இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -34 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 15-05-2024

Total Views: 24245

இரண்டு நாட்கள் சென்று விட்டது,  இந்த இரண்டு நாளுமே யுகி, ஷாலினி நிலா மூவரும் காரை எடுத்துக் கொண்டு ஊரை சுத்தி வந்தனர். வளவன் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ஷாலினி சொல்லிக் கொண்டே இருந்தாள்.

என்ன செய்வது அவனோ தொடங்க இருக்கும் கம்பெனிக்கான வேலையில் மும்முரமாக இருந்தான். அதனால் இவர்களுடன் செல்ல முடியாமல் போக, அது ஒரு குறையாக ஷாலினியின் மனதில் பதிந்துவிட்டது. அதை தவிர மற்ற எந்த குறையும் இல்லை மூவரும் கோயம்பத்தூரையே கலக்கிவிட்டு வந்தனர்.

பெங்களூரில் இருந்து வர வேண்டிய பொருட்கள் அனைத்தும் வந்துவிட, நேர்முக தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தாள் நிலா.

“அம்மு பைல் எல்லாத்தையும் எடுத்தி வெச்சியா?”

“வெச்சிட்டேன்ம்மா”

“சரி இந்தா சாப்பிட்டு போ”

“அம்மா இப்போவே 8.30 ஆகிடுச்சு இங்க இருந்து காந்திபுறம் பஸ்டாண்ட் போகணும். டைம் ஆகிடும்மா 10 மணிக்கு எனக்கு இன்டெர்வியூ, இன்டெர்வியூவுக்கே உன்னால நேரமா வர முடியலையே நீயலாம் எப்படி கம்பெனிக்கு நேரமா வருவன்னு வேலைக் கூட கொடுக்க மாட்டாங்கம்மா.” என்று மூச்சு வாங்க பேச அதற்குள் ஊட்டியே விட்டுவிட்டார் ராஜி.

“பேசற நேரத்துல இன்னும் ரெண்டு இட்லி சேர்த்து சாப்பிட்டுருக்கலாம்.” என்றவாறு உள்ளேப் போனவர் சாப்பாட்டு டப்பாவுடன் வந்தார்.

“அம்மா மதியத்துக்கு வீட்டுக்கு வந்துருவேன்.”

“நீ வர நேரம் எனக்கு தெரியாதா? எப்படியும் மூனு மணி நாலுமணி பண்ணிடுவ.”

“அதுக்குன்னு டப்பாவோட சுத்த சொல்றியா? போம்மா.”

“எடுத்துட்டு போறதா இருந்தா போ, இல்லனா வீட்டுலயே இரு.”

“நீ இருக்கியே உன்னய வெச்சிட்டு ஒன்னும் பண்ண முடியாது கொடு.” என்று அவரிடம் வெடுக்கென்று புடுங்க ராஜி சிரித்துக் கொண்டார்.

“அம்மு நேத்தே உன்னோட எல்எல்ஆர் டேட் முடிஞ்சிதே ரெனிவல் பண்ணனும்ன்னு சொன்னேன்ல..”

“அண்ணா அட்ரஸ் மாத்திட்டு அப்படியே ரெனிவல் பண்ணிக்கறேன். ஒவ்வொன்னுக்கும் தனி தனியா அலைய முடியாது. எப்படியும் இனி இங்க தானே லைசென்ஸ் எடுக்கப் போறேன்.”

“சீக்கிரம் பண்ணு அம்மு அப்புறம் எங்கையாவது மாட்டிக்காத. லைசென்ஸ் இல்லாம அவ்வளவு தூரம் போறது சரியில்ல கம்முனு பஸ் புடிச்சிப் போ.“

“ஜென்ஸை தான் புடிப்பாங்க லேடிஸை பெருசா புடிக்க மாட்டாங்க, நான் பார்க்கறேன்.” என்று நிற்காமல் சொல்லிக்கொண்டே போனவள் வண்டியை எடுத்துவிட்டு, “போய்ட்டு வரேன்” என்றாள்.

“ம்ம் ட்ராபிக்ல பார்த்து ஓட்டு, அக்கம் பக்கத்துல வரவீங்க உயிர் ரொம்ப முக்கியம்.” என்று ராஜி சொல்ல.

“அப்போ எனக்கு என்ன ஆனாலும் பராவாயில்லையா..?”

“நீ ஒழுங்கா ஓட்டுனா யாருக்குமே எதும் ஆகாதுல, அதை சொன்னேன்.” என்று சொல்ல ராஜிக்கு பழிப்புக் காட்டிவிட்டு வண்டியை எடுத்தாள்.

அங்கிருந்து அரைமணி நேரப் பயணம் தான் அதையே ஒருமணி நேரமாகச் சென்றாள் நிலா.

வண்டியில் போக வேண்டாம் என்றாலும் கேக்க மாட்டாள். அவளுக்காகவே நேரமாக கிளப்பி விட்டுவிடுவார் ராஜி.

யுகி உடன் வருகிறேன் என்று சொன்னதற்கும் வேண்டாம் என வீர வசனம் பேசிவிட்டு தான் வந்திருந்தாள்.

நேர்முக தேர்விற்குச் சென்றவள் அந்த கம்பெனியில் ஏதோ விழா ஒன்று நடக்க, அதற்கு விருந்தினராக நந்தனை அழைத்திருந்தனர்.

அவன் வருகிறான் என்று தெரிந்திருந்தால் வேலையாவது ஒன்றாவது என விட்டு ஓடியிருப்பாள் நிலா. இப்போது இவ்வளவு தூரம் வந்துவிட்டாள். நேர்முக தேர்வில் கலந்து கொள்ளாமல் திரும்பியும் போக முடியாது.

நந்தன் வண்டியின் மீது சாய்ந்தவாறு கம்பெனி முதலாளியிடம் பேசிக் கொண்டிருக்க, ஸ்கூட்டியை உள்ளே விட்ட நிலாவின் கண்களில் முதலில் பட்டது என்னவோ நந்தன் தான்,

அவனைப் பார்த்ததும் வண்டி கிறுக்க ஆரம்பிக்க, நேராக அவன் மீதே சென்று விட்டாள்.



Leave a comment


Comments 2

  • F Fajeeha Fathima
  • 1 month ago

    இன்னைக்கு எபி வந்ததுலே நான் செம்ம ஹேப்பி அக்கா... போச்சு அய்யோ நிலா உனக்கு எங்கே போனாலும் பிரச்சினையா வருதே

  • F Fajeeha Fathima
  • 1 month ago

    இன்னைக்கு எபி வந்ததுலே நான் செம்ம ஹேப்பி அக்கா... போச்சு அய்யோ நிலா உனக்கு எங்கே போனாலும் பிரச்சினையா வருதே


    Related Post