இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 25 (இறுதி ) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 10-05-2024

Total Views: 22912

இறுதி அத்தியாயம் 

நந்தனுக்கு தன் அண்ணனின் நண்பன் ஒருவனை நன்கு தெரிந்திருக்க, அவரிடம் தன் மனைவி காணாமல் போய்விட்டால் கண்டு பிடிக்க வேண்டுமென கூறினான்.

அவளின் மொபைல் சிக்னல் வைத்து கண்டு பிடிக்கலாம் என்று கூறவே, நல்ல வேலையாக அஞ்சனா மொபைல்லை ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வைத்திருந்தாள்.

பல மணி நேரமாக ஒரே இடத்திலே சிக்னல் இருக்க அந்த முகவரியை கூறிய நொடியே அங்கு கிளம்பினான் நந்தன்.

அவர்களின் அலுவலகத்திற்குச் சற்று தொலைவில் இருந்த ஒரு பார்க் தான். வெளியே அஞ்சனாவின் இஸ்கூட்டியைக் கண்டதுமே வேகமாய் உள்ளேச் செல்ல, அவன் நினைத்ததுப் போன்று அங்கு தான் இருந்தாள்.

ஆனால் என்ன யாரோ ஒருவனின் நெஞ்சில் சாய்ந்து நிற்கவே, அவளை முழுதாய் கண்டோம்மே அந்த எண்ணம் தான் முதலில் அவனுக்கு.

“அஞ்சனா !” மூச்சு வாங்க அவளை அழைத்தவாறு வியர்த்து விறுவிறுக்க, தலைமுடியெல்லாம் கலைந்து இரவெல்லாம் தூங்காததால் வாடிப் போய் வந்து நின்றான்.

அண்ணனிடமிருந்து விலகியவளோ நந்தனைக் காண, “நான் ஏதோ கோவத்துல அப்படி பேசிட்டேன். அதுக்காக உடனே நீ என்னை விட்டு போயிருவையா ? நான் இல்லாம உன்னால இருக்க முடியுமா  அஞ்சனா ? வா நம்ம வீட்டுக்கு போகலாம் “ என்றவாறு அவளின் கரத்தினைப் பற்றினாள்.

அவளோ ஒரு அடி கூட எடுத்து வைக்காது அப்படியே நிற்க, தங்கையின் மனநிலையை புரிந்துக் கொண்டான் மகிழன்.

“ஐஸ்வர்யா வா நம்ம வீட்டுக்கு போகலாம். உனக்காக தான் அப்பா, அம்மா காத்துக்கிட்டு இருக்காங்க வா “ என அழைத்த மகிழன், அவளின் உடமைகளை எடுத்துக் கொண்டு கரம் பற்றி அழைத்துச் சென்றான்.

அவளும் அண்ணனோடுச் செல்ல, “அஞ்சனா ! என்ன பண்ணுற நீ ?” தன்னை விட்டு இவள் எப்படி செல்லலாம் என்ற நினைப்பில் கேட்க,

“இவ ஐஸ்வர்யா என் தங்கச்சி. இப்போ இவ உன் பொண்டாட்டி இல்லை “ எனக் கூறிய மகிழன் அங்கிருந்து நகர, அண்ணனோடு மனதினை கல்லாக்கிக் கொண்டுச் சென்றாள்.

“அஞ்சனா “ கத்தியவனோ அப்படியே வேதனையோடு கலங்கி முட்டியிட, அனைத்தையும் கண்டவாறே அங்கையே தான் நின்றான் வசந்த்.

சிறிது நேரம் செல்ல, “இங்க பாரு இப்படியே நீ அழுதுக்கிட்டு இருந்தா எந்த பிரோஜனமுல்லை. அவ எதுக்காக இங்க வந்தாலோ அது முடிஞ்சிப் போச்சு. இனி அவ ஐஸ்வர்யாவா அவளோட வாழ்க்கையை வாழப் போறா. உனக்கு யாரு வேணும்ன்னு நீ தான் முடிவு பண்ணனும் ?” என்க,

“என்ன சொல்லுறீங்க நீங்க ? என்ன நடக்குது இங்கே ? அஞ்சனாவுக்கு யாருமே இல்லை தானே ? அப்பறம் எப்படி ?” என்று தன் சந்தேகங்களைக் கேட்க,

ஆனந்தியின் கொலை, அதனைக் கண்டு பிடிக்க வந்து அஞ்சனாவாக மாறியது. வேலைக்குச் சேர்ந்தது. எதிர்பாராத விதமாக காதல் கொண்டது. உண்மையைக் கண்டு பிடித்து ஹெச்.ஆர் தண்டனை வாங்கிக் கொடுத்தது. உடனிருந்த காவல் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வைத்தது. அனைத்தையுமே கூறக், கேட்ட நந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அப்படியென்றால் இந்த இரு வருடமும் தன்னவள் எத்தகைய துயரத்தில் இருந்திருக்கிறாள். தன் குடும்பத்தார் இருந்தும் இல்லாததுப் போல் வாழ்க்கை வாழ்வது எத்தகைய வேதனை ? தன் அண்ணன் பணத்திற்கு என்னவெல்லாம் செய்திருக்கிறான் ? தலையேச் சுற்றுவதுப் போல் உணர்ந்தான்.

“அஞ்சனா இங்கே இருந்த நோக்கம் எதுவா இருந்தாலும் அவ உன் மேல வச்சிருந்தா காதல் உண்மை. அவ உன் மேல உயிரையே வச்சிருந்தா ? நீ தான் முதல்ல அவளை காதலிச்சேன்னு நீ நினைக்கலாம். அப்படியில்லை. அவ உன்னை அவளுக்கே தெரியாம காதலிக்கப் போய் தான் அன்னைக்கு ஆபிஸ்ல அப்படி எல்லார் முன்னாடியும் உன்னை காப்பாத்த சொன்னா. இப்போவாவது அவளோட காதலை நீ புரிஞ்சிக்கோ. இப்போ அவ ஐஸ்வர்யாவா மாறிட்டா. இனி உன்னோட முடிவு தான். இப்போ அவ எங்க இருக்கப் போறான்னு இந்த முகவரில இருக்கு “ என கூறி கார்டையும் கொடுத்து விட்டுச் சென்றான் வசந்த்.

இரவு நேரம் போல் தன் மகனின் பைக் சத்தம் கேட்டதுமே வழக்கம் போல் வந்த பார்வதி கதவினை திறக்க, மகனோடு மகளும் வந்திருக்கவே அதிர்ந்து தான் போனார்.

“ஐயோ ! என்னங்க “ உள்ளே இருந்த தன் கணவனைக் கண்டு அழைத்தவரோ, இறந்தவள் திரும்பி வந்து விட்டால் எந்த அன்னையால் தான் அதனை சட்டென தாங்கிக் கொள்ள முடியும். இன்ப அதிர்ச்சியில் திளைத்து தான் போனார்.

“ஐஸ்வர்யா, என் கண்ணே !” அழுகையோடு வர, 

“அம்மா “ உடைந்துப் போனவலும் வேகமோடு ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.

“என் கண்ணு நீ உயிரோட தான் இருக்கையா தங்கம். “ அவளை வருடி தொட்டு தழுவி ஆராய்ந்து பார்த்து முத்த மழை பொழிய, சத்தம் கேட்டு வந்த சிவாரமுக்கோ விழிகள் காணும் காட்சியை நம்ப முடியவில்லை.

அப்படியே படியில் கால் இடற சுவரைப் பிடித்து அமர்ந்து விட, “அப்பா !” என்ற அழைப்போடு தந்தையிடம் ஓடி வந்தாள்.

“என் மக, என் மக ஐஸ்வர்யா “ வார்த்தைகளை கூட தொடுக்க முடியவில்லை. அப்படியொரு அழுகையோடு கண்ணீர் சிந்தினார்.

“என்னை மன்னிச்சிருங்க. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். உங்களை இந்த நிலைமைக்கு தள்ளுனதுக்கு காரணம் நான் தான் சாரிப்பா “ என்று கண்ணீரோடு மகள் மன்னிப்பு வேண்டவே, அந்த வேதனையிலும் கண்ணீரை துடைத்து விட்டார்.

“உள்ள போய் பேசிக்கலாம் வாங்க “ என்ற மகிழன் அவளின் உடமைகளை எடுத்துக் கொண்டு வர, அனைவரும் உள்ளே சென்றனர்,

பூஜையறைச் சென்று திருநீரை எடுத்துக் கொண்டு வந்த பார்வதி, குலதெய்வத்தை வேண்டி நன்றி கூறிவிட்டு அவளுக்கு பூசி விட்டார்.

பெற்றவர்களின் காலடியில் அமரவே, “ஏன்மா எங்களை விட்டு போனே ? நீ இறந்ததை நினைச்சி இந்த கையால தானே கொல்லி வச்சேன். என் மக உயிரோட இருக்க ரெண்டு வருஷமா காரியம் செஞ்சேன்னே “ என்று சிவராம் புலம்ப,

“என்ன நடக்குது ஐஸ்வர்யா ? உண்மையை சொல்லு “ என்று மகிழன் கேட்கவே, நடந்த அனைத்தையும் கூறினாள்.

அதனைக் கேட்ட மகிழனுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. அப்படியே ருத்திரமூர்த்தியாக நின்றான். 

“ஆனந்தியை கொலை பண்ணிருக்காங்க. உனக்கு தெரிஞ்சி நீ இவ்வளோ பண்ணிருக்கேன். எதுக்காக என் கிட்ட ஒரு வார்த்தை கூட இதை பத்தி சொல்லலை. அண்ணன்னு நான் ஒருத்தன் எதுக்கு இருக்கேன் சொல்லு ?” கத்தவே,

“இதுல உங்க எல்லாரையும் இழுத்து உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தா என்னால தாங்கிக்க முடியாது. நான் கூட இப்போ மறைமுகமா தான் இருந்தேன்னே தவிர வெளியுலகப் பார்வைக்கு வசந்த் தான் இதை எல்லாமே பண்ணுறாரு “

“எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு என் கிட்ட நீ மட்டும் சொல்லிருந்தேன்னு வை அப்பவே கொன்னிருப்பேன் “

“இதுக்காக தான் அண்ணா நான் தள்ளி இருந்தேன். அவனை கொன்னு நீ தண்டனை அனுபவிக்கவா. ஏற்கனவே அக்கா நம்மளை விட்டு போய்ட்டா இதுல நீயும் ஜெயிலுக்கு போகவா சொல்லு ? இப்போ தான் அவனுக்கான தண்டனை கிடைச்சிருல ? “ என்கவே,

“இனி உன் வாழ்க்கை என்னாக ஐஸ்வர்யா ?” பிரிந்து வந்து விட்டாலே என நினைத்துக் கேட்க, அப்போது தான் அவளுக்கு திருமணமாகி விட்டதே பெற்றவர்கள் உணர்ந்தனர்.

தங்கத்தாலி செயின்னில் போட்டிருந்ததால் அவர்களுக்கு தெரியாதுப் போக, “நீ கல்யாணம் பண்ணிக்கிட்டையாம்மா ?” என்க, தலையசைத்தவளோ தன் மாங்கல்யத்தைக் காட்டினாள்.

“என் சூழ்நிலை அப்போ அப்படி இருந்தது. அதான் உங்க யார் கிட்டயும் சொல்லாம கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சு ? என்னை மன்னிச்சிருங்க “ என்று தங்களின் திருமணம் எப்படி நடந்தது என்றும், நந்தனைப் பற்றியும் கூறினாள்.

“மாப்பிள்ளை எங்கம்மா நீ மட்டும் வந்திருக்கே ?” என்று பார்வதி ஆவலோடுக் கேட்க, உதடு துடிக்க அமைதியாக இருந்தாள்.

“அம்மா, இப்போ அவங்களுக்குள்ள ஒரு சின்ன பிரச்சனை ?” என்று தான் யூகித்து சரியாகிப் போனதை வைத்து மகிழன் கூறவே, அதிர்ந்தனர் பெற்றவர்கள். அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அவர்களால் தாங்க முடியவில்லை.

“அப்போ இனி நம்ம பொண்ணோட வாழ்க்கை ?” பார்வதியோ பதற,

“கவலைப்படாதீங்க. நந்தன் என்னைக்கும் என்னை விட மாட்டாரு. எனக்கு தான் அவர் மேல இப்போ கோவமே தவிர அவருக்கு என் மேல இல்லை. என்னை தேடி மறுபடியும் வருவாரு. எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுது “ என்க,

“சரிம்மா, என்னமோ எப்படியோ ஆகிப்போச்சு. இனி நடந்ததை பத்தி பேசி என்ன பண்ண ? எங்களுக்கு நீ உயிரோட எங்க கிட்ட வந்ததே போதும். போம்மா போ குளிச்சிட்டு வா. நான் உனக்கு பிடிச்சத்தை சமைச்சி வைக்கேன் “ என்கவே, அங்கிருந்த ஒரு அறைக்குள் தன் உடமைகளோடு நுழைந்தாள்.

அடித்திருந்தால் கூட வலி குறைய மறந்து விடும். ஆனால் வார்த்தைகள் தன்னவன் கூறியது தீராத வடுவானதாக மாறியது. தன்னை நம்பவில்லை காரணம் முழுமையாகக் கேட்கவில்லை என்ற வருத்தம் தான் அவளை வாட்டியது.

அதே நேரம் இங்கே வீட்டிற்கு தனியாக வாடிய தோற்றமாய் நந்தன் வரவே, ஹாலில் தான் அமர்ந்திருந்தார் வாசுதேவன்.

“என்னாச்சு ? நீ மட்டும் ஏன் தனியா வர்றே ?” வந்தவனோ அமரக் கூட இல்லை. அதற்குள் கேட்டார் தந்தை.

கையிலிருந்த முகவரியைக் காட்டியவனோ, “அவளோட அப்பா, அம்மா கூட இருக்கா ?” என்றான்.

“என்ன சொல்லுற நீ ? அவளுக்கு தான் யாருமே இல்லையே ?” நம்ப முடியாதுக் கேட்க,

“நான் அவளை காதலிச்சேன்னே தவிர முழுசா புரிஞ்சிக்காம போயிட்டேன்ப்பா. என்னை ஏத்துப்பால தெரியல. நான் மனுஷனே இல்லை “ என்று புலம்பவே, போதையோடு வீட்டுக்குள் நுழைந்தான் நிதின்.

அவனுக்கு மது பழக்கம் இருப்பது கூட அன்று தான் பெற்றவர்களுக்கு தெரிய வந்தது.

“டேய் ! நீயெல்லாம் ஒரு மனுஷன் தானா ? நான் உன் தம்பின்னு சொல்ல வெக்கமா இருக்கு. பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவியா ?” என்று அண்ணனின் சட்டையைப் பிடித்துக் கொண்டுக் கேட்க,

“விடுடா என்னை. தப்பு பண்ணினது உன் பொண்டாட்டி “ கூறும் முன்னே கழுத்தை நெறித்தான்.

மனோகரி வந்து பிரித்தெடுக்க, “என்ன நடக்குது ? இவன் உன் அண்ணன்டா “ என்க,

“இல்லைவே இல்லை “ கத்தினான்.

“ஒரு பொண்ணோட கொலையைப் பணத்துக்காக தற்கொலையா மாத்தியிருக்கான் இவன். அதுனால அந்த பொண்ணோட குடும்பம் எவ்வளோ அவமனாப்பட்டாங்க தெரியுமா ?” என்று தன் மனைவியின் குடும்பத்தாரைப் பற்றி கூறவே, அனைவருமே இதனை எதிர்பார்க்கவில்லை.

மனோகரியே தன் மகனை அற்பமாய் தான் பார்க்க, சின்மயியை தூக்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் கவிநயா. இனி தன் மகளுக்கு தாய் மட்டுமே என்ற நினைப்போடுச் சென்றாள்.

அங்கே பெரும் அமைதி நிலவ, அப்படியே பொத்தென அமர்ந்தான் நந்தன். 

பின் நாட்கள் கடக்க நிதினுக்கு நீதிமன்றத்தில் பணிநீக்கம் செய்வதற்கு உத்தரவு இட, பணத்திற்கு ஆசைப்பட்டதுக்கு சிறப்பான தண்டனை வெற்றிகரமாக கிடைத்து.

ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில் இங்கே தன் குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருந்தாலும் உள்ளுக்குள் இன்னும் தன்னவன் வரவில்லையே என்ற ஏக்கம் தான். அவனைக் காணாது நாட்களைக் கடத்தவே  சிரமப்பப்பட்டாள்.

இந்த இடைப்பட்ட நாட்களில் ஏக்கம் அதிகரிக்க அவன் கூறிய வார்த்தைகள் கூட மறைந்து தான் போனது. ஒவ்வொரு நொடியும் காத்திருக்க ஆரம்பித்தாள்.

இங்கே, ‘தன்னை ஏற்றுக் கொள்வாளா தன்னவள். எந்த முகத்தை வைத்து அவளின் முன்னேச் சென்று நிற்க முடியும்‘ என்ற எண்ணத்தோடு நந்தன் இருக்க, பொறுமை இழந்தார் அவனின் தந்தை.

“வாடா, மருமகளை கூட்டிட்டு வரலாம். இதுக்கு மேல நீ போய் கூட்டிட்டு வருவேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை “ என்று அவனின் தந்தை வந்துக் கூற,

“நானும் வரேன். உங்க கூட “ என்றவாறு அவர்களின் முன் வந்து நின்றார் மனோகரி.

“நாங்களும் வரோம் “ என்ற குரல் அவர்களுக்கு பின்னிருந்து வர, சின்மயி, கவிநயா, தீப்தி மூவரும் நின்றிருந்தனர்.

தண்டனைப் பெற்ற பின்னே தவறென்ன என்பதை புரிந்துக் கொண்டவனோ கையில் இருந்த பணத்தை வைத்து ஏதாவது கடை வைக்கும் எண்ணத்தில் இருந்தான். 

வீட்டார் யாருமே உதவி செய்ய மாட்டோம் என்று கூறி விட, மனைவியும் மனம் மாறினால் என் மனம் ஒத்துக் கொண்டால் மட்டும் ஏற்கிறேன் என்றிடவே அடிபட்ட பாம்பாக வலம் வந்தான்.

காலை நேரம் மகிழன் வேலைக்குச் செல்ல கிளம்பி வெளியே வர, அவர்களின் வீட்டின் முன் சரியாக கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர்களைக் கண்டதுமே யாரென அறிந்துக் கொண்டான்.

“அம்மா, அப்பா “ அழைத்தவனோ வந்தவர்களை அழைக்காது வாசலிலே நிற்க, சத்தம் கேட்டு உள்ளிருந்து மூவருமே வந்தனர்.

தன் புகுந்த வீட்டாரைக் கண்ட அஞ்சனாவோ தயக்கத்தோடு நிற்க, “உள்ளே வாங்கன்னு கூப்பிட மாட்டையாம்மா “ என்று மாமனார் வாய் திறந்த பின்னே, பெற்றவர்களுக்கு வந்தவர்கள் யாரென கூறினான் மகிழன்.

உடனே தன் சம்மந்தி வீட்டாரை இன்முகமாக வரவேற்று உபசரிக்க, சின்மயியோ தன் சித்தியை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.

மௌனமோடு அஞ்சனா நிற்க, தன்னவளை தான் மன்னிப்பு பார்வையோடுக் கண்டான் நந்தன்.

சிறிது நேரம் நலம் விசாரித்து குடும்பத்தார் பற்றி பேசி விட்டு, “நாங்க எங்க மருமகளை முறைப்படி புகுந்த வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்திருக்கோம் “ என்க, அவர்களோ மகளை தான் கண்டனர்.

“போடா போய் மன்னிப்பு கேளு “ வாசுதேவன் கூறவே, மனைவியின் அருகில் வந்தவனோ பட்டென தரையில் படுத்து காலிலே விழுந்து விட்டான்.

அவனின் செய்கையைக் கண்டு சிறியவர்கள் கிண்டலோடு சிரிக்க, பின் பெரியவர்களும் சிரிக்க ஆரம்பித்தனர்.

“இதுக்கு மேல என்னை சோதிக்க நம்ம வீட்டுக்கு வந்திரு அஞ்சு. இப்படியே காலம் முழுக்க உன் காலடியே இருக்கேன் “ என்று வெட்கம் விட்டு கூறவே, சிரிப்போடு நின்றிருந்தாள்.

“அப்பாடா என் பொண்டாட்டி சிரிச்சிட்டா, என்னை ஏத்துக்கிட்டா “ என்று கூச்சலிட்டு கத்தவே, தன்னவன் வாயினை மூட வர, இறுக்கி அணைத்துக் கொண்டான்.

மனமார இரு குடும்பமும் நீண்ட நாட்களுக்கு பின் மகிழ்ச்சியாய் அதனைக் கண்டனர். இவர்களின் இந்த மகிழ்ச்சி வருங்காலத்தில் ரெட்டிப்பு ஆக மாறும் என்பது போல் தீப்தி, மகிழன் இருவரும் ஒருவரை ஒருவர் நேசமோடு பார்த்துக் கொண்டனர்.

நாட்கள் கடந்து எப்படி மூன்று வருடங்கள் சென்றதென்றே தெரியவில்லை.

தீப்தி, மகிழன் இருவருக்கும் திருமணம் அன்று வெகு விமர்சையாக நடந்தது. மனதார இரு குடும்பத்தாரும் இணைந்து நடத்தினர்.

அஞ்சனாவின் வழி நடத்துததால் குடும்பத்தார் அனைவரும் மகிழ்வோடு இருக்க அவளேப் பேசி, தன் அண்ணன் மட்டும் நாத்தனாரின் திருமணத்தை நடைபெற வைத்தாள்.

நிதின் இப்போது சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி நல்ல முறையில் செயல்பட்டு வருகிறான். அவனின் உலகமே மகள் என்ற நிலைக்கு வந்திருந்தான்.

பெண்ணவளின் உண்மையான பாசம் என்ன என்பதை மனைவியின் மூலம் அறியத் தவறியவன், மகளின் மூலம் அறிந்துக் கொண்டான். மனம் உவர்ந்து அஞ்சனாவின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு வேண்டினான்.

குமரனின் தந்தையோ முக்கிய பதவியில் இருக்க, தன் மகனை வெளியே எடுக்க உதவி செய்ய மாட்டேன் என்று கூறி விட்டார். எங்கே மகனுக்கு உதவி செய்தால் மக்களின் மத்தியில் தன் பெயர் கெட்டு விடுமோ என்று யோசித்தார். ஆயுள் தண்டனை அனுபவித்தான்.

அஞ்சனா, நந்தன் இருவரின் காதலுக்கு அடையாளமாக இப்போது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருந்தது. கவிநயா தன் சம்பாத்தியத்தை வைத்து மகளை செழிப்பாய் வளர்க்க ஆரம்பித்தாள்.

ஒரு வழியாக அனைவரும் இன்பமாக அவர்களின் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்க, கவிநயாவும் சற்று கணவனை ஏற்றுக் கொள்ள தயாராகினாள். வசந்த்தையும் திருமணத்திற்கு அவர்களின் வீட்டில் சம்மதிக்க வைக்க, காதலியை தெய்வமாக நினைக்க ஆரம்பித்தான்.

பாவையவளின் ரகசியமும் வெற்றியைக் கண்டு விட, அவளும் வாழ்க்கையில் வெற்றியைக் கண்டாள். இந்த இன்பம் எப்போதும் நிலைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் சென்று வருவோம்.

 நன்றி

 முற்றும்...

இதுவரை என் கதைக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள்

 




Leave a comment


Comments


Related Post