இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 29 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 11-05-2024

Total Views: 17704

மிகுந்த பதட்டமும் பயமும் முகத்தில் தெரிய அந்த ஸ்கேன் ரூம் வாசலிலேயே கண் பதித்து அமர்ந்திருந்தான் அபிநந்தன். அவனின் இதயத்துடிப்பு அவனுக்கே கேட்பது போல இருக்க ‘லாஷாக்கு எதுவும் இருக்க கூடாது’ என்று வேண்டிக் கொண்டு இருந்தான்.

ஸ்கேன் செய்து முடித்து சந்தியா அதை பார்த்து கொண்டு இருக்க கிட்டத்தட்ட அபிலாஷாவும் அவனுக்கு இணையான பதட்டத்தோடு அமர்ந்திருக்க இருவரையும் அழுத்தமாக பார்த்த சந்தியா மெல்லிய புன்னகை ஒன்றை முகத்தில் படர விட

“என்ன சந்தியா ரிப்போர்ட்ல என்ன இருக்கு?” பரிதவிப்பாக கேட்டது நந்தன் தான்…

“ஏன் இவ்வளவு டென்ஷன் உங்க ரெண்டு பேருக்கும்… அபி நான் ஜஸ்ட் ஒரு சந்தேகத்தின் பெயரில் தானே இந்த டெஸ்ட் எல்லாம் எடுக்க சொன்னேன்…” என்று சந்தியா சொல்ல

“அதுதான் சந்தியா… உன் சந்தேகம் எந்த அளவுக்கு உண்மை?” அபிலாஷா கேட்க

“ம்ம் ஜீரோ பர்செண்ட்…” என்று யோசிப்பது போல சந்தியா சொல்ல நந்தன் லாஷா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள

“அபி… அபிலாஷாக்கு ப்ராப்ளம் எதுவும் இல்லை… கொஞ்சம் அனிமிக்கா இருக்கா அது நார்மல் பெய்ன்தான்.. பட் அபிக்கு ரத்தம் கொஞ்சம் குறைவா இருக்கதால வலி அதிகமா தெரிஞ்சிருக்கும்.” என்று சந்தியா சொல்ல இருவரும் ஒரே நேரத்தில் ‘ஹப்பா’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.

“நான் கொஞ்சம் விட்டமின் டேப்லெட் எழுதி தரேன் ஹெல்த்தியா சாப்பிடு அபி.. வேற எந்த ப்ராப்ளமும் டோண்ட் வொர்ரி” என்று சந்தியா சொல்ல சிரித்த முகத்துடன் மாத்திரைகள் எழுதி அதை ஃபார்மசியில் வாங்கிக் கொண்டு வீடு வர 

“அபி.. கொஞ்சம் ஹாஸ்பிடல் வரைக்கும் வரமுடியுமா?” என்று சந்தியாவிடம் இருந்து குறுஞ்செய்தி வர யோசனையோடு அபிலாஷாவிடம் ஆஃபிஸ் வேலையாக செல்கிறேன் என்று சொல்லி விட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தான் அபிநந்தன்.

சற்று முன்பு சந்தியா முகத்தில் இருந்த புன்னகை இப்போது இல்லை… அபிநந்தன் குழப்பமாக பார்த்து அவள் முன்பு அமர

“அபி அதுவந்து அபிலாஷா ரிப்போர்ட் பத்தி பேசனும்டா…”

“அதான் அப்போவே பார்த்து ப்ராப்ளம் இல்லனு சொன்னியே சந்தியா” என்று நந்தன் கேட்க

“என்னை வேற என்னடா பண்ண சொல்ற? ஸ்கேன் ரூம்ல இருக்கும் போதே எல்லாமே நார்மலா இருக்கா எனக்கு எதாவது ப்ராப்ளம் இருக்கா சந்தியா? அதனால தான் பெய்ன் வருதா? ஒருவேளை எனக்கு பேபி பிறக்காதா? எனக்கு என் நந்து மாதிரி ஒரு ஆண் குழந்தை வேணும் அது என்னால முடியாதா னு ஆயிரம் கேள்வி கேட்குறா… அவ முன்னாடி இதை சொன்னா கண்டிப்பா மனரீதியா அவளை இது பாதிக்கும்.

எப்பவும் பேஷண்ட் அவங்க நோயோட கண்டிஷன் தெரிஞ்சு வைச்சுக்கனும். அப்போ தான் அவங்களே அவங்களை கையாளுற பக்குவம் கிடைக்கும்னு நினைக்கிறவ நான்..‌ ஆனா அபிலாஷா விஷயத்துல அவளுக்கு இந்த விஷயம் தெரியாம இருக்கிறதே பெட்டர்…” என்று சந்தியா சொல்லிக் கொண்டு இருக்க கண்ணில் நீர் கோர்க்க அமர்ந்திருந்தான் அபிநந்தன்.

“டேய் அபி… நீயே இப்படி எமோஷனல் ஆனா அவளை எப்படி ஹேண்டில் பண்றது?” சந்தியா சொல்ல

“லாஷாக்கு என்ன சந்திய் ப்ளீஸ் கொஞ்சம் தெளிவா சொல்லு…” என்று இரைஞ்ச

“நான் டவுட் ஆன மாதிரி தான் யூட்ரஸ்ல சின்னதா ஒரு கட்டி இருக்கு” என்று சொல்ல

“என்ன சொல்ற சந்தியா?” என்று அதிர்ந்து போய் கேட்டான் அபிநந்தன்.

“யெஸ் அபி… பட் இட் கேன் க்யூரபிள்… மருந்து மாத்திரையால சரி பண்ணிட முடியும். பட்…” என்று இழுத்து நிறுத்த நீண்ட மூச்சுகளோடு அவளை பார்த்திருந்தான் அபிநந்தன்.

“என்ன சந்தியா?” குரல் கரகரத்தது. 

“அபியோட யூட்ரஸ் ஒரு குழந்தையை சுமக்குற அளவுக்கு வலுவானதா இல்ல… ஆனா இப்போ நிறைய மெடிக்கல் ஸ்பெஷலிட்டிஸ் இருக்கு. முதல்ல அவளோட கருப்பை கட்டி குணமாகட்டும். அதுக்கப்புறம் இதுக்கான சிகிச்சை ஆரம்பிக்கலாம்.. அபியை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோ அவளோட மெடிசின் கரெக்டா எடுத்திக்கிறாளானு செக் பண்ணு அபி… சீக்கிரம் அவ குணமாகிடுவா…” என்று ஆறுதலாக பேச வெறுமனே தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

மாலை அபிநந்தன் வீட்டிற்கு வர “என்ன நந்தா.. அபியை இறக்கி விட்டு அப்படியே ஓடிட்ட.. ஹாஸ்பிடல்ல என்ன சொன்னாங்க?” என்று பார்வதி கேட்க

“ஆங்… அம்மா கொஞ்சம் வேலை ம்மா…” என்று மட்டும் சொல்ல

“சரிப்பா பார்க்க ரொம்ப சோர்வா தெரியுற… வெயில் அதிகமா இருக்குல அபி… அப்போவே உன்னை ஜூஸை குடினு சொன்னேன். இப்போ நந்தனும் வந்திட்டான் அவனுக்கும் கொடுத்து நீயும் குடிமா..” என்று சொல்ல

“அம்மா… கூடுமானவரை அபிக்கு நல்ல ஹெல்த்தியா வீட்டுல சமைச்ச பொருளே கொடுங்கம்மா… கடை சாப்பாடு எதுவும் அபிக்கு வேண்டாம்..” என்று குழம்பிய முகத்தோடு அபிநந்தன் சொல்ல தாயும் மனைவியும் கண்கள் இடுங்க பார்த்தனர் அவனை…

“டேய் நாம எப்போடா வெளி சாப்பாடு சாப்பிட்டோம்? வீட்டுக்கு தேவையான மசாலா பொடி ஊறுகாய் கூட நானே என் கையால தயார் பண்றேன். நீதான் கம்பெனில இல்ல வீட்ல ஏதாவது நல்லது நடந்தா அடுப்படிக்கு ஓய்வு கொடுங்கனு ஹோட்டல் கூட்டிட்டு போவ..” என்று பார்வதி கேலியாக சொல்ல

“அம்மா சந்தியா நான் கொஞ்சம் அனிமிக்கா இருக்கேன்னு சொன்னாலும் சொன்னா.. நந்து உங்க கவனிப்பையே குறை சொல்றாரு பாருங்க… நந்து!! நான் நல்லாத்தான் இருக்கேன் அம்மா என்னை நல்லா கவனிச்சுக்கிறாங்க..” என்று கூறியவள் பழச்சாறு எடுத்து வந்து தந்தாள்.

இரவு அறைக்கு சென்ற அபிலாஷா அவன் எடுத்துச் சென்று வந்த பையை என்றும் இல்லாமல் ஆராய “என்ன தேடுற லாஷா?” என்று வந்தான் நந்தன்.

“ஒன்னும் இல்ல நந்தூ… வழக்கமா தினமும் ஒன்னு வாங்கிட்டு வந்து கையில தருவீங்க இன்னைக்கு அதை கையில கொடுக்கலையே… அதான் மறந்து பேக்லயே வைச்சிட்டீங்களோனு பார்த்தேன்.” என்று சொல்ல

அவன் இருந்த மனநிலைக்கு என்ன கேட்கிறாள் என்றே அரை நிமிடம் புரியாமல் போக பின்னர் புரிந்தவன்

“ஸ்ஸ்…‌ சாரி லாஷா… வெளியே வேலையா போன இடத்துல கொஞ்சம் டென்ஷன்.. அதான் மா மறந்துட்டேன். இப்போ வேணும்னா போய் வாங்கிட்டு வரட்டுமா?” என்று கேட்க 

“நந்து மனி பத்து… பூக்காக இன்னேரம் நீங்க வெளியே போவீங்களா? வேண்டாம் தூங்குங்க..” என்று சொல்ல

“சாரி லாஷா…” மீண்டும் சொல்ல

“இட்ஸ் ஓகே நந்து இது என்ன அவ்வளவு பெரிய பிரச்சனையா? நீங்க தூங்குங்க…” என்று அவள் படுத்திட அவளை அணைத்துக் கொண்டு உறங்க முயன்றான் அபிநந்தன்.

நாட்கள் தான் மாறியதே தவிர அபிநந்தன் அபிலாஷா இடையே இருந்த அழகிய பந்தம் இன்னும் அழகாகிக் கொண்டேதான் இருந்தது. 

ப்ரதீப்பிடம் அபிலாஷாவிற்கு ஓய்வு தேவை என்று சொல்லி அனைத்து அலுவலக பொறுப்பையும் அவனை ஏற்றுக் கொள்ள செய்தான் அபிநந்தன். அதனால் வீட்டில் இருந்து பொழுது போகாத அபிலாஷா சமையலை பொழுதுபோக்காக தேர்ந்தெடுத்தாள்.

சமையலில் எதுவுமே தெரியாமல் திருமணம் செய்து வந்த அபிலாஷா இன்று புதிது புதிதாக சமைத்து அசத்தினாள். என்னதான் அவள் புதிதாக சமைத்தாலும் அடிக்கடி ஆரோக்கியமான சத்தான உணவுகளை பார்வதியிடம் செய்யச் சொல்லி சாப்பிட வைத்தான் அபிநந்தன்.

மருத்துவமனையில் இருந்து வந்த அன்று மட்டுமே அபிநந்தன் பூ வாங்க மறந்தது. அதன் பிறகு ஒருநாள் கூட அவன் பூ இன்றி வருவதே இல்லை… அவளுக்காக அவன் தரும் காதல் பரிசாக அவள் நினைத்தாள்.

அவ்வப்போது சந்தியாவிடம் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல “எனக்கு உடம்புல ஏதாவது ப்ராப்ளம் இருக்கா நந்தன் எதுக்காக என்னை செக்கப் கூட்டிட்டு போய்ட்டே இருக்கீங்க?” என்று அபிலாஷா காரணம் கேட்க

“அது அம்மாக்கு பீபீ இருக்கிறதால மந்த்லி செக்கப்க்கு போறது மாதிரி உனக்கும் அந்த அனீமியா க்யூர் ஆகுற வரைக்கும் நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு தான் வருவேன்” என்று அவனும் பிடிவாதமாக சொல்ல புன்னகைத்தாள் அவன் அக்கறையில்…

ஆறுமாதம் கடந்திருக்க அக்சயாவிற்கு மூன்றாம் ஆண்டில் முதல் செமஸ்டர் விடுமுறை விட வாரம் ஒரு முறை அன்னை வீட்டிற்கு வருபவள் பத்து நாட்கள் சேர்ந்தவாறு தங்குவதற்கு வந்தாள் தன் கணவனோடு.

நந்தனும் பார்வதியும் அபிலாஷாவிற்கு என்ன வேண்டும் என்று பார்த்துக் கொள்ள அபிலாஷா நண்பனுக்கும் நாத்தனாருக்கும் விதம் விதமாக சமைத்து பரிமாற

“வந்ததுக்கு ஒரு சுத்து பெருத்திட்ட அக்ஷூ” என்று கேலி செய்தான் ப்ரதீப்.

அன்று, வார இறுதி நாள் சந்தியா வந்திருக்க “அத்தை நான் சமைக்கிற சாப்பாடு எனக்கே பிடிக்கல அந்த அழகுல இருக்கு என் சமையல்… ஆமா இன்னைக்கு என்ன சமையல்?” என்று கேட்க

“அண்ணி லாஸ்ட் டைம் வந்தப்போ ஒரு பிரியாணி பண்ணிணீங்களே அதோட ரெசிபி சொல்லி கொடுங்க இன்னைக்கு நான் அதை ட்ரை பண்றேன்… நீங்க பண்றது கொஞ்சம் வித்யாசமா இருக்கு.” என்று கேட்க

“சரி” என்று அபிநந்தனை சிக்கன் வாங்க அனுப்பிய அபிலாஷா தாளிப்புக்கு அனைத்தும் நறுக்கி வைக்க அபிநந்தன் வரவும் சிக்கனை சுத்தம் செய்து ஒவ்வொன்றாக அபிலாஷா சொல்ல சொல்ல அக்சயா செய்து கொண்டு இருந்தாள்.

சிக்கன் கழுவும் போதே அதன் வாடை ஒப்பாமல் அக்சயா முகத்தை சுழிக்க தாளிக்கும் போது எண்ணெய் வாடைக்கு குமட்டிக் கொண்டு வர அவள் வாஷ்பேஷன் பக்கம் ஓட அருகில் இருந்த அபிலாஷா அடுப்பை அணைத்து விட்டு கூடவே ஓடி வர மற்றவர்களும் “என்னாச்சு” என்று பதறி வந்தனர்.

அக்சயாவிற்கு சோர்வாக உள்ளது என்று ஆயாசமாக ஷோபாவில் அமர சந்தியா அவளை பரிசோதித்து விட்டு “அத்தை நீங்க பாட்டி ஆகப்போறீங்க அபி நீ மாமா ஆகிட்ட டா..‌ நம்ம அச்சு கன்சீவா இருக்கா…” என்று மகிழ்வாக சொல்ல அனைவருமே மகிழ்ந்திட பார்வதியும் அபிலாஷாவும் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து கட்டிக் கொண்டனர் அக்சயாவை…

தொடரும்…




Leave a comment


Comments


Related Post