்தியிடம் வைத்து வார்த்தையை வாசுக்கு கூறினான்.

"இவங்க ரெண்டு பேரையும் வச்சிட்டு முடியல என நினைத்தவன் சுரேன் வா போலாம்..." என்க.

"முடியாதுடா... நீ போய் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ எடுத்துட்டு வா... இல்லன்னா நான் இப்பவே போலிஸ்ட்ட சொல்லுவேன்..." என்க.

"தாராளமா போய் சொல்ல சொல்லுடா இங்க போலிஸே உன் அப்பன் தயவாலதான் வாழறாங்க..." என்க.

"வாசு... இது தப்பு இந்த மாதிரி ஒரு விஷயத்துக்கு நானு எப்பவுமே சம்மதிக்க மாட்டேன்..." என்க.

"இங்க யாரும் அவரு சம்மதத்த கேட்டுட்டு நிக்கல வேலைய பார்த்துட்டு போக சொல்லு..." என்றார் அவர்.

"இந்தர்...அப்பா சொல்றத கேளு இதெல்லாம் இந்த ஊரோட நல்லதுக்குத்தான்..." என்க.

"எது... ஒரு உயிர கொல்றது ஊரோட நல்லதுக்கா... என் கண்ணு முன்னாடி இப்படி ஒரு அநியாயம் நடக்கறது நான் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டேன்..." என்க.

"டேய் வாசு... ஒழுங்கா அவன அவன் வேலைய பார்த்துட்டு போக சொல்லு... போய் அவன் பொண்டாட்டி கூட ஒழுங்கா வாழ சொல்லு..." என்க.

"வேணாம் வாசு இது ரொம்பவே தப்பு..." என்றான் இந்தர்.

"எல்லா வெங்காயமும் எனக்கு தெரியும் துரைய வேலைய பார்த்தட்டு போக சொல்லு... என்றவர் இந்த ரூம இழுத்து பூட்ட சொல்லுடா..." என்றுவிட்டு வெளியேறினார்.

அவர்மேல் இருந்த கோபத்தில் அங்கே கிடந்த தேங்காய்களை காலில் உதைத்து தள்ளிவிட்டு  செல்ல

"சுரேன்... சுரேன்..." என அழைத்தபடி அவன் பின்னாலே சென்றான் வாசுதேவன்.

வீட்டினுள் நுழைந்தவன் கோபமாக அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அதீத கோபத்தோடு செல்லும் அவனை பார்த்தாள் அருவி.

அருணா அவளுக்கு வாங்கி வந்துருக்கும் துணிகளும் நகைகளும் அவள் கவனத்தை ஈர்க்கவில்லை.

அவளது கவனம் முழுவதும் அவளது கணவனை சுற்றியே இருக்க ஏன் இவ்ளோ கோபமா போறான் என நினைத்தவள் "அத்த... இதோ வந்துடறேன்..." என்றுவிட்டு  அவன் பின்னால் சென்றாள்.

அறைக்குள் அவன் கைக்கு கிடைத்த பொருட்களை எல்லாம் சிதறடித்து இருந்தான்.

அறையில் வேகமாக மூச்சுகளை எடுத்தபடி அவன் நடந்த கொண்டு இருக்க "இந்தர்... என்னாச்சு...?"என அவள் கேட்க.

அவளின் குரலில் திரும்பி பார்த்தவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.


Leave a comment


Comments


Related Post