இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 29 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 10-05-2024

Total Views: 21010

செந்தூரா 29



செந்தூரனின் வீட்டில் சொந்த பந்தங்கள் என அனைவரும் வந்து இறங்கி விட்டிருந்தனர்,. வீடே விழா கோலம் பூண்டு இருந்தது. சுபாஷிற்கும் சாரதாவிற்கும் வீட்டை பார்த்ததும் மனது பூரித்து போனது. தன் அண்ணன் மகன் அவர் மகளை ராணி போல அல்லவா பார்த்துக் கொள்கிறான்? வேறென்ன வேண்டும் அவர்களுக்கு?


முத்துப்பாண்டி ரஞ்சிதம் ஆச்சியிடம் ஊடல் கொண்டு இருந்தார், “நான் ஒருத்தன் தனியா இருப்பேன்னு இல்லாம பேரன் வீட்டில் வந்து உட்கார்ந்துகிட்டா எப்படி? எனக்கு அங்கே தண்ணி கொடுக்க கூட ஆளு இல்ல” என்று மனைவியையும் மருமகளையும் திட்டிக் கொண்டு இருந்தார்.


“ஆமாம் இவருக்கு சோறு பொங்கி போட்டே என் ஆயுசு போச்சு. ஏதோ இப்போ தான் என் பேரன் வேலைக்கு வகையா சமைச்சு போட ஆள் வச்சிருக்கான். அது பொருக்காதே இந்த கிழவனுக்கு” என்று நொடித்தார் ரஞ்சிதம் ஆச்சி.


“ஆமாண்டி நான் கிழவன், நீ மட்டும் குமரி பாரு. வந்துட்டா, ஒழுங்கா விழா முடிஞ்சதும் ஊருக்கு வந்து சேரு” என்றார் முத்துப்பாண்டி. கதிரேசனும் ஜானகியை பார்த்து “உனக்கும் இதே தான்” என்றார்.


வீட்டு பெண்கள் இல்லாமல் இருவரும் திண்டாடி போயிருந்தனர். கிராமவாசிகள் என்பதால் வீட்டு வேலைக்கு ஆள் வைப்பதெல்லாம் அவர்களுக்கு பிடிக்காது. கதிரேசனே தெரிந்த வகையில் சமைத்து சமாளித்துக் கொண்டிருந்தார். விழா முடிந்ததும் இருவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவோடு வந்திருந்தனர் தந்தையும் மகனும்.


“பார்த்தியாடி ஜானகி, ஒரு பத்து நாள் நாம இல்லாம இவங்களால சமாளிக்க முடியலை. இப்பவாச்சும் நம்ம அருமை தெரிஞ்சா சரி” என்று ரஞ்சிதம் ஆச்சி மருமகளிடம் வக்கனையாக பேச மற்றவர்கள் சிரித்துக் கொண்டு இருந்தனர். தாரிகா அனைவருக்கும் எடுத்த துணிமணிகளை எடுத்து கடைபரப்பிக் கொண்டிருந்தாள்.


காயத்ரி தாரிகாவை பார்த்து, “என்ன அண்ணி? என் அண்ணன் எங்களோட தொந்தரவே இருக்க கூடாதுனு உன்னைய இங்கே தனியா கூட்டிட்டு வந்தான். இங்கே பார்த்தால் ஒரு பெரிய கூட்டமே இருக்கே? எப்படி சமாளிக்கிறான்? அதுசரி எத்தனை பேர் இருந்தால் என்ன? யார் பக்கத்தில் இருந்தாலும் கவலைப்படாம அசால்டா உன்னை சைட் அடிப்பானே? என்ன நான் சொல்றது கரெக்ட்டா?” என்று கலகலவென்று சிரித்தாள் காயத்ரி.


அவள் சொல்வதில் இருந்த உண்மை உறைக்க தாரிகா நாணத்தோடு தலைகவிழ்ந்துக் கொண்டாள். “எவடி இவ? சபையில அண்ணங்காரன் மானத்தை இப்படியா வாங்குவ?” என்று நொடித்தார் ரஞ்சிதம் ஆச்சி.


எல்லோரும் கலகலப்பாக சிரித்துக் கொண்டிருந்த சமயம் அங்கே செந்தூரனின் கார் வந்து நின்றது. அதிலிருந்து சங்கரபாண்டியன், சார்லஸ் மற்றும் ஆராத்யா இறங்கவும், அவர்களுடன் சேர்ந்து செந்தூரன் கவினும் வந்தனர்.


வந்திருந்தவர்களை அழைத்துக் கொண்டு வெளியே தோட்டத்தில் கூட்டமாக அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்த தன் குடும்பத்தாரை நோக்கி சென்றான் செந்தூரன். குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.


சங்கரபாண்டியன் ஜானகியையும் அவரின் தாய் கண்ணம்மா பாட்டியையும் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தார். “நீங்க கண்ணம்மா சித்தி தானே?” என்றார்.


அவரோ நெற்றியை சுருக்கி, “நான் கண்ணம்மா தான். ஆனால் நீ யாருனு தெரியலையேப்பா?” என்றார் யோசனையோடு.


“சித்தி, நான் சங்கரபாண்டியன்? உங்க ஒண்ணு விட்ட அக்கா வேலம்மாளோட மூத்த மகன்” என்றார் சங்கரபாண்டியன் உற்சாகமாக.


“யாரு, வெளிநாட்டுக்கு போய் அங்கேயே ஒரு வெள்ளைக்காரியை கல்யாணம் செய்துக்கிட்டதா சொன்னாளே எங்க அக்கா? அவனா நீயீ” என்றார் கண்ணம்மா பாட்டி அவரை மேலிருந்து கீழாக அளவெடுக்கும் பார்வையில்.


அவர் கேட்ட விதம் நெஞ்சில் சுருக்கென்று தைக்க, “அதெல்லாம் பழைய கதை, சித்தி… இது தான் நம்ம ஜானகியா? பாவாடை சட்டை போட்டுட்டு இருந்தப்போ பார்த்தது” என்றார் சங்கரபாண்டியன்.


“ம்ம், இப்போ அவளே பேரன் பேத்தி எடுக்க போறா. ஆமா நீ ஏன் எங்க அக்கா சாவுக்கு கூட வராமல் போயிட்டே?” என்றார் கண்ணம்மா.


அவர் பதில் சொல்ல முடியாமல் திருதிருவென விழிக்க, “அம்மா சும்மா இரு, பழைய கதையை பேசி என்னாவாக போகுது. அண்ணா நீங்க வாங்க, அப்போ உங்க பொண்ணு தான் ஆராத்யாவா?” என்றார் ஜானகி ஆவலுடன்.


“ஆமாம்மா, என் பொண்ணு ஆராத்யா தான் உன் மருமக” என்றார் புன்னகையுடன்.


“என்ன மருமகளா?” என்று எல்லாரும் அதிர்ந்து போய் பார்க்க, “அண்ணன் மகளை ஊர்பக்கம் மருமகள்னு சொல்றது தானே வழக்கம்? நான் ஏதும் தப்பா சொல்லிடலயே?” என்றார் சங்கர பாண்டியன்.


அனைவரும் ஆசுவாசமாக பெருமூச்சுவிட்ட படி தலையை ஆட்ட, “ஆராத்யா அத்தை மாமா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கம்மா” என்றார். அவளும் நல்ல பெண்ணாக வந்து காலில் விழவும் கதிரேசனும் ஜானகியும் அவளை ஆசிர்வாதம் செய்தனர்.


தாரிகா நடப்பதை புருவமுடிச்சுடன் ஒரு பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்தாள். “நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட்டே பண்ணல சார், நாம சொந்தகாரங்களாக இருப்போம்னு. வாட் எ கோ இன்சிடென்ட்” என்றான் செந்தூரன்.


“ஆமாம் மித்ரன், நீங்க எனக்கு முறைமாமன் ஆயிட்டிங்க” என்று சிரித்தாள் ஆராத்யா தாரிகாவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே.


செந்தூரன் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல், “வாங்க எல்லாரும் உள்ளே போய் சாப்பிட்டே பேசலாம். சார்லஸ் சார் ஆல்ரெடி டயர்டா இருக்காரு” என்றான். சார்லஸ்க்கு அவ்வளவாக தமிழ் தெரியாது என்பதால் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தவர், செந்தூரனின் வார்த்தையை மட்டும் ஆமோதித்தார், “யெஸ் பிலீங் டயர்ட்” என்றார்.


அனைவரும் வீட்டிற்குள் சென்று பேச்சும் கும்மாளமாக சிரித்தபடி சாப்பிட்டு முடித்தனர். சங்கரபாண்டியன் செந்தூரன் அருகில் அமர்ந்துக் கொண்டு சிறிது நேரம் அவர்களின் பிசினஸை பற்றி பேசிவிட்டு, அன்று அவன் வெனிஸ் நகரத்தில் நடந்த பங்குதாரர்களுக்கான மீட்டிங்கில் பேசியதை பற்றி அங்கிருந்தவர்களுக்கு விவரித்துக் கொண்டிருந்தார்.


“மித்ரன் அறிவாளி, சுயகட்டுப்பாடு உள்ளவர், அன்ட் ஆணழகனும் கூட. இப்படி பட்டவர்க்கு என் மகளை திருமணம் செய்துக் கொடுக்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்டேன். ஆனால் அவர் மறுத்திட்டார். நீங்க என்னோட சொந்தம்னு அப்பவே தெரிஞ்சு இருந்தால் என் தங்கை மகன் தானேனு அடிச்சு கேட்டிருப்பேன், என்ன செய்யறது எல்லாம் கைமீறி போயிடுச்சு” என்றார் பெருமூச்சுடன்.


அவரின் பேச்சில் மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து போனது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, செந்தூரனுக்கு அவஸ்தையாகி போனது. இதில் அவன் பங்கு எதுவும் இல்லை என்றாலும், ஆராத்யா வந்த பிறகாவது அங்கே நடந்ததைப் பற்றி தாரிகாவிடம் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை. சொல்லப்போனால் அவனுக்கு அதைப்பற்றிய நினைவே இல்லை. இந்த சங்கரப்பாண்டியன் சபையில் அனைவரின் முன்பும் அன்று நடந்தவற்றை போட்டு உடைக்கவும் மனைவி என்ன நினைப்பாளோ என்று அவள் முகம் பார்த்தான்.


அவள் முகமோ தெளிந்த நீரோடை போல அமைதியாக இருந்தது. அதில் சந்தேகமோ கோபமோ இல்லை. அதே சமயம் சந்தோஷமும் இல்லை. சங்கரபாண்டியனின் பேச்சு முத்துப்பாண்டிக்கு எரிச்சலை தந்தது. “ஏம்ப்பா அவன் தான் வேணாம்னு சொல்லிட்டான்ல அதைபத்தி பேசி என்னாக போகுது? நேரம் ஆகுது எல்லாம் போய் தூங்குங்க” என்றார்.


ஜானகிக்கு இது புது விஷயம், ஆக செந்தூரனுக்கு ஆராத்யாவின் காதல் தெரிந்திருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்க, சாரதாவும் சுபாஷூம் கவலையோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இவர்களால் தங்கள் பெண் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை வருமோ என்று நினைத்து கவலைப்பட்டனர். செந்தூரன் அனைவரின் முகபாவத்தையும் பார்த்து அவர்களின் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்று உணர்ந்து கொண்டான். ஆனால் மனைவி என்ன நினைக்கிறாள் என்று தான் அவனுக்கு தெரிந்தாக வேண்டும். எனவே தாத்தாவின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கும் பேரனாக எழுந்தவன் எல்லாருக்கும் பொதுவாக குட் நைட் சொல்லி விட்டு, மனைவியை அழுத்தமாக பார்த்து வா என்று கண்ணசைத்து விட்டு அவன் அறை நோக்கி சென்றான்.


உள்ளே சென்றதும் கதவை அடைத்தவன், அவளை இறுக அணைத்துக் கொண்டு, “தாரா சாரிடி” என்றான். “எதுக்கு மாமா?” என்றாள் அவள்.


“நான் உன் கிட்ட ஆராத்யாவை பத்தி மறைக்கணும்னு நினைக்கலை. சுத்தமா எனக்கு அப்படி ஒரு விஷயம் நடந்ததே நினைவில் இல்லை. என் மேலே உனக்கு ஏதும் கோபம் இல்லையே” என்றான் அவள் உச்சந்தலையில் முத்தமிட்டுக் கொண்டே.


“எனக்கு ஏற்கனவே தெரியும் மாமா” என்றாள் தாரிகா.


இப்போது மனைவியின் நாடியை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவன், “என்ன ஹனி? உனக்கு தெரியுமா? எப்படி? அப்போ ஏன் இதைப்பற்றி என்னிடம் நீ கேக்கவே இல்லை?” என்றான் அவள் கண்களை ஆராய்ந்துக் கொண்டே. பின்பு “ஓ அதுக்கு தான் அவள் வந்ததிலிருந்து நீ கொஞ்சம் டிஸ்டர்ப்டாக இருக்கியா?” என்றான் குற்றம் சாட்டும் குரலில்.


“அய்யோ என் செந்தூரா… உன்னை பார்த்தால் யாருக்கு தான் புடிக்காமல் போகும்? என் பிரண்ட்ஸ் கூட உன்னை சைட் அடிச்சாளுங்க, உன்னை அவங்களுக்கு விட்டு தரச்சொல்லி எல்லாம் கெஞ்சி இருக்காளுங்க தெரியுமா? அதுபோல அந்த ஆராத்யாவும் உன்னை விரும்பி இருக்காங்க. அதுக்கு போய் நான் எதுக்கு உன் கிட்ட விளக்கம் கேட்கணும்? என் மாமனை பத்தி எனக்கு தெரியாதா?” என்றாள் காதலுடன்.


அவளின் கன்னத்தை இருகைகளிலும் ஏந்தி, “என் மேல அத்தனை நம்பிக்கையாடி?” என்றான் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே. “ஆமாம்” என்று தலையை அசைத்து கண்சிமிட்டி சிரித்தாள். “அப்போ ஏன்டி எப்போ பார்த்தாலும் டல்லா இருக்க? என்ன பிரச்சனை?” என்றான்.


“ம்ம் நீ என்னை நைட் எல்லாம் தூங்க விட்டா தானே?” என்று அவனை முறைத்தாள். தொண்டையை செருமிக் கொண்டே, “பகல்ல ப்ரீயா தானே இருக்க, அப்போ தூங்கறது” என்றான். “அத்தை, பாட்டிக்கூட பேசிட்டு இருந்தாலே நேரம் போயிடுது மாமா” என்றாள் அவன் மார்பில் சாய்ந்தபடி.


“அவ்வளவு தானே, வேற எதுவும் பிரச்சனை இல்லையே?” என்றான் மீண்டும் தெளிவு படுத்திக் கொள்ளும் நோக்கத்தில். “நீ இப்படியே கேட்டுட்டே இரு, நான் தூங்க போறேன்” என்று திரும்பியவளை இழுத்து தனக்குள் இறுக்கி அணைத்துக் கொண்டான்.


“ஹனி உன்னோட புரிதல்ல நான் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு இருக்கேன். கொஞ்சம் இன்னைக்குமட்டும் பொறுத்துக்கோடி” என்று சொல்லியவன், அவள் நாசி இதழ்கள், கன்னம் என கடித்து தின்ன தொடங்கி விட்டான்.


கழுத்துவளையில் முகம் புதைத்தவன் ஒரு வித வேகத்துடனும் தவிப்புடனும் அவளை ஆட்கொள்ள தயாராகிவிட்டான். எங்கே அவள் அவனை தவறாக நினைத்துக் கொள்வாளோ என்று தவித்து போயிருந்தான். அவன் கொடுத்த அழுத்தமும் வலியும் இன்பமாய் இருக்க அவள் அவனுக்குள் புதைந்து போவது போல ஒட்டிக் கொண்டாள். அதன் பிறகு தன்னவளை கட்டிலுக்கு தள்ளி அவளுக்கு போர்வையாக மாறிப் போனான். ஏனோ அன்று அவனின் வேகம் கட்டுக்கடங்காமல் இருந்தது. கணவனின் பசியை போக்கும் அமுதசுரபியாய் சளைக்காமல் தன்னை அவனுக்கு வாரிவழங்கி கொண்டிருந்தாள் பெண்ணவள்.


மறுநாள் விழாவிற்கு தேவதையென தயாராகி இருந்த மனைவியை ஆசையாக முத்தமிட்டு விட்டு “நீ நம்ம வீட்டார் எல்லாரையும் கூட்டிட்டு வா, நான் சீக்கிரம் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.


தாரிகா அனைவரையும் கிளப்பிக் கொண்டு செல்வதற்குள் கம்பெனி திறப்பு விழாவிற்கு பெரும் கூட்டமே வந்து விட்டிருந்தனர். ஆராத்யா மணப்பெண் போல பிரத்யேகமான நவநாகரீக உடை அணிந்து தயார் ஆகியிருந்தாள். வந்திருந்தவர்களில் ஒருவர் கூட அவளை மறக்காமல் ஒரு முறையாவது திரும்பி பார்த்துவிட்டு சென்றனர். அது அவளின் உடையாலா, அழகாலா, கவர்ச்சியலா என்றால் அனைத்தும்தான் காரணம் என்றே சொல்ல வேண்டும்.


பன்னாட்டு நிறுவனம் என்பதால் எம்பி எம்எல்ஏ என பல கட்சி பிரமுகர்களும் வந்திருந்தனர். கம்பெனியின் திறப்பு விழாவிற்கு ரிப்பனை கட் செய்ய சங்கரபாண்டியன் தன் மகள் ஆராத்யாவையும் செந்தூரனையும் அழைத்தார். இரண்டு பேரையும் ஒன்றாக ரிப்பன் கட் செய்ய சொன்னார்.


செந்தூரன் தவிப்புடன் மனைவியை பார்த்தான், அவள் ஒப்புதலாக தலையசைக்கவும் அவளை பெருமையாக பார்த்துக் கொண்டே ரிப்பனை கட் செய்தான். வந்திருந்தவர்கள் கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். அவர்களில் சிலர் செந்தூரன் ஆராத்யாவின் ஜோடி பொருத்தம் நன்றாக இருப்பதாக தாரிகாவின் காது படவே பேசினார்கள். கணவனை வேறொரு பெண்ணுடன் சேர்த்து பேசியது அவளுக்கு வருத்தமாக இருந்தாலும் அவர்கள் தெரியாமல் தானே பேசுகிறார்கள் என்று அமைதியாக இருந்துவிட்டாள்.


ஆனால் செந்தூரன் இருக்கும் இடங்களில் எல்லாம் ஆராத்யா ஜோடியாக நின்றுக் கொண்டாள். தாரிகாவை அவன் அருகே நெருங்கவே விடவில்லை. அவர்கள் இருவரையும் நெருங்க முடியாதபடி சங்கரபாண்டியன் அரணாக நின்று கொண்டிருந்தார். செந்தூரனின் திருமணம் முக்கிய சொந்தங்களை தவிர யாருக்கும் தெரியாததால், வெளிநாட்டுக்கு சென்றவன் அங்கே இருந்த ஆராத்யாவை திருமணம் செய்துக் கொண்டு வந்து இங்கே தொழில் தொடங்குவதாக பேச ஆரம்பித்து விட்டனர்.


செந்தூரனோ புதிதாக வேலைக்கு சேர்த்திருக்கும் ஆட்களை பங்குதாரர்களுக்கு அறிமுகம் செய்துக் கொண்டும், வந்திருந்த பிரமுகர்களுக்கு அவன் தொடங்க இருக்கும் ஆக்ரோ டெக்னாலஜி பிராஜெக்டை களத்திலும், இணையதளத்திலும் எப்படி எல்லாம் செய்ய போகிறான், அதற்காக அவன் செய்திருக்கும் ஏற்பாடுகள் என்ன என்பதை விவரித்துக் கொண்டிருந்தான்.


இதை கேட்டுக் கொண்டிருந்த முத்துப்பாண்டிக்கும் கதிரேசனுக்கும் ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது. அவர்களுக்கு பிறகு அவர்களின் நிலத்தில் யார் விவசாயம் செய்ய போகிறார்கள் என்ற பெரிய கேள்விகுறி அவர்களிடையே இருந்தது. செந்தூரன் தீடீரென்று வெளிநாடு ஐடி கம்பெனி என்று சென்று விடவும் இருவருக்கும் உள்ளுக்குள் வருத்தமாக இருந்தது. ஆனால் செந்தூரனின் பேச்சை கேட்டதும், விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்கி அதை மேலும் வளரச் செய்வதே அவனுடைய முக்கிய நோக்கம் என்று தெரிந்ததும் அவனை பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தனர்.


அங்கே நிகழ்ச்சிக்கு வந்திருந்த சில பெண்களும் பார்வையாளர்களும் ஆராத்யாவிடம், “யார் அவர்?” என்று கேட்க, “என்னோட உட்பி” என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள். இதை பார்த்ததும் தாரிகாவின் பொறுமை குறைந்துக் கொண்டே சென்றது. இவளை இதற்கு மேலும் சும்மா விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டே வேகமாக ஆராத்யாவின் அருகில் சென்றாள்.


முதன் முறையாக தன்னை தேடிவந்த தாரிகாவை புருவம் சுருக்கி பார்த்தாள் ஆராத்யா, “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும், கொஞ்சம் என்கூட வர்றீங்களா?” என்றாள் தாரிகா. “இல்லை எனக்கு இங்கே வேலையிருக்கு” என்றாள் அவள். “இரண்டே நிமிஷம் தான் உடனே போயிடலாம்” என்றாள் தாரிகா.


இருவரும் இதுவரை பேசிக் கொண்டதே இல்லை. தாரிகாவே வந்து அவளை அழைக்கும் போது மறுக்கவும் முடியாமல் ஆராத்யா அவள் பின்னால் சென்றாள். விழா நடக்கும் இடத்தை விட்டு சற்று தள்ளி ஒதுக்குபுறமாய் சென்று யாரும் இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் தாரிகா.


“என்ன விஷயம்?” என்ற ஆராத்யாவை அவள் இன்னதென்று உணரும் முன் ஓங்கி பளாரென்று கன்னத்தில் அறைந்திருந்தாள் தாரிகா. ஒருகணம் ஆராத்யாவிற்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. தன்னை சமாளித்து நின்றபடி கன்னத்தை தடவி பார்த்தாள். கன்னத்தில் தாரிகாவின் கைவிரல் ஐந்தும் நன்றாகவே பதிந்திருந்தது. 


“ஏய்” என்று ஏதோ கோபமாக பேசப்போனவளை கைநீட்டி தடுத்து, “இனி என் மாமா பின்னாடியே சுத்தறதையோ, எல்லார்கிட்டயும் அவர்தான் உன்னோட உட்பினு சொல்றதையோ பார்த்தேன் தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை! நானும் போனா போகட்டும் ஏதோ லவ் பெயிலர்ல என் மாமா மேல பைத்தியமா சுத்திட்டு இருக்கணு பார்த்தா ஓவரா போயிட்டு இருக்க? நான் பொறுமைசாலி தான். ஆனால் ஏமாளி இல்ல. வந்தா வந்த வேலையை மட்டும் பார்த்திட்டு போய்ட்டே இரு. பங்கஷன் முடிஞ்சு இரண்டு நாள்ல என் வீட்டை காலி செய்திருக்கணும். இல்லைனா கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிடுவேன்” என்று சொல்லி விட்டு விறுவிறுவென்று அங்கிருந்து நடந்து சென்றாள் தாரிகா.


போகும் அவளின் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராத்யா. தங்கதட்டில் சாப்பிட்டு, பார்ன் வித் கோல்டன் ஸ்பூனோடு வளர்ந்தவளை, அவளுக்கு கொஞ்சமும் சமமில்லாத ஒருத்தி கன்னத்தில் அறைந்ததோடு மிரட்டிவிட்டும் செல்கிறாள். இதுவரை யாரிடமும் ஏன் பெற்றவர்களிடமும் சின்னதாய் ஒரு அடி கூட வாங்காதவளை, கன்னம் வீங்கும் அளவிற்கு அடித்துவிட்டு செல்லும் இந்த தாரிகாவை சும்மா விடக்கூடாது. சும்மாவே விடக்கூடாது என்று மனதிற்குள் கருவினாள் ஆராத்யா.



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post