இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம் -07 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 15-05-2024

Total Views: 16554

இதரம் -07


திரு அழைத்ததும் வைஷாலி எதற்கு என்று புரியாமல் திகைக்க அதனை வைஷ்ணவி கேட்டேவிட்டார். 


"இப்ப எதுக்கு திரு வைஷுவை கூப்பிடுற.? இன்னும் என்ன பாக்கி இருக்கு அவளை ஹர்ட் பண்ண?" என்று எரிச்சலுடன் கேட்க, மல்லி அங்கிருந்து சென்று விட்டாள் ஆதங்கத்துடன் 


திரு இடது புருவத்தை கீறிக் கொண்டவன்," சித்தி ம்ம்ம் ஊஃப்...!"என்று பெருமூச்செறிந்தபடி," ஹாஸ்பிடல்ல சில டாக்குமென்ட் சைன் பண்ண வேண்டி இருக்கு. அதோட இவங்க ரிலீவ் ஆகறாங்க இனி ஜெஆர்எம் ஹாஸ்பிடலுக்கும் மிஸ். வைஷாலி சாந்தகுமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு அனவுன்ஸ் பண்ணனும்"என்றான் விளக்கமாக. 


வைஷூவோ," திரு திஸ் இஸ் நாட் ஃபேர்!" என்றாள் தன்னையும் மீறி 


திருவின் பார்வை அவளில் ஆழ்ந்து படிய, சட்டென தலைகுனிந்து கொண்டாள். 


ஜெகதீஸ்வரி," திரு இப்போ இதை பேசணுமா... அவளே உடம்பு முடியாம..." எனும் போதே," மாம் இப்போ தானே சொன்னாங்க அவங்க ஓகேன்னு. அஸ் எ டாக்டரா அவங்களுக்கே அவங்க ஹெல்த் பத்தி தெரிஞ்சிருக்கும் போது நீங்க ஏன் வொர்ரி பண்றீங்க? இது ஜஸ்ட் ஒரு அனவுன்ஸ்மென்ட் தான் வேணுன்னா அவங்க மேல அக்கறை உள்ள யார் வேண்டுமானாலும் கூட வரலாம். எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை." என்றான் அசட்டையாக 



"நோ திரு,வைஷாலி தான் அங்க இனிமேலும் அட்மினிஸ்ட்ரேட் பண்ணுவா" என்று ஜெகா அமர்த்தலாக சொல்ல 


"வெல் அதை சொல்ற உரிமை உங்களுக்கு கூட கிடையாது."என்றவன்," பாட்டி நான் சரியா தானே சொல்றேன். ஹாஸ்பிடலுக்காக இடம் வாங்கும்போதே என் பேரில் தான் வாங்கினீங்க, அன்ட் ஹாஸ்பிடலும் என்னோடது தான். அங்கே முடிவெடுக்கிற உரிமையை நான் யாருக்கும் தரவில்லை. ஈவன் மை பேரண்ட்ஸ் ஆல்ஸோ" என்று கூற ஜெகதீஸ்வரியே ஒரு கணம் ஆடிப்போனார் அவனது பதிலில். 


"நீ முன்ன மாதிரி இல்ல திரு. எப்போ இருந்து இப்படி மாறின நீ? எங்க கன்செர்ன் இல்லாம இதுவரைக்கும் எதுவும் செஞ்சதில்லையே ?"என்று ஆதங்கமாய் இளமாறனும் கேட்க 


"அந்த திரு எல்லாம் மாறிட்டான் அண்ணா. இல்லாட்டி அவனுடைய லட்சியத்திற்கு உதவி செய்த என் பேச்சை மீறி நடந்திருப்பானா?" என ஜெயராஜும் தன் பங்கிற்கு பேச 


"எல்லாரும் மாறும்போது நானும் மாறுவதில் தப்பில்லையே?" என்க


"அதெப்படி திரு. நீங்க செஞ்ச தவறுக்காக கொஞ்சமும் வருத்தப்படாமல் இருக்கீங்க. கல்யாண மேடை வரைக்கும் வந்த என்னை ஏமாத்திட்டு, இப்போ நான் தெய்வமா மதிக்கிற இடத்தில் இருந்தும் வெளியே போக சொல்றீங்க.?" என வைஷாலி கண்ணீரோடு கேட்க


"மிஸ்.வைஷாலி நடந்த விஷயங்களில் ஹர்ட் ஆகி நீங்களே விலகி இருக்கணும்.பட் நீங்க அதை செய்யலை. அதனால தான் நானே முன்நின்று செய்ய வேண்டிய நிலை"என்றான். 


வைஷாலி அங்கேயே விசும்பி அழுதுவிட, வைஷ்ணவியோ," இதுக்கு தான் அக்கா இங்க இவ வேண்டாம்'னு சொன்னேன். என் அண்ணன் பொண்ணு வாழ வேண்டிய இடத்தில் வேறொருத்தி வந்து இருக்கா. அதையும் இவ பார்க்கணும்னு தலையெழுத்தா சொல்லுங்க. உங்க பிடிவாதத்தில் தான் இப்ப வந்தது. ஆனா இங்க என்ன நடக்குது பாருங்க" என ஆதங்கப்பட ஜெகதீஸ்வரிக்கு மனதே உருகிவிட்டது. 


"திரு இப்போதைக்கு இந்த பேச்சு வேண்டாம். இதை விடு அம்மாவுக்காக" என்று கூறவும் திருமாறன் ஜீவரெத்தினத்தை பார்த்தான். 


"அம்மா சொல்றதைக் கேளு திரு" என்று ஜீவரெத்தினமும் சொல்லிவிட 


"பாட்டி!" என்றவன் வேறெதுவும் பேசாமல் உள்ளே செல்லப் போக,ஜெகா அவனைத் தடுத்தார். 



"உன் பொண்டாட்டியை செக்கப் கூட்டிட்டு போகணும் திரு. ஸ்கேன் பண்ணி குழந்தை எப்படி இருக்குன்னு பார்க்கணும். சும்மா டாக்டர் வந்து கிட் வச்சு ரிசல்ட் சொன்னதெல்லாம் கணக்கில் வச்சுக்க முடியாது "என்று கூற


"என் மனைவியை நான் பார்த்துக்கிறேன் நீங்க அதைப் பத்தி கவலைப்பட வேண்டாம்."என்று திருவும் பதிலுக்கு சொல்ல 


"அதெப்படி நாங்க கவலைப்படாம இருக்க முடியும். ஜெஆர்எம் பேலஸின் முதல் வாரிசு ஆச்சே. வந்த விதம், இடம் தப்பா இருந்தாலும் என் மகனோட வாரிசு இல்லையா...?" என்று குத்தலாக சொல்லிவிட 


திருவோ அதை கணக்கில் எடுக்காமல்,"  ஃபைவ் மந்த்ஸ்ல தான் ஸ்கேன் எடுப்போம்."என்று போய்விட்டான். 


மல்லி பதற்றத்துடன் அறைக்குள் கையை பிசைந்தபடி நின்றிருக்க, கதவை படாரென்று அடித்து சாத்தினான் திருமாறன். 


திடுக்கிட்டு அவனைப் பார்க்க," ஹாப்பியா?" என்றான் கோபத்துடன். 


**********


"இப்ப என்ன செய்றது அங்கிள்?" வைஷாலி கோபத்துடன் ஜெயராஜிடம் கேட்க 


"எதுவும் செய்ய வேண்டாம் எல்லாம் ஜெகதீஸ்வரி அண்ணி பார்த்துப்பாங்க" என்று சொல்லிய ஜெயராஜின் முகத்தில் ஆயிரம் காரியங்களை ஒரே நிமிடத்தில் சாதித்த பாவனை. 


"எனக்கு நம்பிக்கையே இல்ல அங்கிள்." என்றாள் அப்போதும் தனக்கு போதாமல் 


"ச்சில் வைஷு. ஹாஸ்பிடல் அன்ட் திருமாறன் இரண்டுமே உன் உரிமையாகுற நாள் வெகுதூரத்தில் இல்லை." என்றார் நம்பிக்கையாக. 


"திரு நடந்துக்கிற விதம் அப்படி சொல்லலை அங்கிள்." என அவள் மறுதலிக்க 



"ஆனா ஜெகா அண்ணியோட நடவடிக்கை அந்த நம்பிக்கையை எனக்குத் தருது. அப்புறம் நம்ம ஹாஸ்பிடல் கைனகாலஜிஸ்ட் நேத்ரா தானே?!" என்று கேட்க 


"எஸ் அங்கிள்." என்றவள் ஏனென்று வினவ," நத்திங் ஒரு சின்ன வொர்க் செய்ய சொல்லலாம்." என்றார் குரூர புன்னகையுடன். 


அவரது புன்னகை எதையோ உணர்த்த, வைஷுவின் முகத்தில் திருப்தி தென்பட்டது. 


மறுநாள் காலையில் மொத்த குடும்பமும் வழக்கம் போல உணவு மேசையில் இருக்க,


 திரு அறிவிப்பாக,' மல்லியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன்' என்றதும் ஜீவரெத்தினம் தானும், ரகுவும் அழைத்து வருவதாக சொல்ல சரியென சம்மதித்தான் திரு. 



"ஏன் பாட்டி அவர் வொய்ஃப் அவர் கூட்டிட்டுப் போகட்டும். ஏன் ரகு அழைச்சுட்டுப் போகணும்?" என்று கடுகடுத்த நயனியிடம் 


"ரகு மந்த்லி செக்கப்பிற்காக என்னை இன்றைக்கு அழைச்சுட்டுப் போறான். அதனால மல்லியை என் கூட நான் கூட்டிட்டுப் போறேன். இப்போ உன் புருஷன் என் கூட செக்கப் வரணுமா வேண்டாமா?" என்று கேட்கவும் 


"அச்சோ பாட்டி நான் அப்படி சொல்ல வரலை. ஏன்னு தான் கேட்டேன். நீங்க போயிட்டு வாங்க" என்று படபடப்பாக கூற ஜீவரெத்தினம் அமைதிகாத்தார். 


"மல்லி ரெடியாகு. பத்து மணிக்கு போறோம்." என்றார் அவளிடத்தில். 


"சரிங்க பாட்டி." என்றவள் உணவை பரிமாற 


"வைஷுவுக்கு ஆப்பிள் ஜூஸ் போட்டு வா மல்லி" என ஜெகதீஸ்வரி சொல்லவும், திரு அவளை அழைக்கவும் சரியாக இருந்தது. 

'யார் பக்கம் செல்வது?' என்று புரியாமல் அவள் விழிக்க, 


இளமாறனோ," நீ போம்மா, செஞ்சு கொண்டு வருவா." என அனுப்பி வைத்தார். 


ரகுவோ,"ம்மா நயனியை போட சொல்லுங்களேன், நல்லா ஜூஸ் போடுவா!" என்று சொல்ல அவளுக்கோ கட்டுக்கடங்காத கோபம் வந்தது. 


"ஏய் ரகு என்ன நீ நயனிகாவை போட சொல்ற?" என்று  ஜெகா அதட்ட 

"அப்போ மல்லி அண்ணியை மட்டும் போட சொல்லலாம் இல்லையா பெரியம்மா?" என்று அமர்த்தலாய் கேட்டு வைத்த அர்ணவ் எழுந்து சென்று விட்டான். 


சட்டென்று முகம் மாறிப் போனது ஜெகதீஸ்வரிக்கு. 


"அர்ணவ் என்ன பேச்சு இது?"என்று வைஷ்ணவி சத்தமிடவே ,"நத்திங் மாம் மைன்ட்ல ஸ்ட்ரைக் ஆச்சு கேட்டேன். ஈவன் ரெண்டு பேரும் இந்த வீட்டு டாட்டர் இன்லாஸ் தானே. ஸோ ஜஸ்ட் ஆஸ்கிங் மாம்."என்றவன்," பாட்டி ஆபிஸ் போயிட்டு வர்றேன்." என்று சொல்ல அவர் தலையசைத்தார். 


**********

மனதில் அத்தனை சஞ்சலம் மல்லிக்கு. பேசாமல் உண்மையைக் கூறி விடுவோமா என்று எண்ண, தற்போதைய சூழ்நிலை வேறு அவளை சொல்ல வேண்டாம் என்று சிந்திக்க வைத்தது. 


அதனை யோசித்தபடி வந்தவள் ன, திரு நிற்பதை உணராமல் அவன் மீதே மோதிவிட்டாள். 


"உன் கவனம் எங்க இருக்கு?" என்று அதட்டியவன், அவளைத் தள்ளி நிறுத்த ,"மன்னிச்சிடுங்க டாக்டர்"என்றாள். 


"அப்படி என்ன திங்கிங். ஹ்ம்ம் ஹாஸ்பிடல் போனா நம்ம பொய் பித்தலாட்டம் வெளியே வந்திடுமோன்னு பயப்படுறியா?" என்று ஏளனத்துடன் கேட்க 


மல்லி அமைதியாக நின்றாள். 



"டிஸ்கஸ்டிங்!"என்றவன் அங்கிருந்து வெளியேறி விட்டான். 



மருத்துவமனைக்குச் சென்றவன், மல்லியின் வருகைக்காக காத்திருக்க வந்ததென்னவோ,' வரும் வழியில் ரகுவின் வாகனம் விபத்திற்கு உள்ளான செய்தி தான்.' 


தேவமல்லி நெற்றியில் காயத்துடன் மயக்கத்தில் இருக்க, அவளின் கால்களுக்கிடையில் செந்நிற குருதி தெரிந்தது ஆடையில் கறையாக. 

......தொடரும். 


Leave a comment


Comments


Related Post