இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே -8 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 14-05-2024

Total Views: 9889

இதயம் - 8

மாலை வரை பரத் அவன் தன்னை சந்திக்க வருவான் என்று எதிர்பார்த்து ஏமார்ந்து தான் போனான். சோகமாக வீட்டிற்குச் சென்ற பரத்தை கண்ட வாசு "என்னடி சோகமா இருக்க" என்று கேட்டான். "இல்லை அண்ணா ... அந்த கல்ப்ரிட் என்னை கான்டாக்ட் பன்னுவான்னு நா எதிர் பாத்தன் ஆனா அவன் என்னை கான்டாக்ட் பன்னல" என்று கூறி தன் திட்டத்தை பற்றியும் கூறினான். "டேய் இதெல்லாம் பழைய டெக்னிக் டா ... அவன் உஷார் ஆகி இருப்பான் ... அவனை இப்படி எல்லாம் நம்பி விட்டு வைக்கக் கூடாது டா ... நா ஒரு ஐடியா சொல்ரன் இரு" என்று கூறிய வாசு தனதறைக்குச் சென்று உடையை மாற்றிக் கொண்டு வந்தான். 

"உங்க ஹோட்டல்ல இருக்க அந்த கருப்பு ஆடு யார்ன்னு ரொம்ப சிரமப்பட்டு எல்லாம் கண்டுபிடிக்க வேணா ... ஜஸ்ட் ஒரு நாள் டைமும் அந்த மேனேஜரோட நம்பரும் கொடு நா அவனை உன் வழிக்கு கொண்டு வரன்" என்று கூறிய வாசு பரத்திடம் அந்த மேனேஜரின் எண்ணை வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றான். பரத் யாழிசைக்கு அழைக்க அழைப்பு சென்றுக் கொண்டே இருந்தது. யாழிசை அழைப்பை எடுக்கவில்லை. சரி என்று வீட்டின் லேன்லைனிற்கு அழைக்க அழைப்பை வேலையாள் எடுத்தார். "அம்மா மேடம் இல்லையா அவங்க நம்பர் ரீச் ஆகல" என்று பரத் கேட்க "மேடம் மொட்டை மாடியில இருக்காங்க தம்பி ... அவங்க கீழ வந்ததும் கொடுக்கட்டுமா ... இல்லை அவசரம்ன்னா சொல்லுங்க நா மேல போய் கூப்ட்றன்" என்று கேட்க பரத் அவசரமாக "இல்லைம்மா வேண்டா ... அவங்களே கூப்டட்டும்" என்று கூறி அழைப்பை துண்டித்தான். 

யாழிசை மொட்டை மாடியில் நின்று இரவின் இரைச்சலில் கரையை தாண்டிட முடியாமல் திரும்ப திரும்ப கடலுக்குள்ளே இழுக்கப்பட்டுக் கொண்டிருந்த அலைகளை வெறித்துக் கொண்டிருந்தாள். அலைகள் கண்ணாமூச்சி ஆடுகின்றன என்று அனைவரும் அதனுடன் ஓடியாடி விளையாடுகின்றனர். ஆனால் அலைகளோ தன் எல்லையை தாண்டிட முடியாமல் தவிப்பது அவர்களுக்கெல்லாம் விளங்குவதே இல்லை. என்றாவது ஓர் நாள் அவ்வலைகள் கரையின் மேல் கோபம் கொண்டு கரையை தாண்ட முடிவெடுத்து சூராவளியாய் பொங்கி கரையையும் கரையை தாண்டிய பகுதிகளையும் அடித்து நொருக்கி விளையாடி மகிழ்வது மனித இனத்திற்கு பேரிழப்பு. அதே போல் தான் தானும் கோபத்தை பொங்கி அடித்து நொருக்க கிளம்பி விட்டால் பின் மனித இனத்திற்கே பேரிழப்பை விடுக்கும் குற்றவாளி என்று அழித்து விடுவர். பொறுமை. பொறுமையால் வெல்வோம் என்று அவினாஷ் கூறியது யாழிசையின் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. ஆம் அவர்கள் இருவரின் உரையாடல் தான் யாழிசையின் மனதில் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

இருவரின் இந்த பொறுமை யாருக்காக எதற்காக என்று இப்பொழுது வரை இருவரும் வெளியில் சொல்லவில்லை. இருவரின் இறுக்கம் பாதுகாப்பு எல்லாம் எதற்காக யாருக்காக என்று தெரியவில்லை. அவர்களாய் வாயை திறக்கும் வரை யாருக்குமே எதுவுமே தெரிய போவதில்லை. அமைதியாய் அமைதியில்லாமல் சஞ்சலத்துக் கொண்டிருந்த கடல் அலையில் ஒரு ஜோடி கால் நனைக்க பெண்ணவள் ஆண்மகனை இழுக்க அவனோ வர மறுத்து பின்னோக்கி நிற்பது தெரியவே 'ம்க்கும் ... ஃபேக் ரிலேஷன் ஃபேக் ப்ராமிஸ்,  லவ்ன்னு ஒன்னு இல்லவே இல்லை' என்று நினைத்தவள் அவர்களையே வெறித்தாள். அப்பெண் தன்னுடன் வந்த உருவத்தை கவனிக்காமல் அலையில் விளையாட அவனோ திரும்பி உயரத்தில் நின்றிருந்த யாழிசையை பார்த்தான். இருவருக்கும் உருவம் மட்டும் தான் தெரிந்தது முகம் தெரியவில்லை. ஆனால் ஒருவரை ஒருவர் உருவத்தை மட்டும் பார்த்துக் கொண்டனர். 

'வாழ்ந்தா இப்படி வீட்ல நின்னே கடல் அலைய பாக்கற பாக்கியத்தோட வாழனும் ... ரொம்ப ப்ளசன்ட்டா இருக்க அந்த இடத்துல நா நின்னுட்டு இருந்தா' என்று அலைகலை பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்த அஞ்சனாவை சமாதானம் செய்ய இயலாமல் வீட்டில் சாப்பிடாமல் உறங்காமல் கிளம்பி வந்த வாசு யாழிசை இடத்தில் தன்னை நிறுத்தி பார்த்தான். 'கேக்கறதெல்லாம் கிடைக்கிற வரம் நமகில்லைனாலும் உழைப்பால முன்னேறலான்னு பாத்தா இவ விட மாட்டன்றா ... ஈஸியா கைக்கு வர பொருள் நிலைக்காதுன்னு அவளுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது' என்று நினைத்தவனின் பார்வை மட்டும் யாழிசையை விட்டு நகரவில்லை. அப்பொழுது யாழிசைக்கு பின்னால் யாரோ கத்தியை ஓங்கிக் கொண்டு வருவது போல் நிழல் தெரிய வாசு "ஏய்" என்று கத்தினான். யாழிசை வாசுவை பார்க்காமல் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்ததால் வாசு கத்தியது அலை இறைச்சலில் கேட்கவில்லை. வாசு கத்துவதை கேட்டதும் அஞ்சனா அவனிடம் ஓடி வந்தாள். "என்ன வாசு என்ன ஆச்சி" என்று அஞ்சனா கேட்க "அந்த பொண்ண யாரோ கொல்ல பாக்றாங்க" என்று கூறி வாசு மீண்டும் "ஹலோ உங்க பின்னால பாருங்க" என்று கத்தினான். 

"வாசு சும்மா இரு" என்று அஞ்சனா சுற்றி இருந்தவர்கள் அவர்களையே பார்ப்பதை பார்த்து கூறி வாசுவை அமைதிப்படுத்த முயற்சித்தாள். "ஹேய் ஒரு ஆள கொல்ல வராங்க அமைதியா இருக்க சொல்ர" என்று கூறிய வாசு மீண்டும் யாழிசையை பார்க்க அவளுக்கு பின்னால் இருந்து யாழிசையின் வேலையாள் கையில் ஒரு கத்தியுடன் யாழிசை பின்னால் வந்து நின்றார். யாழிசை பின்னால் அரவம் கேட்டு திரும்பி பார்த்து "நான் தான் கீழ வந்து சாப்பிட்றன்னு சொன்னனேம்மா ... அதுக்குள்ள இன்னொரு கால் பன்னிட்டானா" என்று வேலையாள் கையில் வைத்திருந்த பழங்கள் நிறைந்த தட்டையும் கத்தியையும் பார்த்துக் கேட்டாள். "அது மட்டும் இல்லை" என்று கூறிய வேலையாள் தன் இடையில் சொறுகி வைத்திருந்த கைப்பேசியை எடுத்து யாழிசையிடம் நீட்டினார். யாழிசை "இடுப்புலே ஸ்டேண்ட் வேற செஞ்சி வச்சிருக்க" என்று கிண்டலடித்தவாறே கைப்பேசியை வாங்கி லைனில் இருந்த அவினாஷ்ஷுடன் பேசினாள். கீழிருந்து பார்த்த வாசு யாழிசைக்கு ஆபத்தில் என்ற பின் தான் நிம்மதி பெருமூச்சு விட்டான். அத்தோடு அவளை கொலை செய்ய போகிறார்கள் என்ற எண்ணம் மனதில் தோன்றியதுமே அவனின் பாதி உயிர் அவனிடம் இல்லாமல் தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பது போல் மூச்சு முட்டியது. இப்பொழுது தான் யாரோ தன் பின்னங்கழுத்தை பற்றி தண்ணீரில் இருந்து இழுத்தது போல் நிம்மதியாக இருந்தது. அஞ்சனா வாசுவிடம் "உன் கூட டைம் ஸ்பெண்ட் பன்னனுன்னு நா நினைச்சி வர ஒவ்வொரு டைமும் நீ எதாவது ஒன்னு பன்னி என் மூட்ட ஸ்பாய்ல் பன்னிட்ற வாசு ... அவ யாரோ எவளோ அவளை கொல்ல வந்தா என்ன இல்லை கொலையே பன்னிட்டா என்ன ... முக்கியமா உனக்கென்ன ... ஏதோ உன் உயிரே போற மாதிரி கத்தற ... அங்கையும் இங்கையும் டென்ஷன்ல ஓட்ற ... தத்தளிக்கிற ... என்ன தான் நினைச்சிகிட்டு இருக்க நீ ... இப்ப எனக்கு எதாவதுன்னா நீ இப்படி துடிப்பியான்னு எனக்கு சந்தேகமா வருது" என்று கூற அப்பொழுது தான் வாசுவும் தன் உயிரே போனது போல் வலித்ததை உணர்ந்தான். 'அவளை கொலை பன்ன வந்தா உனக்கு ஏன் வலிக்குது' என்று தன்னிடமே கேட்டுக் கொண்டான். ஆனால் அவனிற்கு பதில் கூறத் தான் அங்கு யாருமே இல்லை. 

வாசு குழப்பத்துடனே வீட்டிற்குச் சென்றான். அஞ்சனா கோபமாக கிளம்பிச் சென்று விட்டான். அடுத்த நாள் காலை பரத்திடம் வாசு "அவனோட மொபைல்ல ஹாக் பன்னிட்டன் டா ... இதுல அவன் இல்லீகலா உங்க ஹோட்டல்ல இருந்து ட்ரான்ஸ்பர் பன்னிகிட்ட அமௌண்ட் அன்ட் அதோட டேட் டைமோட இருக்கு ... இந்த ஆதாரம் போதும்ன்னு நினைக்கிறன் ... அப்பறம் இந்த நம்பர்க்கான சொந்தகார் தான் உன் ஹோட்டல்ல இருக்க ஸ்பை ... பைன்ட் ஹிம்" என்று கூறி இரு காகிதத்தையும் மற்றொரு இலக்கத்தையும் கொடுத்தான். பரத் தன் அண்ணனிற்கு ஒரு நன்றியை கூறி விட்டு அதை வாங்கிக் கொண்டான். "ஏன் அண்ணா ஒரு மாதிரி டல்லா இருக்க" என்று பரத் கேட்க "நைட் எல்லாம் தூக்கமே இல்லைடா ... அஞ்சனா ஜெர்மன் போலாம்ன்னு ரொம்ப டார்ச்சர் பன்றா ... இப்ப எல்லாம் எப்ப பேசனாலும் சண்டை தான் வருது ... இரண்டு பேருமே விட்டுகொடுக்காம இருந்தா சரி வராதுன்னு நானும் எத்தனையோ விஷயத்துல விட்டு கொடுத்து போறன் ... ஆனா அதுலையும் குத்தம் கண்டுபிடிக்கிறா" என்று கவலையாக வாசு தன் மனகுமுறலை வெளிப்படுத்தினான். 

"நீ வேணா அவங்க சொல்ர மாதிரி ஜெர்மன் போய்ட்டு வாயேன் ... நீங்க இரண்டு பேரும் போறதால உங்களுக்குள்ள இருக்க மிஸ்அன்டர்ஸ்டேன்ட் சரியாக வாய்ப்பிருக்கு" என்று பரத் கூற வாசு "டேய் அவ என்ன ஜாலியா சுத்தி பாக்கவா கூப்ட்றா ... அவங்க கம்பனிய பாத்துக்க கூப்ட்றா" என்று கூற "எப்ப இன்கம் டேக்ஸ் ரைட் வருவாங்கன்ற பயத்துலே அண்ணனை கம்பனி ரன் பன்ன சொல்ரியா அண்ணா" என்று கேட்டவாறே பிரீத்தி வர பரத் அவளை முறைக்க வாசு "எக்ஸாக்ட்லி ... என்னால பயத்துல இருக்க முடியாது" என்று கூறினான். "அண்ணா பஸ்ட் அந்த கம்பனிய டேக் ஓவர் பன்னிக்கோ அப்பறம் நல்ல முறையில நடத்து" என்று கூறினான். "டேய் வேணா டா அண்ணன் தான் விருப்பம் இல்லை சொல்ரானே" என்று பிரீத்தி கூற "விடுங்க டா பாக்கலாம் ... ஆப்பிஸ்க்கு டைம் ஆகுது நா கிளம்பறன்" என்று வாசு அறைக்குச் சென்று விட பரத்தும் ப்ரீத்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வேலையை பார்க்க சென்று விட்டனர். பரத் வாசு கொடுத்த எண்ணை முதலில் யாழிசைக்கு அனுப்பினான். 

யாழிசை பரத் அனுப்பி இருந்த எண்ணை புருவ முடிச்சுடன் பார்த்து விட்டு பின் பரத்திற்கு என்ன எண் என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினாள். "நம்ம ஹோட்டல்ல இருக்க ஸ்பையோட நம்பர்" என்று பரத் பதிலனுப்பினான். "எப்படியும் இந்த நம்பர் நம்ம ஸ்டாப் லிஸ்ட்ல இருக்க பேரோட மேட்ச் ஆகாது .. நம்ம வேற மாதிரி தான் கண்டுபிடிக்கனும்" என்று யாழிசை அனுப்ப "எல்லாரையும் மீட்டிங் ஹால்க்கு வர சொல்லி நம்ம வேணா கால் பன்னி செக் பன்னலாமா மேடம்" என்று பரத் கேட்க "மீட்டிங் ஹால்க்குள்ள கண்டிப்பா மௌபைல்ல சைலண்ட்ல போட்ருவாங்க பரத்" என்று யாழிசை கூறினாள். "வேற எப்படி மேடம் கண்டுபிடிக்றது" என்று பரத் கேட்க "யோசிப்போம் ... உனக்கு எதாவது ஐடியா கிடைச்சா கால் பன்னு ... ஆமா நம்பர் எப்படி கண்டுபிடிச்ச" என்று யாழிசை கேட்க பரத் நடந்த அனைத்தையும் கூறினான். 

"இவ்வளவு பன்ன உன் அண்ணன் ... சிம் கார்ட்டோட டேட்டாவ எடுத்து கொடுத்திருக்கலாம் இல்லை" என்று யாழிசை கேட்க பரத் "அது அண்ணன் ரொம்ப அப்சட்ல இருக்கான் ... அவன் இவ்வளவு கண்டுபிடிச்சி கொடுத்ததே பெருசு மேடம் ... அதும் நா கேக்காமலே வேற செஞ்சி கொடுத்திருக்கான்" என்று தயக்கத்துடன் கூற யாழிசை "ஒன்னு பன்னலாம் ... உங்க அண்ணா கிட்ட எதாவது வைரஸ் இருக்கா கேளு ... அதை அந்த நம்பர்க்கு மெசேஜ் மூலமா அனுப்பி விட்றலாம் ... அவன் மொபைல் கெட்டு போனதும் நம்ம ஸ்டாப் லிஸ்ட்ல இருக்க எல்லார்க்கும் ஒரே நேரத்துல மெசேஜ்ஜ போட்டு வேலை செய்யாத மொபைலோட ஓனர்ர தூக்கிடலாம்" என்று யாழிசை கூற பரத் "மேடம் ... என்னமா யோசிக்கிறிங்க ... ஆனா அவன் இரண்டு மொபைல் வச்சிருந்தா" என்று சந்தேகமாக கேட்க "ஒரு நம்பர் கெட்டு போனதும் அவன் இன்னொரு நம்பர் யூஸ் பன்னி தான ஆகனும்" என்று யாழிசை கூற பரத் தான் அவ்வாறே செய்வதாக கூறி வாசுவை தேடிச் சென்றான். 

வாசுவிடம் பரத் யாழிசை கூறிய விஷயத்தை கூற வாசு "உண்மையாவே உங்க முதலாளி அறிவாளி தான் டா .. அதனால தான் ஸ்டார் ஹோட்டல் ஸ்டார் லெவல்க்கு பேமஸ்ஸா இருக்கு" என்ற ஒரு பாராட்டு விழாவை நடத்தி விட்டு பின் பரத் கேட்டதை செய்து கொடுத்து விட்டு கட்டிலில் படுத்து விட்டான். "அண்ணா ஆப்பிஸ் போலையா" என்று கேட்ட பரத்திடம் "மைன்ட் சுத்தமா சரியில்லை டா ... லீப் அப்ளே பன்னிட்டன்" என்று கூறிய வாசு கைப்பேசியை அணைத்து விட்டு படுத்து விட்டான். பரத்தும் சரி என்று ஹோட்டலுக்கு கிளம்பி விட்டான். பரத் ஒரு இரண்டு மணி நேரம் கழித்து யாழிசை கூறியது போல் அனைவரையும் கான்ஃபரன்ஸ் ஹாலில் வந்து சேரக் கூறி ஒரு மெசேஜ்ஜை தட்டி விட அந்த ஹோட்டலில் வேலை செய்த அனைவரின் கைப்பேசியும் ஒரே நேரத்தில் பீப் சத்தம் எழுப்பியது. அங்கிருந்த அனைவரும் தங்களின் கைப்பேசியை எடுத்து பார்த்து அருகில் இருப்பவர்களையும் மாடியில் இருப்பவர்கள் கீழேயும் கீழே இருப்பவர்கள் மேலேவும் என எட்டி எட்டி பார்த்தனர். ஏதோ அவசரம் போல் என்று அங்கு வேலை செய்கின்ற செப்ஸ், ஜிம், ரூம் சர்விஸ் செக்யூரிட்டி முதற்கொண்டு அனைவரும் கான்பரன்ஸ் ஹாலில் ஒன்று சேர்ந்தனர். ஆனால் ஒரே ஒருவன் மட்டும் தன்னுடைய கைப்பேசி வேலை செய்யவில்லை என்று அதை தட்டிக் கொண்டே ஹோட்டலினுள் நுழைந்தான். 


Leave a comment


Comments


Related Post