இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -36 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 18-05-2024

Total Views: 24116

“ஊருக்கு போகும் போது ஏண்டி என்கிட்ட சொல்லிட்டுப் போகல?” என்று அதிகாரமாகவும், அழுத்தமாகவும் வந்து விழுந்தது வார்த்தைகள். 

'யாரை டி போட்டு இவ்வளவு உரிமையா பேசறான்?' என்று வெளியே திரும்பி இருந்தவள் சட்டென்று திரும்பி நந்தனைப் பார்க்க, அவன் இவளை தான் விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான். 

“உங்கிட்ட கேட்டேன்” 

“எ.ன்.கி..ட்டயா..!!!?” என்க. 

“இங்க ரெண்டுப் பேர் தானே இருக்கோம்.” 

“ஹா.. ஆமா..” என்றவளுக்கு எப்போது ஊருக்கு போகும் போது சொல்லாமல் போனாள் என்ற நியாபகமே இல்லையே, பிறகு எப்படி அவன் கேள்விக்கு பதில் சொல்லுவாள்? 

“எப்போ சொ.ல்.. லா.. ம” என்று வார்த்தையைக் கூட முடிக்க முடியாமல் திணறி விட்டாள். 

பாவம் அவளும் தான் என்ன செய்வாள். அவனைக் கண்டாலே அஞ்சி ஓடுபவளை பிடித்துக் கொண்டு ஏன் சொல்லாம போனன்னு கேட்டா? 

“நியாபகம் இல்ல” 

“இல்லை” என நிலா வேகமாக தலையை ஆட்ட, 

“ஆட்டற தலையை திருகிப் போட்டா, நியாபகம் வந்துடுமோ?” என்றான் சாதாரணமாக தன் கையை வளையத்தை திருகிக் கொண்டே. 

அவன் கூற்றில் சட்டென்று கழுத்தை பிடித்துக் கொண்டாள் நிலா, எங்கு சொன்னதை செய்து விடுவானோ என்ற பயத்தில். 

“எனக்கு உண்மையாவே நியாபகம் இல்ல” அவனிடம் குரலை உயர்த்திப் பேசக்கூட அச்சம். 

“என்னையாவது நியாபகம் இருக்கா?”அவன் கேட்ட தோரணையில் புரிந்து போனது மறக்க முடியாத அளவிற்கு ஏதோ செய்யப் போகிறான். 

“இருக்கான்னு கேட்டேன்?” 

“உங்களைய ம.. மறக்.. மறக்க முடியுமா..?” 

“அப்புறம் எப்படி சொல்லாம போனதை மட்டும் மறந்த?” 

'எப்போடா சொல்லாம போனேன் ஏண்டா என் உயிரை வாங்குற? ஏதோ அக்கியூஸ்டை கேள்வி கேக்கற மாதிரி கேட்டு இம்சை பண்ற?' என்று உள்ளுக்குள் கவுண்டர் கொடுத்தாலும், வெளியே பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். 

“இப்போவும் நியாபகம் வரல...“ 

“அது” என்றவளுக்கு பட்டென்று இல்லை என்று சொன்னால் அதற்கும் பேசுவானோ என்ற பயம். 

அவன் அமைதியாக இருக்க.. நிலா எப்போது? என யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். 

ஒரு தடவை, இரண்டு தடவை என்று சொல்லாமல் போனது நியாபகம் இருக்கும், இவள் தான் ஒருதடவைக் கூட சொல்லிவிட்டு சென்றது இல்லையே. பிறகு எப்படி எதை சொல்கிறான் எனக் கண்டுபிடிப்பது. 

“இன்னிக்கு முழுக்க உக்காந்து யோசி.” 

'யோசிச்சா மட்டும் நியாபகம் வந்துடுமா போடா..? நீ இந்தப் பக்க போனதும் உன்னைய பத்தி நினைக்கக் கூட மாட்டேன்டா சாமி கை எடுத்து கும்பிடறேன் விட்டுரு.' 

“என்ன யோசிப்பில?” 

“ம்ம்ம் ம்ம்” என பூம்பூம் மாடுப் போல் வேகமாக தலையை ஆட்ட அதைப் பார்த்த நந்தனின் கண்கள் இடுங்கியது. 

“உன்னைய அடிக்காம, என்னோட நாள் முடிஞ்சா நீ தனியா மாட்டுனதுக்கு அர்த்தம் இல்லாம போய்டுமே என்ன பண்ணலாம்?” என்று தாடையை தடவினான். 

“அப்படி எதுவும் பண்ணிடாதீங்க.” அவசரமாக நிலாவிடம் இருந்து வந்தது “ 

எனக்கு உடம்பு முழுக்க கொழுப்பா..? 

வேகத்தில் பார்த்தான்.

அவனைக் காணவே உடல் உதறுவது போல் இருக்க, "நான் பஸ்ல போயிக்கறேன்." என காரை விட்டு இறங்கி போனவளை சட்டென்று கையை பிடித்து விட்டான் நந்தன்.

இப்போது தான் முதல் முறை தொடுகிறான் என்றில்லை, பதிணைந்து வயது வரை அவளை அடிப்பதற்காக தொட்டவன் தான், ஆனால் அதன்பிறகு பல வருடங்கள் கடந்து இன்று தான் தொடுகிறான்.

குழந்தை குமறியானதால் அவனின் தொடுகையில் உடல் சிலிர்த்து அடங்கியது.

ரோமங்கள் அடங்கிய அவன் கை அவளிடம் குறுகுறுப்பை ஏற்படுத்தி இதுநாள் வரையிலும் உணராத உணர்வுகளை உடைபெடுக்க தூண்டியது.

“எங்கடி போற? இவ்வளவு நாள் ஓடி  ஓடி ஒளிஞ்சில, இனி இந்த நந்தன்கிட்ட உன்னோட பாச்சா பலிக்காது. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது." என்று நிலாவின் கையை சுண்டி இழுக்க,  அவன் இழுத்த வேகத்தில் அவன் மீதே சென்று விழுந்தாள்.

நந்தனின் கல்லு உடலில் மோதியதில் காயம் ஒன்று தான் ஆகவில்லை. நந்தனை நிமிர்ந்துப் பார்க்கக் கூட பயமாக இருந்தது. அவனின் பிடியில் இருந்து தன்னை விடுவிக்க போராடிக் கொண்டிருக்க,

“வியா” என அழுத்தமாக அழைத்தான். 

இந்த பேரைக் கேட்டு எத்தனை வருடமாகிறது இவன் மட்டும் தானே இப்படி அழைப்பான்.

“ம்ம்” என்றாள்.

என்ன நினைத்தானோ நிலாவை தள்ளி விட்டு காரை எடுத்தான்.

நீண்ட நாளுக்கு பின் இருவருக்கும் கிடைத்த தனிமை, நிலா எதுவும் யோசித்து வைக்கவில்லை. ஆனால் நந்தன் இந்த தனிமை அமைந்தால் என்ன என்ன பேச வேண்டும் என்பது முதலாக யோசித்து வைத்துவிட்டான்.

நந்தன் தள்ளியதும் வேகமாக நகர்ந்து கண்ணாடியுடன் பல்லிப் போல் ஒட்டிக் கொண்டாள்.

கார் வேகம் எடுக்க.. இதற்கு மேல் எதுவும் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தாலும் பயமும் போகவில்லை.

கார் நேராக காவல் ஆய்வாளர் அலுவலகத்தின் முன் நிற்க, இன்னைக்கு முழுவதும் தன்னை விடப் போவதில்லை என்று தெளிவாக புரிந்தது.

'இங்க எதுக்குடா நானு என்னைய பஸ் ஸ்டாண்ட்ல விட்டிருந்தா இந்நேரத்துக்கு வீடு போய் சேர்ந்து ஒரு குட்டி தூக்கமே போட்டுப்பேனே..' என்று மனம் கேவியது.

அவன் பிடித்த இடம் இன்னும் குறுகுறுக்க.. கையை அழுந்த தேய்த்துக் கொண்டாள்.

“கமிஷனரை பார்த்துட்டு வரேன் வெயிட் பண்ணு.” என்று சொல்லிவிட்டு செல்லும் ரகமா நந்தன்? காரை நிறுத்தியதும் வேகமாக இறங்கி சென்று விட்டான்.

அவன் போனதும் யுகிக்கு அழைத்தாள்.

“டேய் எருமை மாடே...” 

“என்ன பூனை எடுத்ததும் ஏக வசனத்துல வருது.”

“மண்ணாங்கட்டி.. உன் அண்ணனுக்கு நான் போற கம்பெனியில என்னடா வேலை.?”

“எனக்கு என்ன தெரியும்? அவனுக்கு ஆயிரம் வேலையிருக்கு, போற இடத்துக்குலாம் சொல்லிட்டாப் போறான், இப்போ எங்க இருக்க நீ?”

“உங்க அண்ணன் கார்ல தான்.”

“ஏன்? உன் வண்டி என்னாச்சி? இதுக்கு தான் இந்த யுகி பேச்சை கேக்கணும்னு சொல்றது. நான் வரேன்னு சொல்லும் போதே கூட்டிட்டுப் போக வேண்டியது தானே..”

“எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? உன் அண்ணன் இங்க வந்து உக்கார்ந்து இருப்பான்னு, அவனைப் பார்த்ததும் வண்டியை கீழே விட்டுட்டேன்...”

“அச்சச்சோ!! உனக்கு எதுவும் அடி இல்லையே.” எப்போதுமே யுகி நிலா விஷயத்தில் விளையாடவே மாட்டான். அவளுக்கு பிறகு தான் அனைத்தும் என்றப் பின்பு வண்டியாவது ஒன்னாவது.

“லைட்டா சரச்சிருச்சி வண்டியில தான் முன்னாடி லைட் கண்ணாடி எல்லாம் உடைஞ்சிப் போயிடுச்சி, அதான் உன் அண்ணன் கூட கூட்டிட்டு வந்துட்டான்.”

“அவன் கூட வரது உனக்கு பாதுகாப்பு தான், உடைஞ்ச வண்டியில வேற ஏதாவது பிரச்சனைன்னாலும் உனக்கு தெரியாது. அப்புறம் வழியில வந்து சிக்கிட்டு தவிப்ப..” 

“அதுக்குன்னு உன் அண்ணன் கூட தனியா வர சொல்றியா?” 

“அவன் என்ன சிங்கமா? புலியா? வண்டியில டிரைவர் இருக்கும் போது உன்னைய என்ன பண்ணிடுவான்?” என்றவனிடம் 'டிரைவர் இல்லை' என்று சொல்ல மனமில்லை




Leave a comment


Comments 1

  • F Fajeeha Fathima
  • 1 month ago

    Super interesting ah ituku continue ah ud podunga


    Related Post