இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -30 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 08-05-2024

Total Views: 26398

அனைவரும் ஷாலினியை அடித்த அதிர்ச்சியில் கத்த, கார் ஒன்று வேகமாக வந்து வாசலில் சர்ரென்ற சத்தத்துடன் நின்றது. அந்த சத்தமே யார் வந்திருக்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லியது அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு.  

நிலாவின் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கி விட்டது. படபடவென்று கை கால்கள் நடுங்கத் தொடங்கி விட்டது, இவ்வளவு நேரம் இருந்த தைரியமெல்லாம் காற்றில் பறந்துவிட, அருகில் நின்ற யுகியின் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள்.  

நந்தன் என்ற பெயரைக் கேட்டாலே தன்னுள் இருக்கும் தைரியம் வற்றுக் கிணறாக மாறிவிடும். இதில் அவனை நேருக்கு நேர் எப்படி எதிர்க் கொள்ளப் போகிறாள்.  

"என்ன பூனை?"  

“வரது உன் அண்ணா தானே?”  

“ம்ம்ம்ம்”  

“பயமா இருக்குடா?”  

“அவன் என்ன பூச்சாண்டியா பயமா இருக்கறதுக்கு. நீ பயந்து பயந்து தான் அவனுக்கு நல்லா இடம் கொடுத்து வெச்சிருக்க.”  

'எனக்கு அவன் பூச்சாண்டி தானே இதை சொன்னா.. எவன் நம்புவான்?' என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டிருக்க, கண் முன்பு எட்டு வருடங்கள் முன் அவன் ஆடிய ருத்ரதாண்டவம் தோன்றி அவளை கலங்க செய்தது.  

நிலா யோசனையில் யுகியின் பின் நிற்க நந்தனின் வேகத்தில் பூமி அதிர்ந்தது.  

'ஐயோ!! வரானே வரானே என்னையப் பார்த்ததும் அடையாளம் தெரிஞ்சிப்பானா? மூனு வருசத்துக்கு முன்னாடிப் பார்த்தது. முன்னாடி சாதாரணமா இருக்கும் போதே ஆளை அடிச்சியே கொல்லுவான், இதுல போலீஸ் வேற ஆகிட்டான். என்னைய அடிச்சி அடிச்சியே ட்ரைனிங் எடுத்துப்பானோ, இருந்தாலும் கைப் புள்ள சிக்கிடாத.' என்று உள்ளம் அதிர்ந்துக் கொண்டிருக்க, நந்தன் வீட்டினுள் வந்தான்.  

நெடு நெடுவென்ற உயரம், கண்ணில் கருப்பு கண்ணாடி, சட்டையின் மேல் பட்டை போடாமல் விட்டிருக்க, அந்த வழியே தெரிந்த சன்னமான தங்க சங்கிலி. அவன் கம்பீரத்தை அதிதமாக காட்டியது.  

முகத்தில் ஓரளவுக்கு அளவான தாடி, காவல்காரனின் குரல் கூட அடுத்தவரை மிரட்டும் என ஆளை மிரட்டும் தோற்றம் தான் ஆனாலும் அழகாக இருந்தான். பெண்களை கவருவது நந்தனுக்கு புதிதில்லையே இந்த நந்தனுக்கு ஏற்ற மீரா தான் யார் என்று தெரியவில்லை.  

“வா நந்து பிலைட் ஒன் அவர் லேட் போல.” என மார்த்தியை தவிர அவனிடம் யாருமே பேசவில்லை.  

அதைப் பற்றிக் கவலைக் கொள்ளும் ஜென்மமா அவன்.  

“ம்ம்ம்ம்”  

“எதனால லேட்?”  

“ஐ டோ நோ” என்றவன் கண்ணாடியை கழட்டி சட்டையில் மாட்டிக் கொண்டே அங்கு நின்ற அனைவரையும் பார்வையால் துளையிட்டான்.  

அவன் பார்வையின் வீரியத்தை தாங்க முடியாது என பயந்தே யுகியின் பின் மறைந்ததுப் போல் நின்றாள் நிலா.  

மற்றவர்களையே அப்படி பார்க்கும் போது தன்னை எப்படி பார்ப்பான்? என நிலா யுகியின் பின் எட்டிப் பார்க்க,  

நந்தனின் பார்வையோ அவள் பக்கமே போகவில்லை, வளவனைப் பார்த்த பார்வை கூட நிலாவைப் பார்க்காமல் நேராக சென்று சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டான்.  

வீட்டுக்கு மாப்பிள்ளையாக போகிறவனையோ, அவன் குடும்பத்தையோ “வாங்க” என்று அழைக்கவில்லை, அதில் நந்தனின் பெற்றோர்களுக்கு தர்மசங்கடமாக என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தனர்.  

வளவனுக்கு அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. “வாங்க போங்க” என்று தான் அழைக்க வேண்டும் என கட்டளையிட்டவனின் தங்கையை கல்யாணம் செய்து கொள்வதில் பரம திருப்தி. அதை அவன் முகமே பிரகாசித்தது.

நந்தனின் கம்பீரத்திற்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தான் வளவன். ஏழ்மையில் வாடி வதங்கி இருந்தவன், இப்போது பளபளவென்று இருக்க, அவன் நடை உடை பாவனையே தன் தகுதியை உயர்த்தி உன் தங்கையை தூக்கிச் செல்ல வந்திருக்கிறேன் என சொல்லாமல் சொல்லியது.  

நந்தனுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தவன், அவனுக்கு சமமாக கால் மேல் கால் போட்டுக் கொண்டான்.  

வளவனின் செயலில், நந்தனின் பல் நறநறக்கும் சத்தம் எதிரில் இருந்தவர்களுக்கு கூட கேட்டது.   

'பொண்ணுப் பார்க்க வந்துருக்காங்கன்னு மரியாதைக் கொடுக்க வேண்டுமே' என்ற எண்ணம் இல்லாமல் ஏதோ பழங்கால எதிரியைப் பார்ப்பது போல் இருவருமே பார்த்துக்கொண்டனர்.  

“நீ உக்காரக் கூடாது” என்ற சமூகத்தின் முன் கால் மேல் கால் போட்டு உக்காரும் வாய்ப்பை அமைத்துக் கொள்வதே மிகப்பெரிய வாழ்நாள் சாதனை, அதை வளவன் செய்து காட்டியிருந்தான்.  

பெங்களூர் ஐடி கம்பெனியில் ஹெச் ஆராக இருந்து 5 இலக்கங்களில் சம்பளம் வாங்குகிறான். அவனுக்கு கீழ் பலப் பேர் வேலை செய்கிறார்கள். என்ன தான் உயர் பதவியில் இருந்தாலும் தனக்கு கீழ் வேலை செய்பவர்களை ஒரு போதும் மரியாதை குறைவாக நடத்தியதில்லை வளவன். எல்லோரையும் தனக்கு சமமாக நடத்துவான் அதற்குக் காரணம் வாழ்க்கையில் அவன் வாங்கிய அடியாகக் கூட இருக்கலாம்.   


தன்னை அடித்து ஒடித்து வைக்க நினைத்தவர்களின் முன்பு தன் தகுதியை உயர்த்திக் கொண்டு அவர்களுக்கு முன்பே கால் மேல் கால் போட்டு அமர்வதெல்லாம் வளவனை பொறுத்த வரையில் வாழ்நாள் சாதனை. அதற்காக காதலை பகடைக் காய பயன்படுத்திக் கொண்டானா எனலாம். அதற்காக ஷாலினியை உண்மையாக கேட்க வேண்டும் என்று சொல்ல முடியாது. அவள் மேல் உயிராக இருக்கிறாள், அவள் நேசிப்பதைக் காட்டிலும் ஒரு படி மேலே தான் வளவன் காதல் இருக்கும், இருந்தாலும் அவளை வைத்து தான் அடைய நினைத்த ஆசைகளை நிறைவேற்றவும் தயங்கவில்லை.  

“டேய் யார் முன்னாடிடா கால் மேல கால் போடற? என் பேரனைக் கண்டு எத்தனை பேர் பயப்படறாங்க, அவன் முன்னாடி கால் மேல கால் போடற, அர்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில குடை பிடிப்பானா, அந்த கூத்தால இருக்கு.” என்று கிருஷ்ணம்மாள் சண்டை போட. அவரைக் கை நீட்டி தடுத்தான் நந்தன்.  

ஆம் அவனைக் கண்டு ஊர் உலகத்தில் அஞ்சி நடுங்கும் வேலையில் தான் நந்தன் இருந்தான்.  

அவன் வேலையை வைத்தே தன்னை சுற்றி வளையத்தைப் போட்டுக் கொண்டு எப்போதும் கஞ்சியை நாலு பாட்டில் குடித்தது போல் விறைப்பாகவே சுற்றுவான். தேவையில்லாத இடத்தில் வார்த்தைகளைக் கூட வீணாக்கக் கூடாது என அளந்து அளந்து பேசுபவன். அவன் பேச ஆரம்பித்து விட்டால் அடக்க யாராலும் முடியாது. அவன் பேசும் ஒரு ஆளும் அவனுக்கு பயந்து ஊரைவிட்டு ஓடிவிட்டதால், ஓடியவர்களை துரத்தி பேசக்கூடாது என விலகிக் கொண்டான். எட்டு வருடத்தில் அவனிடம் எழுந்த மாற்றங்களை இதுவரை யாரும் உணர்ந்ததில்லை. சொல்லப்போனால் கோவம், அகந்தை, தான் பெரியவன் என்ற கர்வம் இது எதுவும் குறையவில்லை அதிகமாக தான் ஆகியிருக்கிறது.  

பார்க்கும் அனைவருக்கும் நந்தன் என்றாலே பயம். ஏன் இவ்வளவு பேசும் கிருஷ்ணம்மாள் கூட நந்தனைப் பயப்படுவார் 


Leave a comment


Comments


Related Post