இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -33 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 14-05-2024

Total Views: 24297

ஷாலினியின் முதுகை தட்டிய நிலா, “டோன்ட் ஓர்ரி அண்ணி கல்யாணம்ன்னா எல்லாமே இருக்கும். இப்போ அது கஷ்டமா இருந்தாலும் நாளைக்கு உங்க பிள்ளைகளுக்கு சொல்லும் போது சிரிப்பா இருக்கும்ல, இதுவும் கடந்து போகும் விடுங்க. என்று ஆறுதலாக பேசினாள்.  

“ஆமா கிழவி சொல்லிட்டா கேட்டுக்கோ இவளுக்கு நூறு கல்யாணம் ஆகியிருக்குல்ல..” என யுகி காலை வார,  

“யுகி”  

“பூனை எப்போல இருந்து கிழவி ஆன சொல்லவே இல்லை. இப்படி பழம் மாதிரி பேசறவ பெங்களூருல படிச்சான்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க பார்த்துக்கோ.” என்று கிண்டல் செய்ய,  

“நம்பாட்டி போறாங்க போடா.. யாரும் நம்பணும்னு நான் சொல்லல.” என்றவளுக்கு உள்ளுணர்வு யாரோ உற்றுப் பார்ப்பது போல் அறிவுறுத்த, உடனே மேலேப் பார்த்தாள். அங்கு யாருமே இல்லை.. ஆனாலும் மனது சமாதானம் அடையவில்லை.  

'யாரோ பார்த்த மாதிரி தானே இருந்தது. பார்த்தா யாரும் இருக்க மாதிரியே இல்லையே, அந்த கஞ்சு போட்ட கம்பம் தான் மேலேப் போனான். அவன் இங்க இருக்கும் போதே பார்க்கல, அங்கேப் போயா பார்க்கப் போறான்? அப்போ வேற யாரா இருக்கும்?' என மண்டை காய அவள் பார்வை போன திசையில் ஷாலினியும், யுகியும் பார்த்தனர்.  

“அங்க என்ன தெரிகிறது?”  

“அது ஒண்ணுமில்லடா, சும்மா சும்மா.. அண்ணா கூப்புடியா?” என்று வெளியே ஓடிவிட்டாள்.  

அதற்குள் வளவனும் ராஜியும் பேசிக் கொண்டே வீட்டின் வெளியே வந்துவிட்டனர்.  

எட்டு வருஷம் கழித்து நிரந்தரமாக தங்குவதற்காக மீண்டும் இங்கையே வந்துவிட்டனர்.  

முன்பு இருந்த பழைய கூரை வீட்டில் இல்லை, வந்தால் தங்க நல்ல வீடு வேண்டும் என்று இரண்டு வருடத்திற்கு முன்பு தான் கீழே இரண்டு படுக்கையறை மட்டும் கொண்ட மாடிவீட்டைக் கட்டினான். இப்போது சமீபமாக தான் மேலே அறை ஒன்றை எடுத்துக் கட்டியிருந்தனர்.  

அதுவும் வயது பெண் இருக்கும் வீட்டில் வளவன் தன் மனைவியுடன் ஒரே வீட்டில் இருக்க முடியாது என்பதற்காக மேலே ஒற்றை அறை எடுத்தனர்.  

இவ்வளவு நாள் வேலைக்குச் சென்ற வளவன், சிறிய முதலீட்டைப் போட்டு தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்ததால் அதற்கான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.  

பின்னாடி வீடு தான் என்பதால் நடந்தே அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர். இன்று இரவு இவர்களின் பொருட்கள் அனைத்தும் பெங்களூருவில் இருந்து வந்துவிடும், மதிய உணவையும் இரவு உணவையும் மட்டும் வெளியே பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்க.. அதன்படி கடைக்கு சென்று உணவு வாங்கி வந்தான் வளவன்.  

“அண்ணா நீ பண்றது சரியில்ல”  

“எதை சொல்ற அம்மு?”  

“அவர் முன்னாடி கால் மேல கால் போட்டு உக்கார்ந்ததை சொல்லல.”  

“அப்புறம்”  

“அவங்க அவ்வளவு சொல்லியும் ஒரு வாய் சாப்பிடாம வந்ததை சொல்றேன், நீ அங்க இருக்க ஒருத்தனை கஷ்டப்படுத்தறேன்னு மொத்தக் குடும்பத்தையும் கஷ்டப்படுத்தாத. அதுல அண்ணியும், யுகியும் இருக்காங்க நியாபகத்துல வெச்சிக்கோ.”  

“நான் யாரையும் கஷ்டப்படுத்த இதப் பண்ணலை, எனக்கு அங்க மாரியாதை இல்லாதப்ப எதுக்கு கை நனைக்கனும்ன்னு தான் சாப்பிடாம வந்துட்டேன். இந்த பேச்சை இத்தோட விட்டுடு அம்மு.” என்றவன்,  

“நீ ஒர்க் போகணும்னு சொன்னியே” என்றான்.  

“ம்ம்ம்ம்ம் ரெண்டு கம்பெனிக்கு ஜாப் அப்ளிகேஷன் போட்டுருக்கேன். ரெண்டு நாள்ல இன்டர்வியூக்கு கூப்பிடுவாங்க.” என்று சாப்பிட்டு முடித்தாள்.

சாப்பிட்டதும் மேலே அறைக்குச் சென்று விட்டாள். 

ஊருக்கு வரும் போதெல்லாம் இரண்டு நாள் வந்து தங்குவது சரி, அதற்கு மேல் இருக்க யாருக்குமே நேரமிருந்ததில்லை. அதுவும் மேலே எடுத்துக் கட்டினதுக்கு பிறகு இன்று தான் வருகிறாள். 

இங்கு இருந்து வீடு கட்டும் வேலையைப் பார்க்க கூட நேரமில்லாததால், தன் அத்தைப் பையனை வைத்து தான் வீட்டு வேலையைப் பார்த்துக்கொண்டனர். மேலே இருக்கும் அறை ஒரு குடும்பம் தங்குவது போல் பெரிதாக இருந்தது. 

அப்படியே வெளியே வந்து பாருங்க.. மிகப்பெரிய இடம் காலியாக இருக்க,“இதுல செடி வைக்கணும், இங்க ரோஸ் வைக்கணும், இங்க பெரிய தொட்டி வெச்சி தாமரை வைக்கணும்..” என தனக்கு தானே பேசிக் கொண்டு திரும்ப, நந்தன் அவனது பால்கனியில் இருந்த செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தான். 

“ஐயோ!!! இவனா? இங்க என்ன பண்றான்?” என வேகமாக அறைக்குள் ஓடி ஒளிந்துக் கொண்டாள். 


எட்டு வருடத்திற்கு முன்பு அவன் மீது இருந்த பயம் இப்போது வரைக்கும் சிறிது கூட குறையவே இல்லை. அறைக்குள் ஒளிந்துக் கொண்டு எட்டி எட்டிப் பார்த்தாள். 

கையில்லாத பனியன் அணிந்திருக்க, யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். 

“அவரு லவ்வரா இருக்குமோ, இருக்கும் நம்பகிட்டல மூஞ்சுல முல்லைக் கட்டுன மாதிரி இருக்கறது. இப்போ பாரு எப்படி சிரிக்கறாருன்னு..? எல்லாம் காதல் செய்யும் மாயம்.“ என்று எண்ணிக்கொண்டே அவளை அறியாமல் நந்தனை உள்வாங்கிக் கொண்டிருந்தாள். 

பெண்களை விட ஆண்கள் பல விதத்தில் அழகு தான் வாய் நந்தனை வேண்டாம் என்றது, மனமோ அவனை ரசித்து ரசித்து பார்த்தது. அதுவும் ஒளிந்து மறைந்து. 

'வேண்டா அம்மு அவனைப் பார்க்காத அப்புறம் அதுக்கும் ஏன் பார்த்தன்னு அடிப்பான். கீழே போய்டு.' என மூளை சொன்னாலும் மனம் கேக்க வேண்டுமே. 

நிலாவின் உள்ளுணர்வு தான் உணர்த்துமா என்ன? நந்தனின் உள்ளுணர்வும் யாரோ தன்னைப் பார்ப்பது போல் உணர்த்த.. போலீஸ் புத்திக்காரன் சந்தேகமாக சுற்றிப் பார்த்தான். 

அவன் கழுகுப் பார்வையில் ஒன்றும் தப்பாது. நிலாவின் சுடிதார் சால் காற்றில் அசைந்து அவள் இருப்பைக் காட்டிக் கொடுத்துவிட நந்தனின் உதடு வளைந்தது. 

அவனிடம் தனியாக சிக்கி விடக்கூடாது என்று அவள் செய்யும் சேட்டையை அறியாதவன் அல்ல, “மாட்டட்டும் இருக்குடி உனக்கு” ​​என்பது போல் தான் அவன் செயல் இருந்தது. 

எவ்வளவு நேரம் இப்படியே ஒளிந்து விளையாடுவாள் என்று பார்ப்பதற்காகவே தண்ணீர் இல்லாத ஜக்கை செடியில் கவிழ்த்துக் கொண்டிருக்க, 

“எவ்வளவு நேரம்டா தண்ணி ஊத்துவ.. போய் தொலைடா..” என்று நிலா இங்கு அவனை வாயால் வதம் செய்துக் கொண்டிருக்க, அவனும் சலிக்காமல் நின்றான். 

இருவருக்குமே யார் முதலில் வெளி வருவது என்ற போட்டி பலமாக நடந்துக் கொண்டிருந்தது. 

இது தெரியாமல் சுவரில் இருந்த பல்லி ஒன்று நிலாவின் மீது விழ.. 

“ஆஆஆ...” என கத்தியவாறு துள்ளிக் கொண்டு வெளியே வந்து நின்றாள். 

பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது. புலியோ அதை வேட்டை ஆடுவது போல் வெறிக் கொண்டு பார்க்க அவனைப் பார்க்காதது போல் கீழே ஓடிவிட்டாள். 

ஒருபக்கம் நிலா தனக்கு பயந்து ஓடுவதில் கர்வமாக இருந்தது. இன்னொருப் பக்கம் அதற்கு மாறாக ஏதோ ஒன்று மனதில் உருவாக முதல் பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு பாதி இரண்டாம் நிலையை ஒதுக்கி விட்டான்.

“வள்ளு அண்ணா பண்றதையோ பேசுனதையோ மனசுல வெச்சிக்காதடா.” என ஷாலினியாக தான் வழியே சென்று வளவனிடம் பேசினாள். 

“ம்ம்ம்” 

“கோவமா இருக்கியா நீ ம்ம் சொல்றதுலையே தெரியுது.” 

“ஆமா கோவமா இருக்கேனு சொன்னா மேடம் என்ன பண்ணப் போறீங்க?” 

“என்ன பண்ணனும்?” 

"கிஸ் பண்ணனும்." 

“கையில தானே?” 

“யாருக்கு வேணும் அங்க?” 

"அப்புறம்?" 

"இங்கிலீஷ் கிஸ்." 

“கல்யாணத்துக்கு அப்புறம்..” 

“புல் மீல்ஸ் அப்ப சாப்புட்டுக்கறேன் இப்போ எனக்கு சைட்டிஸ் வேணும்.” 

"சரி நாளைக்கு பார்க் வா." 

"வெளியேல வேண்டா. நைட் பத்து மணிக்கு வீட்டுக்குப் பின்னாடி வரேன்." 

“வந்து தான் ஆகணுமா?” என அவள் சிணுங்க, 

“ஆஃப்கோர்ஸ் வந்து தான் ஆகணும் இல்லனா நான் கோவமா தான் இருப்பேன்.” “ 

வரேன்” என அழைப்பதைத் துண்டித்து விட்டாள் அவர்கள் மேல் நம்பிக்கை இல்லாததாலா, இல்லை திருமணத்திற்கு பிறகு தான் என்று தெரியவில்லை பேசப் போனவளின் இதழை இழுத்துக் கவ்விவிட்டான் . “ஷாலு வீட்டுக்குப் போ..” “இன்னும் கொஞ்சம் நேரம்டா.” “இதுக்கு மேல இருந்தா ரெண்டு பேருக்குமே கண்ட்ரோல் மிசாகிடும் போ.” “ம்ம்ம்” என அவனை திரும்பிப் பார்த்துக்கொண்டே போனவளை விடவே மனமில்லாமல் விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தான். அடுத்தநாள் காலையில் நேரமாகவே எழுந்துவிட்டாள் நிலா. வாசல் தெளித்து கோலம் போட்டவள் சூரியனின் கதிர்களால் தன்னை பூப்படைய செய்யும் பூக்களும்.. தற்கொலை செய்து கொள்ளும் பனித்துளியும், நிலாவை பெரிதாக கவர வீட்டு வாசலின் ஓரத்தில் வைத்திருந்த செடிகளை தடவிக் கொண்டே அந்த காலை நேரத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். அப்போது ஷூவின் சத்தம் வேகமாக கேட்டது. எத்தனை வருடங்கள் ஆனாலும் அந்த காலடி ஓசை யாருடையது என தெளிவாக சொல்லும் நிலாவிற்கு உள்ளுக்குள் பொங்கிய அலைப் போல் பயம் எழ.. சுற்றி யார் இருக்கிறார்கள் என பார்த்தாள். அந்தத் தெருவில் இருக்கும் வயதுப் பெண்கள் மொத்தமும் ஏதோ ஒரு வேலையை வைத்துக் கொண்டு வாசலிலும், மாடி மேலையும் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.



































'இது யாருக்கான காத்திருப்பு' என புரிய அந்த நாயகனின் வருகையை காதுகளை மட்டும் தீட்டி கேட்டாள். கண்கள் செடியை வருடிக் கொண்டிருந்தது. 

நடைப்பயிற்சி முடிந்து வந்தவனின் கண்களில் சுற்றி இருக்கும் பெண்களும் பட்டனர் செடியை வருடிக் கொண்டிருந்த நிலாவும் பட்டாள். 

உடனே நகராட்சிக்கு அழைத்தவன், 

“ஹலோ நான் அசிஸ்டண்ட் கமிஷனர் விஜய நந்தன் பேசறேன்.” என்ற குரலில் நிலா ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள். 

“பெரிய மைக்கல் ஜாக்ஸன்னு நினைப்பு” என முனவ, 

அவன் அதைப் பார்த்தானோ இல்லையோ, 

“ரோட்டுல செடி வவைக்க எப்போ அலோ பண்ண ஆரம்பிச்சீங்க வண்டிலாம் போக வேண்டாமா..? செடி இருக்கறதால ஆப்போசிட்ல வர வண்டி சரியா தெரியறதில்ல, இதனால நிறைய ஆக்சிடன்ட் ஆகுது. முதல்ல அதை ரிமோவ் பண்ணுங்க. வீட்டுக்காரங்களுக்கு தான் தெரியலை கவர்மென்ட் சம்பளம் வாங்கற உங்களுக்கும் தெரியாது.” என்றான் அதிகாரமாக. 

அவன் தன் வீட்டுச் செடியை தான் சொல்கிறான் என்றதும் அவன் மேல் இருக்கும் பயத்தையும் மீறி கோவம் கட்டுக்கடங்காமல் வந்தது நிலாவிற்கு. 

நிலாவிற்கு செடிகளின் மீது கொள்ளைப் பிரியம். ரோஜா செடிகளில் பல வித வண்ணங்களில் வைத்திருக்கிறாள். ஒவ்வொன்றையும் தன் குழந்தைப் போல் பார்த்துக் கொள்வாள். வீதியின் ஓரத்தில் வைத்ததற்கும் செடியை எடுக்கச் சொன்னால் கோவம் வராத. 

“டேய் உனக்கே இது அடுக்குமா.. வீட்டை தாண்டுனா முட்டு சந்துங்கற மாதிரி உங்க வீடு குறுக்க நிக்குது இதுல வண்டிலாம் எங்க இருந்துடா வரும், ஏண்டா இப்படி இம்சை பண்ற.?” என்று உள்ளுக்குள் புழுங்கியவளுக்கு வெளிய சொல்ல முடியாமல் தவித்தாள். 

நந்தனின் கண் அவளை விட்டு இம்மியும் நகரவில்லை. 

“இன்னைக்கு வந்து கிளீர் பண்ணிடறேன் சார்” என அந்தப் பக்கம் சொல்ல. 

“ம்ம்ம் அட்ரஸ் அனுப்பி வைக்கிறேன், நைட் வரும்போது சின்ன செடிக் கூட இருக்கக் கூடாது காட் இட்.” என அழைப்பைத் துண்டித்தான். 

'நானா உன்கிட்ட வந்து கெஞ்சணும்னு தானே இதெல்லாம் பண்ற, செடி போனா வாங்கி மேலே வெச்சிப்பன் போடா. உங்கிட்ட வந்து நின்னா இதுதான் சாக்குன்னு என்னையவே அடிப்ப.' எண்ணியவள் அங்கிருந்து ஓடிவிட்டாள்.



Leave a comment


Comments 1

  • F Fajeeha Fathima
  • 1 month ago

    இந்த கண்ணாமூச்சி விளையாட்டு சூப்பரா தான் இருக்கு சூப்பரா இருக்கு அக்கா


    Related Post