இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா - நிறைவுபகுதி அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 17-05-2024

Total Views: 20304

எபிலாக் (நிறைவுபகுதி)


நேத்ரன் தன் அத்தை காயத்ரியின் மகள் வந்தனாவுடன் விளையாடிக் கொண்டிருந்தான். காயத்ரி தன்னுடைய இரண்டாவது பிரசவத்திற்காக தாய் வீடு வந்திருந்தாள். 


பொள்ளாச்சிக்கு அவனை அழைத்துச் சென்றிருந்த செந்தூரனும் தாரிகாவும் மகனை வீட்டிற்கு போகலாம் என்று எவ்வளவோ அழைத்தும் வரவில்லை, “போ, நான் வரமாட்டேன், அத்தையோட பாப்பா பார்த்துட்டு தான் வருவேன்” என்று அடம்பிடித்தான், தாரிகா செந்தூரனை முறைத்தாள். “என்னை விட உங்க பிள்ளைக்கு அவன் அத்தையை தான் பிடிச்சிருக்கு, இப்போ தான் ஜானகி அத்தையோட நிலைமை புரியுது” என்றாள் அலுப்புடன்.


“ஹனி! அப்போ நீ சீக்கிரமா அவன் கூட விளையாட ஒரு பாப்பாவை பெத்துகுடு, உன் கூடவே இருப்பான்” என்றான் செந்தூரன் கண்சிமிட்டி


தாரிகா வெட்கத்துடன் தலை கவிழ, “அண்ணி, நீங்க போய் ஹனிமூன் கொண்டாடுங்க, நான் நேத்ரனை பார்த்துக்கிறேன்” என்றாள் காயத்ரி.


கதிரேசன் ஜானகி, தாத்தா பாட்டி என அனைவரும் அதையே வலியுறுத்தி கூறினர். “நிறைய பிரச்சனைகளுக்கு பின்னாடி சேர்ந்திருக்கீங்க. எங்காயாவது போயிட்டு வாங்க. நாங்க நேத்ரனை பார்த்துக்கிறோம்” என்று சொல்லவும் வேறு வழியில்லாமல் கணவனுடன் சென்றாள். முதலில் தாரிகாவின் விருப்பப்படி மணக்குள விநாயகரை இருவரும் தரிசித்து விட்டு, பாண்டிச்சேரியில் முதலில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு சென்றார்கள். 


“ஏன்டி குலுகுலுனு எங்காச்சும் போலாம்னா, பாண்டிச்சேரி கோவாவே போதும்னு சொல்லிட்டே” என்றான் செந்தூரன் அலுத்துக் கொண்டு


“இந்த அறையில் தான் நம்மோட முதல் சங்கமம் நடந்தது, ஆனா அது வேண்டா வெறுப்பா நடந்தது. அதனால தான் இங்கேயே வரலாம்னு சொன்னேன். இந்த அறையோட நினைவுகளை இனிமையானதா மாத்தறது உன்னோட பொறுப்பு” என்று சொல்லிவிட்டு வெட்கம் தாளாமல் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.


முதலில் அவள் சொல்ல வந்தது புரியாமல் விழித்தவன், “ஹனி என்று கூவிக் கொண்டு அவளை இருகைகளில் தூக்கி சுற்றினான், கணவனின் கழுத்தை மாலையாக கட்டிக்கொண்டு அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டாள். அவளை அப்படியே கட்டிலில் கிடத்தி அவள் மேல் படர்ந்தவன் மென்மையாக தலைமுதல் கால்வரை முத்தமிட தொடங்கி, உணர்ச்சிகளின் பிடியில் அவளின் மேல் தன் வன்மையை காட்ட தொடங்கி விட்டான். இருவரில் உடைகளும் விடுதலை பெற கணவன் கொடுத்த இன்பமான வலியை வெட்கத்துடன் ஏற்று தன்னை முழுவதுமாக அவனுக்கு கொடுக்க தயாரானாள் செந்தூரனின் தாரா!


வெட்கத்தாலும் செந்தூரனின் செய்கைகளாலும் அவள் உடலெங்கும் செந்தூரமாய் சிவந்திருந்தன. அவளை ஆசை தீர ஆட்கொண்டு தன் நெஞ்சின் மேல் அவளை போட்டுக் கொண்டான். தன் மாமனின் படர்ந்த மார்பில் தலைவைத்து படுத்து இருந்தவளுக்கு எங்கோ தொலைந்து போன குழந்தை வீடு வந்து சேர்ந்த உணர்வை தந்தது. ஆறு மாதங்களாக அவனை பிரிந்து தவித்து இருந்த நாட்களே அவளுக்கு ஒன்றை ஐயம் திரிபற ஒன்றை உணர்த்தி இருந்தது. அவளின் செந்தூரன் இல்லாமல் அவளால் இருக்க முடியாது என்பதுதான் அது. 


இனி எப்போதும் மறந்தும் கூட வழிமாறி மாமனை விட்டு செல்லவே மாட்டேன் என்று மனதிற்குள் நினைத்தபடி அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டு அவன் மார்பில் முத்தமிட்டாள். அவன் நெஞ்சுக்குள் புதைந்து கொள்பவள் போல அவளின் அணைப்பு மேலும் மேலும் இறுகி கொண்டே செல்லவும், அவளை தனக்கு கீழ் கொண்டு வந்து மீண்டும் தன் ஆளுமையை அவளிடம் காட்ட தொடங்கிவிட்டான் அவள் கணவன்.


வாரக் கணக்காக இரவு பகல் பாராது பொழுதை அறையிலேயே கழித்தவர்கள் பிறகு கோவா சென்று தங்களுக்குள் மனம் விட்டு பேசி சிரித்து கூடி மகிழ்ந்து இன்புற்று இருந்தனர். அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் காலைநீட்டி படுத்துக் கொண்டு தன் மேல் தன் மனைவியையும் சாய்த்துக் கொண்டான். கூச்சத்தில் நெளிந்தாள் பெண்ணவள், “மாமா என்ன இது? பொது இடத்தில்?” என்றவளிடம், “அங்கே பாருடி, யாரும் நம்மை கவனிக்கிற நிலையில் இல்லை” என்று சொல்லியவனின் பார்வை சென்ற இடத்தில் திரும்பி பார்த்தாள். காதல் ஜோடிகள் முத்தமிட்டு கொண்டிருந்தனர். முகம் சுளித்தபடி கணவனை முறைத்தாள். “ஏய் நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன் சும்மா என்னோடு சாய்ந்தவாறு உட்காரு அது போதும்” என்றான் பதறியபடி. 


அந்த மாலை நேரத்தில் கடற்கரை மணலில் செந்தூரனின் மேல் சாய்ந்தபடி அந்தி வான செந்தூரத்தை ரசித்தாள் தாரிகா. “அந்தி வான செந்தூரம் தான் நம் காதலின் சின்னம், உன் உடலை செந்தூரமாய் சிவக்க வைப்பதே இந்த செந்தூரனின் கைவண்ணம்” என்றான் அவள் காதில் ரகசியமாய். வெட்கத்துடன் அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்து கொண்டாள் பெண்ணவள். 


அவர்கள் வீடு வந்த சேர்ந்த போது சாரதாவும் சுபாஷூம் நேத்ரனை அவர்களின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்கள். பெற்றவர்கள் வந்ததும் வராததுமாக, “அப்பா எனக்கு தங்கச்சி பாப்பா வாங்கிட்டு வரத்தானே போனீங்க? எங்கே பாப்பா” என்று தேட ஆரம்பித்து விட்டான். இல்லை என்றதுமே அழத்தொடங்கி விட்டான். 


“யாருடா உனக்கு இப்படி சொன்னது?” என்று கேட்டான் செந்தூரன்


“நான் அப்பா அம்மா கிட்ட போகணும்னு அழுதேனா? அத்தை தான் நீங்க இரண்டு பேரும் எனக்காக தங்கச்சி பாப்பா வாங்கிட்டு வர போயிருக்கீங்கனு சொன்னாங்க” என்றான் மழலை மொழியில்


தலையை கோதிக்கொண்டு “நேத்ரா, பாப்பா அம்மா வயித்துக்குள்ள இருக்குடா, கொஞ்ச நாள் கழிச்சு தான் வருவாள்” என்று மகனை தூக்கி கொஞ்சினான்.


“ஹனிமூன் போய் வந்திறங்கும் போதே கர்ப்பமா அதெப்படிடா?” என்றான் கவின் நாடியில் விரலை வைத்து யோசித்தபடி.


“அது அப்படி தான்டா. தீயா வேலை செய்திருக்கேன் குமாரு!” என்றான் செந்தூரன் மனைவியை பார்த்து கண்சிமிட்டிக் கொண்டே.


வெட்கம் தாளாமல் தாரிகா உள்ளே ஓடி விட, சாரதாவும் சுபாஷூம் மகளின் பின்னால் சென்றார்கள். 


“ஏன்டா நீ மட்டும் இப்படி பொண்டாட்டியோட செகண்ட் ஹனிமூன் எல்லாம் போயிட்டு வர்றீயே, நண்பன்னு ஒருத்தன் பிரம்மச்சாரியா கல்யாணம் ஆகாமலே இருக்கானே, அவனுக்கு எதாவது நல்லது செய்வோம்னு தோணுதாடா உனக்கும் உன் குடும்பத்துக்கும்?” என்றான் கவின் பொய்யான கோபத்துடன்.


“மச்சி கல்யாணம் ஆகலைனு வேணா சொல்லு, பிரம்மச்சாரினு என்கிட்டயே சொல்லாதே” என்றான் செந்தூரமித்ரன் சீரியசாக.


“போடா, உன்னை எல்லாம் நம்புனா ஆகாதுனு தான் ஆபிசில் வேலை செய்யும் தீபிகா என்ற பெண்ணை பார்த்து வைச்சிருக்கேன். ஒழுங்கா நீயும் தங்கச்சியும் வந்து கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க” என்றான் கவின்.


“டேய் நாங்க ஹனிமூன் போன கேப்புல, இந்த வேலை தான் பார்த்திட்டு இருந்தியா” என்று முறைத்தான் செந்தூரன்.


“அண்ணாவை திட்டாதீங்க” என்றபடி கையில் காபியுடன் வந்தாள் தாரிகா. பின்பு அதை கவினிடம் நீட்டி, “அந்த பொண்ணையே உங்களுக்கு கல்யாணம் முடிச்சு வைக்கிறது என்னோட பொறுப்பு அண்ணா” என்றாள் புன்னகையுடன்.


செந்தூரன் நண்பனை முறைத்தாலும் அவன் காதலிக்கும் தீபிகாவின் குடும்பத்தை பற்றி விசாரித்து நண்பனுக்காக திருமணம் பேசி முடித்தான்.


சமீப காலமாக கவினுக்கு தீபிகாவின் அமைதியும் அடக்கமுமான தோற்றம் மிகவும் பிடித்து இருந்தது. அதே சமயம் புத்திசாலியாகவும் இருந்தாள். எனவே நேரிடியாக அவளிடம் சென்று தன் விருப்பத்தை சொன்னபோது தன் குடும்பத்தாரிடம் பேசும்படி சொல்லியிருந்தாள். அதன்படி கவின் நண்பனின் உதவியை நாடினான்.


தீபிகாவின் பெற்றோருக்கு செந்தூரமித்ரன் குடும்பத்தின் மேல் இருந்த மரியாதையால் உடனே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருந்தனர். செந்தூரனின் மொத்த குடும்பமும் முன்னின்று கவின் தீபிகாவின் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.


நண்பனுக்காக வீடு ஒன்றை வாங்கி திருமண பரிசாக அளித்தான் செந்தூரன். அன்றைய நிகழ்ச்சியில் கவினும் தீபிகாவும் மணமக்களாக இருந்தாலும் அனைவரின் பார்வையும் செந்தூரன் தாராவின் மேலேயே இருந்தது. அவன் “ஹனி ஹனி” என்று எப்போதும் அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தான். அவளோ “மாமா வந்தவங்களை போய் கவனிங்க, எதுக்கு என் பின்னாடியே வந்திட்டு இருக்கீங்க?” என்று செல்லமாக முறைத்தாள்.


“இந்த ஜூஸை குடிச்சா நான் ஏன்டி வரப்போறேன்? டயர்டா தெரியற பாரு? வயித்துல பிள்ளையை வச்சிட்டு இப்படி அலையணுமா? ஒரு இடத்தில உட்கார மாட்டியா நீ?” என்று பதிலுக்கு மனைவியை திட்டிக் கொண்டிருந்தான் செந்தூரன்.


“நீயும் தானே அலைஞ்சிட்டு இருக்க? நீ பாதி குடிச்சிட்டு தா, அப்போதான் நானும் குடிப்பேன்” என்று தாரா அலம்பல் செய்ய, அவளை பழரசம் குடிக்க வைத்தே ஆகவேண்டும் என்பதால் அவன் பாதி குடித்து அவளுக்கு மீதியை கொடுத்தான். 


இவர்களை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் முதல் மொத்த குடும்பத்தாரும் சிரித்துக் கொண்டிருந்தனர். “முதல்ல என் மகனுக்கும் மருமகளுக்கு திருஷ்டி சுத்தி போடணும். எல்லார் கண்ணும் அவங்க மேலேயே இருக்கு” என்றார் ஜானகி சாரதாவிடம்


ரஞ்சிதம் ஆச்சி, முத்து பாண்டியிடம், “ஏய்யா, நீயும் தான் கல்யாணம் கட்டி ஐம்பது வருஷமாச்சு, ஒரு நாளாவது ஜூஸ் கொண்டு வந்து கொடுத்திருக்கியா? பாருய்யா என் பேரனை… அவனை பார்த்து கத்துக்க” என்று நொடித்தார்.


“கிழவிக்கு ஆசைய பார்த்தியா?” என்று சுபாஷிடம் நக்கலடித்த முத்துபாண்டி, “அவன் பொண்டாட்டி மாசமா இருக்கா, அவன் தாங்கறான். நீ வேணா மாசமா ஆன பின்னாடி நானும் அவனை மாதிரியே உன்னை தாங்கறேன்” என்று கண்ணடித்தார்.


“கிழவனுக்கு குசும்ப பார்த்தியா?” என்று சொன்னாலும் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டார் ரஞ்சிதம் ஆச்சி. அங்கிருந்தவர்கள் இதை பார்த்து கொல்லென சிரித்தார்கள். 


குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். செந்தூரன் தன் தோளில் நேத்ரனை ஏந்திக் கொண்டு, மனைவியின் இடையை சுற்றி வளைத்தவாறு அவள் மேடிட்ட வயிற்றில் தன் கையை அழுத்தமாக வைத்திருந்தான். உள்ளேயிருந்த அவனின் இரண்டாவது மகவு தன் இருப்பை கால்களால் உதைத்து காண்பிக்க, அந்த சிசுவின் உயிர்ப்பையும் அசைவையும் தாயும் தந்தையுமாக இருவரும் ஒரு சேர உணர்ந்து தங்களுக்குள் அந்த இனிமையான சுகந்தத்தை விழிகளால் பரிமாறிக் கொண்டனர். அந்த காட்சி அப்படியே புகைப்படமாக எடுக்கப்பட்டது.


அவர்களின் அந்நியோன்யத்தை பார்த்த பெரியவர்கள் ஆனந்த கண்ணீருடன் அவர்களை மனதார வாழ்த்தினர்.


அத்தை மகளே ஆனாலும் காத்திருந்து தேடிக் கிடைத்த பொக்கிஷமான தன் காதல் மனைவியை கைகளில் வைத்து தாங்கினான் செந்தூரன் மித்ரன். தாரிகா தன் காதல் பார்வையாலும், அன்பாலும் அக்கறையாலும் ஏன் ஒவ்வொரு செய்கையாலும் தன் கணவனுக்கு ஒன்றை எப்போதும் உணர்த்திக் கொண்டே இருந்தாள். அது “செந்தூரா நானே உன் தாரா, நான் உனக்காக பிறந்தவள், என்றும் உனக்கானவள்” என்பது தான்! அன்பையும் காதலையும் அமுதசுரபியாக திகட்ட திகட்ட தன்னவனுக்கு வாரி வழங்கி கொண்டிருந்தாள்.


செந்தூரமித்ரன் தாரிகாவின் காதல் காவியத்திற்கு சான்றாக கைகளிலும் வயிற்றிலும் ஓவியங்களாக இரு பிள்ளைச் செல்வங்கள். அவர்கள் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுவோம்!!! நன்றி!!! 



(சுபம்)




Leave a comment


Comments


Related Post