இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 24 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 08-05-2024

Total Views: 17084

அத்தியாயம் : 24

எதற்காக ஆதவன் இத்தனை விரைவில் விழி திறந்தான் ? விடியவே வேண்டாம் என்று தான் அஞ்சனாவின் மனம் நினைத்தது. தன்னவன் தன் பக்கம் நியாயத்தைக் கூட கேட்காது வெதும்பி வேதனைக் கொண்டவளோ தன் பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

அனைத்தையும் எடுத்து வைத்தவளோ தன் கைபேசியை எடுக்க வேலைக்கு அனுமதி கிடைத்ததாக குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதனைக் கண்டு அந்த துக்கத்திலும் லேசாக புன்னகை சிந்தியவள் தன் மடிக்கணினியை எடுத்துக் கொண்டு கீழே சென்றாள்.

கவிநயா இருந்த அறைக்குள் நுழைய, இரவெல்லாம் அழுதத்திற்கு சாட்சியாக இரு பெண்களுமே வாடிய தோற்றமோடு தான் இருந்தனர்.

“என்ன அஞ்சனா ?”

“இந்தாக என்னோட லேப்டாப். உங்களுக்கு வேலை கிடைச்சிருக்கு. வீட்டுல இருந்தே பார்க்கலாம். நல்ல சேலரி மிஸ் பண்ணிராதீங்கக்கா “ கூறியவாறுக் கொடுக்க, எதுவும் இவ்வளோ அவசரமாக உடனே வந்துக் கொடுக்கிறாள் யோசித்து வாங்கினாள்.

“என்னாச்சு உனக்கு ? உன் முகமே சரியில்லையே ?”

“ஒன்னுமில்லை அக்கா. நான் வரேன் “ என்றவளோ அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை. மறுபடியும் அறைக்கு வந்து தன் உடமை நிறைந்த பெட்டியை எடுத்துக் கொண்டு கீழே வந்தாள்.

ஹாலில் யாருமே இல்லாததுப் போக, ஒரு முறை சுற்றி அதனைக் கண்டவளோ பின் அங்கிருந்துக் கிளம்பி விட்டாள். தன் இஸ்கூட்டியை எடுத்துக் கொண்டுச் செல்ல, எங்குச் செல்வது என்று தெரியாமலேச் சென்றாள்.

அவள் சென்ற அரை மணி நேரத்தில் தன் வீட்டுக்குள் நுழைந்தான் நந்தன். மனைவியின் மீது கொண்ட கோபமே இன்னும் ஆறாது இருக்க, வார்த்தைகளால் கூறி விட்டானே தவிர ஒதுக்க முடியவில்லை.

இரவு கூறி விட்டு வந்ததில் எதுவும் செய்து விட்டாலோ என்ற பயம் இருந்தாலும், அவள் அவ்வாறுச் செய்யக் கூடியவள் இல்லை என்பதில் உறுதியாக இருந்தான்.

வீட்டுக்குள் நுழைந்தவனோ நேராக அறைக்கு வர, அங்கே அஞ்சனாவோ இல்லை. 

பதறியவனோ, “அஞ்சனா ! அஞ்சனா ! “ கத்திக் கொண்டு அறையை சுற்றித் தேட, ஒரு சில இடங்களில் வெறுமை காட்சியளித்ததை அறிந்தான்.

குளியலறை, பால்கனிச் சென்று தேடி வந்தவனோ ஏதோ தோன்ற கப்போர்டை திறந்துப் பார்க்க அவளின் உடமைகள் இல்லை.

‘தன்னை விட்டு அவளால் இருக்க முடியுமா என்ன ? தான் வேண்டாமென்று தன்னை உதறிச் சென்று விட்டாலா ? இது தான் அவளின் காதலா ? கூறிய வார்த்தை தவறு தான். அதற்காக அதையேச் செய்து விட்டாலே ?’ உள்ளம் கதற, வெறுத்துப் போய் அப்படியே படுக்கையில் அமர்ந்தான்.

சத்தம் கேட்டு வந்த கவிநயா, “என்னாச்சு கொளுந்தனாரே ?” என்க,

“அவ என்னை விட்டிட்டு போய்ட்டா. எதுக்காக அண்ணி இப்படி பண்ணுனா ? என் கண்ணுல விழிக்காதே போன்னு சொன்னா போயிர வேண்டியது தானா ?” கலங்கிக் கொண்டு கேட்க, கவிநயாவிற்கு புரியவில்லை.

“என்னை சொல்லுறீங்க ? யார் போனாங்க ?”

“அஞ்சனா தான் “ என்கவே,

“இப்போ கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி கூட என் கிட்ட வந்து பேசிட்டு லேப்டாப் கொடுத்திட்டுப் போனாலே “ என்று கூறிக் கொண்டிருக்கும் போது தான் அஞ்சனா சரியில்லாமல் இருந்ததிற்க்கான காரணம் உணர முடிந்தது.

உடனே கீழேச் சென்று தன் மாமனாரின் அறைக் கதவினை தட்ட அவருமே அப்போது தான் வேலைக்குச் செல்ல கிளம்பி முடித்தார்.

“மாமா ,மாமா “ வேகமோடு கவிநயா தட்டவே,

“அப்படி என்ன உயிர் போற அவசியமோ ?” திட்டிக் கொண்டு வந்து திறந்தார் மனோகரி.

“என்னடி ?”

“மாமா, அஞ்சனா இந்த வீட்டை விட்டே போய்ட்டா “ என்க, அதிர்ச்சியோடு மருமகளிடம் வந்தார்.

“என்னம்மா சொல்லுறே ?” 

“நீங்க கொழுந்தனாரை கூப்பிட்டு என்னென்னு கேளுங்க மாமா “ என்றதும், வெளியே வந்தவர் மாடியை நோக்கி மகனை அழைத்தார்.

நந்தன் இறங்கி வர, சத்தம் கேட்டு மாடியிலிருந்து எட்டிப் பார்த்தான் நிதின். கல்லூரிப் பேக்கை அணிந்துக் கொண்டு வந்து நின்ற தீப்தி அப்படியே நின்றாள்.

“மருமக எங்க சொல்லு ?” மகனின் வாடிய தோற்றம் கண்டு கேட்க,

“எல்லாம் என் தப்பு தான். நான் தான் அவசரப்பட்டு வாயை விட்டேன். என்னை விட்டிட்டு போயிட்டா “ என்கவே,

“என்ன தான்டா நடக்குது இந்த வீட்டுல. தினமும் ஒரு பிரச்சனை ? தீப்தி நீ காலேஜ் போ. நாங்க பார்த்துக்குறோம் “

“இல்லப்பா, அண்ணி “

“நீ போம்மா “ சிறுபெண் அதுவுமில்லாமல் தினமும் கல்லூரிக்கு விடுப்பு விட்டால் என்னாக ? கிளம்பி இருப்பதைப் பார்த்தே அனுப்பி வைத்தார்.

தீப்தியும் அங்கிருந்துச் சென்று விட, “இப்போ சொல்லுடா ?” என்க, இதற்கு மேல் மறைக்க முடியாது என்பது புரிய அனைத்தையும் கூறினான்.

அதனைக் கேட்ட அங்கிருந்த அனைவரும் அதிர, விறுவிறுவென கீழே வந்த நிதின், தம்பியின் சட்டையை தான் பற்றினான்.

“இன்னைக்கு எனக்கு வேலை இல்லாம போனதுக்கு காரணம் உன் பொண்டாட்டி தானா ? எதுக்குடா அவ இப்படி பண்ணுனா ?” என்று தம்பியிடம் சண்டையிடவே. காரணம் என்னவென்று அவன் தான் முழுதாக கேட்கவில்லை.

“எனக்கு தெரியாது அண்ணே, அவ இப்படி பண்ணுவான்னு. அதான் நேத்து சத்தம் போடவும் வீட்டை விட்டு போய்ட்டா “ 

“நீ பண்ணினது முழுக்க முழுக்க தப்பு நந்தன். இவனை மாதிரியே உனக்கு பொறுமையே இல்லை. என்னத்த நீ பிள்ளைகளை வளர்த்தியோ. இப்போ எங்கேன்னு போய் தேடுறது. எப்போ இங்கே இருந்து கிளம்புனான்னு யாருக்காவது தெரியுமா ?”

“எட்டு மணி போல வந்து என் கிட்ட பேசுனா மாமா “ என்று வேகமாய் கவிநயா கூற,

“போய் தொலையட்டும். எதுக்கு அவளை தேடிக்கிட்டு ? பீடை ஒழிஞ்சதுன்னு நினைச்சிக்கலாம். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாதவ. நம்ம வீட்டு உப்பை தின்னுட்டு நமக்கே துரோகம் பண்ணிருக்கா ?“ ஆதங்கம் தாங்காது மனோகரி புலம்ப, கணவனோ ஒரு பார்வை தான் கண்டார் அப்படியே அடங்கி விட்டார்.

“வெளியே போய் அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலும் நமக்கு தான் அவமானம். அதுவுமில்லாம காரணம் கேட்காம சண்டை போட்டது உன் மகன். நீ என்ன செய்வையோ எனக்கு தெரியாது. இந்த வீட்டு மருமக ராத்திரிக்குள்ள இந்த வீட்டுக்கு வந்தாகணும் “ என்று உத்திரவிட்டு அவரோச் சென்று விட, நந்தனுக்கு ஒன்றுமே யோசிக்க கூட முடியவில்லை.

இங்கே மகிழனோ அன்றாவது தீப்தி வருவாளா என்ற நினைப்போடு கல்லூரி வர, அவர்களின் வகுப்பினை தாண்டிச் செல்லும் போதே கண்டு விட்டான்.

தோழியோடு அமர்ந்து எதையோ பேசிக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்து, “தீப்தி உன்னை மகிழன் சார் கூப்பிடுறாரு “ என்கவே, அண்ணியைப் பற்றி தான் விசாரிக்க போகிறார் என்பது புரிந்து விட்டது.

அஞ்சனாவோ எதையும் கூறக் கூடாது என்று கூறயிருக்க, இன்று வேறு அண்ணி காலையிலே வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். இப்போதுக் கேட்டால் என்ன கூறுவது என்ற யோசனையோடு மகிழனின் முன் வந்து நின்றாள்.

“நேத்து ஏன் வரல ?”

“வீட்டுல கொஞ்சம் பிரச்சனை. காலையில லீவ் பார்ம் வந்து கொடுத்துட்டேன் சார் “    

“சரி. இப்போ நான் கூப்பிட்டது என் தங்கச்சியை பத்தி பேச தான். அதான் உன் அண்ணி “ அவளின் பாரவையைக் கண்டே பேச,

“இதுல பேச என்ன இருக்கு சார் ? நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க ? அவங்க என்னோட அண்ணி தான். ஆனா உங்க தங்கச்சி இல்லை “ என்க,

“அப்படியா அப்போ இதை எல்லாம் பார்த்திட்டு நீ சொல்லு “ என்று தங்களின் புகைப்படத்தை பலவற்றைக் காட்ட, வாங்கியவளோ ஆர்ச்சியமோடுக் கண்டாள்.

அச்சு அசல் தன் அண்ணியைப் போன்று இருக்கவே, “இப்போ நம்புறையா ?” என்க,

“எப்படி சார்  ? எனக்கு ஒன்னுமே புரியல “

“ஐஸ்வர்யா ஏதோ பண்ணிட்டு இருக்கா, அதான் அஞ்சனா பேர்ல உங்க வீட்டுக்கு வந்திருக்கா ? என் கிட்ட மறைஞ்சி இருக்க பார்க்குறா. என்ன காரணம் ஏதாவது உனக்கு தெரியுமா ? ஒரே வீட்டுல தானே இருக்கீங்க ?”

“எனக்கு அதை பத்தியெல்லாம் தெரியாது சார். ஆனா அண்ணி “ என்று காலையில் அவளைக் காணவில்லை. உடமைகளோடு வீட்டை விட்டுச் சென்று விட்டத்தை கூறவே அதிர்ந்து எழுந்தாள்.

“காட். இப்போ அவ எங்க போனாலோ ? ச்சே ! அவ வழக்கம்மா போற இடம் ஏதாவது தெரியுமா ? அவளோட ஆபிஸ் அட்ரெஸ். மொபைல் நம்பர் ஏதாவது கொடு “ என்கவே, அண்ணன் வேலைப் பார்க்கும் இடத்தை கூறினாள்.

அந்த அலுவலகத்தின் பெயரைக் கேட்டவனுக்கு சட்டென தன் மூத்த தங்கை ஆனந்தியின் நினைவு தான். என்ன நடக்கிறது ? இவள் ஏன் அந்த அலுவலகத்தில் வேலைப் பார்க்கிறாள் ?

“சரி நீ போ நான் பார்த்துக்குறேன் “ கூறியவனோ அப்போதே விடுப்பு எடுத்துக் கொண்டு அலுவலகம் இருக்கும் இடத்தை நோக்கி தான் பயணித்தான்.

நந்தனும் தனக்கு தெரிந்து இருவரும் எங்கெல்லாம் சென்றோமோ அங்குச் சென்று தேடிப் பார்க்க, இங்கே மகிழனும் வேலைப் பார்க்கும் இடத்திற்கு வந்தான்.

அங்கே வரவேற்ப்பில் அஞ்சனா என்று பெயர் சொல்லிக் கேட்க, “சாரி சார் அவங்க இன்னைக்கு வேலைக்கு வரல ? “ என்க,

“அவங்க ஹஸ்பண்ட் “ சட்டென நந்தனின் பெயர் நினையில் இல்லாததுப் போகக் கேட்க,

“அவருமே இன்னைக்கு வரல “ என்றிடவே, எங்கேச் சென்று விட்டாள். இரு வருடம் கழித்து கையில் கிடைத்த பொக்கிஷத்தை தவற விட்டோம்மே தவிப்போடு நினைத்தவனோ எங்கையாவது தென்படுகிறாளா என்று தான் தேடினான்.

மாலை ஐந்து மணி தன் வேலையை முடித்துக் கொண்டு வீடு நோக்கி பையில் சென்றுக் கொண்டிருந்த வசந்த் பார்க்கில் அஞ்சனாவின் இஸ்கூட்டி நிற்பதைக் கண்டான்.

‘இந்த இடம் நாங்க ரெண்டு பேரும் வழக்கமா சந்திக்கிறது தானே ? இங்கே அஞ்சனா எதுக்காக வந்திருப்பா ? ஒரு வேலை நந்தன் கூட வந்திருப்பாலா ?’ நினைத்துக் கொண்டு கைபேசியிற்க்கு அழைத்துப் பார்க்க அழைப்போ எடுத்தபாடில்லை.

‘என்னாச்சு இவளுக்கு ?’ ஏனோ அங்கிருந்துச் செல்ல மனம் வராது தன் பைக்கை நிறுத்தி உள்ளேச் செல்ல, ஒரு பெஞ்சில் சிலையாக அமர்ந்திருந்தாள் அஞ்சனா.

அவளைக் கண்ட நொடியே அருகே வேகமோடு வந்தவன், “அஞ்சனா, நீ இங்கே என்ன பண்ணுறே ? அதுவும் பேக்கோடு இருக்கே. என்னாச்சு அஞ்சனா ?” ஏதோ சரியில்லை என்பது அவளின் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

“நீங்க சொன்னது கடைசில சரியாப்போச்சு. நந்தனுக்கு என் மேல நம்பிக்கை இல்லை. என்னை அவர் இப்போ வெறுக்குறாரு “ என்று சத்தமிட்டு அழாது கண்களில் கண்ணீர் வழிந்தோடக் கூறவே, அவளின் கைபேசியில் ஓசை எழுப்பியது.

அவளுக்கு பக்கவாட்டில் சைலென்ட் மோடில் இருக்கவே, அவளோ அதனைக் காணவேயில்லை. தெரிந்தும் அவளால் எடுத்து தன்னவன் குரலைக் கேட்க சக்தியில்லை. ஏற்கனவே காயம் கொண்ட மனம் மேலும் காயம் கொள்ள விரும்பவில்லை.

“நந்தன் தானே கூப்பிடுறான் பேச வேண்டியது தானே ? உன்னை வெறுக்குறவன் எதுக்கு கால் பண்ண போறான் ?”

“என்னால முடியாது ?”

“சரி இப்போ என்ன பண்ணுறதா நினைக்குற ?”

“என் அப்பா, அம்மாவை பிரிஞ்சி வந்ததுக்கு தண்டனையை தான் இதை கொடுத்திருக்காரு அந்த கடவுள். இதை ஏற்க்குறதை தவிர எனக்கு வேற வழியில்லை “ என்க, மறுபடியும் கைபேசி ஓசை எழுப்பியது.

இந்த முறை அவளின் அண்ணனிடமிருந்து வரவே, அவளோ காணவில்லை. ஆனால் வசந்த் கண்டு விட, வேகமாய் மொபைலை எடுத்தான்.

“பிளீஸ் அட்டன் பண்ணாதீங்க ? என்னால திரும்ப அந்த வீட்டுக்கு போக முடியுமான்னு தெரியல. நான் பண்ணினது சரியாவே இருந்தாலும் அவங்களை பொறுத்தவரை தப்பு. இனி என்னை ஜென்ம எதிரியா தானே பார்ப்பாங்க “

“இதெல்லாம் நீ முன்னவே யோசிச்சிருக்கணும் அஞ்சனா “ என்று அவளறியாது இருக்கும் லொகேஷனை மகிழனுக்கு அனுப்பி விட்டான்.

“சரி என் கூட வா ?”

“எங்க வர சொல்லுறீங்க ? நீங்க பண்ணுன உதவியால தான் என் அக்கா இறப்புக்கு நியாயம் கிடைச்சது. இதுக்கு மேல உங்களை தொந்தரவு பண்ண எனக்கு விருப்பமில்லை. “

“இப்படியே இங்கையேவா இருக்கப் போறே ? இன்னும் கொஞ்சம் நேரத்துல இந்த பார்க் மூடிருவாங்க “ என்க, அவளுக்கு அது தெரியும் தான். போக்கிடம் இல்லையே ?

“ஏதாவது சாப்பிட்டையா ? எப்படி சாப்பிட்டிருப்பே ? இரு வரேன். அதுக்குள்ள என்ன பண்ணனும் யோசிச்சி வை “ என்றவாறு வெளியே வந்தவனோ மகிழனின் கைபேசியிருக்கு அழைத்தான்.

தங்கையிடமிருந்து அழைப்பு வந்ததைக் கண்ட மகிழனோ, “ஐஸ்வர்யா நீ எங்க இருக்கே ? காலையில இருந்து உன்னை தான் தேடிட்டு இருக்கேன். உனக்காக தான் நாங்க எல்லாருமே காத்துக்கிட்டு இருக்கோம். தப்பான முடிவு எடுத்திராதே ?” என்று பயத்தோடு வேதனையில் மகிழன் கூற,

“உங்க தங்கச்சி இப்போ எங்க இருக்காங்கன்னு லொகேஷன் அனுப்பிருக்கேன் பாருங்க. சீக்கிரம் அந்த இடத்துக்கு வாங்க “ எனக் கூறி சட்டென வைத்து விட்டான்.

பைக்கை ஓரமாக நிறுத்திய மகிழனும் அதனை கண்டு விட்டு மின்னல் வேகத்தில் பைக்கினைச் செலுத்த ஆரம்பித்தான். இப்போதைக்கு அவளின் மன ஆறுதலுக்கு தேவை அவளின் குடும்பத்தார் தான் என்பது புரிந்தே இதனைச் செய்தான்.

பின் உணவினை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தவன் அதனை பிரித்து அவளிடம் கொடுக்க, வாங்க மறுத்தாள். அவனோ போராட பின் வாங்கிக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள்.

என்ன உணவு உண்கிறோம் என்பது கூட தெரியாது உண்டு முடிக்க, வாசலைப் பார்த்தவாறு தான் நின்றிருந்தான் வசந்த்.

சரியாக உண்டு முடிக்கும் நொடி விழிகளை அங்குமிங்கும் சுழற்றிக் கொண்டு உள்ளே வந்த மகிழன் தங்கையைத் தேட, அஞ்சனா என்று அருகில் நின்றே கத்தி அழைத்தான்.

“எதுக்கு இப்படி கத்துறீங்க ? என்னாச்சு ?” கேட்டவாறு வசந்த்தைக் காண, அவனின் பார்வை முன்னே தங்களைப் பார்த்து விட்ட மகிழனின் மீது இருந்தது.

“ஐஸ்வர்யா “ தங்கையை அழைத்துக் கொண்டு வர, அதே நேரம் அவளுமே அண்ணனை தான் கண்டாள்.

அருகில் வந்து நின்ற நொடியே, “அண்ணா !” அழுகையோடு அழைத்தவளோ மகிழனின் நெஞ்சில் வந்து சாய, தங்கையை தன்னோடு அணைத்தவனோ ஆறுதலாய் தட்டிக் கொடுத்தான்.

“நீ எதுவும் சொல்லாதே. இப்போ வா நம்ம வீட்டுக்கு போகலாம் “ என்க, அவளோ விலகி அண்ணனின் முகம் கண்டாள்.

“நீ வேணா எங்களை விட்டிட்டு போயிருக்கலாம். ஆனா நாங்க உன்னை விட மாட்டோம் “ என்ற நொடி,

“அஞ்சனா !” என்ற அழைப்போடு அங்கே அவர்களின் முன்னே தவிப்போடு நந்தன் வந்து நின்றான்.

 


Leave a comment


Comments


Related Post