இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -37 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 20-05-2024

Total Views: 21293

இப்போது தான் முதல் முறை தொடுகிறான் என்றில்லை, பதிணைந்து வயது வரை அவளை அடிப்பதற்காக தொட்டவன் தான், ஆனால் அதன்பிறகு பல வருடங்கள் கடந்து இன்று தான் தொடுகிறான்.

குழந்தை குமறியானதால் அவனின் தொடுகையில் உடல் சிலிர்த்து அடங்கியது.

ரோமங்கள் அடங்கிய அவன் கை அவளிடம் குறுகுறுப்பை ஏற்படுத்தி இதுநாள் வரையிலும் உணராத உணர்வுகளை உடைபெடுக்க தூண்டியது.

“எங்கடி போற? இவ்வளவு நாள் ஓடி  ஓடி ஒளிஞ்சில, இனி இந்த நந்தன்கிட்ட உன்னோட பாச்சா பலிக்காது. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது." என்று நிலாவின் கையை சுண்டி இழுக்க,  அவன் இழுத்த வேகத்தில் அவன் மீதே சென்று விழுந்தாள்.

நந்தனின் கல்லு உடலில் மோதியதில் காயம் ஒன்று தான் ஆகவில்லை. நந்தனை நிமிர்ந்துப் பார்க்கக் கூட பயமாக இருந்தது. அவனின் பிடியில் இருந்து தன்னை விடுவிக்க போராடிக் கொண்டிருக்க,

“வியா” என அழுத்தமாக அழைத்தான். 

இந்த பேரைக் கேட்டு எத்தனை வருடமாகிறது இவன் மட்டும் தானே இப்படி அழைப்பான்.

“ம்ம்” என்றாள்.

என்ன நினைத்தானோ நிலாவை தள்ளி விட்டு காரை எடுத்தான்.

நீண்ட நாளுக்கு பின் இருவருக்கும் கிடைத்த தனிமை, நிலா எதுவும் யோசித்து வைக்கவில்லை. ஆனால் நந்தன் இந்த தனிமை அமைந்தால் என்ன என்ன பேச வேண்டும் என்பது முதலாக யோசித்து வைத்துவிட்டான்.

நந்தன் தள்ளியதும் வேகமாக நகர்ந்து கண்ணாடியுடன் பல்லிப் போல் ஒட்டிக் கொண்டாள்.

கார் வேகம் எடுக்க.. இதற்கு மேல் எதுவும் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தாலும் பயமும் போகவில்லை.

கார் நேராக காவல் ஆய்வாளர் அலுவலகத்தின் முன் நிற்க, இன்னைக்கு முழுவதும் தன்னை விடப் போவதில்லை என்று தெளிவாக புரிந்தது.

'இங்க எதுக்குடா நானு என்னைய பஸ் ஸ்டாண்ட்ல விட்டிருந்தா இந்நேரத்துக்கு வீடு போய் சேர்ந்து ஒரு குட்டி தூக்கமே போட்டுப்பேனே..' என்று மனம் கேவியது.

அவன் பிடித்த இடம் இன்னும் குறுகுறுக்க.. கையை அழுந்த தேய்த்துக் கொண்டாள்.

“கமிஷனரை பார்த்துட்டு வரேன் வெயிட் பண்ணு.” என்று சொல்லிவிட்டு செல்லும் ரகமா நந்தன்? காரை நிறுத்தியதும் வேகமாக இறங்கி சென்று விட்டான்.

அவன் போனதும் யுகிக்கு அழைத்தாள்.

“டேய் எருமை மாடே...” 

“என்ன பூனை எடுத்ததும் ஏக வசனத்துல வருது.”

“மண்ணாங்கட்டி.. உன் அண்ணனுக்கு நான் போற கம்பெனியில என்னடா வேலை.?”

“எனக்கு என்ன தெரியும்? அவனுக்கு ஆயிரம் வேலையிருக்கு, போற இடத்துக்குலாம் சொல்லிட்டாப் போறான், இப்போ எங்க இருக்க நீ?”

“உங்க அண்ணன் கார்ல தான்.”

“ஏன்? உன் வண்டி என்னாச்சி? இதுக்கு தான் இந்த யுகி பேச்சை கேக்கணும்னு சொல்றது. நான் வரேன்னு சொல்லும் போதே கூட்டிட்டுப் போக வேண்டியது தானே..”

“எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? உன் அண்ணன் இங்க வந்து உக்கார்ந்து இருப்பான்னு, அவனைப் பார்த்ததும் வண்டியை கீழே விட்டுட்டேன்...”

“அச்சச்சோ!! உனக்கு எதுவும் அடி இல்லையே.” எப்போதுமே யுகி நிலா விஷயத்தில் விளையாடவே மாட்டான். அவளுக்கு பிறகு தான் அனைத்தும் என்றப் பின்பு வண்டியாவது ஒன்னாவது.

“லைட்டா சரச்சிருச்சி வண்டியில தான் முன்னாடி லைட் கண்ணாடி எல்லாம் உடைஞ்சிப் போயிடுச்சி, அதான் உன் அண்ணன் கூட கூட்டிட்டு வந்துட்டான்.”

“அவன் கூட வரது உனக்கு பாதுகாப்பு தான், உடைஞ்ச வண்டியில வேற ஏதாவது பிரச்சனைன்னாலும் உனக்கு தெரியாது. அப்புறம் வழியில வந்து சிக்கிட்டு தவிப்ப..”

“அதுக்குன்னு உன் அண்ணன் கூட தனியா வர சொல்றியா?”

“அவன் என்ன சிங்கமா? புலியா? வண்டியில டிரைவர் இருக்கும் போது உன்னைய என்ன பண்ணிடுவான்?” என்றவனிடம் ‘டிரைவர் இல்லை’ என்று சொல்ல மனமில்லை.

மறைக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு விசயத்தை மறைக்கும் போதே அவர்களுக்குள் கள்ளம் புகுந்து விடுகிறது. நிலாவிடம் இந்தக் கள்ளம் சிறு வயதில் இருந்தே இருக்கிறது தானே, நந்தன் அவளை என்ன செய்தாலும் யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுவாள்.

கடைசியாக அவளை அடிக்கும் போது கூட அவனை விட்டு போய் விட வேண்டும் என்று நினைத்தாளே தவிர அவன் அடித்ததை யாரிடமும் சொல்ல வேண்டும் என்று நினைத்ததில்லை அன்றே சொல்லாதவளா? இன்று சொல்லப் போகிறாள்?

“பூனை ஏய் கேக்குதா? இல்லையா?”

“ஹா சொல்லு”

“இங்க ஒருத்தன் கத்திட்டு இருக்கேன் கேக்குது இல்லனுக் கூட சொல்ல மாட்டியா?”

“ஏதோ யோசனையில இருந்தேட்டேன்.” 

“சரி அவன்கிட்ட பயப்படாம இரு, நம்பகிட்ட தான் மூஞ்சைக் காட்டுவான், வெளியே அவனுக்கு நல்லப் பேரு இருக்கு. அதைக் காப்பாத்திக்கவாது  எதும் பண்ண மாட்டான். " 

“உன் அண்ணனை நீ விட்டுக் கொடுப்பியா?”

“நான் விட்டுக் கொடுக்காம இருக்கறதை விட நீ தான் அவனை எங்கையும் விட்டுக் கொடுக்க மாட்ட, அதை நியாபகத்துல வெச்சிட்டு பேசு. அவனைப் பார்த்தா தான் பயம் மத்தபடி அவனை யார்கிட்டயும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.” என நிலா பேசுவது போல் பேசிக் காட்டி கிண்டல் செய்தான்.

“ஆமா, உன் அண்ணன் என்னோட லவர் பாரு விட்டுக் கொடுக்காம தூக்கி இடுப்புல வெச்சிக்க, வாயை மூடிட்டு போனை வைடா.”

“நீ தான் பூனை கூப்பிட்ட, நீதான் வைக்கணும்.”

“சரிடா எருமை வை” என்று அழைப்பை துண்டித்துவிட்டு திரும்பி பார்க்க.. நந்தன் கன்னத்தில் கைகொடுத்தவாறு இவள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

'திரும்ப திரும்பவா..? முடியலடா சாமி.' என நிலா பேய் முழி முழித்தாள்.

எதுவும் பேசாமல் காரை எடுத்தான்.

'கேட்ருப்பானோ நான்தான் எதுமே சொல்லலையே. இப்படியே பயந்து பயந்து எத்தனை நாளைக்கு தான் வாழறது, கடவுளே எங்கையாவது தூரமா வேலைக் கெடச்சிடு ஓடிப் போய்டணும்.' என்று எண்ணிக் கொண்டாள்.

அன்று முழுவதும் அவளை காரில் வைத்துக் கொண்டே அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு மதிய உணவையும் வாங்கிக் கொடுக்க, வேண்டாம் என்று சொன்னாலும் ஆடுவான் என்ற பயத்தில் வாங்கி சாப்பிட்டுவிட, இரவு உணவுக்கு அவனே உணவகத்திற்கு அழைத்துச் சென்றான்.

“ஏங்க வீட்டுக்குப் போகணும்.”  என்றாள் இரவு எட்டு மணியாகியும் வீட்டில் கொண்டு போய் விடவில்லையே என்று தயக்கத்துடனே கேட்டாள்.

காரிலையே இருந்தாலும் நேரமானால் சாப்பிடுவதற்கு என தின்பண்டங்களும், குடிக்க குடிநீரும் வாங்கிக் கொடுத்து விடுவான்.

‘என்ன வேணாலும் தின்னு ஆனா கார்லையே இரு இது தான் அவனின் பாலிசி.’

அவள் முகம் கண்டே, இயற்கை உபாதைக்கான இடத்தில் காரை நிறுத்திவிட்டு அவளையும் அந்த இடத்தையும் மாறி மாறி இரண்டு முறை பார்த்தாலே, அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்துக் கொண்டு நிலாவே இறங்கிச் சென்று விடுவாள்.

வார்த்தைகள் தேவையின்றி உணர்வுகளில் புரிதல் அரங்கேறியது அங்கு.

விழிகளின் மொழிகள் புரிதலை கொடுக்கிறது என்றாலே  அவர்களுக்கு நெருக்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று தானே அர்த்தம்.

“நீ என்ன சின்னக்குழந்தையா?”

“இல்ல” என தலையை ஆட்ட.

“அப்புறம் என்ன? உன்னைய ரேப் பண்ற ஐடியா எதுவும் இல்லை.”

“ஏன் இப்படிலாம் பேசறீங்க?” அவன் வார்த்தையில் பதறிவிட்டாள்.

“உன்னைய கடிச்சி திங்கற மாதிரி வீட்டுக்கு போகணும் போகணும்னு சொல்லாத, எனக்கு நிறைய வேலை இருக்கு, அதெல்லாம் முடிச்சிட்டு தான் வீட்டுக்கு போக முடியும். உன் இஷ்டத்துக்கு போறதா இருந்தா பஸ் புடிச்சிப் போக வேண்டியது தானே?”

'நானும் அதை தானேடா சொன்னேன். அப்போ முறைச்சு முறைச்சிப் பார்த்துட்டு, இப்போ போக வேண்டியது தானேன்னு சொன்னா, என்னடா பண்றது?' என்பது போல் அவனைப் பார்க்க, அவனோ காரை விட்டு இறங்கி உணவகத்தினுள் நுழைந்தான்.

'இப்போ நான் அங்கேப் போகணுமா வேண்டாமான்னு தெரியலையே.' என்று யோசிப்பதற்குள் வாசலில் நின்று திரும்பிப் பார்த்தான்.

உடனே கார் கதவை திறந்துக் கொண்டு ஓடிப் போய் அவன் அருகில் நின்று விட்டாள்.

அதில் நந்தன் சிரித்தானோ என்றுக் கூடத் தோன்றியது. அவன் முகத்தை உற்றுப் பார்த்தால் தானே தெரியும் அந்த தைரியம் அவளுக்கு இல்லாமல் போக அவன் பின்னாலையே நடந்தாள்.

நடையில் வேகம்.. காக்கி சட்டையின் கம்பீரம், அவன் தலைமுடி வெட்டி இருக்கும் விதம் என ஒவ்வொன்றும் நிலாவை கவர தான் செய்தது.

'உனக்கு அவனைப் பிடிச்சிருக்கா பயங்கரமா சைட்டு அடிக்கிற' என மனம் கேள்வி கேக்க.

'சைட் மட்டும் தானே அடிக்க முடியும் அதையாவது செஞ்சிக்கறேனே, சைட் அடிக்கல்லா அவன் பெர்மிஸ்ஸன் வாங்கனும்னு அவசியம் இல்லை.' என்று பதில் சொன்னவள் அவனை இன்ச் பை இன்சாக ரசித்தாள் உள்ளுக்குள்.

நந்தனைப் பார்த்ததும் அந்த உணவகத்தின் முதலாளியே ஓடி வந்தார்.

அவரைப் பார்த்ததும், “என்ன?” என்றான் தோரணையாக.

'அவர் எப்படியும் இவனை விட பெரியவரா இருப்பார், வயசுக்காவது மரியாதைக் கொடுக்க வேண்டாமா?' என்று தான் தோன்றியது நிலாவிற்கு.

“அது சார் உங்களை வெல்கம் பண்ண தான்...” என்று தலை சொறிந்தவரை முறைத்தவன்.

“ஹோட்டலுக்கு வர எல்லோரையும் இப்படி தான் வெல்கம் பண்ணுவீங்களா? தப்பு இருக்கற இடம் தான் வளஞ்சி போகும். என்ன தப்பு பண்றீங்க?” எல்லோரையும் அலற விட்டான்.

“ஐயோ!! சார் நான் ரொம்ப சுத்தம்,  சாப்பாட்டுக்கு கூட நம்பர் ஒன் குவாலிட்டி தான் யூஸ் பண்றோம்.” என்று அவர் பதற, நிலாவிற்கே பார்க்க பாவமாக இருந்தது.

“சரி போங்க, நாங்க சாப்பிட தான் வந்தோம்.” என்றவன் திரும்பி நிலாவைப் பார்க்க, அவள் ஓடிச் சென்று ஒரு மேஜையில் அமர்ந்தாள். அவளின் வேகத்தைக் கண்டு இரும்பு மனிதன் கூட புன்னகைத்து விட்டான்.

நிலாவுக்கு எதிர்புறம் அமர்ந்தவன், 

“எதுக்குடி இவ்வளவு வேகம்?” என புருவத்தை தூக்கினான்.

'என்ன எப்போ பாரு டி டின்னு என்னமோ பொண்டாட்டி மாதிரி உரிமையா பேசுறான். இவனுக்கு தான் என்னையக் கண்டாலே ஆகாதே..'

'இதை நீ அவன்கிட்ட கேக்கறீயா..?' என மனச்சாட்சி கேள்வி கேக்க, 

'என்ன தேவைக்கு...? அவன் என்ன வேணா கூப்பிட்டு போகட்டும், வாயை மூடிட்டு இரு.' என அதட்டி அடக்கி வைத்தவள்,

அவன் புருவத் தூக்கலில் மயங்கி விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் தலைக் குனிந்துக் கொண்டவள், “உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்ன்னு தான்..” என்றாள் மெலிதாக.

“என்ன சாப்பிடற?”

“உங்க விருப்பம்”

“ஏன் உனக்குன்னு விருப்பமில்லையா?”

'உன்னைய வெச்சிட்டு விரும்புறதை எங்க சாப்பிடறது?' என்று நினைத்தவள், “உங்களுக்கு பிடிச்சதையே ஆடர் போடுங்க.” என்றாள்.

அவனோ அவளையே பார்த்தவன் அவளுக்கான ஒவ்வொரு உணவையும் அவளுக்கு பிடித்த மாதிரியே வாங்கினான்.

இரவு அதிக எண்ணெய் சேர்த்தக்கூடாது என்று அதிலும் கவனமாக இருந்தான்.

எதற்காக இதை எல்லாம் செய்கிறான் என்று நிலாவிற்கு தெரியாது. ஆனால் இன்று ஒரு நாள் முழுவதும் எதற்கு அவனுடனையே வைத்திருக்கிறான் என ஓரளவு கண்டுக் கொண்டாள்.

இரண்டு நாட்களாக யுகி ஷாலினி கூட ஊரைச் சுற்றினாள் அல்லவா? இன்று என்னோடு ஊரைச் சுற்று என வேண்டுமென்றே தான் இன்று முழுவதும் காரில் வைத்து நகர்வலம் வந்துக் கொண்டிருக்கிறான் என்று புரிந்தது. அதை அவனிடம் கேட்டால் இரவு கூட வீட்டிற்கு அழைத்துச் செல்ல மாட்டான் என்ற பயத்தில் எதையும் கேக்கவில்லை. மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்த நந்தன்.

“நாளைக்கு இன்டெர்வியூ போகணுமா?” என்றான் அதிகரமாக.

அவன் சாதாரணமாக கேட்டாலே அதிகாரம் செய்வதுப் போல் தான்  நிலாவிற்கு இருக்கும். 

“ம்ம்”

“ம்ம்” என்றவன் வந்த கொத்து புரோட்டாவை அவள் பக்கம் நகர்த்தி வைத்தான்.

அவளுக்கு கொத்து புரோட்டா என்றாலே சிறிய வயதில் இருந்து மிகவும் இஷ்டம். வளவன் கடையில் இருந்து வரும் போது மாஸ்டரிடம் கேட்டு வாங்கி வருவான். இன்று இதைப் பார்த்ததும் பழைய நினைவு வர, அதனுடன் சேர்ந்து நந்தனின் செயலில் ஆச்சரியமும் எழுந்தது.

‘எப்படி தனக்கு பிடித்ததாக வாங்கியிருக்கிறான்?’ என்று.

நந்தன் எதையும் கவனிக்காமல் அவன் உணவை சாப்பிட்டவன். கேஸ் விஷயமாக யாரிடமோ பேசிக் கொண்டே, நிலாவின் உதட்டின் ஓரம் உணவு ஒட்டியிருக்க சற்றும் தயங்காமல் அதைப் பெருவிரல் கொண்டு துடைத்து விட்டான். அவன் செயலில் விழிகள் தெறித்து விடுவது போல் பார்த்தாள்.

அதைப் பார்த்தவன், “என்ன?” என்று புருவத்தை உயர்த்திக் கேக்க.. அவள் தலை தானாக ஆடியது.

எதற்காக இதையெல்லாம் செய்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.

என்னைக் கண்டு ஓடி ஒளிக்கிறாய் அல்லவா இன்று ஒருநாள் முழுவதும் என்னுடனே இரு இதுதான் உனக்கு தண்டனை என்பது போல் தான் இருந்தது.

இருவரும் சாப்பிட்டதும் காரில் ஏற, ஏறியதும் நிலா கண்ணாடியில் தலை சாய்த்து தூங்கி விட்டாள்.

நிலாவின் வீட்டில் காரை நிறுத்தியவன், “வியா”

“ம்ம்”

“வீடு வந்துடுச்சு எந்திரிடி.” என அவளின் தோளை உலுக்க  தூக்கத்தில் இருந்து பதறி எழுந்தவள் மழுங்க மழுங்க முழித்தாள்.

வீடு என்று அவளது கன்னத்தைப் பிடித்து வீட்டின் பக்கம் திருப்பிக் காட்டினான்.

தூக்கக் கலக்கத்திலேயே அவள் காரை விட்டு இறங்க, “இங்க வா” என்றான் காரின் உள்ள அமர்ந்துக் கொண்டே.

நிலாவும் அவன் அருகில் செல்ல..

அவளை வலியக்கரம் கொண்டு வேகமாக தன் அருகில் இழுத்தவன் அவள் எதிர்பாரா நேரம் பார்த்து இதழ் கவ்வி விட்டான்.

அவன் இழுக்கும் போதே நிலா பாதி மயக்க நிலைக்குப் போய்விட்டாள். இதில் முத்தம் கொடுத்தால் முழு மயக்கம் எழாமல் இருக்குமா?

இரு நாவுகளுக்கு இடையே போர் யுத்தம் நடந்தது. அவளது நாவை இழுத்து இழுத்து சுவைத்தான்.

“என்ன இது விடுங்க விடுங்க” என காற்றில் கையை வீசிக் கொண்டிருந்தவளின் தோளில் கை வைத்த ராஜி .

“அம்மு என்னாச்சி?” என்று கேக்க, அப்போது தான் சுயநினைவுக்கு வந்தாள் நிலா.

“என்னன்னு கேட்டேன்?”

“ஹா ஒன்னுமில்லம்மா” என்றவளுக்கு முத்தம் கொடுத்தானா? இல்லையா என்று பெருத்த சந்தேகம். 'கொடுத்த மாதிரி தானே இருந்துச்சு கொடுத்தானா? இல்லையா? கொடுத்துருந்தா அவன் இங்க இல்லைனாலும், கார் இங்க தானே இருந்துருக்கும் அதுக்குள்ளையா போய்டப் போறான். அப்போ அத்தனையும் கனவா கோபால்..' என மனதில் ஏமாற்றம் எழ, அதை மறைத்துக் கொண்டே வீட்டினுள் சென்று விட்டாள்.


Leave a comment


Comments 1

  • A Aathi Sri
  • 1 month ago

    Superrrrr 👌👌👌👌👌


    Related Post