இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம் -08 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 16-05-2024

Total Views: 18313

இதரம் -08


தேவமல்லி கண்விழிக்கையில் கைனகாலஜிஸ்ட் நேத்ரா தான் அருகில் இருந்தாள். 


"மேம், ஹவ் ஆர் யூ?" என்று வினவியபடி அவளது இதயத்துடிப்பை பரிசோதித்தாள் நேத்ரா. 

"ஹ்ஹ்ம்ம்"என்ற மல்லி நெற்றியை வலியால் சுருக்கியபடி தடவிட, ஜீவரெத்தினம் உள்ளே வந்தார். 



"ம்மாடி, இப்போ எப்படி இருக்கு?"என்றவரிடம் வெறுமனே தலையாட்டி வைக்க," வருத்தப்படாதம்மா எல்லாம் சரி ஆகிடும்" என்று கூற புரியாமல் விழித்தாள் தேவமல்லி. 


திருமாறன் உள்ளே நுழையவும் ,ஜீவரெத்தினம்," நீங்க பாருங்க!" என நாகரீகமாக நேத்ராவுடன் வெளியேறினார். 


"டாக்டர் சார்!" என்றவளிடம்," உனக்கு அபார்ட் ஆகிடுச்சு" என்று சொல்ல மல்லி குழப்பத்துடன் அவனைப் பார்க்க," டோன்ட் ஃபீல் மல்லி" எனும்போதே ஜெகதீஸ்வரி உள்ளே வர,மல்லி இன்னுமே குழப்பமாக தான் பார்த்தாள். 



"இப்போ உடம்பு பரவாயில்லையா மா?" என்றவர் ,"திரு டிஸ்சார்ஜ் எப்போ பண்ணுவீங்க"என்க 


"ஒன் வீக் ஆகும்மா!" என்றான் மல்லியின் கையைப் பிடித்துக் கொண்டு. அதனை ஜெகதீஸ்வரி ரசிக்கவில்லை. 


ரகு வந்தவன் மல்லியிடம் மன்னிப்பு கேட்க, திருவோ ,"இதுதான் நடக்கணும்னு இருந்தா யாராலும் மாத்த முடியாதுண்ணா. விடுங்க நீங்க வருத்தப்படாதீங்க" என்று சொல்ல



"இல்ல திரு, நான் கவனமா ட்ரைவ் பண்ணி இருக்கணும்" என்று மீண்டும் அவன் சங்கடமாய் சொல்ல


"அப்படி பார்த்தால் நீங்க மட்டும் சரியான நேரத்தில் வண்டியை திருப்பலைன்னா மூணு உயிர் இல்ல போயிருக்கும். எங்க பேபி உங்க மூணு பேரையும் காப்பாத்திட்டு போயிடுச்சுனு நினைச்சுக்கிறோம்" என்று சமாதானம் செய்ய மல்லிக்கோ குற்றவுணர்வு தலைதூக்கியது. 


ஆம் மருத்துவமனைக்கு ஜீவரெத்தினம், மல்லி, ரகுவர்மன் மூவரும் கிளம்பி வரும் வழியில் எதிரே கட்டுப்பாடு இன்றி வந்த டெம்போவைக் கண்டு ரகுவர்மன் தனது காரை லாவகமாக திருப்ப, அந்த வேகத்தில் மல்லி பின்பக்கம் நடுவில் அமர்ந்திருந்தவள் முன் உள்ள ஹேண்ட் ப்ரேக்கில் வயிற்றுப்பகுதி இடித்துக் கொள்ள பேனட்டில் நெற்றியில் முட்டி காயமடைந்திருந்தாள். ஜீவரெத்தினம், ரகு இருவரும் முன்னால் அமர்ந்திருந்தபடியால் சீட்பெல்ட் உதவியுடன் எந்த காயமுமின்றி தப்பி இருந்தனர். மல்லிக்கு மட்டும் நெற்றியில் காயம் ஆகிவிட்டது. 



வீட்டில் உள்ள அனைவரும் வந்து நலம் விசாரித்துச் சென்றனர் ஜெயராஜ் உள்பட 



ஒரு வாரம் கடந்து மல்லி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப, எப்போதும் போல தான் இயங்கியது ஜெஆர்எம் பேலஸ். வைஷாலி கூட தன் வீட்டிற்கு செல்லாமல் அங்கு தானிருந்தாள். 


நெற்றிக்காயம் ஆறியிருந்தது மல்லிக்கு. போட்ட தையலையும் பிரித்து தான் வீட்டிற்கே அனுமதித்தான் திரு. அந்த ஒரு வாரம் மருத்துவ மனையில் இருந்தாலும் திரு மல்லி இடையே பெரிதாய் பேச்சுக்கள் எதுவுமில்லை. தினமும் ஒரு முறை பார்ப்பான் அவ்வளவே. இந்த விஷயம் ஜெயராஜ், ஜெகதீஸ்வரி வரை சென்றிருந்தது. 


"அண்ணி, குழந்தைக்காக தான் அந்த பொண்ணை மேரேஜ் பண்ணி இருக்கான் திரு. இல்லாட்டி இது நடந்திருக்காதுன்னு நினைக்கிறேன். இப்ப அந்த குழந்தையும் இல்லை. அதான் வெறுப்பு ஆகிட்டான் போல. ஏதோ வயசுக்கோளாறில் அந்தப் பொண்ணு கூட டைம் ஸ்பெண்ட் பண்ண போய் விபரீதமா ஆகிடுச்சு. இனியும் அந்த பொண்ணு நம்ம பேலஸில் வேணுமா.?" என்று ஜெகதீஸ்வரியை கரைத்துக் கொண்டிருந்தார் ஜெயராஜ். 


"என்ன வயசுக்கோளாறோ போங்க தம்பி. ஒரு டாக்டரா இருந்து இவ்வளவு கேர்லஸா இருந்திருக்கான். அதை நினைச்சா தான் எரிச்சலா வருது. இப்போ  மல்லி தான் அவன் வொய்ஃப்னு மீடியாஸ், இங்க இருக்கிற வொர்க்கர்ஸ்னு எல்லாருக்கும் தெரியும். அதான் என்ன செய்றதுனே தெரியல. எப்படி பார்த்தாலும் அவளை இந்த வீட்டு மருமகளா கற்பனை கூட பண்ண முடியல. இதில் அத்தை வேற அவளுக்குத் தான் சப்போர்ட் பண்றாங்க" என்று கடுகடுத்தார்.


"அம்மா நியாயதர்மத்திற்கு உட்பட்டு அந்த பொண்ணை அக்ஸெப்ட் பண்ணிட்டாங்க.மத்தபடி அவங்களுக்கும் இந்த லோ கிளாஸ் ஆளுங்களைப் பிடிக்காது" என்றார்.


"என் கவலை எல்லாம் அது இல்லை தம்பி. வைஷாலி திருவை ஏத்துக்கணும் அது மட்டும் தான்." என்றதும்


"வைஷாலியை சம்மதிக்க வைக்க வேண்டிய பொறுப்பு என்னோடது. நீங்க அந்தப் பொண்ணை எப்படி இங்கிருந்து அனுப்புறதுனு யோசிங்க" என்றிருந்தார். 


"அவளை அனுப்புறது ஒரு விஷயமே கிடையாது. அவ ஸ்டேடஸ் என்னன்னு சொல்லி புரிய வச்சாலே போதும் அவளே விலகிடுவா. அப்படியும் காசுக்காக வந்திருந்தா தேவையானதை செட்டில் பண்ணி அனுப்பிடலாம்" என்றார். 


"உங்களை நம்புறேன் அண்ணி, பார்த்துக்கோங்க." என்ற ஜெயராஜ் அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களை யோசித்தார். 


இவர்கள் திருமாறன் தேவமல்லியை பிரிப்பது எளிது என்று எண்ணி இருக்க திருவோ வேறொரு எண்ணத்தில் இருந்தான். 


**********

மல்லி தன் வாழ்வில் நடந்தவற்றை எண்ணிக் கொண்டிருந்தாள். 


திரு உள்ளே வரவும் எழுந்தமர்ந்தவள், அவனையே பார்த்துக் கொண்டிருக்க,சட்டென்று அவளை திரு பார்க்க



"டாக்டர் சார்!"


"ம்ம்ம்...!" 

"என் கிட்ட எதுவும் கேட்க மாட்டீங்களா?" என்று அலைப்புறுதலுடன் கேட்க


"கேட்கணும் தான் கண்டிப்பா கேட்கணும். ஆனா இப்போ இல்லை" என்றவன் 

"தேவா...!"


"ம்ம்ம்!" என ஆச்சரியத்துடன் நிமிர்ந்தாள் மல்லி. 


"கொஞ்ச நேரம் எல்லாத்தையும் மறந்து அதாவது இந்த கல்யாணம் கோபம், வெறுப்பு எல்லாத்தையும் மறந்து உன் கூட இருக்கணும்" என்றான் விழிகளில் ஓர் அலைப்புறுதலுடன். 


"நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க டாக்டர்."என்றாள் உடனேயே. 


கண்களை மூடித் திறந்தான். கருமணிகள் மட்டும் மூடிய இமைகளுக்குள் நர்த்தனமாடியது. 


"தேவா...!"என்றவன்," இது எனக்கான தேவை. சுயநலம் தான் ஆனாலும் ப்ப்ச் என்னன்னு சொல்ல" என்றதும் அவன் அருகில் சென்று அமர்ந்தாள் மல்லி.


"உங்க தேவை நிறைவேத்திக்கங்க டாக்டர், ஆனா இப்போ நான் யாரு என்ன நெனப்புல என் பக்கம் வருவீங்க?" என்று அழுத்தமாய் கேட்க



இறுக்கமாய் விழிகளை மூடிக் கொண்டான். 

"தேவா.. என் தேவா...எனக்காக பார்த்து பார்த்து சமைச்ச தேவா, கண்களிலேயே உணர்வை காட்டின தேவா, நான் காதலித்த தேவா, கற்பனையில் மனைவியாக்கிக்கிட்ட என் தேவா, நீ தேவாவா வேணும், காதலியா வேணும் காதலோட உன்னைப் பார்க்கணும் தேவா,ப்ளீஸ் ஹெல்ப் மீ. "என்றான் ஆத்மார்த்தமான குரலில். 


"கற்பனையில் மனைவியா..?!" என்று கேட்கவும் பட்டென விழிகளை திறந்தவன் ,"அதுபத்தி கேட்காத" என்றான். 


"அப்புறம் எப்படி உங்க தேவையை நிறைவேத்தறது...?"


"இப்படி !"என்று தன் கழுத்தில் போட்டிருந்த செயினை எடுத்து மாட்டிவிட்டான்.


"மனசில் எத்தனையோ தடவை ஒத்திகை பார்த்திருக்கேன் இதுக்காக. ஆனா நீ செஞ்ச வேலை" முகம் இறுகியது அவனுக்கு. 


இன்னும் அவனை நெருங்கி அமர்ந்தவள், அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்தாள். 


"தேவா ப்ளீஸ் !"என்றவன் அவளின் இதழ்களை களவாடியிருக்க, இமைகளை மூடிக் கொண்டாள் பெண்ணவள். 



இதழ்களோடு போகவில்லை அவன் இணக்கம். இடை தீண்டி, உடை தாண்டி, தன் உணர்வுகளை அவளிடம் இறக்குமதி செய்து கொண்டிருந்தான். 


விழிகளில் காதல் தோன்றி காமம் வளர்ந்து உருகி, உணர்ந்து, சிலிர்த்து, சிரித்து, சிவந்து என அவள்பால் கொண்ட நேசத்தை காட்டிக் கொண்டிருக்க, இரு இமைகளும் கண்ணீரில் நனைந்தது அவளுக்கு.. 



"ஹர்ட் பண்றேனாடா...!?" ஹப்பா எத்தனை கனிவு குரலில். 



"ம்ஹூம்... "என்றாள் அவனை இறுக்கி அணைத்தபடி. 

இரு யாக்கையும் பின்னிய தருணம், உணர்வும் உயிரும் இடம் மாறிய கணம், பிறவிப்பயனை அடைந்தேன் என நெகிழ்ந்த நிமிடம்.,காதல் கரை சேர்ந்த மகிழ்வில் மூச்சுக்காற்று பெரிதாய் வெளியேறி அவள் மீதே படர்ந்தான். 


"மாறா மாறா!!" என்று அவளின் பிதற்றல்கள் எல்லாம் நெஞ்சாங்கூட்டில் நினைவுகளாய் சேமிப்பாகியது. 


"கண்ணை மூடாத தேவா என்னைப் பாரு, என்னைப் பாரு தேவா... லவ் யூ லவ்ஸ் எ லாட்." என்று முகத்தை முத்தங்களால் நிறைத்திட அவன் முகமும் நிறைந்தது அவள் தந்த இதழொற்றல்களால். 


"உன்னை ரொம்ப பிடிக்கும்டி" என்ற வரிகளில் உள்ளக்கிடக்கை எல்லாம் பரவசமாய் வெளிக்காட்டியது அவள் முகம். 


"தேவாவை காதலிக்கிறேன், காதலிப்பேன், சாகறவரைக்கும் காதலிப்பேன் ஆனா மல்லியை வெறுக்கிறேன்.என்னை ஏமாத்தின மல்லியை நான் அறவே வெறுக்கிறேன். என் உடம்பில் உள்ள அத்தனை செல்லும் மல்லியை வெறுக்குது."என்று விலகி படுத்துவிட்டான். 



தேவமல்லி சிரித்தாள் விழிகளின் ஓரம் கசிந்த கண்ணீரை துடைத்தபடி. 


அவனோ நிம்மதியாக உறங்கியிருந்தான். 


'என்னைப் பிரிச்சுப் பார்க்காதீங்க டாக்டரே... ரெண்டும் கலந்தவ தானே நான். உங்களுக்குப் பிடிக்கும் மல்லியையும் ஒரு நாள் பிடிக்கும். அப்போ உங்க பரிதவிப்பை எப்படி தீர்ப்பேன் நான்.? நம்புங்க டாக்டரே என்னை நம்புங்க நான் உங்களுக்கு துரோகம் செய்வேனா...?'என்று மனதில் அவனோடு உரையாடிக் கொண்டிருந்தாள். 


அவனோடு நெகிழ்ந்த தருணம், போதுமானதாய் இருந்தது அவளுக்கு. 


'எவ்வளவு அன்பு என் மீது... சொல்லாமல் விலகியது ஏன்?' என்று புரிந்திடவில்லை தேவமல்லிக்கு. 



'தன் திருமணத்தன்று வந்து பரிசு கொடுத்தானே இத்தனை காதலித்தவன் ஏன் விட்டுத்தர வேண்டும் என்று மனம் தவித்தது. ஒரு வேளை ஏழைப்பெண் என்பதால் இருக்குமோ அந்தஸ்து வசதி பார்த்து காதலை கூட சொல்லாமல் மறைத்து வைத்தானா...அதனால் தான் இப்போதும் தன்னை ஏற்க மனமில்லாமல் விலகுகிறானா... இனி இந்த வாழ்க்கை வேண்டுமா ?'
























Leave a comment


Comments


Related Post