இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 1 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 10-05-2024

Total Views: 23985

  "காக்க காக்க கனகவேல் காக்க 
     நோக்க நோக்க நொடியில் நோக்க 
     தாக்க தாக்க தடையற தாக்க 
     பார்க்க பார்க்க பாவம் பொடிபட" 

     என்ற கந்தசஷ்டி கவசம் அதிகாலை வேலையில் பாடிக்கொண்டுடிருந்தது  பூஜை அறையில் டங் டங் என மணி ஓசை எழுப்ப கற்பூர ஆரத்தி எடுத்து கொண்டு இருந்தார் வீரராகவன். அவர் அருகில் அவரின் மனைவி சாந்தி கைகூப்பி கண்மூடி பிரார்த்தனை செய்து கொண்டு நின்றிருந்தார். ஆரத்தியை தொட்டு வணங்கி விட்டு நெடுஞ்சான்கிடையாக  விழுந்து எழுந்து போட்டோவில்  ஆண்டிக்கோலத்தில் நின்று அருள்பாளித்துக்கொண்டு இருந்த பழநி முருகனை பார்த்து 

    "அப்பனே முருகா என் மகன் எங்கிருந்தாலும் நல்லா இருக்கனும் எந்த குறையும் இல்லாமல் நீ தான் பார்த்துக்கனும்   என் உசிரு போறதுக்குள்ள என் மகனை என் கண்ணுல காட்டிடு முருகா  குடும்பமா காவடி எடுத்து வரேன் முருகா" என்ற வேண்டுதலை வைத்துவிட்டு பூஜை அறையில் இருந்து வெளியே வந்து ஹால் சோபாவில் அமர்ந்தார். 

     இந்த வேண்டுதல் தினமும் நடப்பது தான் பத்து வருடங்களுக்கு முன்பு தன் 17 வயது ஆன மூத்த மகன் தன்னை தேடவேண்டாம் தேடிவந்தால் திரும்பி வரமுடியாத இடத்துக்கு போய்விடுவேன் என்று மிரட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு கையில் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு காணாமல் போய்விட்டான். 

     நேரடியாக தேடாமல்  நண்பரும் வீட்டில் கணக்குபிள்ளையுமாக இருக்கும் சண்முகம் மூலமாக ஆட்களை அனுப்பி தேட எந்தப் பலனும் இல்லை.   ஆரம்பத்தில் கண்டுபிடித்து எப்படியாவது சமாதானம் செய்து அழைத்து வந்துவிடலாம் என்று இருந்தவருக்கு ஒரு வருடம் முடிந்தும்  அவனை பற்றி சின்ன தகவல் கூட கிடைக்கவில்லை என்றதும் மனவேதனை அடைந்தவர் கடவுளை சரணடைந்தார்.  அவரால் மட்டுமே தன் மகனை காக்க முடியும் தன்னிடம் கொண்டு வந்து சேர்க்கமுடியும் என்று நம்பினார். 


     சோழவரம் அழகிய கிராமம் ஊரைச் சுற்றி பச்சைபசேலாக  வயல் வெளிகள் வாழைத்தோப்புகள் தென்னை தோப்புகள் நிறைந்த ஊர். வீரராகவன் குடும்பம் வழி வழியாக அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர் பொறுப்பு வகிக்கும் குடும்பம்.  ஊரில் பெரும்பான்மை நிலங்கள் இவர்களுடையது.  

     வீரராகவன் சாந்தி தம்பதியரின் பிள்ளைகள்  கார்த்திகேயன், சரவணன்,  அமிர்தவள்ளி. 

     சரவணன் 25 வயது  BE COMPUTER SCIENCE முடித்து  சென்னையில்  மூன்று வருடங்களாக பணிபுரிந்து வந்தவன் அந்த வேலையை விட்டு விட்டு தன் ஊருக்கு அருகில் புதியதாக திறந்து உள்ள மும்பையில் புகழ்பெற்ற AH Software Solution கம்பெனியின் கிளை கம்பெனி AHKK சாப்ட்வேர் சொல்யூஷன் கம்பெனியில் வேலை கிடைத்து உள்ளது. 

    அமிர்தவள்ளி 21 வயது இந்த வருடம் தான் கல்லூரி BSC COMPUTER SCIENCE  முடித்து இருந்தாள்.  

     கணக்குபிள்ளை சண்முகம் மகன் கம்யூட்டர் படிப்பு படித்து வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்து வந்ததாலும்  கிராமத்திற்கு அருகில் உள்ள ஊர்களில் நிறைய கம்பெனிகள் உருவாகி நிறைய படித்தவர்களுக்கு வேலை கிடைத்து கை நிறைய சம்பளம்  கிடைப்பதால் அந்த கிராமத்தில்  பெரும்பாலான பிள்ளைகள் கம்யூட்டர் படிப்பும், படிப்பு ஏறாத பிள்ளைகள் தொழிற்கல்வியும் படித்தனர். 

     அமிர்தவள்ளி தந்தை தாயிடம் கொஞ்சநாள் வேலை செய்ய அனுமதி வாங்கி அவளும் சரவணன் செல்லும் கம்பெனியில் வேலை செல்ல உள்ளாள். 

     AHKK கம்பெனி புதிதாக கட்டப்பட்டு அடுத்த வாரத்தில் இருந்துதான் செயல்பட இருக்கிறது.  அதிகமான தூரம் பயணம் செய்து வேலைக்கு சென்றவர்கள் தங்கள் ஊருக்கு பக்கத்திலேயே புதிய கம்பெனி திறக்க உள்ளதால்  அங்கு வேலைக்கு முயற்சி செய்த பெரும்பான்மையருக்கு வேலை கிடைத்தது. 

     கணக்குபிள்ளை சண்முகத்தின் மகன் முரளியின் உடன் படித்தவர்கள் இருவர் சேர்த்து இந்த கம்பெனி உருவாக்கி இருப்பதால் அந்த கம்பெனியில் முக்கிய பொறுப்பில் முரளி இருப்பதால் அனைவருக்கும் எளிதாக வேலை கிடைத்துவிட்டது. 

    தன்  அண்ணன் கார்த்திகேயனின் கனவு கம்யூட்டர் பீல்டில் சாதிக்க வேண்டும் என்பது பள்ளி படிக்கும் போதே கம்யூட்டர் பற்றிய நிறைய விஷயங்கள் கற்று இருந்தான்.  அவன் ஆசிரியர்கள் அவனை பாராட்டி   கார்த்திகேயனின் தந்தை வீரராகவரிடம் கம்ப்யூட்டர்  படிப்பை படிக்க வைத்தால் நிறைய சாதிப்பான் என்று கூறியிருந்தனர். 

    ஆனால் அதற்குள் என்னென்னவே நடந்து வீட்டைவிட்டு வெளியேறி விட்டான் கார்த்திகேயன்.  இப்போது எங்கே எப்படி இருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. 

    அண்ணனின் கனவு படிப்பை தாங்களாவது படிக்க வேண்டும் என்று தான் சரவணன், அமிர்தவள்ளி இருவரும் அந்த படிப்பை படித்தனர். 

     தனக்கு பிறகு விவசாயத்தை தன் மகன் பார்க்க வேண்டும் என்று எண்ணியவர் மகனிடம் சொல்ல சரவணன் கண்டிப்பாக கம்யூட்டர் படிப்பு தான் படிப்பேன் சில வருடம் அந்த வேலை பார்த்துவிட்டு அதன் பிறகு வேண்டுமென்றால்  பார்த்து கொள்வதாக சொல்லிவிட  அதுவே போதும் என்று விட்டுவிட்டார் வீரராகவன். 

     ஏற்கனவே கண்டித்ததால் தன் மூத்த மகனை தொலைத்துவிட்டு இருக்கிறார் அதனால் பிள்ளைகள் விருப்பபடி விட்டுவிட்டார்.  அவருக்கு விவசாயத்திற்கு உதவியாக மனைவியின் அண்ணன் கோதண்டனும் அவரின் மகன் இளவரசனும் இவருக்கு உதவியாக இருக்கின்றனர். 

     தன் சிந்தனையில் உயன்றவரை அந்த குரல் கலைத்தது. 

     "மாமா.. மாமா....". என்று மூச்சிரைக்க ஓடி வந்து வீரராகவன் முன்பு நின்றாள் கயல்விழி  கோதண்டத்தின் மகள். 

     "கயலு என்னடா என்னாச்சு இப்படி மூச்சிரைக்குது வா.. வா... வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்துதிட்டு மெதுவாக சொல்லு" என்று கைபிடித்து அருகில் அமரவைக்க முயற்சிக்க 

     அவளே அவரின் கையில் இருந்து தன் கையை உருவிக்கொண்டு 

    "மாமா.. மாமா....    நம்ப.... நம்ப.... அத்தான்.... அத்தான்...   வந்திட்டார்". என்று மூச்சுவாங்கிக்கொண்டு சொல்ல 

     அதை கேட்ட வீரராகவன் அவள் சொன்னது நம்ப முடியாமல்  "என்னடா சொல்லுற கயலு  அத்தானா... அத்தான் என்றால் நம்ப கார்த்திகேயனா....   என் மகன் கார்த்திகேயனா... வந்துட்டானா நிஜமாகவா?.. வந்துட்டானா?..."   என்று உணர்ச்சி மேலிட கயல்விழியின்  தோள்களை பற்றி உலுக்கினார். 

    மாமனின் உலுக்களில் வலித்த போதும் கண்களில் நீரும் உதட்டில் புன்னகையுடன் " ஆமாம்... மாமா.. கார்த்தி.. அத்தான்.. வந்துட்டார்" என்றாள். 

     கயல்விழியின் பேச்சில்  அவர் கண்ணிலும் கண்ணீர் வழிந்தது அதிக அளவு உணர்ச்சிவசப்பட்டவரால் பேசமுடியாமல் தத்தளித்தவர் பூஜை அறைக்கு வேகமாக சென்று நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கினார். 

     அதுவரை தன் அண்ணன் மகள் கூறியதை கேட்டு சந்தோஷப்பட்டுக்கொண்டு இருந்த சாந்தி கயல்விழி அருகில் வந்து "கயலுமா என்ன சொன்ன கார்த்தி வந்துட்டானா?..." என்று அவள் கை பற்ற 

    சட்டென அவரின் கையை தட்டிவிட்டு இரண்டடி தள்ளி போய் நின்று அவரை முறைத்து  "இந்த முறை என்ன பழி போட்டு அத்தானை 
ஊரைவிட்டு துரத்த போறிங்க?...." என்றாள். 

     "கயல்ல்ல்...." என்றார் அதிர்ந்து 

    " ஏன் மறந்து போச்சா நீங்களும் உங்கள் அண்ணனும் சேர்ந்து பழி சுமத்தி தானே அத்தானை ஊரை விட்டு ஓட வச்சிங்க."

      "இப்ப அத்தான் வந்துட்டார் என்றதும் திரும்ப என்ன பழி போடலாம் உங்க அண்ணன்கிட்ட சதி ஆலோசனை பண்ண போகலையா?..."

     "போங்க சீக்கிரம் உங்க அண்ணன்கிட்ட..." 

    "கயலு ஏம்மா இப்படி பேசுற நான் தெரியாமல் செய்த தப்புக்கு நீ எவ்வளவு வருஷம் இப்படி என்னை வாட்டி வதைப்ப  அவன் என் பையன் அவன் மீது எப்படி நான் பழி போடுவேன்"  என்றார் சாந்தி. 


    " என்னது உங்க பையனா?.... "
மேலும் என்ன சொல்லியிருப்பாளே அந்நேரம் வீரராகவன் பூஜை அறையில் இருந்து வெளியே வந்தவர் 

    " கயலுமா எங்கடா இருக்கான்?.. யாருடா உனக்கு சொன்னது அவன் வந்ததை"  என்று வீரராகவன் கேட்டுக்கொண்டே மெல்ல வீட்டு வாசல் நோக்கி நடக்க 

     அவர் அருகில் வந்து அவருடன் நடந்துகொண்டே  "முரளி அண்ணா தான் சொன்னார் மாமா." 

     "யாரு நம்ம கணக்குபிள்ளை மகன் முரளியா?.. "

    " ஆமாம் மாமா அவருதான் கொஞ்சநேரத்திற்கு முன்பு எனக்கு போன் செய்தார்." 

     அதற்குள் வாசலுக்கு வந்துவிட  அங்கு கார் இருந்தது ஆனால் கார் டிரைவர் இன்னும் வந்து இருக்கவில்லை அதை பார்த்த கயல்விழி 

    " மாமா இன்னும் டிரைவர் வரவில்லை நீங்க கார் ஓட்டவேண்டாம் சரவணன் மாமாவை ஓட்டச்சொல்லுங்க நான் என் ஸ்கூட்டியில் போகிறேன்"  என்று கூறிக் கொண்டே பின்னாடி திரும்பி பார்க்க இவர்கள் பின்னாடி வந்து கொண்டு இருந்த சாந்தி வேகமாக திரும்பி வீட்டினுள் நுழைந்து கொண்டே "நான் சரவணனை கூட்டிட்டு வரேன் நீங்க காரில் உட்காருங்க"  என்றார். 

    கார் கதவை திறந்து மாமாவை உட்கார வைத்து விட்டு " நான் கிளம்பறேன் மாமா" என்று வேகமாக அருகில் இருந்த இன்னொரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டியில் உட்கார்ந்து அதை ஸ்டார்ட் செய்து வேகமாக ஓட்டிச் சென்றாள்.  


     மூன்று தெருக்கள் தள்ளி இருக்கும் முரளி வீட்டை நோக்கி வேகமாக தன் ஸ்கூட்டியை செலுத்திக்கொண்டு இருந்தவளின் மனதில் சிறிது நேரத்திற்கு முன் நடந்தவைகள் ஓடின.. 

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 7 மணி ஆகியும் எழ  மனம் இல்லாமல் படுக்கையில் ஏதோ நினைவுகளில் இருந்தவளை தாயின் குரல் கலைத்தது. 

     "ஏய் கயலு இன்னும் என்ன தூக்கம் மணி ஏழுக்கு மேல் ஆகிடுச்சு எழுந்திரு" என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே அவளின்  போன் இசைத்தது. 

     இந்த நேரத்தில் யார் என்று மெல்ல கண் திறந்து பார்த்தாள்.  அதில் முரளி அண்ணன் என்று காட்டவும் இந்த நேரத்தில் முரளி அண்ணன் ஏன் போன் செய்கிறார் என்று நினைத்து போனை ஆன் செய்து 

     "ஹலோ அண்ணா எப்படி இருக்கிங்க"  என்றவளை 

     மேலும் பேசவிடாமல் "கயல் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்றான். 

     "என்ன அண்ணா சொல்லுங்க" 

     "அது வந்துமா நேத்து நான் மும்பையில் இருந்து வரும் போது இரயில் ஆந்திராவில் ஒரு ஊரில் வண்டி நின்னதுமா" 

     "அண்ணா என்ன சொல்லுறிங்க எனக்கு ஒன்னும் புரியலை" 

     "இல்லமா நான் இரயிலில் வரும் போது இரயில் ஒரு ஊரில் நின்னது தண்ணீர் கேன் வாங்க போனபோது அங்க நம்ப கார்த்திகேயனை பார்த்தேன்மா" என்றான். 

     முரளி சொன்னது அவளின் மூளைக்கு செல்ல சில வினாடிகள் எடுத்துக் கொண்டது. 

    மறுபக்கம் எந்த சத்தமும் இல்லாமல் போக "கயல் .. கயல் ..." என்று குரல் கொடுக்க 

    " ஆங்... அண்ணா... அண்ணா நீங்க இப்ப.... இப்ப... என்ன சொன்னீங்க அத்தானை பார்த்திங்களா எங்க... அண்ணா எங்க? ... இப்ப அத்தான் எங்க இருக்கார்? .. எப்படி இருக்கார்?.. சொல்லுங்க அண்ணா சொல்லுங்க..." என்று பதட்டத்துடன் கேட்டாள் கயல்விழி. 

     "கயல் பதட்டப்படாமல் நான் சொல்லுவதை கேளு இப்ப உன் அத்தான் இங்க என் வீட்டில் தான் இருக்கான்" என்று சொல்லும் போது மறுபுறம் போன்  அணைக்கப்பட்டு இருந்தது. 

     போனை அணைத்து கட்டிலில் போட்டவள் வேகமாக அறை விட்டு வெளியேற அங்கு தாய் லலிதா நின்று இருந்தார்.   

    " அம்மா... அம்மா... அத்தான் வந்துட்டார்மா" என்றாள் சந்தோஷமாக 

    " என்னடி சொல்லுற அத்தானா?" 

    "ஆமாம் அம்மா கார்த்தி அத்தான் வந்துட்டார்மா நான் போய் மாமா கிட்ட சொல்லிட்டு அத்தானை பார்க்க போறேன்" என்று லலிதாவை தாண்டி சொல்ல நினைத்தவளை கை பிடித்து நிறுத்தினார் லலிதா. 

    " இப்படியே வா போவாய்?.." என்று சொல்லவும் 

     குனிந்து பார்த்தவள் இரவு உடையேடு இருப்பதை பார்த்து விட்டு வேகமாக அருகில் இருந்த துப்பட்டா ஒன்றை எடுத்து போட போக அதை தடுத்த லலிதா அவளை இழுத்து சென்று குளியல் அறையில் விட்டு 

     "முகம் கழுவி விட்டு வா" என்றார். 

    அவளும் வேகமாக முகம் கழுவி வர கையில் ஒரு சுடிதாரை கொடுத்து  

     "மூன்று தெரு தள்ளி போகனும்  நைட்டியோட எப்படி போவாய் இதை போட்டுட்டு போ" என்று கொடுத்தார்.  அவளும் வேகமாக மாற்றிக் கொண்டு தன் மாமாவிடம் சொல்லி விட்டு முரளி வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தாள். 

     விரைவில் முரளி வீடு வந்துவிட வண்டியை நிறுத்தி விட்டு சாவி கூட எடுக்காமல் வீட்டிற்குள் நுழைந்தாள். 

    " அத்தான்... அத்தான்"  என்று சென்றவள் அங்கு அமர்ந்து இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்து அதில் தன் அத்தான் இல்லை என்று அறிந்து முரளியிடம் சென்றவள் 

     "அண்ணா.... அத்தான்...."  என்று கண்கள் கலங்க வார்த்தைகள் கோர்வையாக வராமல் திணறின.

     அவள் நிலை கண்ட முரளி எதுவும் போசாமல் உள்பக்கமாக இருந்த அறையை காட்ட வேகமாக அந்த அறை நோக்கி சென்றாள். 


     வேகமாக சென்றவள் மூடியிருந்த கதவை தட்டாமல் திறந்து உள்ளே சென்று பார்க்க சன்னலின் பக்கமாக நின்று வெளியே பார்த்து கொண்டுயிருந்த உருவத்தின் பின்புறம் தெரிந்தது.  

     "அத்தான்" என்று கண்ணில் நீரும் உதட்டில் புன்னகையுமாக அழைக்க மெல்ல திரும்பியவனை ஓடிச்சென்று அனைத்துக்கொண்டாள்.  இவள் இறுக அனைத்து கொண்டாளே தவிர அவனிடம் எந்த அசைவும் இல்லை  அப்படியே நின்று கொண்டு இருந்தான்.  எதையும் அறியாமல் அவள் தான் அவனை மேலும் மேலும் இறுக அனைத்து கொண்டாள்.

     "அத்தான்.... அத்தான்....  எங்க போன அத்தான்??..." 

     " ஏன் அத்தான் இத்தனை வருஷம் எங்களை பார்க்க வரலை?..." 

     "நான் என்ன அத்தான் தப்பு பண்ணேன் என்ன விட்டுட்டு நீ மட்டும் எங்க போன அத்தான்?..  இத்தனை வருஷம் என் ஞாபகமே வரலையா அத்தான்?.. ஆனா நான் உன்ன மட்டும் தான் அத்தான் நினைத்திட்டு இருந்தேன்  நீ கண்டிப்பாக என்ன பார்க்க வருவே என்று காத்திட்டு இருந்தேன் அத்தான்" என்றாள் அழுகையுடன். 

    " இனிமே நீ எங்க போனாலும் என்ன விட்டுட்டு போகாதே அத்தான் என்னை கூட்டிட்டு போ அத்தான்" என்று பேசிக்கொண்டே இன்னும் இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்டிருந்தாள். 

    அவனிடம் எந்த அசைவும் இல்லை கற்சிலை போன்று நின்று கொண்டு இருந்தான்.  வேகமாக துடித்துக் கொண்டு இருந்த அவளின் இதயத்தை போல அவன் இதயமும் வேகமாக துடித்து  தன் அத்தான் தன் அருகில் இருக்கிறான் என்று அறிவுறுத்தியதே தவிர அவனிடம் அவளின் ஒரு கேள்விக்கு கூட பதில் வரவில்லை. 

     அப்போது தான் அவனிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்று உணர்ந்தவள் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். 

    ஆறடிக்கு மேல் வளர்ந்து இருந்தவனை அவனின் மார்பளவே இருந்தவள் நிமிர்ந்து பார்த்தபோது அவனின் புதர் போல் வளர்ந்து இருந்த தாடி மட்டுமே அவளுக்கு தெரிந்தது.. 

     அவனின் முகம் பார்க்க நினைத்து அதுவரை இறுக்கி அணைத்து இருந்த கைகளை தளர்த்த  அந்நேரம் வெளியேயிருந்து உள்ளே வரும்  காலடி ஓசையும் பேச்சுக்குரலும் கேட்க தங்கள் குடும்பத்தார்கள் வந்துவிட்டதை உணர்ந்து மேலும் அவனிடம் இருந்து பிரிந்து நிற்க நினைத்த நேரத்தில் 

      அவ்வளவு நேரம் கற்சிலை போல நின்று இருந்தவனின் கை அவளின் முழங்கையில் பதிய அதை உணர்ந்தவள் நிமிர்ந்து பார்க்க கண்கள் சிவந்து கோபத்தின் மொத்த உருவமாக நின்று இருந்தவன் அவளை வேகமாக தள்ளி விட்டு கர்ஜனை குரலில்  "யாருடி அத்தான்" என்றான். 

     உள்ளே வந்தவர்கள் பார்த்தது கயல்விழியை வேகமாக கீழே தள்ளி விட்டு  அவன் கர்ஜனை குரலில் கூறியது தான். 

    கீழே விழுந்தவளின் வலது கை முட்டி தரையில் இடித்து வலி ஏற்பட்டது அப்போதும் கயல் தன் அத்தான் தன்னை தள்ளியதை நினைத்து அதிர்ந்தாளே தவிர கை வலியை உணரவில்லை. 

      "அத்தான்" என்று மீண்டும் அழைக்க வேகமாக அவளின் அருகில் வந்தவன். 

    "யாரிடி அத்தான் நான் என்ன உன் அத்தை பெத்தவனா?.. எந்த உரிமையில் என்னை அத்தான் என்று கூப்பிடுற"  என்று சிங்கத்தின் கர்ஜனையாக வந்தது அவனின் குரல் 

     அதை கேட்டு அதிர்ந்து வாயடைத்து அமர்ந்து இருந்தாள்.  அவனின் பேச்சு கேட்ட வீரராகவன் சாந்தி தம்பதியரும் அதிர்ந்து நின்று இருந்தனர்.  சரவணன் தான் கயல்விழியின் கையில் இருந்து இரத்தம் வருவதை பார்த்தவன் வேகமாக அவளின் அருகில் சென்று  கையை தூக்கி பார்த்து   அவர்கள் பின்னால் வந்து நின்றிருந்த முரளியை பார்த்து, 

     "முரளி அண்ணா கயல் கையில் இரத்தம் வருது சீக்கிரம் மருந்து இருந்தா எடுத்து வாங்க" என்று சொல்ல முரளியும் வேகமாக சென்றான். 

    அதுவரை அவன் பார்வை அவளை கேபமாகவும் அவள் பார்வை அதிர்ந்து பார்த்து கொண்டு இருந்தது. 

    "இதே பார்த்தியா இவன் தான் உன் அத்தை  பெத்த அத்தான்.  உனக்கு ஒன்று என்றதும் ஓடிவந்தான் பாரு இவன் தான் உன் அத்தான்." 

     "நான்... நான்.. பொறுக்கி அதுவும்  பொம்பள பொறுக்கி..." 


Leave a comment


Comments


Related Post