இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 28 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 13-05-2024

Total Views: 13161

அத்தியாயம் 28

வாசுவின் அறைக்குள் நுழைந்த சுரேனிற்கு கோபம் எல்லையை கடந்தது.

அங்கிருந்த பொருட்களை தூக்கி எறியப் போனவனை தடுத்த வாசு "போதும்டா...உன் ரூம்ல உடைச்சி வச்சதே போதும்... இதெல்லாம் நான் பார்த்து பார்த்து தேடிப்பிடிச்சு வாங்கினது... ப்ளீஸ் இதையும் தூக்கி போட்டு உடைச்சிடாத... என்றான்.

"அப்பா பண்ணிட்டு இருக்கறது பரவால்லையா உனக்கு...?" என கேட்க.

அவனை ஆழ்ந்து பார்த்தவன் "சரிதான்...." என்றான்.

"உனக்கு என்ன பைத்தியமாடா... ஒரு சாதாரணமா சொல்லிட்ட... ஒரு உயிர எடுக்கிறதுன்னா உங்களுக்கு அவ்ளோ ஈசியா போய்டுச்சு இல்ல... என்னமோ பண்ணுங்க... என்னால இதெல்லாம் பார்த்துட்டு அமைதியா இருக்க முடியாது... என்றான் சுரேன்.

இடையில் சுந்தரோ "ஏன் சும்மா இருக்கனும்...நீயும் இந்த வாசு மாதிரி இந்த ஊர்ல மைனர் மாதிரி சுத்திட்டு இருக்கலாம்... இவன மாதிரி ஆளுங்களதான் பொண்ணுங்களுக்கு பிடிக்குது..."என்க.

"உதை வாங்கமா இங்க இருந்து போக மாட்ட நீ...." என்றான் சுரேன். 

"அவனவிடு... எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம்... கொஞ்சம் கோபத்தை கட்டுப்படுத்து... இல்ல அருவி.... என அவன் கூறி முடிக்கும் முன்..

"ஏன்... என் தலைய சீவிடுவாளா...?" என அவன் கேட்க.

"ஏன் விதன்டாவாதமா பேசற... அவ வருத்தப்படுவான்னு சொன்னேன்..." என்றான் வாசு.

"எனக்கு மண்டையே வெடிக்கிற மாதிரி இருக்கு வாசு... நான் ஊருக்காவது போவேன்.. அதையும் தடுத்துட்டீங்க..." என்க.

"இன்னைக்கு ஒருநாள் நைட் பொறுத்துக்க... நாளைக்கு சாயங்காலம்லாம் நீ ஊருக்கு கிளம்பிடலாம்... உன் பொண்டாட்டிய கூட்டிட்டு..." என்க.

"ம்ம்ம்ம்... என்றவன் ஏதோ யோசனையில் ஆழ.

"என்ன யோசனை...?" என சுந்தர் கேட்டான்.

"ஒன்னும் இல்ல... ஆமா வாசு அருவிக்கிட்ட மார்க்கெட்ல வம்பு பண்ணானே.. அவன் என்ன ஆனான்..?"என கேட்க.

"ஏன் அவனப்பத்தி நீ ஏன் கேக்கற... அருவி கஷ்டப்பட்டா நிதான் சந்தோஷப்படுவியே...?" என்க.

"வாய மூடு... அவன் என்ன ஆனான்...?" அதுக்கு மட்டும் பதில் சொல்லு..." என்க.

"ம்ம்ம்ம்... நேத்துதான் ரிலீஸ் ஆனதா கேள்விப்பட்டேன்..." என்றான் வாசு.

"ஓ...." என்றவன் சரி என்றுவிட்டு வாசுவின் கட்டிலில் அமர.

வாசுவோ, "சுரேன் அவன எதுக்கு கேக்கற... அப்பாவ மீறி இங்க உன்னால ஒன்னும் பண்ண முடியாது...." என்க.

"எனக்கு அவன பாக்கனும்..." என்றான் சுரேன்.

"அவன பாத்து என்னடா பண்ண போற நீ...?" என சுந்தர் கேட்க.

"பாக்கனும்... இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பனும் அப்பாவுக்கு தெரியாம..." என்றான் சுரேன்.

"அவருக்கு தெரியாம எப்படிடா போறது...?" என சுந்தர் கேட்க.

 "அப்படின்னா... அது உன் பொறுப்பு... இப்ப நீ என்ன பன்ற நாம மூணு பேரும் வெளிய போறதுக்கு அவர்ட்ட போய் பர்மிஷன் வாங்கிட்டு வர...." என்க.

"என்னது நானா...?"என அதிர்ந்தான் சுந்தர்.

"ஆமா... நீதான் எங்கள தனியா விட மாட்டாரு..." என்றான் வாசு.

"என்னைய வச்சு ஏன்டா டெஸ்ட் பன்றீங்க...ஆயிரம் கேள்வி கேப்பாருடா என் அப்பாகூட இத்தன கேள்வி கேக்க மாட்டாரு..." என்றான் சுந்தர்.

"எனக்கு தெரியாது... நாம இன்னைக்கு ஈவினிங் அவன பார்த்தே ஆகனும்... நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது... இன்னும் பத்தே நிமிஷத்துல நாம இங்க இருந்து கிளம்பனும்..." என்க.

"ஏன்டா இத்தன பிடிவாதம் உனக்கு...?" என சுந்தர் கேட்க.

"போறீயா... இல்லையா...?" என கேட்டான் சுரேன்.

"எல்லாம் என் நேரம்...போறேன்... போய்த் தொலையறேன்...." என்றவன் சக்கரவர்த்தியை  தேடி சென்றான்.

தர்மன் மற்றும் சுசிலா வின் தந்தையுடன் அவர் ஏதோ பேசியபடி இருக்க நாளைக்கான வேலைகள் இன்றே ஜரூராக நடந்து கொண்டு இருந்தது.

"அப்பா..." என அழைக்க 

அவனை திரும்பி பார்த்து முறைத்தவர் "என்னடா...." என்றார் மீசையை முறுக்கியபடி.

"அது... நாங்க மூணு பேரும் கொஞ்சம் வெளியில போய்ட்டு வரோம்..." என்க.

மணியை பார்க்க அது நாலை தொட்டுக் கொண்டு இருந்தது.

"இப்ப என்ன வெளியில போகனும்... அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... நாளைக்கு ஊருக்கு கிளம்பற வரைக்கும் உன் கூட்டாளிய வாலை சுருட்டிட்டு இருக்க சொல்லு..." என்றவர் மீண்டும் பேச்சில் கவனத்தை திருப்ப "அப்பா..."என மீண்டும் அழைத்தான்.

"என்னடா வேணும் உனக்கு...?" என கேட்க.

"இல்லப்பா... இங்கயே இருக்கறது ஒரு மாதிரி இருக்கு... அவனுக்கும் ஒரு ரிலாக்ஸா இருக்கும்... அப்படியே வண்டியில போய்ட்டு வரோமே...?"என கேட்க.

"ஏன் உன்ன தூது அனுப்பினாரா உன் சாரு...?" என தர்மன் கேட்க.

"இவருமா...?" என நொந்தான் சுந்தர்.

"விடு தர்மா... போய்ட்டு வரட்டும்... ஆனா ஏழு மணிக்குள்ள வீட்டுக்குள்ள இருக்கனும்... இல்ல சாமி ஆடிடுவேன் பார்த்துக்க..." என்க.

"இப்ப மட்டும் என்ன நீங்கதான் ஆடுறீங்க... நாங்களாம் உங்களுக்கு ஆமாம் சாமிதான் போட்டுட்டு இருக்கோம்..."என முணுமுணுத்தான் சுந்தர்.

"அங்க என்னடா தனியா பேசிட்டு இருக்க...?" என கேட்க.

"ஹிஹிஹிஹி.....ஒன்னும் இல்ல...." என்க.

"டேய் நீ என்ன நினைச்சு இருப்பேன்னு எனக்கு தெரியும்... சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல...ஒழுங்கா வந்து சேருங்க..."என்றார் அவர்.

"ம்ம்ம்ம்ப்பா..."என்றவன் வேகமாக ஓடினான் வாசுவின் அறையை நோக்கி.

சற்று நேரத்தில் மூவரும் கிளம்பி வர அவர்களை பார்த்து முறைத்தார் சக்கரவர்த்தி.

"தடிமாடுங்க சேர்ந்துடுச்சுங்க... ஒன்னா ஊரு சுத்தறதுக்கு..." என்றார் அவர்களின் காதுபட.

அவர் குரல் கேட்டதும் திரும்பி பார்த்து சுரேன் முறைக்க.

சுந்தரோ "டேய்... அவரு திரும்ப முருங்க மரம் ஏறுறதுக்குள்ள நீ  வாடா..." என அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல. 

எதிரே கையில் முறத்துடன் வந்த அருவி எதிர்பாராவிதமாக அவன் மீது மோத முறத்தில் வைத்திருந்த காய்ந்த மிளகாய் அத்தனையும் கிழே கொட்டியது.

அதை பார்த்ததும் அவனுக்கு கோபம் வர "கண்ண எங்க வச்சிட்டு நடப்பானோ தெரியல உருப்படாதவன்..." என்றார் சக்கரவர்த்தி.

"அண்ணா... என்ன பேச்சு இது... அவன் ஒரு டாக்டர்... அவன் மனசு நோகற மாதிரி பேசாதீங்க..." என்றார் தர்மன்.

"ஆமா நீதான் மெச்சிக்கனும்...." அவன என்றார் அவர்.

"இவன வேணா சொல்லுங்க... நாம ஒன்னு படிக்க வைக்க நினைச்சா...அது ஒன்னு படிச்சிட்டு காட்டுக்கும் போகமா... எந்த வேலைக்கும் போகாம... ஊரு வம்ப வெலைக்கு வாங்கிட்டு வருது...." என்றார் தர்மன் வாசுவை பார்த்து.

அவனும் அவரைப் பார்த்து முறைக்க "ஐயையே... போதும் விடுங்க... பசங்க வெளியில போகும்போது ஏதாச்சும் சொல்லிட்டு..."என்றார் பத்மினி.

"நீங்க ரெண்டு பேரும் போதும் இவனுங்கள கெடுக்க..." என்றார் சக்கரவர்த்தி.

அப்போது அங்கே வந்த மகிழாவின்மேல் அத்தனை பேரின் பார்வையும் சென்றது.

"அ... அத்த... நான் ஏதாச்சும் உதவி பண்ணட்டுமா...?" என அவள் திணறி திணறி கேட்டாள்.

"ஒன்னும் வேணாம்... நேரா நேரத்துக்கு சாப்பாடு வரும்... கொட்டிட்டு இன்னும் எவன் குடிய கெடுக்கலாம்னு பிளான் போடு..." என்றான் வாசு.

"வாசு..." என சக்கரவர்த்தி கத்த.

அவன் கூறிய வார்த்தைகள் அவள் இதயத்தை கூறு போட கண்ணில் இருந்து தானாக நீர் இறங்கியது.

எதுவும் பேசாமல் வந்த வழியே திரும்பி சென்று அவள் இருந்த அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள்.

"வாசு... சபையில இருக்கும் போது வார்த்தைய பார்த்துவிடு...."என்றார் சக்கரவர்த்தி.

இப்போது அருவியை பார்த்து முறைத்த சுரேன் "என்ன வேடிக்கையா நடக்குது இங்க... கீழ கிடக்கிறத யாரு அள்ளுவா... அள்ளிட்டு போய் வேலைய பாரு..." என்றான் சுரேன்.

இப்போது அவனை பார்த்து முறைத்தவள் கீழே கிடந்தவற்றை அள்ளி எடுத்துக் கொண்டு போய் பத்மினியிடம் கொடுக்க அவரோ  வாங்கியவர் "நீ போய் இன்னும் ஏதாச்சும் வேணுமான்னு கேட்டுட்டு... அப்படியே கம்பியில காயப்போட்டு இருக்க துணி எல்லாத்தையும் எடுத்துட்டு  வந்துடு..." என்க.

"சரித்த...." என்றவள் வேகமாக வெளியேற அவள் போவதை பார்த்தவன் "நீங்க போய் வண்டிய எடுங்கடா.. நான் வரேன்..." என்றுவிட்டு அவள் பின்னால் சென்றான்.

போகும் அவனையே பார்த்தபடி இருந்தனர் பெரியவர்கள்.

அவள் துணியை எடுத்து கொண்டு இருக்கும்போது அவள் முதுகு உரசியபடி நின்றான் அவன்.

அவளுக்கு தூக்கிவாரிப்போட திரும்பியவளின் வாயில் கையை வைத்து தனியாக யாரும் பார்க்காத வண்ணம் இழுத்துக் கொண்டு சென்றான் சுரேன்....



Leave a comment


Comments


Related Post