இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 4 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 17-05-2024

Total Views: 16227

 அந்த குரலில் அவனின் வேதனை தெரிய அவனின் வாய்பொத்தியவள் 

   " சித்தி என்று சொல்லாத அத்தான் அதை அத்தை கேட்டா அடுத்த நிமிடம் உயிரை விட்டுடுவாங்க.  பிளிஸ் அத்தான் எனக்காக எப்பவும் அத்தையை சித்தி என்று சொல்லக்கூடாது"  என்றவள் எம்பி அவனுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக  நெற்றியில் முத்தம் கொடுக்க நினைக்க முடியாமல் போனது. 

   அவனின் உயரத்திற்கு மார்பளவு வரையே இருந்தாள் கயல்விழி. 

    அவள் எம்பியதை பார்த்தவன்" என்னடி பண்ணுற" என்றான். 

   " இப்படித்தான் நெட்டை கொக்கு மாதிரி வளருவதா" என்றவள் அவனின் நீண்ட தாடியை பிடித்து இழுக்க அது தந்த வலியில் 

     "ஆஆ..." என்று அலறி அவளின் கையை தட்டிவிட்டான். 

    "என்னடி பண்ணுற  பைத்தியம் மாதிரி" என்றான். 

    "நான் ஒன்னும் பைத்தியம் இல்லை நீ தான் அப்படி இருக்க பாரு தாடி மீசையில் உன்முகமே தெரியலை தலைமுடி அதுக்கு மேல  பொம்பளைங்க மாதிரி இப்படி முதுகு வரை வளர்த்து இருக்க"  என்று முகச்சுளிப்போடு கூறினாள். 

   "இதுதான்டி இப்ப  ஸ்டைல்" 

   " எவன் சொன்னான்" என்றாள் கோபமாக 

   " ஜெயில் வார்டன்" சொன்னார்.  

    அதை கேட்டவளின் முகம் மாறியது  "அத்தான் நிஜமாகவே ஜெயிலில் தான் இருந்தீங்களா?..." என்றாள். 

     ஒரு பெருமூச்சு விட்டவன் "சந்தேகமாக இருந்தால் அட்ரஸ் தரேன் போய் விசாரிச்சுட்டு வரையா" என்றான். 

    அவள் கண்கள் மீண்டும் கலங்குவதை கண்டவன் அவளை திசை திருப்ப 

    "ஏன்டி அப்படி எம்பின குள்ளவாத்து" என்று அவளுக்கு பிடிக்காததை கூறினான். 

     அதில் ரோஷம் வந்தவள்  "யாரு குள்ளவாத்து  ஐந்தோகால் அடி உயரம் நீதான் இப்படி பனை மரத்தில் பாதி இருக்கிற" என்றவள் அவன் பாதத்தில் ஏறி நின்று அவனின் பின்னந்தலையில் கை விட்டு குனிய செய்தவள் அவனின் கன்னத்தில் பற்கள் பதிய கடித்தாள். 

   "ஆஆ..."  என்று அலறியவன் அதுவரை அவனை அனைத்து இருந்தவள் கைகளை விலக்கி ஓட முனையவும் அவனும் அதுவரை தன் கைகளை பின்புறம் கோர்த்து இருந்தவன் சட்டென்று ஓட நினைத்தவளை பிடித்து தன் ஒரு கையால்  அணைத்து இருந்தான். 

    "இரட்சசி" என்று அவள் கடித்த இடத்தை மறுகையால் தேய்த்தவன் "எதுக்குடி கடிச்ச" என்றான். 

     "நீ  குள்ளவாத்து என்று சொன்னதால் கடித்தேன்."

     "அப்படியா குள்ளவாத்து"  என்று மீண்டும் சீண்ட அதில் இன்னும் கோபம் வர அவனை வேகமாக இழுத்து மறுகன்னத்தை கடிக்கப்போக அதற்காகவே காத்திருந்தவன்  போல அவளின் முகத்தை பற்றி அவள் கடிக்க திறந்து உதடுகளில் தன் முரட்டு இதழ்களை பூட்டினான். 

    இதை எதிர்பார்க்காதவள் அதிர்ந்து பின் அவனிடம் இருந்து விலக நினைக்க அவனின் பிடியில் சிறிது கூட விலகமுடியாமல் அவனின் உதடுகள் செய்த மாயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மயங்கியவள் பின் அவனுக்கு இசைந்து போனாள்.  தன் பத்து வருட பிரிவின் தவிப்புகளை எல்லாம் ஒரே முத்தத்தில் போக்கிக்கொண்டு இருந்தான் கார்த்திகேயன். 

    நீண்ட நேரம் ஆகியும் நண்பன் வராமல் போகவே அவனை காண வந்த முரளியும் இன்னொரு நண்பன் 
அன்பழகனும் பின்புறம் வந்தவர்கள் கண்ட காட்சியில் மலைத்து நின்று பின் அன்பழகன் கார்த்தி என்று அழைக்க போக வேகமாக அவன் வாய் பொத்தி உள்ளே இழுத்துச்சென்றான் முரளி. 

    உள்ளே சென்றதும் முரளி கை எடுத்ததும் 

    "டேய் என்னடா பண்ணிட்டு இருக்கான் பட்டபகலில் யாராவது பார்த்தால் என்னாகும்" என்றான் அன்பழகன். 

    "யாரும் பார்க்க முடியாதுடா சுத்தி வேலி இருக்கிறதால் யாருக்கும் தெரியாது" என்றான். 

    "டேய் அதுக்குன்னு இப்படியா?..." என்றான் அன்பழகன்.   அவனிடம் பேசி சமாதானம் செய்து வீட்டில் இருப்பவர்கள் பின் பக்கம் போகமுடியாது படி காவல் காத்து நின்றனர் நண்பர்கள். 

   " அடப்பாவி வந்த உடனே இப்படி  எதுஎதுக்கே காவல் காக்க வச்சுட்டானே இதில் இதுக்கு மேல பண்ணப்போறதுக்கு எல்லாம் நம்ப தான் பலியாடு" என்று புலம்பினான் அன்பழகன். 

    அங்கே தோட்டத்தில் அவளின் முத்த யுத்தம் நடத்தியவர்கள் மூச்சுக்காற்றுக்காக விலகி மீண்டும் முத்தம் இடப்போனவனை இடையில் கை வைத்து தடுத்தாள் கயல்விழி. 

   " ஏய் கை எடுடி" என்றான் கார்த்திக்கேயன்.. 

   " அத்தான் என்ன பண்ணுற இதெல்லாம் தப்பு" என்றாள். 

    "எதுடி தப்பு நானும் எவ்வளவு நேரம் தான் கை கட்டிட்டு இருப்போன்  சும்மா சும்மா வந்து கட்டிப்பிடிச்சு உசுப்பேத்தி விட்டவள் நீ தான்"  என்றான். 

    "என்ன அத்தான் இப்படியெல்லாம் பேசுற சின்ன வயசிலும் இப்படி தான் இருப்பேன்" என்றாள். 

  " அடியேய் அது தான் நீயே சொல்லிட்ட சின்ன வயசு என்று இப்ப வளர்ந்துட்டோம் இனிமே இப்படி வந்து வந்து கட்டிப்பிடிச்ச நான் சும்மா இருக்கமாட்டேன்.  இனிமேல் அத்தான் அத்தான் என்று தேடி வராதே இதுதான்  நான் உன் கிட்ட அமைதியா பேசுற கடைசி நாள் இதுக்கு மேல் நீயும் அந்த குடும்பத்தை சேர்ந்தவங்களே என்னை தேடி வந்தா அப்புறம் என்னை வேறுமாதிரி தான் பார்ப்பிங்க"  என்றான் கோபமாக 

    கிறக்கமான குரலில் பேச ஆரம்பித்தவன் போக போக பேச்சில் கோபம் அதிகமாக  இருந்தது. 

    அதனை கண்டவள் அவனிடம் இருந்து விலகி நின்றாள்.

    "சொன்னது புரிந்து இருக்கும் நினைக்கிறேன் இங்கிருந்து போ" என்று கூறி பழைய படி திரும்பி நின்று கொண்டான். 

     இவ்வளவு நேரம் நன்றாக தானே பேசினார் என்னாச்சு என்று புரியாமல் நின்றாள் கயல்விழி. 

    அவள் அங்கிருந்து சொல்லாமல் இருப்பதை உணர்ந்தவன் திரும்பி "இன்னும் எதற்கு இங்கு நிற்கிறாய் போ" என்றான் அதட்டல் குரலில் 

    அவனின் அதட்டல் குரல் பயத்தை தர வேகமாக அங்கிருந்து கலங்கிய விழிகளுடன் சென்றாள். 

   முரளி அன்பழகன் இருவரும் அவளின் கலங்கிய கண்களை கண்டவர்கள்  என்னாச்சு இப்ப தான் அப்படி ஓட்டிட்டு இருந்தாங்க அதுக்குள்ள கண்கலங்க வருது கயல் என்று இருவரும் பார்வையால் பேசிக்கொண்டவர்கள் அருகில் வந்த கயலிடம் 

    "கயலு என்னாச்சு" என்றான் அன்பழகன். 

    கண்களை துடைத்துக்கொண்டே "ஒன்னும் இல்ல அண்ணா நான் கிளம்பறேன்" என்றவள் முரளியை பார்த்து 

    "அண்ணா அத்தானை பத்திரமாக  பார்த்துக்கங்க" என்று கூறிவிட்டு பதிலை கூட எதிர்பார்க்காமல் வேகமாக வெளியே சென்று தன் ஸ்கூட்டியில் கலங்கிய விழிகளை துடைத்துக்கொண்டே ஓட்டிச்சென்றாள். 


    முரளியும் அன்பழகனும் கார்த்திக்கேயனிடம் சென்றனர்.  அவனே எங்கே வெறித்துக்கொண்டு இருந்தான். 

   " டேய் கார்த்தி என்னடா கயலு அழுதிட்டு போகுது  என்னடா சொன்ன கொஞ்ச நேரத்திற்கு முன் வேறுமாதிரி பார்த்தேன்" என்றான் அன்பழகன். 

    நண்பர்கள் பக்கம் திரும்பிய கார்த்திகேயன் முகமும் கலங்கி இருந்தது. 

    "கார்த்தி என்னாச்சுடா" என்றனர் இரு நண்பர்களும் ஒரே நேரத்தில் கேட்டனர். 

    தன் கண்ணில் இருந்து இரு துளிகள் வெளியேற அதை துடைத்தவன் " ஒன்னுமில்லைடா" என்றான். 

    "டேய் என்னடா கண்ணுல தண்ணி வருது ஒன்னும் இல்லை என்று சொல்லுற" என்றான் அன்பழகன். 

    "கயலு எதனா சொல்லுச்சாடா" என்றான் முரளி. 

    "ஊம்...  அதுவும் தான்" என்றான். 

    "அதுவும் தான் என்றால் வேற ரீசனும் இருக்கா" என்றான் முரளி. 

   " ஆம்" என்று தலையாட்டினான் கார்த்திகேயன். 

   " டேய் ஒழுங்கா என்ன என்று சொல்லு விடியற்காலையில் எழுப்பி வந்து என்னென்னவே பேசின, அப்புறம் பார்க்கக்கூடாதை எல்லாம் பார்த்து இருக்கேன் இப்பவும் எதுவே புதிர் மாதிரி பேசிட்டு இருக்க சொல்லித்தொலையேன்டா இன்னும் பிழைப்பு பார்க்க போகனும்" என்று புலம்பினான் அன்பழகன். 

   " டேய் அன்பு கொஞ்சநேரம்  சும்மா இருடா" என்ற முரளி கார்த்தியை அழைத்து சென்று அங்கிருந்த மரத்தின் கீழ் இருந்த கயிற்று கட்டிலில் உட்கார வைத்து விட்டு  "இப்ப சொல்லுடா எதுக்கு கண்ணுல தண்ணி வந்தது" என்று கேட்டான். 

   " இல்லடா அப்பா அப்படி நெஞ்சை பிடித்துக்கொண்டு உட்கார்ந்ததும் பயந்திட்டேன்"  என்றான் கார்த்தி. 

   "இதுக்குத்தான் இதெல்லாம் வேண்டாம் எல்லாத்தையும் மறந்து விட்டு வீட்டுக்கு போய் சந்தோஷமா இருடா என்று சொன்னேன்" என்றான் கோபக்குரலில் அன்பழகன். 

    "எப்படிடா நான் பட்ட அவமானம் வலி எல்லாத்தையும் மறந்து அந்த வாசற்படியில் கால் வைப்பது.  மத்தவங்க நம்பவில்லை என்றால் பரவாயில்லை என்னை பெற்றவர் என்னை நம்பவில்லை. 

   ஒரே ஒரு முறை என்ன நடந்தது என்று கேட்டு இருந்தா இப்படி அனாதை மாதிரி இருந்து இருக்கமாட்டேன்" என்றான் கலங்கிய குரலில் கார்த்தி. 

  " யாரோ செய்ததற்கு நீ பலிகாடா ஆயிட்ட, மாமா பாவம்டா எவ்வளவு கம்பீரமாக இருந்தவர் குற்றயுணர்ச்சியில் தன்னைத்தானே வறுத்திட்டு எல்லாவற்றில் இருந்தும் ஒதுங்கிட்டார்டா.  இதுக்கு மேலேயும் தண்டனை வேண்டாம் வீட்டுக்கு போடா மாமா சந்தோஷப்படுவார்" என்றான் அன்பு. 

    கார்த்தி அமைதியாக இருக்க 

   " நீ என்ன சொன்ன கார்த்தி அவங்க எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்காங்க என்று புரிய வச்சுட்டு வீட்டுக்கு போறேன் என்று சொன்ன ஆனால் இப்ப தாத்தா வீட்டுக்கு போறேன் என்று சொல்லி இருக்க ஏன் கார்த்தி"  என்றான் முரளி. 

    கார்த்தி அதற்கும் அமைதியாக இருந்தான். 

  "டேய் அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லேன்டா ஏன் உன் பிளானை மாற்றின இன்னும் அவங்களை கஷ்டபடுத்த எதாவது பிளான் போட்டு இருக்கியா?..."  என்றான் கோபக்குரலில் அன்பு. 

    தன் கை விரல்கள் பார்வை பதித்துக்கொண்டு இருந்தவன் சிறு மௌனத்திற்கு பிறகு "கொலைகாரனாக அந்த வீட்டு வாசற்படியை மிதிக்க விருப்பம் இல்லை" என்றான். 

   அதை கேட்ட அன்பு  "டேய் உன்னை" என்று கையை ஓங்கிக்கொண்டு அடிக்கப்போக  

    முரளி வேகமாக அவனை தடுத்து நிறுத்தியிருந்தான். 

    "டேய் விடுடா நாலு அரை விட்டால் இப்படி லூசு மாதிரி பேசமாட்டான். வந்ததில் இருந்து நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் பத்து வருஷம் எல்லாரும் கஷ்டப்பட்டாச்சி இதுக்கு மேல அவங்களுக்கு கஷ்டம் வேண்டாம் என்றேன்  கேட்டானா?.." 

   " அவங்க தப்பை உணர வைக்கனும் அப்புறம் போறேன் என்று சொன்னான் அப்பவும் 
அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னால் கேட்கலை.  பத்து வருஷம் ஊர் ஊராக சுற்றிட்டு இருந்தேன் சொல்லுடா என்றேன் அதையும் கேட்கலை.   இப்ப வீட்டுக்கு போடா என்றால் கொலைகாரனாக போகப்பிடிக்கவில்லை என்கிறான்" என்று கோபத்தில் பேசிக்கொண்டு இருந்தான் அன்பழகன். 

    அவன் அருகில் எழுந்து வந்த கார்த்தி " சாரிடா மச்சான் நீ சொன்ன அப்ப கேட்கலை ஆனால் அப்பா நெஞ்சை பிடிச்சிட்டு உட்கார்ந்த பிறகு தான் தெரிந்தது  அப்பா எவ்வளவு வேதனை படுறார்" என்று கலங்கிய குரலில் பேசினான் கார்த்தி. 

   "அப்ப உடனே மாமாகிட்ட சொல்ல வேண்டியது தானடா சும்மா சொன்னேன் அப்பா  ஊர் ஊராக சுற்றிட்டு தான் இருந்தேன்" என்று அன்பு கேட்டான். 

   " இல்லைடா அதுக்கு மேல பேசினால் அப்பாவுக்கு எதாவது ஆகிடுமே என்று பயம் வந்திடுச்சு அதான் அவரை பேச விடாமல் தடுத்து போகச்சொன்னேன்" என்றான் கார்த்தி. 


   " என்னடா முட்டாள் மாதிரி பேசற சொல்லி இருந்தா மாமா சந்தோஷப்பட்டு இருப்பார் இல்லையா?.." 

    "இல்லடா அப்படி மாற்றி பேசியிருந்தாலும் நம்பி இருக்கமாட்டார் தனக்காக மகன் மாற்றி சொல்லுறான் என்று நினைப்பார்.  அது இன்னும் அவர் மனசை பாதிக்கும்" என்றான் கார்த்தி. 

   " அப்ப நடந்ததை எல்லாம் சொல்லிடுடா அப்ப நம்புவார்" என்றான் அன்பு. 

   " இல்லைடா அது சொன்னா இன்னும் உடைந்து போவார்" என்றான் கார்த்தி. 

   " என்னடா சொல்லுற கார்த்தி" என்றனர் இரு நண்பர்களும். 

   " ஆமாம்டா இப்ப சொன்னா ஏற்கனவே மகன் செய்யாத தப்புக்கு தண்டனை கொடுத்து இருக்கோம் என்று நினைப்பவருக்கு அவர் மேல் நம்பிக்கை இல்லாமல் போனதற்கு இன்னும் வறுத்தப்படுவார்டா நான் என்ன சொல்லுறேன் என்று உங்களுக்கு புரியுதா?.." என்றதும். 

   முரளி அன்பழகன் இருவரும் தலையாட்டினர். 



Leave a comment


Comments


Related Post