இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 3 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 14-05-2024

Total Views: 18998

கவிதை 3


     இதற்கு மேல் எதுவும் பேசமுடியாதபடி மகனின் பேச்சு இருக்கவே அமைதியாக வெளியே வந்து அங்கு இருந்த தன் நண்பரும் கணக்குபிள்ளையான சண்முகம் அருகில் சென்று அவரின் கை பற்றி 

     "சண்முகம் நீ தான் என் பிள்ளையை பத்திரமாக பார்த்துக்கனும் அவனுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பிடு" என்றார் வீரராகவன். 

    "ஐயா நீங்க சொல்லனுமா நம்ப வீட்டு பிள்ளையை பார்த்துக்க,  நாங்க பத்திரமாக  பார்த்துக்கிறோம்  நீங்க வருத்தப்படாதிங்க கூடிய சீக்கிரம் தம்பி வீட்டுக்கு வந்துவிடுவார்"  என்றார் சண்முகம்.

     அவரிடம் தலையாட்டி விட்டு முரளி அருகில் சென்று கை கூப்பினார். 

     முரளியே அதிர்ந்து  "அங்கிள் என்ன பண்ணுறீங்க"  என்று அவர் கையை பிடித்து கீழ் இறக்கினான். 

   " இல்லையா பத்து வருஷமா தேடியும் கிடைக்காத புள்ளைய நீ கண்பிடித்து கூட்டிட்டு வந்துட்ட ரொம்ப நன்றிப்பா" என்றார் தழுதழுத்த குரலில் 

     முரளிக்கே அவர்பேசுவதை கேட்க ஒரு மாதிரி இருந்தது. 

   "அங்கிள் அவன் என் நண்பன் அவனை பார்த்துட்டு எப்படி விட்டுட்டு வரமுடியும்.  நான் அவனை பார்த்துக்கிறேன் நீங்க கவலைபடாமல் இருங்க.  உங்க உடம்பை  பார்த்துக்கங்க ஒரு முறை ஆஸ்பிடல் போய் பாருங்க" என்றான் முரளி. 

     "என் பிள்ளை தான் வந்துட்டானே இதற்கு அப்புறம் எனக்கு எந்த நோயும் வராது.  இனி அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்துட்டா போதும்"   என்று கண்கலங்க கூறினார். 

    " அங்கிள் இப்போதைக்கு எதைப்பற்றி கவலை பட வேண்டாம் அப்புறம் பார்க்கலாம்"  என்று கூறியவன் சரவணன் புறம் திரும்பி  "சரவணா ஒரு முறை ஆஸ்பிடல் கூட்டிட்டு போய் வா"  என்றான் முரளி. 

    " சரி அண்ணா"  என்று முரளியிடம் கூறியவன் தந்தை இடம் "அப்பா வாங்க வீட்டுக்கு போகலாம்  முரளி அண்ணன் பார்த்துப்பார் அண்ணனை" என்று கூறி அழைத்துச் சென்றான். 

    அனைவரிடமும் விடை பெற்று காருக்கு சொல்லும் போது தான் கயல்விழி இல்லாததை உணர்ந்த சரவணன் அவளை தேட 

     முரளி, " கயல் கார்த்திகிட்ட பேசிட்டு இருக்கா நீ கிளம்பு" என்றான்.  

     சரவணனும் சரி என்று கூறி தாய் தந்தையை அழைத்து சென்று விட்டான். 


     அறையில் இருந்து வீரராகவனும் மற்றவர்களும் வெளியே வந்த போது கயல்விழி அவர்களுடன் வராமல் கார்த்திகேயன் சென்ற தோட்டத்தின் பக்கம் சென்றாள். 


     கார்த்தியின் பின் நின்று   "அத்தான்" என்றாள். 

     அவன் திரும்பாமலே நிற்க 

     "அத்தான் ஏன் என்னை பார்க்கக்கூட பிடிக்கவில்லையா அத்தான்."

     "ஆனால் எனக்கு ரொம்ப ரொம்ப உங்களை பிடிக்கும். "

     "ஒவ்வொரு நாளும் நீங்க வருவிங்க என்னை பார்க்காமல் உங்களால் இருக்க முடியாது என்று இவ்வளவு நாளும் இருந்தேன். "

     "ஆனால் இவ்வளவு நேரம் நான் உங்க முன்னாள் இருந்தும் ஒரு முறை கூட நீங்க என்னை  பார்க்கவில்லை.  ஏன் அத்தான் நான் என்ன தப்பு பண்ணேன்."  

     "நீ தப்பு பண்ணா என்ன?.. உங்க அப்பா பண்ணா என்ன?...   எல்லாம் எதுக்கு சொத்துக்காகத்தானே உங்க அப்பா அப்படி செய்தார். "

   "அய்யோ... அத்தான் அப்பா அப்படிப்பட்டவர் இல்லை அத்தான் அவருக்கு அப்படி எல்லாம் யோசிக்கக்கூட தெரியாது.  யாரே அவருக்கு உங்களை பத்தி தப்பு தப்பா சொல்லுயிருக்காங்க அதை கேட்டுட்டு வந்து அப்படியே அத்தைக்கிட்ட சொல்லி இருக்காரு அத்தை ஆரம்பத்தில் அப்பாவை திட்டி இருக்காங்க."

   "ஆனால் அதையே வேலைக்காரங்க பேசிட்டு இருக்கும் போது கேட்டுத்தான் அப்பா சொல்லுறதை நம்பியிருக்காங்க ஆனால் அப்பா குணம் உங்களுக்கு நல்லா தெரியும் இல்லையா அத்தான் அவரைப்போய் சொத்துக்காக இப்படி செய்தார் என்று சொல்லுறீங்களே  அத்தான்" என்றாள். 

    "ஆக நீங்க எல்லாரும் நல்லவங்க நான் மட்டும் தான் கெட்டவன் கொலைகாரன் இல்லையா?... "

    "அய்யோ... அத்தான் ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க.  என் அத்தானுக்கு இப்படி எல்லாம் பேசத்தெரியாது.   எல்லார்கிட்டேயும் அன்பு காட்ட மட்டும் தான் தெரியும்.  ஏன் இப்படி மாறிப்போனீங்க." 

    "நானா மாறலை என்ன மாத்திட்டாங்க.  எல்லாரும் வேனும் நினைச்ச என்னை பிரிச்சு அனாதையாகிட்டு நீங்க எல்லாம் சந்தோஷமாகத்தானே இருந்திங்க." 

   "இல்லை அத்தான் இல்லை யாரும் சந்தோஷமாக இல்லை.  நீங்க எப்ப வீட்டை விட்டு போனீங்களே அப்ப இருந்து நாங்க யாரும் அப்பா அத்தைக்கிட்ட பேசுறது இல்லை.  மாமா கூட அவங்க ரெண்டு பேரு கிட்ட பேசறது இல்லை." 

    "எந்த பண்டிகை நல்ல நாள் எதுவுமே செய்யறது இல்லை.  ஏன் ஊர் திருவிழாவில் கூட மாமா கலந்து கொள்வது இல்லை.  நீங்க எப்ப திரும்ப வருவிங்களே அப்ப தான் எல்லாம் என்று சொல்லிட்டார்." 

    "எல்லோரும் ஒரே வீட்டில் இருந்தாலும் எந்த சந்தோஷமும் இல்லாமல் வாழ்ந்துட்டு இருக்கோம் அத்தான்." 


    "இதுக்கு மேலேயும் மாமாவை கஷ்டப்பட வைக்க வேண்டாம் அத்தான்..   தலைநிமிர்ந்து வாழ்ந்திட்டு இருந்தவர் நீங்க போனப்பிறகு தலைகுனிந்து நடக்கிற மாதிரி இந்த ஊர்க்காரங்க பேசிட்டாங்க அதனால் பஞ்சாயத்து பண்ணக்கூட போகறதை விட்டுட்டார்."  என்ற போது அவன் உடல் இறுகியது  கை முஷ்டியை அங்கிருந்த மரத்தில் குத்தினான். 

    அதை கண்டவள்  "அத்தான்" என்று அவன் கையை பிடிக்கப்போக அவனே அவளை மறுகையால் அவளை அருகில் வராமல் தடுத்துக்கொண்டே மீண்டும் மீண்டும் மரத்தில் குத்தினான். 

   மரத்தில் குத்தியதில் அவன் விரல்களில் ரத்தம் வந்தது. 

   "அய்யோ.... அத்தான் என்ன பண்ணுறீங்க கையில் ரத்தம் வருது" என்று கலங்கிய குரலில் சொன்னவள் தன் பலத்தை எல்லாம் திரட்டி அவன் பற்றியிருந்த கையை விலக்கி அவன் மரத்தில் குத்திக்கொண்டு இருந்த கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு தன் மீது போட்டு இருந்த துப்பட்டா முனையை எடுத்து ரத்தத்தை துடைத்தாள். 

    " யாரு அப்பாவை தப்பா பேசினது?..." என்று கேட்டான். 

    கயல்விழி அமைதியாக இருக்க 

   "ஏய் உன்னைத்தாண்டி யாரு அப்பாவை தப்பா பேசினது?..." 

   "தெரிஞ்சா என்னச்செய்யப்போறீங்க?...." 

    "அது உனக்கு எதுக்கு யாரு பேசினது என்று மட்டும் சொல்லு மத்ததை நான் பார்த்துக்கிறேன்" என்றான். 

  " நீங்க எதுவும் பார்க்க வேண்டாம் எல்லாம் என் அண்ணன் பார்த்திட்டான்" என்றாள். 


   " யாரு இளவரசனா?.. " என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.  ஏனெனில் அவன் அமைதியானவன் தேவைக்கு மட்டுமே பேசுபவன் சரவணன் வயது தான் அவனுக்கு பள்ளியில் படிக்கும் போதும் அவனுக்கு நண்பன் என்று யாரும் இல்லை. 

    இவர்களிடமே தேவைக்கு அதிகமாக பேசமாட்டான் அவன் போய் எல்லாம் பார்த்திட்டான் என்றால் நம்ப முடியாமல் கேட்டு இருந்தான். 

    "அவனே தான் இப்ப அவனை பார்த்தா நீங்களே ஆச்சரியப்படுவீங்க அந்தளவுக்கு மாறிட்டான்."  
    
   "என்னடி சொல்லுற அரசுவா? எப்படி?...." 

    "நீங்க தான் காரணம்" என்றாள். 

   "நானா நான் என்னடி பண்ணேன்?.." என்றான். 

    "நீங்க ஊரை விட்டு போயிட்டிங்க என்று தெரிந்ததும் அத்தை அப்பாவை திட்டிட்டு அத்தையை விசாரிச்சான்." 

   " அத்தை வேலைக்காரங்க பேசினதை கேட்டதாக சொல்லவும் அந்த வேலைக்காரர்களை கூப்பிட்டு மிரட்டி விசாரித்ததில் அந்த வடிவேலுவும் ஏழுமலையும் தான் அப்படி அத்தை காதுல விழும்படி அடிக்கடி பேச சொல்லி பணம் கொடுத்ததாக சொன்னாங்க."

  " மாமாகிட்ட சொல்லி அவங்களை வேலையை விட்டு அனுப்பச்சொல்லிட்டு அப்பாகிட்டே விசாரிச்சதில் அப்பாவும் அந்த வடிவேலு ஏழுமலை இன்னும் இரண்டு மூன்று பேர் அடிக்கடி அப்பா காதுபடவே பேசி இருக்காங்க.  சிலர் அப்பாகிட்ட உன் தங்கச்சி பையனை பத்தி கேள்வி பட்டது எல்லாம் உண்மையா என்று கேட்டு இருக்காங்க." 

     "அதை தான் அத்தைக்கிட்ட அப்பா வந்து சொல்லி இருக்கார்." 

   " எல்லாரையும் விசாரித்ததில் வடிவேலு ஏழுமலையைத்தான் எல்லோரும் கை காட்டி இருக்காங்க. அண்ணன் சரவணன் மாமாவும் அவங்க பிரண்ட்ஸ்  எல்லாரும் போய் அவங்க ரெண்டு பேரை அடித்து உதைத்ததில் அந்த கருப்பசாமி தான் மாமா பஞ்சாயத்தில் அவருக்கு தண்டனை கொடுத்து அசிங்கப்படுத்தியதற்கு பழிவாங்கத்தான் உங்க பேரை கெடுக்க பணம் கொடுத்து அப்படி பேச வச்சான் என்று சொன்னதும்" 

   " எல்லாரும் வீடு புகுந்து அவனை அடித்து கை காலை உடைத்து விட்டாங்க அவன் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வர மூன்று மாசம் ஆச்சு வீடு வந்து ஆறு மாசம் படுக்கையில் தான் இருந்தான்." 

  " அவன் கூட இந்த ஊர்க்காரங்க யாரும் பேசறதும் இல்லை அவங்க நிலத்தில் வீட்டில் என்று வேலைக்கு யாரும் போகலை அதனால் அசிங்கப்பட்டு எல்லாத்தையும் வித்துட்டு ஊரை விட்டே போயிட்டான்"  என்றாள். 

  " ஓஓ...   இதை ஏன் சொல்லலை" என்று அவன் முனுமுனுத்தது அவள் காதில் விழுந்தது. 

   " யாரு அத்தான் சொல்லலை?..." என்றாள் புரியாமல் 

   " ஆங்.... அது..."  என்றவன்" முரளி தான் இரயிலில் வரும் போது பேசிட்டு வந்தோம் அப்ப இதை எதுவும் சொல்லலை என்று சொன்னேன் என்றான்.. "

  " ஓஓ.. முரளி அண்ணா மறந்து இருப்பாரு" என்றாள். 

    "அத்தான் இப்பதான் நம்ப வீட்டு ஆளுங்க மேல் எந்த தப்பும் இல்லை இல்லையா வாங்க நம்ப வீட்டுக்கு போகலாம்" என்றாள். 

    அவளை முறைத்து விட்டு திரும்பி எங்கே பார்த்துக்கொண்டு" என்ன தப்பு இல்லை யாரு என்ன பேசினாலும் அதை நம்பி விசாரிக்காமல் தண்டனை குடுத்தாங்களே நம்ப பிள்ளை தப்பு செய்வானா?.. என்று ஒரு முறையாவது சிந்தித்து இருந்தா இப்படி ஒரு கொலைகாரனா ஆகியிருக்கமாட்டேன்.  இல்லை  அடுத்து என்ன என்று கூட தெரியாமல் அனாதையாக இரயில் நிலையத்தில் நின்னு இருக்கமாட்டேன்.  முரளி மட்டும் என்னை பார்க்கலை என்றால் வேறு எதாவது ஊருக்கு போய் கூலி வேலை செய்து இருப்பேன் இல்லை என்றால் மீண்டும் திருட்டு வேலை செய்து இருப்பேன் இப்படி என் வாழ்க்கையே மாற்றிவிட்டது எது அவங்க நம்பாதது தானே அப்படிபட்டவங்க கூட வந்து இருக்கனுமா?..." அதுவரை எங்கே பார்த்து பேசிக்கொண்டு இருந்தவன் கடைசி வார்த்தையில் அவளை பார்த்தான். 

    அவள் கண்களில் நீர் வழிய அவனை பார்த்து கொண்டு இருந்தவள் கார்த்தி தன் பக்கம் திரும்பியது தாவிச்சென்று அணைத்துக்கொண்டாள். 

     அவன் அப்போதும் அவளை அனைத்து ஆறுதல்படுத்தாமல் அமைதியாக நின்று இருந்தான். அழுகையுடனே  "சாரி அத்தான் சாரி அத்தான்" என்று கூறி மேலும் மேலும் அவனை இறுக்கி அணைத்தாள். 

   அவளின் அணைப்பு அவனை என்னவோ செய்ய அவளை விலக்க மனம் நினைத்தாலும் கைகளே அவளை இன்னும் இன்னும் தனக்குள் இறுக்கிக்கொள்ள துடித்தன அதனாலேயே கைகளை பின்புறம் கோர்த்துக்கொண்டு இறுகி நின்று இருந்தான் ஒரு கட்டத்தில் அவளின் அணைப்பு உடலில் மாற்றங்களை செய்ய அய்யோ இவள் இப்படி ஒட்டிட்டு இருந்தா எப்படி  கண்ட்ரோலா இருப்பது என்று நினைத்தவன் கோபத்தை வரவைத்து கொண்டு

     "ஏய் யாருடி உனக்கு அத்தான்" என்று திரும்ப ஆரம்பித்தான் கார்த்திக்கேயன். 

    அவன் மார்பில் முகம் புதைத்து இருந்தவளே  "நீங்க தான் என் அத்தான்." 

   "நான் உனக்கு அத்தான் இல்லை அந்த சரவணன் தான் உனக்கு அத்தான்" என்றான். 

    "சரவணன் மாமா நீங்க தான் அத்தான்" என்றாள் கயல்விழி. 

  " உன் அத்தை பெற்றது அவனைத்தான் அவன் தான் உனக்கு அத்தான்" என்று பல்கடித்து கொண்டு கூறினான். 

  " அவர் அத்தை பெற்றவராக இருந்தாலும் அவர் எனக்கு மாமா தான் நீங்க தான் நீங்க மட்டும் தான் எனக்கு அத்தான் அதையும் நீங்க தான் எனக்கு சொன்னீங்க அத்தான்."   

    "ஏய் அது சின்ன வயதில் தெரியாமல் சொன்னது அப்ப தெரியாது அவங்க என் அம்மா இல்லை சித்தி என்று" கரகரப்பான குரலில் கூறினான். 


Leave a comment


Comments


Related Post