இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -35 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 16-05-2024

Total Views: 24111


“ஏய் ஏய்...” என்று நந்தனும் கூட பேசிக் கொண்டிருந்த கம்பெனி முதலாளியும் வண்டியைப் பிடித்தனர்.

‘யாரோ ஒரு பெண்’ என்று தான் நந்தன் நினைத்தான், அந்த இடத்தில் நிலாவை அவன் எதிர்பாக்கவே இல்லை. அவளைப் பார்த்ததும் பக்கென்று சிரிப்பு வந்துவிட அவள் முன் சிரிக்கக் கூடாது என வேறுப் பக்கம் பார்ப்பது போல் சிரிப்பை அடக்கிக் கொண்டவன்.

“ஏய் உனக்குலா எவன் டிரைவிங் லைசன்ஸ் கொடுத்தது. எந்திரி முதல” என்று அதட்ட, நிலா நடுங்கிய கை சொன்னது அவள் எந்த அளவிற்கு பயத்தில் இருக்கிறாள் என்று.

“அது... தெரியாம..”

“கண்ணு தெரியுமா.?”



“உன்கிட்ட தான் கேக்கறேன், கண்ணு தெரியுமா?” என்று அதட்டலாக வர,

“ம்ம்” என்று தலையை ஆட்டினாள்.

நந்தன் அதட்டலில் எங்கு திட்டி விடுவானோ என அருகில் நின்றவன் இடையில் புகுந்து,

“யாரும்மா நீ? உன்னைய இதுக்கு முன்னாடி இங்கப் பார்த்த மாதிரி இல்லையே.” என்றான் கம்பெனி முதலாளி.

“இங்க இன்டெர்வியூக்கு வந்தேன் சார்.” என்றவள் நந்தனின் பக்கமே திரும்பவில்லை.

விட்டால் போதும் அடுத்த நொடி சிட்டாக பறந்து விடுவாள் அந்த இடத்தில் இருந்து, அந்த நிலைமையில் தான் இருந்தாள்.

“இன்டெர்வியூ போஸ்ட்போன் ஆகிடுச்சே, உங்க மெயிலுக்கு இன்பர்மேசன் வந்துருக்குமே பார்க்கலையோ?”

அவன் கேட்டது போல் நிலா பார்க்கவில்லை. இரண்டு நாள்கள் ஊரை சுற்றி விட்டு இன்று நேராக அலுவலகம் வந்திருந்தவளுக்கு எப்படி தெரியும்?

“சாரி சார் பார்க்கல” என்று மெதுவாக சொன்னவளுக்கு நந்தனின் முன்பு அவமானமாக இருந்தது. வேலையே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாள். இவர்கள் விட்டால் போதும் இங்கிருந்து ஓடி விடுவாள். விட வேண்டுமே. அவள் பதில் சொல்வதை காரின் பேனட்டில் சாய்ந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான் நந்தன்.

அவனைப் பார்க்கக் கூடாது, பார்க்கக் கூடாது என மனதுக்குள் சொல்லிக் கொண்டே இருக்க.. தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தாள்.

வண்டி முன்பக்க விளக்கு உடைந்திருக்க, பிரேக் ஒயர் கட்டாகி இருந்தது. ’வண்டியை சரி பண்ணனும் என்ன பண்றது அம்மா வேற கிளம்பும் போதே சொல்லி அனுப்பிச்சதே’ என்று தலையில் தட்டிக் கொண்டாள்.

“மேடம் வெளியே ஒரு மெக்கானிக் ஷாப் இருக்கு, அங்கக் கொண்டு போய் வண்டியை சரிப் பண்ணிட்டு வீட்டுக்குப் போங்க, நாளைக்கு தான் இன்டெர்வியூ. நீங்க நாளைக்கு வந்தாப் போதும்.”

“சரிங்க சார்” என்று நிற்காமல் சொல்லிக் கொண்டே வண்டியை தள்ளிக் கொண்டு அங்கிருந்து செல்லப் போக, விரல் சொடக்கிட்டு நந்தன் நிலாவை அழைத்தான்.

'திரும்பாத நிலா திரும்பாத..' என்று மனம் சொல்ல கால்கள் தானாக நின்றது.

“ஒரு நிமிஷம் சார்” என்று அருகில் நின்றவனிடம் சொல்லிவிட்டு நிலாவின் அருகில் வந்தவன்.

“காருல வெயிட் பண்ணு” என்று அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவன் சொன்னப் பிறகு கிளம்பிப் போனால் சும்மா விடுவானா? கல்யாணத்தை நிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, வேற வினையே வேண்டாம் என்று அங்கயே நின்றுக் கொண்டாள்.

ஒவ்வொரு நொடியும் பதைபதைப்புடன் போனது. 'தனியா சிக்கக் கூடாது நினைச்சனே இப்படி ஒரு மணி நேரம் அவன் கையில தனியா சிக்கற மாதிரி பண்ணிட்டியே கடவுளே. இனி நான் என்ன பண்ணுவன்னே தெரியலையே, எட்டு வருசத்துக்கும் சேர்த்து வெச்சி அடிப்பானே..' என்று புலம்பிக் கொண்டிருக்க, நந்தன் போன வேகத்தில் திரும்ப வந்துவிட்டான்.

இன்னும் காரில் ஏறவில்லையா என்பது போல் ஒரு பார்வைப் பார்க்க, சட்டென்று ஸ்கூட்டியை விட்டு காரின் அருகில் சென்று நின்றவள்.

“வண்டி” என்று இழுத்தாள்.

டிரைவரை அழைத்து ஏதோ சொன்னான், உடனே அவர் நிலாவிடம் சாவியை வாங்கிக் கொண்டு வண்டியை கடைக்கு எடுத்துச் செல்ல,

“சின்ன அடி தானே நானே பார்த்துட்டு வீட்டுக்குப் போகவா?” என தயங்கி தயங்கி கேக்க.. அவனோ அதற்கு பதில் சொல்லாமல் வண்டியில் ஏறி அமர்ந்து ஹாரனை கை எடுக்காமல் அழுத்தினான்.

இதற்கு மேல் அவனிடம் ஒரு வார்த்தை பேசிவிட முடியாது. வேகமாக ஓடிச் சென்று கார் கதவை திறந்தவளுக்கு புதிதாக சந்தேகம் எழுந்தது.

'பின்னாடி உக்கார்ந்தா நான் உனக்கு டிரைவரான்னு கேப்பான்? முன்னாடி உக்கார்ந்தா நீ என்ன எனக்கு பொண்டாட்டியான்னு கேப்பான்,  இவனே சொல்லாமல் நம்ப எந்தப் பக்கம்டா போய் உக்காரது.. ஒரே மண்டை குடைச்சலா இருக்கே.' என்க.

மீண்டும் ஹாரன் அடிக்கவும் முன் பக்கமே ஏறி அமர்ந்துவிட்டாள்.

வண்டி வேகம் எடுக்க நந்தனையும், சாலையையும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தாள். கார் ஒரு சாலையில் திரும்பி ஓரமாக நிற்க.

'ஐயோ கடவுளே வண்டி நின்றக் கூடாது, போச்சி போச்சி நிக்குது என்ன சொல்லப் போறானோ?' என்று ஒவ்வொன்றிற்கும் பயந்து பயந்து நொடிகளை கழிக்க அவள் பயந்தது போல் எதுவுமே நடக்கவில்லை.

நந்தன் அலைபேசியின் மூலம் யாருக்கோ அழைத்தான்.

“ம்ம் திரு அந்த வைர வியாபாரி மர்டர் கேஸ் இருக்குல்ல அதோட பைலை நம்ப ஏட்டுக்கிட்ட கொடுத்து ஆபிஸ் கொண்டு வர சொல்லு, நான் ஆபிஸ் வர லேட்டாகும்." என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.

வசனமாக நாலு வார்த்தை சேர்த்துப் பேசி வெகுநாட்களுக்கு பிறகு இப்போது தான் கேக்கிறாள். குரலில் அவ்வளவு கம்பீரம், நறுக்கு தெறித்தார் போல் பேச்சு என்று அவனைக் கண்டால் பயந்து நடுங்குபவளையே ஆளை அசர அடித்தான்.

அன்று டீசர்ட் ஜீன்ஸ் பேண்டு என்று இருக்கும் போதே அவ்வளவு அழகு, இன்று காக்கி உடையில் சொல்லவா வேண்டும்.. ஒரு ஆண், அதுவும் திமிரு பிடித்த அகந்தை மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்த ஒருவன் இவ்வளவு அழகாக இருப்பான் என நிலா எதிர்பார்க்கவேயில்லை.

அவளையும் மீறி அவளது கண்கள் அவனைப் பார்க்க சொல்லி தூண்டியது.

மீண்டும் ஒரு இடத்தில் கார் நிற்க, அப்போது போன் பேசியது போல இப்போதும் பேசுவானா இருக்கும் என்று வெளியே வேடிக்கைப் பார்த்தவளை நோக்கி திரும்பி அமர்ந்தான்.

அவனது அழுத்தப் பார்வை நிலாவை துளையிட, அவள் அவன் பக்கம் திரும்பினால் தானே தெரியும் அவளோ கண்ணாடியுடன் உறவாடி அதில் படிந்திருந்த தூசியில் ஹார்ட் வரைந்து தன் பெயரை எழுதி அம்பு விட்டு விளையாடிக் கொண்டிருந்தாள்


Leave a comment


Comments 1

  • A Aathi Sri
  • 1 month ago

    Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr sis 👌👌👌👌👌


    Related Post