இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -32 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 11-05-2024

Total Views: 26545

‘உன் அண்ணனுக்கு பின்னாலையும் கண் இருக்கும்டா விட்டுத் தொலையேன் இல்லைனா இதை ஒரு குத்தம்ன்னு அடிச்சித் தொலைவான்.’ என தனக்குள் முனைவிக் கொண்டவள் யுகியின் கையை தட்டி விட்டாள்.

சின்ன வயதில் நந்தன் செய்த சேட்டைகள், அடித்த அடிகள் அனைத்தும் நிலாவின் மனதில் ஆறாத வடுவாக பதிந்துருக்கிறது. அது என்றுமே மறையாது. பசுமரத்தில் அடித்த ஆணி அதன் வடுவை தன் உயிர் உள்ள வரை மறைய விடுவதில்லை. அதுபோல தான் சிறுக் குழந்தைகளின் மனதில் விதைக்கப்படும் விஷயங்களும் என்றும் மாறாமல் மறையாமல் அப்படியே இருக்கிறது.

“எனக்கு ஒர்க் இருக்கு, அண்ணன் செய்ய வேண்டிய சம்பிரதாயத்தை அவனை வெச்சி செய்ங்க.” என்றவன் நக்கலாக வளவனைப் பார்த்தான்.

அந்த பார்வை சொன்னது ‘என் முன்னாடி கால் மேல் கால் போட்டு உக்காரும் அளவிற்கு நீ வந்துவிட்டாயா? இனி நான் செய்வதைப் பார்.’ என்று, அதை வளவனும் புரிந்துக் கொண்டான்.

“ப்ச்” என உதட்டை மேல் தூக்கி  சலித்துக் கொண்ட வளவன்.

“ஓகே மாமா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் இருக்கேன் ஷாலினி இருக்கா நாங்களே கல்யாணம் பண்ணிக்கறோம். நாளப் பின்னால ரெண்டு அண்ணன் இருந்தும், கல்யாணம் பண்ணி வைக்க யாருமில்லைன்னு ஷாலினி பீல் பண்ணுவாளேன்னு தான் உங்க சம்மதம் வாங்க இவ்வளவு பொறுமையா இருந்தோம். இப்போ அது தேவையில்லைன்னு புரிஞ்சிடுச்சி நாங்களே கல்யாணம் பண்ணிக்கறோம்.” என்றான்.

இருப் பக்கமும் மாட்டிக் கொண்டு மார்த்தாண்டம் தான் முழித்தார். மணிமேகலை இதுபோன்ற பெரியத்தனம் வேலைக்கெல்லாம் செல்வதில்லை. எதுவாக இருந்தாலும் அவர்களே பேசிக் கொள்ளட்டும் என ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்துக் கொள்வார். இன்றும் அதேபோல் நின்றார்.

“இப்போ முடிவா என்ன தான் சொல்றிங்க எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பிங்களா? மாட்டிங்களாப்பா? நீங்க தானே நான் பார்த்துக்கறேன் உனக்கும் வளவனுக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும் அதுக்கு நான் பொறுப்புன்னு சொன்னிங்க. இப்போ அவங்களை வர சொல்லிட்டு எல்லாருக்கும் முன்னாடி அசிங்கப்படுத்தறீங்களா..?” 

“ஷாலு நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு, நான் பேசறேன்.” என மார்த்தி அடக்கப்பார்க்க,

“என்ன அமைதியா இருக்கனும்ப்பா?” என்றவளுக்கு அழுகை வந்துவிட்டது.

வளவன் மீது உயிர் கொண்ட காதல் அவளுடையது. விவரம் தெரிந்த வயதில் இருந்து வளவனை மனதில் தாங்கி திருமணத்திற்காக இரண்டு வருடமாக காத்திருக்கிறாள்.

இரண்டு வருடமாக இந்த திருமணம் நடக்கக் கூடாது என முட்டுக் கட்டைப் போட்டது கிருஷ்ணம்மாள் தான் நந்தனிடம் இப்போது தான் இந்த விஷயமே வந்தது. வந்ததும் அவனும் எதிர்க்க, எவ்வளோ பேசிப் பார்த்தனர். முடியவே முடியாது என்று சொல்லியிருக்க கடைசியாக தன் கையை வெட்டிக் கொண்டு மருத்துவமனையில் ஒரு வாரம் வாசம் செய்தப் பிறகு தான் இறங்கி வந்தனர் கிருஷ்ணம்மாளும், நந்தனும் அதுவும் அரைமனதோடு.

அப்படி இப்படி என்று எப்படியோ திருமணத்திற்கு சம்மதம் வாங்கியப் பின்னும் இடையில் கட்டையைப் போட்டால் பீதி கிளம்புமா? இல்லையா?

“அப்பா உங்களுக்காக மூகூர்த்தத்துக்கு உள்ள இருப்பேன்.” என்று எழுந்து அவனது அறைக்குச் சென்று விட்டான். போகும் போது அவனது பார்வை தன்னை தீண்டிச் சென்றதோ என்று நிலாவை யோசிக்க வைத்து விட்டான்.

அந்த அளவிற்கு மில்லி மைக்கிரான் நொடி நிலாவைப் பார்த்து அவளை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றான்.

அவன் போனதும், “உப்ப்ப்பப்ப முடியலடா சாமி” என தொப்பென்று சோபாவில் விழுந்தார் மார்த்தி.

அவருக்கு தெரியும் நந்தன் வாக்கு கொடுத்துவிட்டால் சொன்னது சொன்னது போல் செய்து விடுவான் என்று.

பொண்ணுப் பார்க்கவே இந்த நிலைமை என்றால் திருமணம் முடிவதற்குள் ஒரு வழியாகி விடுவார்.

பெண் பார்க்கும் படலத்திற்காக எந்த ஏற்பாட்டையும் மார்த்தாண்டம் செய்யவில்லை அனைவருக்கும் சேர்த்து உணவை மணிமேகலையே தயாரித்துவிட்டார்.

“கல்யாணம் ஆகட்டும் மாமா கண்டிப்பா கை நனைக்கிறேன் அதுவரைக்கும் கம்பல் பண்ணாதீங்க.”

“அது முறையில்லையே மாப்பிள்ளை, பொண்ணு வீட்டுல சாப்பிடறதுக்குன்னே ஒரே நாள் போவோம் தெரியும் தானே உங்களுக்கு.”

“அது மத்தவீங்களுக்கு மாமா, நமக்கு அப்படி இல்லை. கல்யாணம் நடக்கட்டும் இன்னைக்கு சாப்பிடலைன்னாலும் என்னைக்கும் சாப்பிடாமலையேவாப் போகப் போறோம்..” என்றவன் ராஜியைப் பார்க்க அவர் எழுந்து நின்றுக் கொண்டார்.

“போய்ட்டு வரோம் அண்ணா.. அம்மு வா போலா..”

“இதோ வரேம்மா.” என்றவள் சமையலறையில் இருந்து வெளியே வந்து, “பொண்ணுப் பார்க்க வந்துருக்கோம் பஜ்ஜி போண்டா ஸ்னாக்ஸ்ன்னு எதுமே இல்லையா? சோ சாட் இதெல்லாம் கிடைக்கும்ன்னு தானே அண்ணனை விட நான் முதல் ஆளா கிளம்பி வந்தேன்.”

“உனக்கு இல்லாததா நிலா குட்டி.” என மணிமேகலை அவளின் கன்னத்தை தடவ,

“இன்னும் குட்டின்னு கூப்பிடாதீங்க அத்தை, யுகியே என்னோட பிரண்ட்ஸ்கிட்ட சொல்லி கிண்டல் பண்றான்.”

“அவன் கிடக்கறான் லூஸு பையன், எனக்கு எப்போமே நீ குட்டி தான்.”என்று அவளது தலையை வாஞ்சையாக தடவி விட்டவர், அவளுக்கு சாப்பிட இனிப்பை கொடுத்தார்.

ராஜியிடமும் கொடுக்க அவர் வளவனைப் பார்த்துவிட்டு, “இருக்கட்டும் அண்ணி.. இப்போதான் வரப்ப சாப்பிட்டு வந்தோம் இன்னொரு நாள் வந்து சாப்பிட்டுகறோம்.” என்றார்.

“அத்தை அவங்களுக்கு வேண்டாம்னா என்கிட்ட கொடுங்க. உங்க கையால் சுட்ட கத்திரிக்காய் பஜ்ஜிக்கு நான் அடிமை, நெய் ஒழுக ஒழுக கேசரி சாப்புடுற திருப்தி வேற எதுலையுமே வராது.” என்றவள் கொடுத்ததை சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டாள்.

வளவனும் ராஜியும் சாப்பிடவில்லையே என்ற கவலையை நிலா சாப்பிட்டு சரி செய்திருக்க, கிருஷ்ணம்மாளின் முகத்தை தவிர அனைவரும் முகமும் மலர்ந்து விட்டது.


Leave a comment


Comments 1

  • M Mathi
  • 1 month ago

    Nice next epi eppo


    Related Post