இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 27 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 08-05-2024

Total Views: 19014

அத்தியாயம் 27

திடீரென அணைத்த கணவனை அதிர்ச்சியாக பார்த்தவள் அவனின் இறுக்கம் கண்டு "என்ன ஆச்சு...?" என கேட்க.

"ஒன்னும் இல்ல... நான் இப்ப கிளம்பறேன்...நீயும் வா..." என அழைக்க.

"அது... அது... எப்படி... மாமா..." என அவள் இழுக்க.. "நீ என் பொண்டாட்டி... நான் கூப்ட்டா வரனும்..." என்க.

"இல்லன்னு யாரு சொன்னா... மாமா அத்தைலாம் இங்க இருக்கும் போது... நாம அங்க போய் என்ன பண்ண போறோம்...?" என்க.

"ஏன் அங்க செய்ய உனக்கு வேலையே இல்லையா... வீட்டு வேலைலாம் செய்ய நிறையவே இருக்கு... வேலை இல்லன்னு நீ பயப்படாத... அதுக்கு தனியா சம்பளமும் நான் கொடுத்துடறேன்..." என்க.

அவனை தள்ளிவிட்டு அவன் முகத்தை பார்த்தவள் "இப்ப அங்க போய் என்ன பண்ண போற...?" என கேட்க.

"ஏதோ பன்றேன்... ஹாஸ்பிடல் போகனும்..." என்க.

"ஏன் அந்த சுந்தர் அண்ணா... அவரு இங்கனதான இருக்காரு... அவரும்தான் உங்ககூட வேலை பாக்கறாரு... அவருலாம் ஊருக்கு போகனும்னு ஒன்னும் அவசரப்படலயே...?" என கேட்க.

"உங்கிட்ட இப்ப விளங்க வைக்க எனக்கு நேரம் இல்ல... நீ வர்றீயா இல்ல... உன் மாமா அத்தைகூட வர்றியா...?" என கேட்க.

"எதுக்கு அவசரப்படற இந்தர்... மாமா..." என அவள் ஏதோ கூற வரும்போதே கோபத்தில் அவள் கழுத்தை பிடித்து நெறித்தவன் அப்படியே அவளை இழுத்துக்கொண்டு சுவரோரம் சென்றான்.

"இங்கபாருடி... எனக்கு இங்க இருக்க பிடிக்கல... இப்பவே நான் ஊருக்கு கிளம்பறேன்... நீ வந்தா வா...இல்லன்னா இந்த ஊரையே கட்டிட்டு அழு..." என தன் பேக்கை எடுத்தவன் அதில் தன் துணிகளை எல்லாம் எடுத்து அடுக்க ஆரம்பித்தான்.

"இப்ப எதுக்கு இவ்ளோ கோபம் எல்லோருமே ஒன்னா ஊருக்கு போலாமே..." என்க.

"எத்தனதடவடி உனக்கு சொல்றது... உன் மாமா இருக்கற இடம் எனக்கு பிடிக்கல... உன் மாமா பன்ற எதுவும் எனக்கு பிடிக்கல... போதுமா... போ... போய்...உன் அத்தைக்கு சமையலுக்கு உதவி பண்ணு..." என அவளை பிடித்து வெளியே தள்ள அவர்களது அறையின் கதவு தட்டும் ஓசை கேட்டது.

வேகமாக போய் கதவை திறந்தாள் அருவி.

சுந்தர் நின்றிருந்தான்

"வாங்கண்ணா..." என அழைக்க.

"உனக்கும் அண்ணனா...ஆமா எங்க உன் புருஷன காணும்...?" என கேட்க.

அவளோ அவன் உள்ளே வர ஒதுங்கி வழி விட்டாள்.

அங்கு கோபமாக தன் உடைகளை எடுத்து அடுக்கிக் கொண்டு இருக்கும் இந்தரை பார்த்தவன் "என்னடா...உன் ட்ரஸலாம் லான்ட்ரிக்கு போடனுமா...?" என கேட்க.

வாய்ல ஏதாச்சும் வந்துடும்... நான் இப்ப சென்னை போறேன்... நீயும் வர..." என ஆர்டர் போட.

"இங்க என்னை பாரு தம்பி... இந்த ஊருக்கு வந்து ரெண்டு நாள் ஆகுது... நான் எங்க இருக்கேன்... என்ன பன்றேன்னு கொஞ்சமாச்சும் கவனிச்சியாடா நீ...கல்யாணம் பண்ண அன்னைக்கே என்ன தனியா விட்டுட்டு நீ மட்டும் வீட்டுக்கு வந்துட்ட... இப்ப மட்டும்  ஊருக்கு வான்னு கூப்புடற... நான் வரல நீ போ..." என்க.

"நீயும் ஒரு டாக்டர் மறந்துட்டியா...?" என அவன் கேட்க.

"ஏன் சாருக்கு ரெண்டு நாளா அது நியாபகம் வரலயா...?" என கேட்க.

"உங்கிட்ட வாய் பேச இப்ப எனக்கு டைம் இல்ல...நான் போறேன்..." என்றவன் தன் பெட்டியை தூக்கிக் கொண்டு வர.

"ஏம்மா என்ன அவன் வாய் பேச முடியாதுன்னு சொல்றான்... ஒருவேளை கண்ணால பேசுவானோ...?" என அவளிடம் கேட்க.

அவளோ வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு படுவது நன்றாக தெரிந்தது.

அவன் குரல் கேட்டு திரும்பியவன் போதும் மூடு என சைகையில் காட்ட சரி மூடிக்கிறேன் என அவனும் அதே சைகையில் காட்டினான்.

அருவிதான் சிரிப்பை அடக்க முடியாமல் பக்கென சிரித்துவிட அவளை பார்த்து முறைத்தவன் "தனியா கிடைச்ச அவ்ளோதான் நீ பார்த்துக்க..." என்க.

கப்பென ஒரு கரத்தால் வாயை மூடிக்கொண்டாள்.

அவளை முறைத்துவிட்டு வெளியே வந்நவனை எதிர்கொண்டார் தர்மன்.

"எங்கடா கிளம்பிட்ட பையும் கையுமா..?" என கேட்க.

அவர் குரல் கேட்டு அனைவரும் அந்த இடத்தில் கூடினர்.

சக்கரவர்த்தி மகனையே பார்த்துக் கொண்டு இருக்க வாசுதான் "சுரேன்.. என்ன இது காலையில விருந்து இருக்கு... இப்ப பைய தூக்கிட்டு கிளம்பிட்ட.. ஊருல நம்ம குடும்பத்தபத்தி என்ன நினைப்பாங்க...?" என கேட்க.

"என்ன வேணா நினைச்சுட்டு போகட்டும்... என்னால இதுக்குமேல ஒரு நிமிஷம்கூட இங்க இருக்க முடியாது... நான் கிளம்பறேன்... மத்தவங்கலாம் அப்பறம் வரட்டும்..." என்க.

"மத்தவங்கன்னா... யாருன்னு உன் அருமை பையன்கிட்ட கேளு அருணா..."என சக்கரவர்த்தி கூற.

"நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க... என்னப்பா... இதெல்லாம் நீயே இப்படி பண்ணலாமா... நம்ம குடும்ப கெளரவம் என்ன ஆகறது...?" என என அருணாவும் கேட்க.

"உன் புருஷன் என்ன பன்றாருன்னு தெரியுமாம்மா...?" என கேட்டான் அவன்.

அவரோ தன் கணவரை திரும்பி பார்த்து "ஏன் அவரு உன்ன என்ன பன்றாரு...?" என கேட்க.

"அம்மா...உனக்கு இன்னுமா புரியல... உன் புருஷன்..."என அவன் ஏதோ கூற வருமுன் "சுரேந்தர்... என்ன பழக்கம் இத... அப்பாவ உன் புருஷன்னு சொல்றது... எங்க இருந்து இந்த பழக்கம் உனக்கு வந்துச்சு... பெரிய படிப்பெல்லாம் படிச்சிப்புட்டா சபை நாகரிகம் கூட தெரியாதா உனக்கு... உன் பொண்டாட்டி முன்னாடி...அவர உன் புருஷன்னு மரியாத இல்லாம பேசுவியா... என் முன்னாடி இந்த மாதிரி இன்னொருதடவ சொல்லிப்புடாத..." என பத்மினி கூற.

"அம்மா... அவரு என்ன பன்னாருன்னு உங்களுக்கு தெரியுமா...?" என கேட்க.

"ஏன்... என்ன வேணா பண்ணியிருக்கட்டுமே... அதுக்கு இப்படித்தான் பேசுவியா... இதெல்லாம் நல்லதுக்கு இல்ல சொல்லிட்டேன்... நீதான் மூத்தவன்... உன்ன பார்த்துதான் உனக்கு பின்னாடி வரவங்க கத்துக்குவாங்க... இனி இந்த மாதிரி மரியாதை இல்லாம பேசாத..."என்க.

"ஏன் நான் சொல்றது எதுவுமே உங்களுக்கு புரிய மாட்டீங்குது...?" என அவன் கூறி முடிக்கும் முன்.

"மாமா எது செஞ்சாலும் ஒரு அர்த்தம் இருக்கும்..." என அருவி கூற.

"வாய மூடுடி உங்கிட்ட யாராச்சும் இப்ப கேட்டாங்களா..." உன் வேலை என்னமோ அத மட்டும் பாரு..." என்றவன்
தர்மனிடம் சென்று "சித்தப்பா நான் ஊருக்கு போறேன்..." என்க.

"அவசரப்படாத இந்தரா இது எல்லாம் காரணம் இல்லாம நடக்கல..." என்க.

"என்ன காரணம் வேணாலும் இருந்திட்டு போகட்டும்... ஆனா ஒரு உயிர்... என அவன் ஏதோ கூற வருமுன் வாசுதான் "சுரேன்..." என கத்தி குடும்ப உறுப்பினர்களை கண்களால் காட்ட அப்படியே நிறுத்தினான்.

"அமைதியா இரு இந்தர்... வா..." என அவன் பெட்டியை எடுத்துக்கொண்டு வாசு முன்னால் நடக்க சுந்தர் அவன் பின்னால் நடந்தான்.

சுற்றிலும் நின்றிருந்தவர்களை எரிப்பதை போல பார்த்தவன் "அம்மா இன்னைக்கு இவருக்கு சப்போர்ட் பண்ணி பேசினதுக்காக நீங்க ஒருநாள் வருத்தப்படுவீங்க..."என்றவன் அவன் தந்தையையும் அவனது மனைவியையும் முறைத்துவிட்டே அவ்விடம் விட்டு அகன்றான்.

அருவியிடம்  வந்த சக்கரவர்த்தி "அவன் கிடக்கறான் விடும்மா... நீ போய் வேலைய பாரு... உன் அத்தை எடுத்துட்டு வந்தது எல்லாம் உனக்கு பிடிச்சு இருக்குதான...?" என கேட்க.

"பிடிச்சு இருக்கு மாமா..." என்றாள் அவள்.

அவள் தலையை தடவியவர் "நீ இங்க மகாராணி மாதிரி இருக்கனும்... எங்க ரெண்டு பேருக்குமே பெண் குழந்தைகள் இல்ல...நீயும் வாசு பொண்டாட்டியும்தான் எங்களுக்கு பொம்பள புள்ள இல்லாத குறைய தீர்த்து வைக்கனும்..." என்க.

"சரிங்க மாமா.." என்றவளை கோபத்துடன் பார்த்துவிட்டு கதவை அடித்து சாத்திவிட்டு வாசுவின் அறைக்குள் நுழைந்தான் இந்தர்.

அங்கு நடக்கும் அத்தனையும் மகிழாவின் மூலம் திகம்பரனுக்கு சென்று கொண்டு இருந்தது.....






Leave a comment


Comments


Related Post