இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம் -09 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 16-05-2024

Total Views: 17835

இதரம் -09

ஆடை நெகிழ்ந்து அவனின் இடமார்பில் தஞ்சமாகியிருந்தவள் மெல்ல விலகிட," டோன்ட் மூவ் தேவா.!"இமை திறக்காமலேயே பேசினான் மாறன். 


"டாக்டர்...!"


"கால் மீ மாறன். அப்போ அப்படி தானே கூப்பிட்ட?"என்றவனின் குரலில் அத்தனை இளக்கம். மல்லியின் முகம் நாணத்தில் சிவந்துபோனது. 


"இல்ல நேரம் ஆகிடுச்சு டாக்டர். எழுந்துக்கட்டுமா?" மெல்லிய குரலில் வினவியவளிடம்," போய் ப்ரெஷ் ஆகிட்டு வா" என்று சொல்ல, அவளும் எழுந்து கொண்டாள். 


"இதெல்லாம் துவைக்கணும்" என போர்வையை கைகாட்ட,"நீ போயிட்டு வா, அப்புறம் எடுக்கலாம்"என்றான் சூசகமாக. 


மாறனுக்கு மனமெல்லாம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. கசங்கியிருந்த மல்லிகையும், மெத்தைவிரிப்பும் அவர்களின் கூடலை இதமாய் பறைசாற்ற,"ஷீ இஸ் மைன்!" என்று கர்வமாய் முணுமுணுத்தான். 


தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அவள் வரவும், குளியலறை உள்ளே சென்றவன் சிலநிமிடங்களில் வந்திருந்தான். 


மணி ஐந்தை காட்ட," காஃபி எடுத்துட்டு வரவா டாக்டர்?" சற்று முன் விலகவேண்டும் என எண்ணியதெல்லாம் பின் சென்றிருந்தது மல்லிக்கு. 


"ம்ஹூம்!" என்றவன் பார்வை மாறியிருக்க, மீண்டுமாய் ஒரு கூடல் அங்கே நிகழ்ந்திருந்தது. 


மீண்டும் மல்லி எழுகையில் மாறன் அங்கில்லை. மணி ஏழை தொட்டிருக்க அடித்துப் பிடித்து எழுந்து அவசரமாய் குளியலறை புகுந்தாள். 


குளியலறையில் நிரம்பியிருந்த சோப்பின் நறுமணம், மாறனின் இருப்பை உணர்த்துவது போல இருந்தது அவளுக்கு. 


'டாக்டர் இதை உங்க கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை.' என்று எண்ணியபடி வெளியே வந்தவள்,அறையை விட்டு வெளியே செல்லவில்லை. 


ஜீவரெத்தினம் முழுமையாக அவளை ஓய்வெடுக்கும்படி கூறியிருக்க மூன்று வேளை உணவு கூட அறைக்கே வந்தது. 


'என்னையும் விரும்ப ஒரு ஜீவன். ஆனாலும் என்னைப் பிடிக்கலை அவருக்கு, விநோதமா இருக்குல்ல மல்லி?!' என்று தன்னை கண்ணாடியில் பார்த்தபடி கேட்டுக் கொண்டாள் மல்லி. 


'சாதாரணமா தானே டாக்டர் பேசுனீங்க அப்புறம் எப்படி என்னை காதலிச்சீங்க?,புரியலையே டாக்டர். நிஜமாவே உங்களுக்கு என்னைப் புடிக்குமா.? நான் உங்க கிட்ட வந்த விதம் தான் தப்பு, ஆனா சேர வேண்டிய இடத்தில் சரியா சேர்ந்துட்டேனோ. என்னை காதலிச்சுட்டு ஏன் வேறொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போனீங்க?, ஒரு பக்கம் மனசுக்கு சந்தோஷமா இருக்கு. இன்னொரு பக்கம் வேதனையா இருக்கு இத்தனை ஆசையை வச்சுக்கிட்டு என் கல்யாணத்துக்கு வந்திருந்தீங்களே?, நீங்க மொதராத்திரி அன்னைக்கு பேசின பேச்சு என்ன இப்ப நீங்க நடந்துக்கிட்டது என்ன டாக்டர்?' என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவள் மனதில் அந்த நினைவுகள் வந்துபோனது. 


************

"ஏன் இப்படி செஞ்ச மல்லி. உனக்கு நல்லது செஞ்ச எனக்கு ஏன் இப்படி ஒரு துரோகத்தை செஞ்ச.? சொல்லு மல்லி "என அவளை உலுக்கிக் கொண்டிருக்க 


"டாக்டர் சார் நான் ஒங்க நல்லதுக்குத்தான்... " வியர்த்து வழிந்தது மல்லிக்கு. 


"நல்லது, மை ஃபூட். இடியட் எனக்கு நல்லதா?, இதுவா நல்லது. மனசாட்சி'னு ஒண்ணு இருந்தா நீ இப்படி சொல்லி இருப்பியா...?"அவனால் ஏற்கவே இயலவில்லை அவளின் கூற்றை. 


"நெசத்துக்குமே உங்க நல்லதை நினைச்சுத் தான் சொன்னேன் சார்"அழுது விடும் நிலையில் நின்றாள் மல்லி. 



"எது?அத்தனை பேர் முன்னாடியும் என் வயிற்றில் வளர்ற குழந்தைக்கு அப்பா இவர் தான்'னு கைகாட்டினதா எனக்கு நீ செஞ்ச நல்லது?" என்று ஆக்ரோஷத்துடன் கேட்க 
மல்லி அமைதிகாத்தாள். 



"பேசுடி இடியட். என் நிலை தடுமாறி நிற்க வச்சுட்டில்ல, எல்லாத்துக்கும் காரணம் என் பணமும்,வசதியும் தானே...?!அது தானே உன்னை இப்படி கேவலமா நடந்துக்க வச்சது. டாக்டர் என் கிட்டவே ஏமாத்தி இருக்கல்ல, அதுக்கான பலனை நல்லா அனுபவிப்படி நீ. வயித்துல புள்ளையா... ஹான்" என்றான் நக்கல் தொனியில். 


அவள் அப்போதும் அமைதி காக்கவே அவளது கையை இறுக்கமாகப் பற்றியவன்," உனக்கு ஏன் தாலி கட்டினேன்னு தெரியுமா?" என்றான் அவளை உறுத்து விழித்து பார்த்தபடி. 


வலியோடு," ம்ஹூம் "என்று முனகியவள் கண்ணீரை மட்டும் வெளியே விடவில்லை. 


"நீ ஆசைப்பட்டது இந்த பணம்,வாழ்க்கை தானே...? அது உனக்கு கிடைக்கணும், ஆனா நீ அதை அனுபவிக்கவேக் கூடாது. என்ன நினைச்ச நீ... எல்லாரும் உன்னை இப்போ பரிதாபத்துடன் பார்த்து எனக்கு கட்டி வச்சாங்களே அவங்க எல்லாரும் இதே மனநிலையில் இருப்பாங்கன்னா.... நீ அப்படியா நினைக்கிற?" என்று கேட்கவும், மல்லி இன்னும் அதிர்வாய் பார்த்தாள். 


"காசு உள்ள கழுகு கூட்டம் இது. சாதாரண கழுகு இல்லை பினந்தின்னி கழுகுகள் அத்தனையும். உன்னை குத்தி கிழிக்கிறதைப் பார்க்க தான்டி கட்டினேன். "என்றான். 


மல்லி அப்போதும் அமைதி காத்தாள். 



'ஒரு மருத்துவனுக்குத் தெரியாதா கர்ப்பிணி என்றால் எப்படி சோதனை செய்து நிரூபிக்க வேண்டும்' என்று. இருந்தும் தாலி கட்டினான் என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று அவளுக்குப் புரிந்தது. 



கதவு தட்டப்படவும் அவளை விலக்கியவன்," இந்த டாக்டரோட இன்னொரு பக்கத்தைப் பார்க்க ரெடியா இருங்க தேவமல்லி" என்று கூறி விட்டு சென்றான். 


'இந்த கொடுமை எல்லாம் எனக்கு புதுசா என்ன டாக்டர் சார். 'என்று நினைத்தவள் அவசரமாய் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். 

 நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள்,' அவ்வளவு பேசினவரா இவர்னு இருக்கு மாறா!' என எண்ணியபடி அவனது உடைகளை துவைக்க மெஷினில் போட்டாள். 


**********

"டாக்டர் உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணுமே!" என்றிருந்த நேத்ராவை கேள்வியாய் பார்த்தான் திருமாறன். 


"சொல்லுங்க நேத்ரா."என்றவன்,' என்னவாக இருக்கும்?' என்று யோசிக்க


"ஜெயராஜ் சார் என் கிட்ட பேசினாங்க" என்று சொல்ல 


"என்ன பேசினாங்க எப்போ பேசினாங்க?" 

"அது வந்து டாக்டர் டோன்ட் மிஸ்டேக் மீ. "

"நேத்ரா நீங்க எனக்குப் பண்ணது பெரிய ஹெல்ப், ஸோ தப்பா எடுத்துக்க மாட்டேன் சொல்லுங்க, அன்ட் யூ ஆர் மை ஜூனியர் ஆனாலும் எனக்கு நல்ல ஒரு ஃப்ரெண்ட் ஸோ நீங்க ஃப்ராங்க்காவே பேசலாம் நேத்ரா" என்றான். 


"மல்லி மேம் ஹாஸ்பிடலுக்கு செக்கப் வர்றதா சொன்ன முதல் நாள் அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார்."


"ம்ம்ம் ஓகே."


"மல்லி மேம்க்கு அபார்ட் பண்ற ஹெவிடோஸ் டேப்லெட் ப்ரிஸ்க்ரைப் (பரிந்துரை) செய்ய சொன்னார்" என்று பதற்றமாய் கூற, திருவின் முகத்தில் எந்த உணர்வும் தெரியவில்லை. 


"டாக்டர் நான் நிஜம் தான் சொல்றேன்." என்று அவன் நம்பவில்லையோ என நினைத்து கூற


"அவர் உங்க கிட்ட பேசினது எனக்குத் தெரியும் நேத்ரா. "


"டாக்டர்...!?"என்று அவள் அதிர


"சில விஷயங்களை உடனடியா பேச முடியாது நேத்ரா. எனிவே தேங்க் யூ ஃபார் இன்ஃபார்மிங் மீ நேத்ரா. இதை இப்படியே விட்டுடுங்க" என்றான். 


"ஏதோ பிரச்னை னு தோணுச்சு டாக்டர், அதனால தான் இன்ஃபார்ம் பண்ணேன். ஷீ இஸ் ஸோ இன்னசென்ட் டாக்டர். "என்று கூற 

"ஐ க்நோ நேத்ரா!" என்றவன்," அப்புறம் அந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும் வெளியே தெரிய வேண்டாம்"என்றிட 


"நோ இஷ்யூஸ் டாக்டர். பட் நீங்க எனக்கு ஒரு ஃபேவர் பண்ணனுமே. மாட்டேன்னு சொல்லக் கூடாது." என்று சிரிக்க 

"பாருடா, ம்ம்ம் என்ன ஃபேவர் மேடம்?" என்று அவனுமே புன்னகையுடன் கேட்க


"உங்க வொய்ஃப் மந்த்லி செக்கப் அன்ட் டெலிவரி நான் தான் பார்ப்பேன், வேற எங்கேயும் போகக் கூடாது." என்று கூற திரு அழகாய் புன்னகைத்தான். 


"ரொம்ப பெரிய ஃபேவரா இருக்கே. ஃப்ரீ ட்ரீட்மெண்ட்னா கண்டிப்பா காட்டுறேன்" என்று சொல்ல நேத்ரா நிறைவாய் சிரித்தாள். 


அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அர்ணவ் அனுமதி கேட்டு உள்ளே வந்தான். 


நேத்ரா அங்கிருந்து வெளியேற, ஒரு நொடி அவளைப் பார்த்து விட்டு அண்ணனைக் கண்டு புன்னகைத்தான் அர்ணவ். 


"வா அரு. என்ன திடீர் விசிட் ?"என்று கேட்க 


"கொஞ்சம் பர்ஸனலா பேச வந்தேன் பேசலாமா?" என்று வினவ 


"ஸ்யூர் டா,சொல்லு." என்றதும் தான் வந்த விஷயத்தை படபடவென்று பேசி முடிக்க,திருவின் முகத்தில் பெரிதான புன்னகை. 


"ஸோ என் ப்ரோ மெச்சூர்ட் ஆகிட்டான்" 


"அண்ணா ...!"என்றவன் முகத்தை சீரியஸாக வைத்தபடி," ஐம் சாரி!" என்றான். 


"ஹேய் !"என சிரித்து ,"விடு அர்ணவ். கண்டிப்பாக உன் விஷயத்தை வீட்டில் பேசுறேன். நான் இருக்கேன் உனக்கு ஓகே" என்று நம்பிக்கை தர அர்ணவ் கிளம்பிவிட்டான். 


இங்கே ஜெயராஜ் மல்லி பற்றிய தகவல்களை சேகரிக்க துவங்கியிருந்தார். 


...... தொடரும். 












Leave a comment


Comments


Related Post