இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே - 9 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 16-05-2024

Total Views: 12945

இதயம் - 9

யாழிசை ஹோட்டலினுள் கணேஷுடன் நுழைய அவனும் தன் கைப்பேசியை தட்டியவாறே உள்ளே நுழைந்தான். "என்ன ஆச்சி" என்று யாழிசை அவனிடம் கேட்க அவனோ திடீரென பின்னால் கேட்ட யாழிசை குரலில் அதிர்ந்தவன் தன் கைப்பேசியை தவற விட்டான். அதுவோ தன் முதலாளி கைக்குள் அடங்க போகிறோம் என்று சற்று வேகமாக குதித்து வந்து தன் முதலாளி பிடிக்காத ஏமாற்றத்தில் தரையில் வீழ்ந்து இதயம் நொருங்கி சில்லு சில்லாய் அதுவும் உடைந்து போனது. "ஐய்யய்யோ" என்று அவன் தன் தலையில் இரு கையையும் வைத்து அப்படியே கைப்பேசி அருகில் குத்தவைத்து ஏதோ உயிரோ போனது போல் வருத்தத்துடன் புலம்பினான். வேகமாக தன் உடைந்த கைப்பேசியை எடுத்து பார்த்தவன் யாழிசையையும் பார்த்தான். "என்ன பிரச்சனை" என்று யாழிசை மீண்டும் கேட்க "மொபைல் வேலை செய்யல மேடம்" என்று அவனும் அப்பாவியாய் கூறினான். "ஏன்" என்று யாழிசை கேட்க "தெரியல மேடம்" என்று அவன் ஆடு தானாய் வலையில் விழுவது போல் அப்பாவியாய் பதில் கூறி மாட்டிக் கொண்டான். "எல்லாரையும் மீட்ங்க்கு அசம்பள் ஆக சொல்லி மெசேஜ் போட்டோமே அத நீ பாக்கல" என்று கணேஷ் கேட்க "மீட்டிங்கா ... ஐய்யய்யோ சாரி மேடம் மொபைல் ஆப் ஆனதால மெசேஜ் எனக்கு ரீச் ஆகல" என்று அவனும் பயத்துடன் கூறினான். யாழிசை பொறுமையாக "ரூம்க்கு வா" என்று விட்டு கணேஷ்ஷை ஒரு பார்வை பார்த்து விட்டு தனதறை நோக்கி நகர கணேஷ் பரத்திற்கு அழைத்தான். பரத் அழைப்பை ஏற்றதும் கணேஷ் "மிஷன் பாஸ் ... டிஸ்மிஸ்" என்று கூற பரத்தும் அதை புரிந்துக் கொண்டு கான்பரன்ஸ் ஹாலில் இருந்தவர்களிடம்  "தாங்க்யூ காயிஸ் உங்களால ஒரு கருப்பு ஆடு மாட்டிகிச்சி அதுக்கு ஹெல்ப் பன்ன உங்க எல்லார்க்கும் ரொம்ப தாங்க்ஸ் ... நீங்க போய் வேலைய பாருங்க" என்று கூறி அனுப்பி விட அனைவரும் சிறு சலசலப்புடன் அங்கிருந்து கலைந்தனர். 

பரத் உடனே யாழிசை அறைக்குச் சென்று கதவை தட்ட கணேஷ் சென்று கதவை திறந்து விட்டான். பரத் உள் நுழையும் போது யாழிசை மேசை மேலும் அவனோ மேசைக்கடியிலும் அமர்ந்திருந்தனர். யாழிசை கையில் பேப்பர் வெயிட்டுடன் அமர்ந்திருந்தாள். "சொல்லு ... எத்தனை வருஷமா இந்த கோல்மால் நடக்குது" என்று யாழிசை கேட்க அவனோ பயத்தில் நடுங்கியவாறே "மூனு வருஷமா" என்று கூறினான். "அக்கௌண்ட்ல பிரச்சனைன்னு அண்ணன் சொல்லும் போதே அகௌன்டன்ட் உன் மேல தான் முதல்ல டௌட் வந்தது ... அது இப்போ கன்பார்ம் ஆகி போச்சி ... எவ்வளவு தைரியம் இருந்தா போர்ஜெர்ரி பன்னி இருப்ப" என்று கேட்டவாறு யாழிசை பேப்பர் வெயிட்டை அவனை நோக்கி போட ஓங்க பரத் வேகமாக சென்று அவள் கையை பிடித்துக் கொண்டான். "மேடம் மேடம் எங்கையாவது அடிப்பட்டு செத்துட்டா பிரச்சனை ஆகிடும் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பன்னலாம் பொறுமையா இருங்க" என்று கூறி பேப்பர் வெயிட்டை வாங்கிக் கொண்டான். கணேஷ் அதிர்ந்து பரத்தையும் யாழிசையையும் பார்த்துக் கொண்டிருந்தான். இதுநாள் வரையில் யாழிசையை அவினாஷ்ஷை தவிர்த்து வேறொரு ஆண் மகன் அவள் கையை தொட்டதே இல்லை. தொட்டத்தில்லை என்பதை விட யாழிசை அனுமதித்ததே இல்லை என்பது தான் உண்மை. ஏன் தான் படிப்பை முடித்து விட்டு வேலைக்கு சேர்ந்ததில் இருந்தே யாழிசை விரலை கூட தெரியாமல் கூட தொட்டதில்லை. காரில் கூட இருவருக்கும் இடையில் ஒருவர் அமரும் அளவிற்கு இடைவெளி விட்டு தான் அமர்ந்திருப்பர். இன்று பரத் என்னும் மனிதன் வேலைக்குச் சேர்ந்த குறுகிய காலத்திலே தன் முதலாளியின் கையை பிடித்து தடுக்கும் அளவிற்கு நம்பிக்கையை சம்பாதித்து வைத்திருப்பது கணேஷிற்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. அதும் தன் முதலாளி பரத்தின் செயல்களை ஆமோதிப்பதும் அவன் கூறியதும் அமைதியாவதையும் இதுவரை யாழிசையிடம் கணேஷ் காணாத ஒரு குணம். 

"இவன் கிட்ட அந்த மேனேஜர்ர பத்தின முழு வாக்குமுலத்தை வாங்கிட்டு இவனை போலீஸ்ல ஒப்படைச்சிடு கணேஷ்" என்று யாழிசை கூற கணேஷும் அவனை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான். "சார் எப்போ மேடம் ஜெர்மன்ல இருந்து வருவாரு" என்று பரத் கேட்க "மேபீ ... ஆறு மாசம் ஆகலாம் ... பில்டிங் வேலை மொத்தமா முடியாம அண்ணன் வர மாட்டான்" என்று யாழிசை கூறினாள். "மேடம் நீங்க தப்பா நினைக்கலன்னா நா ஒரு சஜ்ஜசன் உங்க கிட்ட கேக்கலாமா" என்று தயக்கத்துடன் பரத் நிறுத்தினான். "என் கிட்டையா" என்று ஆச்சரியத்துடன் பரத்தை பார்த்த யாழிசை "கேளு" என்று கூறினாள். "இல்லை பையன் மிடில்க்ளாஸா இருந்து பொண்ணு பணக்கார பொண்ணா இருந்து அந்த பொண்ணு எல்லா சொத்தையும் தரன் என்னையும் என் சொத்தையும் பாதுக்கோன்னு சொன்னா அந்த பையன் அந்த பொண்ண ஏத்துக்கலாமா" என்று பரத் தன் அண்ணனை மனதில் நிறுத்தி கேட்க யாழிசை "கொஞ்சம் ரிஸ்க்கியான கேஸ் தான் ... ஆனா தீர்விருக்கு" என்று கூறி பரத்திடம் "பையனோட சுயகவுரவம் கெடாம அந்த பொண்ணு தன்னோட ஆளுமைய பையன் மேல காட்டாம இருந்தா அந்த பையன் அந்த பொண்ண ஏத்துக்கலாம் ... ஏன் யாரையாவது லவ் பன்றியா" என்று கேட்டாள். "நா இல்லை எங்கண்ணன் ... அந்த பொண்ணு அண்ணனை அவங்க வீட்டுக்கே கூப்டுது அவங்க கம்பனிய எடுத்து நடத்த சொல்லுது ... அவங்க அப்பாவும் என் பொண்ண அனுப்ப மாட்டன்னு சொல்ராரு ... எங்கண்ணன் ரொம்ப டென்ஷன்ல சுத்திட்டு இருக்கான்" என்று பரத் கூற யாழிசை "நமக்கு விருப்பமில்லாத விஷயத்தை கையில பிடிச்சிகிட்டு இருந்தா டென்ஷன் தான் பரத் ... உன் அண்ணன் கிட்ட போய் அவர் மனசுக்குள்ள போய் அவரோட அடையாளத்தை தேட சொல்லு" என்று கூறினாள். பரத்தும் சரி என்று தலையை ஆட்டி விட்டு நகர்ந்தான். 

வாசு வேலைக்குச் செல்லாததால் அஞ்சனா வாசுவின் எண்ணிற்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனாள். அவளும் அலுவலகத்தில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு வாசுவை காண வேகமாக அவன் வீட்டை நோக்கிச் சென்றாள். வாசுவோ எந்த கலவரமும் எந்த டென்ஷனும் எந்த யோசனையும் இன்றி நிர்மலாக உறங்கிக் கொண்டிருந்தான். வீட்டின் முன் காரின் சத்தம் கேட்டு வெளியில் வந்த மல்லிகா மாடல் உடையில் கூலிங்க்ளாஸும் ஹை ஹீல்சுமாக இறங்கிய அஞ்சனாவை வாயை பிளந்துக் கொண்டு பார்த்தார். அஞ்சனா தன் கண்ணாடியை கழட்டி விட்டு வாசுவின் வீட்டை கேவலமாக ஓர் பார்வை பார்த்து விட்டு வீட்டை நோக்கி நடந்தாள். மல்லிகா வாசலில் நின்று வழி மறைத்தவாறு யார் என்று கேட்டார். "வாசு இல்லையா" என்று அஞ்சனா கேட்டாள். 

"வாசு தூங்கறான் ... என்ன விஷயம் ... எதாவது முக்கியமான விஷயமா" என்று மல்லிகா கேட்டார். "உள்ள எல்லாம் கூப்ட்டு உட்கார வச்சி காபி எல்லாம் கொடுக்க மாட்டிங்களா" என்று அஞ்சனா கேட்டாள். "உள்ள வா" என்று மல்லிகா வாய் விட்டே கேட்டதால் உள்ளே அழைத்தார். உண்மையை கூறினால் அவளின் திமிரும் தெனாவட்டும் அவளின் ஏளனமான பார்வையும் முதல் பார்வையிலே பிடிக்காமல் போனது. அஞ்சனா செருப்புடனே உள்ளே வர மல்லிகா "செருப்ப வெளில விடனும்" என்று கூற அஞ்சனா "ஓ ... பட் எனக்கு கழட்டி விட விருப்பம் இல்லை" என்று பந்தாவாக கூறியவள் வாசு அறையை தேடினாள். "வாசுவோட ரூம் எது" என்று கேட்டாள். "அவனை நானே போய் கூட்டிட்டு வரன் நீ உட்காரு" என்று கூறி மல்லிகா நகர போக "இல்லை ரூம் மட்டும் சொல்லுங்க" என்று கூறி மாடியேறினாள். மல்லிகா வேறு வழி இல்லாமல் வாசு அறையை காண்பித்தார். அஞ்சனா வாசு அறை கதவை திறந்துக் கொண்டு உள்ளேச் சென்றாள். வாசு அமைதியாக உறங்கிக் கொண்டிருக்க அஞ்சனா கடுப்பாகி அவனை எழுப்பினாள். வாசு அஞ்சனா குரல் கேட்டு திடுகிட்டு எழுந்தமர்ந்தான். 

நிம்மதியான உறக்கத்திற்கு நடுவே அஞ்சனாவின் குரல் கேட்டதும் ஏதோ கனவு என்று பதறியடித்துக் கொண்டு கண்விழித்து எழுந்தமர்ந்த வாசுவின் முன்னால் உண்மையாகவே அஞ்சனா இருக்க வாசுவின் டென்ஷன் அதிகமாகி குபுகுபுவென வேர்க்கத் துவங்கியது. "நீ ... நீ ... இங்க ... " என்று திக்கி திக்கி வரண்டு போன தொண்டையில் இருந்து வார்த்தை வராமல் தத்தளித்தான். "நா இப்ப தான் வந்தன் ... ஏன் ஆப்பிஸ் வரல" என்று அஞ்சனா கேட்க வாசு வேகமாக கட்டிலில் இருந்து இறங்கி கீழேச் சென்றான். அஞ்சனாவும் அவனை அழைத்தைவாறே அவன் பின்னால் சென்றாள். மல்லிகா அனைத்தையும் பார்த்தும் பார்க்காதது போல் உள்ளே நின்றிருந்தார். வாசு வேகமாக ஜில்லென குளிர்ந்த நீரை எடுத்து குடித்து தன் தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டு "நீ எதுக்கு இங்க வந்த" என்று கேட்டான். "முதல்ல நா கேட்டதுக்கு பதில்" என்று அஞ்சனா கூற வாசு "முதல்ல நீ கிளம்பு" என்று அஞ்சனாவை வாசல் வரை இழுத்தூச் சென்று விட்டான். "வாசு ... என்ன நீ இன்சல்ட் பன்ற" என்று அஞ்சனா கோபமாக கூற வாசு "ஹேய் கிளம்பு டி" என்று அவளை காரில் தள்ளினாள். "ச்சை உன்னை போய் பாக்க வந்தன் பாரு" என்று அஞ்சனா தன்னை தானே நொந்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். 

நல்லவேளை யாரும் பார்க்கவில்லை என்று நிம்மதி பெருமூச்சுடன் வீட்டிற்குள் நுழைந்தவனிடம் "யார்டா அந்த பொண்ணு" என்று கேட்டார் மல்லிகா. திடீரென தன் அன்னையின் குரல் கேட்டதும் அதிர்ந்த வாசு திரும்பி தன் தாயை பார்த்தான். "யார் அது" என்று மீண்டும் மல்லிகா கேட்க "என் கூட வேலை பாக்கற பொண்ணும்மா" என்று வாசு தலையை குனிந்துக் கொண்டு கூறினான். "தரைய பாத்து இல்லை என் முகத்தை பாத்து சொல்லு" என்று மல்லிகா கேட்க "அம்மா" என்று வாசு இழுக்க "லவ் பன்றியா" என்று மல்லிகா கேட்டார். வாசுவின் அமைதியே உண்மை என்பதை உணர்த்த மல்லிகா "உனக்கு நிஜமாவே அந்த பொண்ண பிடிச்சிருக்கா" என்று சந்தேகமாக கேட்டார். "அவ கொஞ்சம் வசதியா வாழ்ந்தவம்மா அதனால தான் இப்படி இருக்கா ... கல்யாணத்துக்கு அப்பறம் மாறிடுவா" என்று வாசு கூறினான். "இல்லை வாசு ... யாரையும் நம்ம நமக்கு தகுந்த மாதிரி மாத்தனுன்னு நினைக்கவேக் கூடாது ... அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க விருப்பம் போல இருக்கறதும் இருக்க விட்றதும் தான் சுதந்திரம் ... அந்த பொண்ண நா தப்பு சொல்லவே இல்லை ... அந்த பொண்ணு பிறந்து வளர்ந்த சூழல் அந்த மாதிரி ... ஆனா நம்ம சூழல் வேற மாதிரி ... அந்த பொண்ணு அதை புரிஞ்சி நடந்துக்கனுன்னு அவசியம் இல்லை ... ஆனா வெளியாளுங்க முன்ன நம்மளையும் நம்ம குடும்பத்தையும் உன்னையும் விட்டுக் கொடுக்காத பொண்ணா இருக்கனும்" என்று மல்லிகா கூற வாசு "சரிம்மா" என்றான். 

மாலை பரத் வந்ததுமே தன் அண்ணனை தேடித் தான் சென்றான். வாசு நடந்ததை கூறி "இப்ப என்ன பன்றதுன்னே தெரியல டா" என்று சோர்ந்து போய் கூற பரத் "உன் ஆழ்மனசுல என்ன இருக்குன்னு நீ தான் அண்ணா தேடி பாக்கனும்" என்று கூறினான். "ஒரு சேன்ஜ்க்கு நா வேணா அஞ்சனா சொன்ன மாதிரி ஜெர்மன் வரைக்கும் போய்ட்டு வரட்டுமா" என்று வாசு கேட்க "ம்ம்ம் போய்ட்டு வா" என்று பரத் கூற வாசு உடனே அஞ்சனாவிற்கு அழைத்தான். "என்ன" என்று கோபமாக கேட்ட அஞ்சனாவிடம் வாசு "நா ஜெர்மன் போலாம்ன்னு இருக்கன்" என்று கூறினான். அஞ்சனாவின் என்ன என்ற கோபமான வார்த்தை எல்லாம் நொடியில் மாறி போனது. "நிஜமாவா சொல்ர" என்று அஞ்சனா ஆனந்த குதூகலத்தில் குதித்தவாறே கேட்க வாசு "ஆமா ... நானும் உங்க அப்பா கூட ஜெர்மன் போறன்" என்னனு கூறினான். "வாவ் சூப்பர் ... நா இப்போவே அப்பா கிட்ட சொல்ரன்" என்று கூறி அஞ்சனா அழைப்பை துண்டித்து விட்டு வேகமாக தன் தந்தையின் அறையை நோக்கி ஓடினாள். 

வாசு தன் அலுவலகத்தில் ஒரு வாரம் விடுமுறை கூறி விட்டு அஞ்சனாவின் தந்தையோடு ஜெர்மன் செல்ல தயார் ஆகினான். வீட்டில் அலுவலக வேலை என்று பொய் கூறினான். மயில்சாமியும் வாசுவும் கிளம்பிய அதே நேரம் விமான நிலையத்தில் அஞ்சனாவும் பெட்டியுடன் வந்து சேர்ந்தாள். "அஞ்சு நீயும் வரியா" என்று அதிர்ச்சியுடன் வாசு கேட்க அஞ்சனா "நா இல்லாம நீ மட்டும் எப்படி போலாம்" என்று கேட்டு சிரித்தவளிடம் வாசுவால் எவ்வாறு கூற முடியும் அவள் தொல்லை தாங்காமல் தான் செல்கிறான் என்று. வாசு சலிப்புடன் வாசலை நோக்கி தன் பார்வையை திருப்ப பரத் தன் பெட்டியுடன் விமானநிலையத்தினுள் நுழைந்தான். "டேய் நீ எங்க டா இங்க" என்று அதிர்ச்சியாக வாசு கேட்க பரத் பதில் கூறும் முன் "போலாமா பரத்" என்று கேட்டவாறே வந்து நின்றான் கணேஷ். 

"ஹான் போலாம் டூ மினிட்ஸ்" என்று கூறிய பரத் வாசுவிடம் "ஜெர்மன்ல ஏதோ ப்ராப்ளம்மாம் அவினாஷ் சார் கால் பன்னி என்னையும் மேடமையும் வர சொன்னாரு ... டிக்கெட் எல்லாம் அவரே புக் பன்னிட்டாரு" என்று பரத் கூற "சரி வா ஒன்னாவே போலாம்" என்று வாசு அழைக்க பரத் "இல்லைண்ணா அது ... விஐபி சீட் ரிசர்வ் பன்னி இருக்காங்க சோ" என்று இழுவையுடன் நிறுத்த வாசு "சரி நீ போ" என்று கூறினான். "தப்பா நினைச்சிக்காதண்ணா" என்று பரத் சங்கடத்துடன் கூற வாசு "டேய் அதெல்லாம் நா ஒன்னும் நினைச்சிக்கல டா" என்று சாதாரணமாக கூறினான். "உன் தம்பி எங்க வேலை செய்றான்" என்று மயில்சாமி கேட்க வாசு கூறிய "இசை ஸ்டார்ஸ்" என்ற பெயரை கேட்டதும் மயில்சாமி ஆடி போனார். 


Leave a comment


Comments


Related Post