இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 36 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 16-05-2024

Total Views: 19671

செந்தூரா 36



“ஹனி” என்று கண்களில் பளபளப்புடன் பார்த்தான். அதற்கு மேல் பேசமுடியாமல் உணர்வுகளின் தாக்கத்தில் தடுமாறினான். கைகள் மட்டும் அவள் வயிற்றை தடவிக் கொண்டே இருந்தது.


“என்னை மன்னிச்சிடு மாமா, என்னால உன் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது நீ நல்லா இருக்கணும்னு நினைச்சு தனியா வாழலாம்னு யோசித்து நமக்கு கல்யாணம் நடந்த பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு தான் முதலில் வந்தேன். அங்கேயே கோவில்ல சாப்பிட்டுகிட்டு, சத்திரத்தில் படுத்துகிட்டேன். அங்கே இருந்த அர்ச்சகர் என்னை பார்த்து விசாரிச்சாரு. “உன்னை பார்த்தால் ஏதோ பெரிய இடத்து பொண்ணு போல இருக்க. வயசு பொண்ணு கண்ட இடத்தில் இருக்க கூடாது. நீ பேசமால் கோயில்ல கணக்கு வழக்கு பார்த்துக்கிட்டு அங்கேயே இருக்கும் அறையில் தங்கிக்க” என்று சொன்னார்.


நானும் அவர்சொன்னபடி வேலை பார்த்திட்டு இருந்தேன். உன்னை பிரிஞ்சு என்னால இருக்கவே முடியலை மாமா, நீ எனக்கு இங்கே தானே தாலி கட்டின அந்த நாளை நினைச்சுக்கிட்டே காலம் தள்ளினேன். இதுல என்னோட மாதாந்திர தேதி தள்ளி போனதை கவனிக்காமல் விட்டு விட்டேன். அப்புறம் நான் மயங்கி விழவும் தான் தெரிஞ்சது. உன்னை பார்க்கணும்னு தோணுச்சு. மறுபடியும் சுயநலமா யோசித்து உன் உயிருக்கு ஆபத்து வரக்கூடாதுனு என்னை நானே கட்டுப்படுத்திக்கிட்டேன்.


பிரசவநாள் நெருங்க நெருங்க, எனக்கு பயமாவும் உன் நினைப்பாவும் இருந்தது. அதுல இரத்த அழுத்தம் அதிகமாகி மயங்கிட்டேன். என்னை இந்த மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தாங்க. இரத்த அழுத்தம் அதிகமாகிட்டே இருந்ததால உடனே ஆப்ரேஷன் செய்து குழந்தையை எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. அதுக்கு என் குழந்தையோட அப்பா கையெழுத்து போடணும்னு சொன்னாங்க. உனக்கு தெரியாமல் தான் குழந்தையை பெத்துக்கலாம்னு நினைச்சிருந்தேன். ஆனால் உன் குழந்தைக்கு யாரோ கையெழுத்து போடறது எனக்கு பிடிக்கல. என்ன ஆனாலும் சரினு தான் உனக்கு போன் செய்து கூப்பிட்டேன்.


உன் கிட்ட பேசினதும் என்னோட இரத்த அழுத்தம் குறைஞ்சது. கொஞ்சம் கொஞ்சமா விட்டு விட்டு பிரசவவலி ஆரம்பிச்சது. அதனால் டாக்டர் கொஞ்ச நேரம் என்னை நடக்க சொல்லி இருந்தாங்க. அதுக்கு பிறகு இரத்த அழுத்தம் நார்மல் ஆயிட்டா இயற்கைமுறை பிரவசத்துக்கு முயற்சி செய்யலாம், இல்லைனா ஆப்ரேஷன் தான் செய்யணும்னு சொன்னாங்க” என்றாள்.


“எனக்கு தெரியாமலே என் குழந்தையை பெத்துக்க நினைச்சியாடி? நீ இல்லாமல் இந்த ஆறுமாசமும் எப்படி தவிச்சு போனேன் தெரியுமா? யாரோ உன்னை பேசினதுக்கு, தண்டனை எனக்கு தருவியா நீ, போடி” என்று வலி மிகுந்த குரலில் சொல்லி விட்டு முறுக்கி கொண்டு முகம் திருப்பினான்.


கவின் இதையெல்லாம் பார்த்துவிட்டு சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தவன், செந்தூனின் குடும்பத்தாருக்கு நடந்ததை விவரித்துக் கொண்டிருந்தான்.


“மாமா” என்று அழைத்தாள், அவன் திரும்பவில்லை, “செந்தூரா” என்றாள் செல்லமாக, அவன் அசையவில்லை, “செவப்பா” என்று சொல்ல போனவளின் குரல் உச்சஸ்தாயில் வலியுடன் ஒலித்தது. சடாரென்று திரும்பினான்.


வயிற்றை பிடித்துக் கொண்டு அலறினாள். பற்களை கடித்து வலியை பொறுக்க முயன்றாள் முடியவில்லை, “வலிக்குது மாமா” என்று அழுதாள். அவளை அப்படியே தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான். அதைப் பார்த்து கவினும் போனை அனைத்துவிட்டு அவன் பின்னாடியே ஓடினான். டாக்டரும் பதறிப்போய் லேபர்வார்டுக்குள் அவளை கொண்டு வரச்சொன்னார்.


பரிசோதித்து பார்த்தவர், டெலிவரி ஆக இன்னும் அரைமணிநேரத்துக்கு மேல் ஆகும், கர்ப்பவாய் இன்னும் திறக்கவேஇல்லை. அதுக்குள்ளே இத்தனை ஆர்பாட்டமா? வலிக்குதுனு சொன்னால் தூக்கிட்டு ஓடி வருவீங்களா? பதறிபோய் வந்தேன், இப்போ எனக்கு தான் இரத்த அழுத்தம் கூடி போயிருக்கும்” என்று திட்டிவிட்டு வேறு நோயாளியை பார்க்க போய்விட்டார்.


செந்தூரன் தலையை கோதிக்கொண்டு நிற்பதை பார்க்க அந்த வலியிலும் தாரிகாவிற்கு சிரிப்பு வந்தது. “சிரிக்காதேடி, நீ கிடைச்சதும் உன்னை தூக்கிட்டு போய் அன்னைக்கு பண்ண போல கதற கதற செய்யணும்னு நினைச்சேன். ஆனால் என் பிள்ளை உன்னை காப்பாத்தியிருக்கு” என்றான் பற்களை கடித்துக் கொண்டு


அப்போதும் சிரிப்பு வந்தது, ஆனால் வலியில் அவளால் சிரிக்க முடியவில்லை. முகம் சுருக்கினாள், அவளின் வயிற்றை ஆதுரமாக தடவி விட்டவன், “செல்லகுட்டி அம்மாக்கு வலிக்காம வெளியே வந்துடுடா? இல்லைனா அப்பா உன் மேல கோவிச்சுப்பேன், சமத்தா சீக்கிரம் வந்துடுவியாம். உனக்கு சீக்கிரமே அப்பா இன்னொரு தங்கச்சி பாப்பா வாங்கி தருவேனாம்” என்றான் அவள் இடையில் செல்லமாக கிள்ளி


“ஓ முதல் பிரசவத்திலே இரண்டாவது பிரசவத்துக்கு பிளானிங்கா, பேஷ் பேஷ்” என்று சிரித்தபடி உள்ளே வந்த டாக்டர் தாரிகாவை பரிசோதிக்க தொடங்கினார். மேலும் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் தாரிகா ஆண்மகவை பெற்றெடுத்தாள். அங்கேயே நின்றிருந்த செந்தூரன் தன் மகனை ஆசையாக கையில் ஏந்திக் கொண்டு அவன் உச்சி முகர்ந்தான்.


அதேநேரம் ஒட்டுமொத்த குடும்பமும் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். ஆளாளுக்கு சண்டைப் போட்டுக் கொண்டு அவனிடமிருந்து குழந்தையை வாங்கினர். தாரிகாவை வார்டுக்கு மாற்றியதும் ஜானகி, அவளின் கையைப்பற்றிக் கொண்டு கதறி அழுதார். “என்னை மன்னிச்சுடு தாரா. நான் எவ்வளவு முட்டாளா நடந்துக்கிட்டேன். என்னால தானே நீ வீட்டை விட்டு போனே” என்றார் கலங்கிய விழிகளுடன்.


“நீங்க திட்டினதுக்காக நான் போகலை அத்தை. எனக்கே அப்படி தான் தோணுச்சு, என்னால மாமாவுக்கு எதுவும் ஆக கூடாதுனு தான் நான் வீட்டை விட்டு வந்துட்டேன். நீங்க வருத்தபடாதீங்க” என்றாள் தாரா.


அவள் தலையை ஆதரவாக தடவி ஆராத்யாவின் சூழ்ச்சி, ஜாதகத்தில் நடந்த குளறுபடி என அனைத்தையும் சொல்லி முடித்தார் ஜானகி.


“இப்போ தான் நிம்மதியாக இருக்கு அத்தை. அப்போ என்னால என் மாமா உயிருக்கு ஆபத்து இல்லை தானே” என்றாள் மீண்டும் உறுதிபடுத்திக் கொள்ளும் எண்ணத்தில்.


“நீ இல்லை என்றால் தான் உன் மாமா உயிருக்கு பிரச்சனை ஹனி” என்றான் செந்தூரன்.


தாரிகா காதலுடன் கணவனை பார்த்தபடி இருக்கவும், அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி மற்றவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.


தன் இருகைகளையும் விரித்து தன்னிடம் வரும்படி கண்களால் அழைத்தாள். அவன் அவளை நோக்கி குனியவும், “என் மேலே ஏன் மாமா உனக்கு இத்தனை காதல்? நான் ஆராத்யாவோட அழகு கம்மி தானே” என்றாள்


“இந்த மஜ்னுவோட லைலா நீதான்டி. என்னோட கண்களுக்கு நீ எப்பவும் பேரழகி தான். உன்னை நீ கண்ணாடியில் பார்த்ததே இல்லையாடி? யாரோ நீ அழகில்லைனு சொன்னால் அப்படியே நம்பிடுவியா? உனக்கும் உனக்குள் இருக்கும் எனக்கும் நீ அழகா தெரிஞ்சால் போதும். மத்தவங்களை பத்தி நமக்கென்ன கவலை” என்றான் அவள் நெற்றியில் முட்டி


அவள் அவனுடைய முகத்தை பற்றி நெற்றியில் முத்தமிட்டாள். அவனும் பதிலுக்கு அவள் நெற்றியில் இதழ் பதித்தான், அவன் கண்கள் நாசி, கன்னங்கள் என அவள் ஒவ்வொரு இடமாக தன் முத்திரையை பதிக்க, அவனும் பதில் முத்தம் வழங்கிக் கொண்டு இருந்தான். இப்போது சிரிப்புடன் அவன் இதழ்களை கவ்விக் கொண்டாள். அவள் இளைப்பாறும் வரை அவன் இதழ்களை அவளுக்கு வாடகைக்கு கொடுத்தவன் போல அமைதிகாத்தான். அவள் முடித்து மூச்சு வாங்கவும் மனைவி விட்டதை கணவன் தொடர்ந்தான். இதழ்களுக்குள் இதழ்கள் மாறி மாறி ஒன்றுக்குள் ஒன்றாக புதைந்துக் கொண்டன. மென்மையாக தொடங்கிய இதழ் முத்தம் வன்மையாக மாறிக் கொண்டு இருந்தது.


மனைவியின் இதழ்களை பிச்சி தின்ன ஆரம்பித்திருந்தான், அதே நேரம் மருத்துவர் உள்ளே நுழைய, “ஹலோ? என்ன மேன் பண்ணிட்டு இருக்க? இப்போ தான் பிரசவம் முடிஞ்சிருக்கு? அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டியா? ஒரு மூணு மாசம் இந்த பொண்ணுகிட்ட வரவே கூடாது தெரியும் இல்லை? இது வேலைக்காவாது… நர்ஸ் இந்த பொண்ணோட பெத்தவங்களை கூப்பிடு. கொஞ்சம் கூட ரெஸ்ட் கொடுக்கமாட்டியா?” என்று செந்தூரனை அதட்டினார்.


தன் ஹனியின் தேன்சுளை தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட கடுப்பில் இருந்தான் செந்தூரன். அவரை கோபமாக பார்த்து முறைத்தான். மருத்துவரோ “ச்சே கலிகாலம்” என்று தலையில் அடித்துக் கொண்டு வெளியேறினார்.


தாரிகா இருவரையும் பார்த்து சிரித்தாள். “சிரிக்காதேடி, பார்த்தே இல்லை, அந்தம்மா என்ன சொல்லிட்டு போகுதுனு. மூணுமாசம் பிரிஞ்சிருக்கணுமாம்? ஏற்கனேவே ஆறுமாசமா காணாமல் போய் இப்போ தான் கிடைச்சிருக்க. கல்யாணம் பண்ணி சம்சாரியா வாழ்ந்த காலத்தைவிட பிரம்மசாரியா வாழ்ந்த நாட்கள் தான்டி அதிகம்” என்றான் சலிப்போடு.


புரியாமல் புருவம் சுருக்கியவளிடம், “நம்ம கல்யாணத்துக்கு பிறகு என் மேல கோபத்தில நீ என்னைய கிட்டயே சேர்க்கலை. அதுக்கப்புறம் சேர்ந்தோம், வீட்டில பிரச்சனைனு, கோயம்பத்தூர் வந்தால் அங்கேயும் பிரச்சனை. சரி ஆபிஸ் வொர்க் முடிச்சிட்டு எங்காவது ஹனிமூன் போகலாம்னு நான் திட்டம் போட்டு வச்சிருந்தால் நீ பாண்டிச்சேரிக்கு தனிமூன் வந்திட்ட. வீடு மொத்தம் ஆட்கள் போதாதுனு இப்போ பிள்ளை வேற, நம்மை தனியாவே விடமாட்டாங்கடி” என்றான் அலுப்புடன்.


“இந்த மூணுமாசம் மட்டும் பொறுத்துக்க மாமா, அதுக்கப்புறம் ஒரு நாள் கூட மிஸ் ஆகாது” என்றாள் வெட்கத்துடன். “நிஜமாவா ஹனி” என்று மீண்டும் அவள் அருகில் வந்து நெற்றியில் இதழ் பதித்தான். வெளியில் இருந்து இதைப்பார்த்த டாக்டர், “அந்த தாரிகாவை நாளைக்கே டிஸ்சார்ஜ் செய்து அனுப்பிடுங்க. இல்லைனா அவன் இங்கேயே பெட்ரூம் ஆக்கிடுவான் போல” என்றவர் சாரதாவிடம் திரும்பி, “அவன் கிட்ட இருந்து உங்க பெண்ணை ஒரு மூணுமாசம் பிரிச்சு வைங்க, விட்டால் பாய்ந்துடுவான் போலிருக்கு” என்றார் கடுப்புடன். 


ஆறுமாதமாக பிரிந்திருந்த தவிப்பு அவனிடம் என்று உணர்ந்திருந்த அவன் குடும்பத்தினர் மருத்துவரின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புன்னகைத்தனர். அதன் பிறகு மொத்த குடும்பமும் தாரிகாவிற்கு பாதுகாப்பு அளித்த அர்ச்சகரை நேரில் சென்று சந்தித்து நன்றி கூறி விடைப்பெற்றனர்.


செந்தூரனின் வீடு விழாக்கோலம் பூண்டு இருந்தது,


அன்று அவன் குழந்தைக்கு பெயர்சூட்டு விழா. சொந்தபந்தங்கள் புடைசூழ குழந்தையை தொட்டிலில் கிடத்தி, “நேத்ரன்” என்று பெயர் சொல்லி அழைத்தனர். காயத்ரி கையில் ஒரு பெண் குழந்தையுடனும், வயிற்றில் இன்னொரு கருவையும் சுமந்தபடி வந்திருந்தாள்.


நேத்ரன் அத்தையை பார்த்து சிரித்தான். அதைப் பார்த்து வந்திருந்தவர்கள் சிரித்தனர். “ஆரம்பிச்சிட்டான்டா அப்பனை போலவே. முதல்ல அத்தையை கரெக்ட் பண்றது. அதுக்கப்புறம் அத்தை மகளை கரெக்ட் பண்றது. அப்பனுக்கும் பிள்ளைக்கும் இதே வேலை தான் போல” என்று சொல்லி சத்தமாக சிரித்தனர்.


அதைப்பார்த்து சிரித்தபடி தாரிகா கணவனை பார்த்தாள். அவனோ தாய்மையின் பூரிப்பில் பூத்து குலுங்கி கொண்டிருந்த மனைவியை ஆர்வமாக பார்த்தபடி நின்றிருந்தான். அவன் ஆர்வம் மோகப்பார்வையாக மாறியது, கண்களால் அவள் மேனியை நிறுத்தி நிதானமாக அளவெடுத்தான். கணவனின் பார்வை பட்ட இடமெல்லாம் அனலென கொதிக்க வெட்கத்தில் சிவந்த கன்னங்களை மறைக்கமுடியாமல் தவித்தாள்.


கண்களால் அங்கே இருந்த அறைக்குள் போகும்படி சொன்னான். அவள் முடியாது என்று மெல்ல தலையசைக்கவும் அழுத்தமாக அவளை பார்த்தான். அந்த பார்வையின் காந்த சக்தி அவளை அந்த அறைக்கு போக செய்தது. யாரும் பார்க்கிறார்களா? என்று தலையை கோதியபடி பார்த்தான். அனைவரும் நேத்ரனையே பார்த்துக் கொண்டிருக்க, மனைவி சென்ற அறைக்குள் சென்று அவசரமாக கதவை அடைத்தான்.


சுவற்றோடு அவளை சாய்த்து மொத்தமாக அவள் மேல் மோதி நின்றான். கழுத்துவளைவில் முகம் புதைத்தபடி, “ஹனி ஹனி” என்று தன் கைகைளையும் இதழ்களையும் அவள் மேனியெங்கும் உலவவிட்டான். தடுக்கத்தான் நினைக்கின்றாள்! ஆனாலும் முடியாமல் தவிக்கின்றாள்!


அவனை விலக்க எண்ணிய அவளின் கைகள் அவனை தனக்குள் புதைத்துக் கொள்ள போராடியது. உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் இருவரும் கட்டியணைத்து முத்தங்களை பறிமாறிக் கொண்டிருந்த நேரம் ரஞ்சிதம் ஆச்சி கதவை தட்டினார்.


“பேராண்டி போதும் வெளியே வா, இப்படி எல்லாம் செய்துட்டு இருந்தால் அவளை சாரதா கூட அனுப்பி வச்சிடுவேன்” என்று மிரட்டினார்.


“இந்த கிழவி இராமாயணத்துல வர்ற கூனி கிழவியோட மோசம்டி” என்று அவசரமாக மனைவின் இதழ்களை கடித்துவிட்டு மனமே இல்லாமல் கதவை திறந்தான். ஒட்டு மொத்த குடும்பத்தாரும் அறை வாசலில் தான் நின்றிருந்தனர்.


“உங்களுக்கு எல்லாம் விவஸ்தையே இல்லையா?” என்று கடுப்போடு சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.


தாரிகா அவசரமாக புடவையை சரிசெய்துக் கொண்டு வந்தாள். அவளிடம் குழந்தையை கொடுத்து பசியாற்றுமாறு சொன்ன காயத்ரி, காதருகே வந்து, “அண்ணன் ரொம்ப கடிச்சிட்டான் போல இருக்கு, ரத்தம் வருது. துடைச்சிக்கோ” என்று தன் கர்சிப்பை கொடுத்துவிட்டு நமட்டு சிரிப்புடன் சென்றாள்.


தாரிகாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது. அவன் பின்னாலே குழந்தையை எடுத்துக் கொண்டு சென்று, “போ மாமா? எல்லாரும் இருக்கும் போதே என் மானத்தை வாங்கறதே உனக்கு வேலை” என்றாள் பொய் கோபத்துடன்.


“இந்த வீட்டில் எப்பவும் ஆளுங்க இருந்தால் என்னடி பண்ண சொல்றே? இதுக்கு மேல எல்லாம் என்னால உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது. அப்படி தான் கடிச்சு வைப்பேன். வேணும்னா நீயும் என்னை கடிச்சுக்கோ” என்றான் ஒற்றை கண்ணை அடித்து.


“போடா செவப்பா” என்று சிணுங்கினாள். அந்த நேரம் சார்லஸ் செந்தூரனுக்கு அழைத்திருந்தார். “மித்ரன், நடந்ததை எல்லாம் சங்கர் மூலம் கேள்விபட்டேன், என்னோட தங்கை மகள் ஆராத்யாவுக்காக நான் உன்கிட்டயும் உன் மனைவிகிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். இந்த விஷயத்தில் என் பங்கு எதுவும் இல்லைனு நீ நம்பணும். இப்போ தாரிகா கிடைச்சிட்டதாகவும் உனக்கு குழந்தை பிறந்திருக்கறதாகவும் கவின் சொன்னான். வாழ்த்துக்கள் மித்ரன்” என்றார் சார்லஸ் பாண்டே.


“தேங்க்யூ சார்லஸ், உங்களுக்கு இந்த மாதிரி குறுக்குபுத்தி எல்லாம் இல்லைனு எனக்கு நல்லாவே தெரியும். பிரச்சனைக்கு அவங்க இரண்டுபேரும் மட்டும் காரணம் இல்லை. எங்க குடும்பமும் தான்” என்றான் அந்தவழியாக சென்று கொண்டிருந்த ஜானகியை பார்த்தபடி.


அவன் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த ஜானகியின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது, தாரிகாவை பாவமாக பார்த்தார். அத்தையின் நிலையை உணர்ந்தவள் தன் மாமனிடம் பேச தொடங்கினாள். “மாமா எனக்காக அத்தையை மன்னிச்சுடு, நான் தான் வந்துட்டேன் இல்ல? உனக்கு எதாவது ஆகிடுமோனு பயத்துல அப்படியெல்லாம் பேசிட்டாங்க. நீ அவங்களுக்கு ஒரே மகன். இப்போ நம்ம நேத்ரனுக்கு எதாச்சும்னா நம்மால தாங்க முடியுமா சொல்லு? ஒரே வீட்டில முறுக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு? நீ சகஜமாக அத்தை கிட்ட பேசு. அவங்க வருத்தபடறாங்க பாரு” என்றாள் தாரிகா.


“அதெல்லாம் போக போக பேசுவேன் தாரா. அம்மா மேல கோபம் தான் இருக்கு. வெறுப்பு இல்லை. கோபம் போனதும் நானே பேசுவேன், அதுவரைக்கும் என்னை ஃபோர்ஸ் பண்ணாதீங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் செந்தூரன்.


இதுவே போதும் என்பது போல ஜானகி கண்களை துடைத்துக் கொண்டு தன் பேரனை வாங்கி கொஞ்ச தொடங்கி விட்டார்.



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post