இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே - 10 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 17-05-2024

Total Views: 11405

இதயம் - 10

மயில்சாமி, அஞ்சனா மற்றும் வாசு மூவரும் விமான நிலையத்தில் நின்றுக் கொண்டிருக்க பரத்தும் பெட்டியுடன் வந்து நிற்க மயில்சாமி கணேஷ்ஷை பார்த்ததும் பரத் எங்கே வேலை செய்கிறான் என்று கேட்கவும் வாசு "இசை ஸ்டார்ஸ் ஹோட்டல்ல மேனேஜர்ரா வேலை செய்றான்" என்று கூறினான். மயில்சாமி ஹோட்டலின் பெயரை கேட்டதும் அதிர்ந்து பார்த்தார். "ஏன்" என்று வாசு கேட்க மயில்சாமி "ஒன்னும் இல்லை கிளம்பலாம்" என்று கூறி மூவரும் உள்ளேச் சென்றனர். 'ஒரு மேனேஜரை விஐபி டிக்கெட்ல கூட்டிட்டு போற அளவுக்கு யாழிசை வாசுவோட தம்பிய நம்பறாளா' என்று நினைத்தவாறு விமானத்தில் அமர்ந்திருந்தார். 

பரத் விமானத்தில் அமர்ந்ததும் எதிரில் அமர்ந்திருந்த யாழிசையிடம் "ஏன் மேடம் என்னையவும் கூட்டிட்டு போறிங்க" என்று கேட்டான். "உன்னோட ஹெல்ப் எங்களுக்கு வேணும் பரத் ... எங்க இரண்டு பேரால முடிக்க முடியும்ன்னு தோனல சோ உன்னையும் கூட்டிட்டு போறன் ... கணேஷ் அங்க எல்லாத்தையும் பாத்துப்பான்" என்று கூறினாள். "அதுக்கிள்ளை மேடம் ... என்னை நீங்க ஏன் இவ்வளவு நம்பறிங்கன்னு எனக்கு தெரியனும்" என்று பரத் கூற யாழிசை "உன் அண்ணனால தான் நா உன்னை நம்பறன்" என்று கூறினாள். "என் அண்ணனை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா" என்று பரத் ஆச்சரியத்துடன் கேட்டான். "உங்க அண்ணனோட ஜூனியர் நான்" என்று யாழிசை கூற பரத் "ஆனா எங்க அண்ணனுக்கு உங்களை அடையாளம் தெரியலையே" என்று சந்தேகமாக கேட்டான். "நா காலேஜ் ஜாயின் பன்னப்போ உங்கண்ணா தார்ட் ஈயர் படிச்சிட்டு இருந்தார். காலேஜ்ல நுழைஞ்சதுமே வாசு அப்படி வாசு இப்படின்னு ஆஹா ஓஹோன்னு சொன்னாங்க ... எல்லாரும் சொல்லவும் அவரை பாக்கனுன்னு ஆசை வந்தது பாத்தன் ... எல்லாரும் சொல்லி கேட்டதை விட ரொம்ப நல்லவரா இருந்தாரு ... நீ தினமும் அவர்க்கு சாப்பாடு எடுத்துட்டு வர்ரத பாத்திருக்கன்" என்று யாழிசை கூற பரத் "ஓஓஓ" என்றதோடு நிறுத்திக் கொண்டான். அதற்கு மேல் ஏதேனும் கேட்டால் யாழிசை மேல் உரிமை எடுத்துக் கொண்டதாக நினைத்து தன்னை தவறாக நினைத்து விடுவாரோ என்று அமைதியாக அமர்ந்திருந்தான். யாழிசையே பேச்சை தொடங்கினாள். 

"உனக்கு என் கிட்ட கேக்கனுன்றத கேளு பரத்" என்று யாழிசை கூற "இல்லை மேடம் அண்ணனை இவ்வளவு அப்சர்ப் பன்னி இருக்கிங்களே" என்று நிறுத்த யாழிசை "லவ்வான்னு எல்லாம் தெரியாது ஆனா உங்க அண்ணனோட ஆட்டிட்யூட், பொறுமை, எப்பவும் சிரிச்சிட்டே எல்லாத்தையும் கடந்து போற பக்குவம், வாழ்க்கையோட புரிதல் இதெல்லாம் என்னை ரொம்ப இன்ஸ்பையர் பன்னுச்சி ... உதட்டுல மில்லிமீட்டர் அளவு சிரிப்பு தெரிஞ்சா கூட எங்க என்னை ஒருத்தர் நெருங்கி வந்துருவாங்களோன்னு பாத்து பாத்து சிரிப்பை மறைச்சிகிட்டு வாழ்ந்தன் ... ஆனா என்னோட கட்டுப்பாட்டையும் மீறி சில சமயம் நா உன் அண்ணனோட செயலை பாத்து சிரிச்சிருவன் ... மொத்தமா சொல்லனுன்னா உன் அண்ணன் என்னோட இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம் ... நா நிறைய எமோஷன்ஸ்ஸ கட்டுப்படுத்தற யுக்திய அவரை பாத்து தான் கத்துகிட்டன் ... நான்தான் அவரை பாத்திருக்கன் அவர் என்னை பாத்ததில்லை... என்னை மட்டும் இல்லை காலேஜ்ல எந்த பொண்ணையுமே பாத்ததில்லை" என்று கூறினாள். "ஆனா எப்படி அஞ்சனாவோட வளையில விழுந்தார்ன்னு எனக்கு சுத்தமா தெரியல" என்று யாழிசை கூற பரத் "எனக்கும் தான்" என்று கூறினான். 

"எனக்கு ப்ரண்ட்ஸ்ன்னு யாரும் இருந்ததே இல்லை பரத் ... இருந்ததில்லைன்றத விட இருந்தா என்னோட சீக்ரெட்ஸ் எல்லாம் சொல்லனுமான்ற பயத்துல நா நெருங்க விட்டதில்லைன்றது தான் உண்மை ... இத்தனை வருஷமா அண்ணனோட அரவணைப்புலே இருந்ததுனால அண்ணன் மட்டுமே என் ப்ரண்ட் ... இப்போ உன் கிட்ட எல்லாத்தையும் நம்பிக்கையா சொல்லலான்னு தோனுது  அண்ணன் இல்லாதப்போ ரொம்ப லோன்லியா இருக்கு ... என் கூட ப்ரண்ட்டா இருப்பியா" என்று யாழிசை கெஞ்சலுடன் கேட்கவும் பரத் தன்னை தானே கிள்ளி உண்மை தானா என்று பார்த்துக் கொண்டான். யாழிசை இதுவரை கெஞ்சலுடன் பேச்சென்ன பார்வை கூட பார்த்திட்டதில்லை. இன்று தன்னிடம் கெஞ்சலுடன் என்று நினைக்கையிலே அவனிற்கு மறுக்கத் தோன்றவில்லை. "என்ன மேடம் நீங்க ... நம்ம இப்ப இருந்து ப்ரண்ட்ஸ்" என்று பரத் கூற யாழிசை புன்னகையுடன் அவனிடம் தன்னுடைய மறு உருவமான அதிக பேசும் குறும்புக்கார யாழிசையின் முகத்தை தடையின்றி காண்பித்து பரத்தை ஆச்சர்யத்தில் திக்கு முக்காட வைத்தாள். 

அதன் பின் இருவரின் விமான பயணமும் இருவரின் சிறுவயது அனுபவங்களை பரிமாறிக் கொள்வதில் கழிந்தது. முதலில் சிறிது தயக்கத்துடன் பரத் பேச்சை தொடங்கினாலும் பத்து மணி நேர பயணத்தில் அவனும் இலகுவாய் யாழிசையிடம் பேச்சை தொடங்கினான். அதிகமாக யாழிசையின் பொக்கிஷ நினைவுகள் எல்லாம் அவினாஷ்ஷை சுற்றியே இருந்தது. ஆனால் பரத்தின் சிறுவயது பள்ளி கல்லூரி நண்பர்கள் மட்டுமல்ல அவனின் பாட்டி ஊர் பற்றின நிறைய நிகழ்வுகள் நிறைந்திருந்தது. அவை அனைத்தையும் ஒரே பயணத்தில் கூறி விட முடியாதே. இருவரும் ஒரே பயணத்தில் பேசி பேசியே நட்பை பலப்படுத்திக் கொண்டனர். 

மறுபுறம் அஞ்சனா வாய் ஓயாமல் பேசிக் கொண்டு வர வாசு ஒரு கட்டத்தில் முடியாமல் உறங்கியே போனான். அஞ்சனா அது கூட அறியாமல் ஜெர்மனியில் இப்படி அப்படி என்று பெருமையாக பேசிக் கொண்டு வந்தாள். மயில்சாமியும் உறங்கி இருக்க வாசு அஞ்சனா தோளில் சாயும் போது தான் வாசு உறங்கிக் கொண்டிருப்பதையே அஞ்சனா உணர்ந்தாள். "வாசு" என்று அஞ்சனா கோபத்தில் வாசுவின் தலையை தள்ளி விட அதில் துள்ளி எழுந்த வாசு "அஞ்சு ப்லீஸ் எனக்கு தூக்கம் தூக்கமா வருது ... கொஞ்ச நேரம் தூங்கிக்றன்" என்று அஞ்சனா தோளில் மீண்டும் சாயப்போனவனின் தலையை பிடித்து தடுத்தாள். வாசு போடி என்று மறுபுறம் சாய்ந்துக் கொண்டான். 

ஜெர்மனியில் இறங்கும் முன்பு யாழிசை தன் புன்னகை முகத்தை மறைத்துக் கொண்டு பரத்திடம் "சிரிப்பு தெரியுதா" என்று அப்பாவியாய் கேட்டதும் பரத்திற்கு சிரிப்பு பொங்கி வழிந்தது. "சிரிக்காத மேன் சொல்லு" என்று யாழிசை சினுங்கலுடன் கேட்கவும் "இல்லைங்க மேடம் ... சிரிப்பே தெரியல .. ரொம்ப கடுமையா கொடுமையா இருக்கிங்க" என்று பரத் கூற யாழிசை அவனை முறைத்தவாறே இறங்கினாள். ஒருபுறம் யாழிசையும் பரத்தும் சிரித்து பேசியவாறே ட்ராலியை தள்ளிக் கொண்டு வர மறுபுறம் அஞ்சனாவின் கைப்பை முதற்கொண்டு அணைத்தையும் ட்ராலியில் வைத்து தனியாளாய் தள்ளிக் கொண்டு வாசுவும் அவன் கை பிடித்தவாறு அஞ்சனாவும் மயில்சாமி கைப்பேசியில் யாருடனோ பேசியவாறும் வெளியில் வந்தனர். பரத் தன் அண்ணனை பார்த்து கை காட்ட அதற்குள் யாழிசை ட்ராலியை வேறுபுறம் தள்ளிக் கொண்டு நகரவும் பரத்தும் அங்கிருந்து நகர்ந்தான். வாசு தன் தம்பி வெறும் கையுடன் நடப்பதை பார்த்து தன் நிலமையையும் பார்த்து சலித்துக் கொண்டான். 

அவினாஷ் ஏற்கனவே யாழிசைக்காக காத்திருக்க யாழிசை தன் அண்ணனை பார்த்ததும் அனைத்தையும் அப்படியே விட்டு வேகமாக ஓடிச் சென்று தன் அண்ணனை அணைத்துக் கொண்டாள். "எப்படி டா இருக்க" என்று பாசமாக தானே கதி என்று ஓடி வந்து பாசமாக தன் நெஞ்சில் தஞ்சம் புகுந்திருந்த தங்கையின் முதுகை தடவிக் கொடுத்தவாறே கேட்டான் அவினாஷ். "நீ இல்லாம சோகமா இருக்கன்" என்று யாழிசை கூற அவினாஷ் புன்னகைத்தான். பரத்தை பார்த்ததும் அவினாஷ் "உன்னையும் கூட்டிட்டு வந்துட்டாளா" என்று கேட்டான். "என்னோட புது ப்ரண்ட்" என்று யாழிசை தன் அண்ணனின் ஒரு பக்க அணைப்பில் நின்றவாறே பரத்தை கூற அவினாஷ் "போச்சிடா .. இனிமே பரத்தோட நிலமை அவ்வளவு தான்" என்று பொய்யாய் வருத்தத்துட கூற யாழிசை தன் அண்ணனை முறைத்தாள். பரத் புன்னகையுடன் அண்ணன் தங்கையை பார்த்துக் கொண்டிருந்தான். "எங்க வீட்ல அப்படியே ஆப்போஸிட் ... என் தங்கச்சி எங்களை அதிகமா போட்டு கொடுப்பா" என்று பரத் கூற அவினாஷ் "சரி கிளம்பலாம் வாங்க" என்று கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். மயில்சாமியும் அதே ஹோட்டலில் ரூம் புக் செய்திருந்தார். அவினாஷ் ஒரு அறையை மட்டும் யாழிசைக்காக புக் செய்து விட்டு "நீ என் கூட ஸ்டே பன்னிக்கோ பரத்" என்று கூறினான். "நா உங்க கூட" என்று பரத் தயங்க "ஏன் தனியா ஸ்டே பன்னனுமா ... சரி பரவால்ல இன்னொன்னு புக் பன்னிக்கலாம்" என்று அவினாஷ் பரத்தின் தயக்கம் புரிந்து மற்றொரு அறையை கேட்க போக அதற்குள் "மூனு ரூம்" என்று மயில்சாமி கூறி ரிஷப்ஷனிஸ்டிடம் கேட்டார். அவினாஷ் அவரை முறைத்தவாறு நிற்க யாழிசை அவரை பார்க்க விருப்பமே இல்லாமல் தன் அண்ணனிடம் இருந்து அறை சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டாள். பரத் "வேணா சார் நா உங்க கூடவே தங்கிக்கிறன் வாங்க போலாம்" என்று கூறி மயில்சாமியை கண்களாலே எரித்தவாறு நின்றிருந்த அவினாஷ்ஷின் கையை பிடித்து இழுத்தான். 

அதற்குள் அஞ்சனா கையில் இருந்து நழுவி உள்ளே வந்த வாசு பரத்தை பார்த்ததும் "பரத்" என்று அழைத்தான். தன் அண்ணனின் குரல் கேட்டதும் பரத் அவினாஷ்ஷிற்கு முன் சென்று நின்றான். "நீங்களும் இங்க தான் ஸ்டேவா ... நம்ம ஒரே ரூம்ம ஷேர் பன்னிக்கலாம் டா" என்று வாசு கூற பரத் "நா ஏற்கனவே" என்று தொடங்கிய பரத்தின் பேச்சை "உனக்காக ஸ்பெஷல் ரூம் அரேன்ஜ் பன்ன சொல்லி இருக்கன் வாசு ... நம்ம ஒன்னா ஸ்டே பன்னிக்கலாம்" என்று அஞ்சனா கூறி இடைமறித்தாள். 'இவ கூட ஒன்னாவா' என்று பதறிய நெஞ்சத்தை நீவி விட்ட வாசு "நீங்க இப்போ தனி ரூம் புக் பன்னலன்னா நா இப்படியே கிளம்பிடுவன்" என்று மிரட்டலுடன் கூற மயில்சாமி "மாப்பிள்ளை மாப்பிள்ளை கோச்சிக்காதிங்க மூனு ரூம் தான் புக் பன்னி இருக்கன் கவலைபடாம இருங்க" என்று கூறி சமாதானப்படுத்தினார். வாசு அவினாஷ்ஷை சினேகிதமாய் நோக்க அவினாஷ் வாசுவை ஒரு பார்வை பார்த்து விட்டு பரத்தை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான். 

சிறிது நேர ஓய்வுக்கு பிறகு அவினாஷ்ஷின் அறைக்கு யாழிசை வர மூவரும் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்தனர். யாழிசை மற்றும் பரத்தின் திடீர் பயணத்திற்கு காரணமே மயில்சாமி தான். தனியாக அவினாஷ் அப்பிரச்சனையை சரி செய்ய நினைத்து எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. அவனும் பல ஆலோசனைகளும் பல ரூல்ஸ்களையும் பேசி பார்த்தும் வேலைக்காததால் யாழிசைக்கு அழைத்து வேண்டாம் வேறு இடம் பார்ப்போம் என்று கூறினான். ஆனால் யாழிசையோ பிடிவாதமாய் அதே இடத்தில் தான் கட்டியாக வேண்டும் என்று ஒற்றை காலில் நின்று இன்று கிளம்பியும் வந்து விட்டாள். அவினாஷ் மற்றும் யாழிசை பார்த்து மற்றும் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்த இடத்தின் முதலாளி திடீரென மயில்சாமிக்கு இடத்தை கொடுப்பதாக கூறவும் தான் பிரச்சனை தொடங்கியது. 

"அந்த ஆளு ஏன் எப்ப பாரு நம்ம கிட்டையே வம்பு பன்னிகிட்டு இருக்கான் ... நம்ம எத தொடங்கனுன்னு நினைச்சாலும் குறுக்க பூந்து கெடுக்க பாக்கறதே அவனுக்கு வேலையா போச்சி ... அவன் ஊர அடிச்சி தின்றது எல்லாம் நல்லதாம் நம்ம நேர்மையா செய்றதெல்லாம் கெட்டதாம் பொறி உருண்டை மாதிரி இருந்துட்டு கேவலமா நடந்துக்றான் ச்சை" என்று யாழிசை கோபத்தில் பொறிந்தாள். பரத் அவளின் இந்த கோபப் பேச்சை கேட்டு ஆவென வாயை பிளந்தான். "நீங்க கோவத்துல இப்படி தான் பேசுவிங்களா" என்று பரத் கேட்க அவினாஷ் "அவனை மட்டும் பீப்ல கூட திட்டுவா ... அதை விடு ... இப்போ இந்த பிரச்சனை ... ஐ மீன் அந்த இடத்தை திரும்ப நம்ம அந்த ஓனர் கிட்ட பேசி நமக்கு கொடுக்க வைக்க என்ன பன்னலாம்" என்று கேட்டான். "நிறைய பேச்சுவார்த்தை தான் பன்னிட்டன்னு சொல்ரிங்களே அது செட் ஆகலன்றப்போ நம்மள அப்போஸ் பன்றவங்களை ஓட விட்றது தான் ஒரே வழி" என்று பரத் கூறினான். "அந்த அப்போஸ் டீம்ல தான் உன் அண்ணன் இருக்கானே" என்று யாழிசை கூற பரத் "நா போய் அண்ணன் கிட்ட உண்மைய சொன்னா அண்ணனே நம்ம பக்கம் நிக்க போறான்" என்று பரத் கூறினான். 

"இல்லை பரத் இது சரிவராது ... உனக்கும் உன் அண்ணனுக்கும் பர்சனல்லா சண்டை வர கூட வாய்பிருக்கு ... வாசு அவர் லவ் பன்ற பொண்ணு பக்கம் நிப்பாரா தம்பி பக்கம் நிப்பாரா ... பாவம் அவர்க்கும் இரண்டு பேரும் முக்கியம் அவர் மனசை நோகடிக்க வேணா" என்று அவினாஷ் கூற "ஐ காட் ஆன் ஐடியா" என்று யாழிசை கூற இரு ஆண்களும் ஆர்வமாக அவளை பார்த்தனர். 


Leave a comment


Comments


Related Post