இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே - 11 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 20-05-2024

Total Views: 12014

இதயம் - 11


"ஐ காட் ஆன் ஐடியா" என்று யாழிசை கூற இரு ஆண்களும் என்ன என்று ஆர்வமாக அவளை பார்த்தனர். "நம்ம நாளைக்கு அந்த மயில்சாமிய எழ விடாம பன்னிட்டா ரெஜிஸ்ட்ரேஷன் இல்லாம பன்னிட்டா" என்று யாழிசை கூற "அதான் அண்ணன் இருக்கானே அவன் செய்ய மாட்டானா" என்று பரத் கேட்டான். "ம்ச் சைன் மயில்சாமி தான போட்டாகனும்" என்று யாழிசை கூற அவினாஷ் "பட் எப்படி" என்று குழப்பமாக கேட்டான். "அவன் தான் சரக்குன்னு எழுதி இருந்தாவே பச்ச தண்ணிய கூட ரசிச்சி குடிப்பானே அப்பறம் என்ன ... சரக்க வச்சி தான் லாக் பன்னனும்" என்று யாழிசை கூற அவினாஷ் "அதுக்கு இங்க இருக்க ஆள்ங்க ஒத்துப்பாங்களான்னு தெரியலையே" என்று கூறினான். "இந்த ஐடியா வேலை செய்யும்ன்னு நினைக்கிறிங்களா" என்று பரத் கேட்டான். "ஐடியா வேலை செய்யுமான்னு தெரியல ... பட் இதுலையே ஒரு பேக்கப் ப்ளான் போட்டுக்கலாம்" என்று யாழிசை கூறினாள். "நம்ம இன்னொரு முறை அந்த நிலத்தோட ஓனர் கிட்ட பேசி பாக்கலாம் ... இல்லன்னா அமௌன்ட்ட ஏத்தி சொல்லி பாக்கலாம்" என்று யாழிசை கூறினாள். 

"இதுக்கு பேர் ப்ளான்" என்று பரத் கேட்க அவினாஷ் வாய் மேல் கை வைத்து சிரித்தான். யாழிசை பரத்தை முறைத்தாள். "அங்க இருக்கும் போது அப்படி வேலை செஞ்ச மூளை வெளிநாட்டுக்கு வந்ததும் ப்ரீசர்ல வச்ச மாதிரி ப்ரீஸ் ஆகிடுச்சா ... சரக்க ஏத்தி கொடுக்கறது ஓனர் கிட்ட பேசறதுன்னு சொல்லிகிட்டு இருக்கிங்க ... இதெல்லாம் அவினாஷ் சார் செய்யாமலா நம்மள வர சொன்னாரு" என்று பரத் கேட்க யாழிசை "இதை விட வேற என்ன நல்ல ஐடியா உனக்கு இருக்கு சொல்லு" என்று கோபமாக கேட்டாள். "சொல்ரன் கேளுங்க" என்று பரத் நாற்காலியின் விளிம்பில் நகர்ந்து அமர யாழிசையும் அவினாஷ்ஷும் ஆர்வமாக அவனை பார்த்தனர். 

"ஓப்பன் பன்னா மயில்சாமி அந்த ஓனர் கிட்ட காச கொடுக்கற நேரம் ... மயில்சாமி கொடுக்க ஓனர் வாங்க ... ஓனர் வாங்க மயில்சாமி கொடுக்க ... அந்த இடத்துல நிறுத்துங்கன்னு ஒரு சத்தம் ... யார்டா அதுன்னு அப்படியே திரும்பி பாத்தா ... யாழிசை மேடம் அப்படியே மாரியம்மா கணக்கா கோவத்துல சிவப்பு துணில முகமெல்லாம் சிவந்து போய் பெரிய பொட்டு வச்சிட்டு கோவமா முறைச்சிகிட்டு அவங்களை நோக்கி நகர நகர மயில்சாமிக்கு கை கால் எல்லாம் வேர்த்து ஊத்தி நடுங்கி ஒடுங்கி 'ஐய்யோ எனனன்னு நிலமே வேணா' அப்படின்னு கத்திட்டு கால்லே ஓடி இந்தியா போய்டுவான்" என்று கையை ஆட்டி ஆட்டி பரத் கூறி முடித்தான். பரத் ஏதோ பெரிய ஸ்கெட்ச் போட்டு வைத்திருப்பான் போலும் என்ற ஆர்வத்தில் அவனின் கை சென்ற திசையில் எல்லாம் பார்வையை நகர்த்தி அவன் கருத்தை உள் வாங்கிய அவினாஷ் தன் தங்கையை பரத் கிண்டல் செய்கிறான் என்பதை புரிந்துக் கொண்டு சிரிக்க யாழிசையோ கர்ன கொடூரமாய் பரத்தை முறைத்துக் கொண்டிருந்தாள். 

"எப்படி என் ப்ளான்" என்று பரத் கேட்டு முடித்த அடுத்த நொடி அவன் மேல் தலையணை பறந்து வந்து விழுந்தது. பரத் சிரிப்புடன் அதை குனிந்து எடுக்கும் முன் மற்றொரு தலையணையால் யாழிசை அவனை அடிக்கத் துவங்கினாள். பரத் அவளின் அடிகளை தன் கை கொண்டு தடுத்தவாறே "ஹேய் ஹேய் வலிக்குது" என்று கூறினான். "பாப்பா விடு" என்று அவினாஷ் சிரித்தவாறே யாழிசையை அமைதிப்படுத்தி அமர வைத்தான். "சார் மேடம் உங்க கிட்ட மட்டும் தான் சாதுவா நடிக்கிறாங்க ... அவங்களோட உண்மையான கேரக்ட்டர்ரே வீட்டுக்கு வெளியில நடிக்கிறன்னு சொல்லிட்டு சுத்துவாங்களே அதான்" என்று பரத் கூற யாழிசை "டேய்" என்று மீண்டும் அடிக்க எழும்ப அவினாஷ் "பரத் சும்மா இரு ... அவ கிட்ட அடி வாங்க அவ்வளவு என்ன இஷ்டம் உனக்கு" என்று கேட்டான். "என்னமோ ப்ரண்ட் ஆனதுல இருந்து உங்க தங்கச்சிய சீண்டி பாத்துட்டே இருக்க தோனுது" என்று பரத் கூற அவினாஷ் சிரிக்க யாழிசை அவினாஷ்ஷை முறைத்தாள். "நா சிரிக்கல" என்று அவினாஷ் வாயை மூடிக் கொள்ள பரத் "ஓகே ஓகே சீரியஸ் ... ஜோக் அவுட்" என்று கூற யாழிசை அவனை முறைத்தவாறே "ஐடியா இருந்தா சொல்லு" என்று கேட்டாள்.

"ஐடியா எல்லாம் இப்ப இல்லை நாளைக்கு காலையில ஒரு ப்ளோல ஐடியா வந்தா பாத்துக்கலாம்" என்று கூறிய பரத் எழுந்து சென்று விட்டான். வாசு அறைக்குள் நுழைந்ததும் பின்னாலே வந்த அஞ்சனா அவனை அணைக்க வாசு பதறிக் கொண்டு விலகினான். "என்ன ஆச்சி" என்று அஞ்சனா கேட்க வாசு "இல்லை இப்படி திடீர்ன்னு கட்டி பிடிக்கவும் ஒரு மாதிரி ஆகிடுச்சி" என்று கூறி சமாளித்தான். "இதுக்கு தான் அப்பப்போ தனியா டைம் ஸ்பென்ட் பன்னி நம்ம கொஞ்சம் நெருக்கமா ஹக் கிஸ் பன்னி இருந்தா இப்போ இந்த ஹெசிட்டேஷன் வருமா ... சொன்னா மட்டும் கேக்கவே மாட்ட ... நீயும் பக்கத்துல வர மாட்ட வர்ர என்னையும் பப்ளிக்ன்னு வர விட மாட்ட" என்று அஞ்சனா வாசுவிடம் குற்றம் சாட்ட வாசு "ஹேய் இப்போ இது ரொம்ப முக்கியமா ... டையர்ட்டா இருக்கு நா ரெஸ்ட் எடுக்கனும் ... நீ கொஞ்சம் வெளில போறியா" என்று கூறினான். "ம்ச் ... எப்ப பாரு போர் அடிக்காத வாசு ... இது இந்தியா கிடையாது ... இங்கையாவது கொஞ்சம் ப்ரீயா பழகு ... இன்னைக்கு நைட் நம்ம டிஸ்கோ போலாம் ரெடியா இரு" என்று கூறினாள் அஞ்சனா. "நா ஜெர்மன் வந்தாலும் அதே வாசு தான் ... நா வரல" என்று வாசு கூற அஞ்சனா "நீ வர்ர நம்ம போறோம்" என்று கூறியவள் அங்கிருந்து சென்று விட்டாள். வாசு சலிப்புடன் மெத்தையில் விழுந்தான். 

பரத்திற்கு அழைத்து அறைக்கு வரக் கூறுவோம் என்று கைப்பேசியை எடுத்த வாசு பரத்திற்கு அழைக்காமல் மெத்தையில் போட்டான். "ஒரு வார்த்தை அண்ணன் தான உன் கூட தங்கிக்கிறன்னு சொன்னானா ... உங்க கூடவே தங்கிக்கிறன்னு முதலாளி கைய பிடிச்சிகிட்டு போய்ட்டான் ... இவன் எல்லாம் ஒரு தம்பி ... அவனுக்கெல்லாம் நா கால் பன்ன மாட்டன்" என்று புலம்பியவன் கைப்பேசியை வீசி விட்டான். 'ஆமா நம்மள எதுக்கு இவங்க இங்க கூட்டிட்டு வந்தாங்க ... இந்த பரத் பையன் எதுக்காக வந்தான்' என்ற குழப்பத்தின் சிந்தனையில் இருந்த வாசுவின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தது. 

வாசு அறையில் இருந்து வெளியில் சென்ற அஞ்சனா நேராக தன் தந்தை அறைக்குச் சென்றாள். "அப்பா இப்ப எதுக்காக வாசுவ இங்க கூட்டிட்டு வந்திங்க ... உங்க நிலப்பிரச்சனையில அவனை ஏன்ப்பா இழுக்றிங்க" என்று கோபமாக கேட்டாள். "நா ஒன்னும் வாசுல இந்த பிரச்சனைக்குள்ள இழுத்து விடனுன்னு கூட்டிட்டு வரல அஞ்சு ... உனக்கும் அவனுக்கும் பர்சனல் ஸ்பேஸ் தரனுன்னு தான் கூட்டிட்டு வந்தன் ... இங்க வந்தப்பறம் அந்த அவினாஷ் வாசுவோட தம்பிய கூட்டிட்டு வந்திருக்கறத பாத்ததும் தான் எனக்கு ஐடியாவே வந்துச்சி ... இதுல இரண்டு நல்லது நமக்காக இருக்கு" என்று மயில்சாமி வில்லங்கமாய் சிரித்தவாறே கூறினார். "என்னப்பா அது" என்று ஆர்வமாய் கேட்ட அஞ்சனாவிடம் மயில்சாமி "ஒன்னு ... இந்த நிலப்பிரச்சனையில வாசுவோ இல்லை பரத்தோ விட்டு கொடுக்கற மாதிரி தான் இருக்கும் ... பரத் அவன் வேலை செய்ற கம்பனிக்காக வந்திருக்கறதால அவன் விட்டு கொடுக்க சான்ஸ் இல்லை ... வாசுவ விட்டு கொடுக்க விடவே கூடாது ... அப்போ தான் அண்ணன் தம்பிக்குள்ள சண்டை வரும் ... இதை காரணமா வச்சி நம்ம வாசுவ நம்ம வீட்டுக்கு இழுத்தரலாம் ... உன்னால தான் அங்க இருக்க முடியாது இல்லை டா ... அப்பறம் நிலம் ... வாசு பேர்ல ரெஜிஸ்டர் பன்ன ப்ளான் பன்னா கண்டிப்பா பரத்தால எதுமே செய்ய முடியாது" என்று குதர்க்கமாக யோசிக்கும் தந்தையின் யோசனையில் சிறிதும் தவறை உணராத அக்மார்க் தந்தையின் செல்ல மகளோ ஆனந்தத்தில் துள்ளி குதித்தாள். அதே ஆனந்தத்துடன் அவளது அறைக்குச் சென்றாள். வாசுவிற்கும் தெரியாமல் தன் தந்தைக்கும் தெரியாமல் அவள் ஒரு திட்டம் வைத்திருப்பதை யாரும் அறிந்திர வழியில்லை. இன்று இரவோடு தன் காதல் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு கல்யாண வாழ்க்கையில் நுழைய திட்டமிட்டிருந்தாள் அஞ்சனா. 

வாசு தன் கைப்பேசிக்கு வந்திருந்த குறுஞ்செய்தியை எடுத்து பார்த்தான். அதில் பரத் "எந்த ரூம்ல அண்ணா இருக்க" என்று கேட்டு அனுப்பி இருந்தான். "நா சொல்ல மாட்டன்" என்று வாசு சிறுபிள்ளை போல் கோபம் கொண்டு அனுப்பி விட பரத் "சரி என் கம்பனி வேணா போல உனக்கு ... ஓஓஓ உன் கம்பனிக்கு உன் ஆள் இருக்காங்களா ... சாரி சாரி ... டிஸ்ட்ரப் பன்னல" என்று அனுப்ப வாசு "அடிங்க" என்று எல்லா விலங்குகளின் பெயரையும் அனுப்பி தன் பாசமிகு தம்பியை திட்டி தீர்த்தான். பரத் அதை கண்டு விழுந்து விழுந்து சிரித்தான். "ஏன் இத்தனை அனிமல்ஸ் தான் மொபைல்ல இருக்கா" என்று கேட்டான். "டேய் மரியாதையா ரூம்க்கு வந்துரு" என்று வாசு அறை எண்ணை அனுப்ப பரத்தும் சரி என்று எழுந்துச் சென்றான். வாசுவின் அறைக்குச் சென்று கதவை தட்ட வாசு "திறந்து தான் டா இருக்கு வா" என்று குரல் கொடுத்தான். பரத் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தவாறே "உன் ஆள் அடிக்கடி வருவான்னு கதவ திறந்தே வச்சிருக்க போல" என்று வாய் கொடுக்க வாசு தன் தம்பியின் மூஞ்சிலே தலையணையை வீசி எறிந்தான். 

"என்ன ஆளாளுக்கு தலயணையில் அடிக்கிறிங்க ... என்னை பாத்தா தலையணையில அடி வாங்கறவன் மாதிரியா இருக்கு" என்று பரத் கேட்க "வேற யார் அடிச்சா என்று வாசு தன் தம்பிக்கு ஏதோ காதல் இருக்கிறது என்ற சந்தேகத்தில் கேட்டான். "அந்த யாழிசை" என்று பரத் கூறி முடிக்கும் முன்பே "அவ ஏன்டா உன்னை அடிக்கனும்" என்று பதறிக் கொண்டு எழுந்தமர்ந்தான் வாசு. "அதுக்கு ஏன் பதற" என்று பரத் கேட்க "என் தம்பிய அடிக்கிற அளவுக்கு அவளுக்கு எங்க இருந்து தைரியம் வந்தது" என்று வாசு அப்படியே ப்ளேட்டை மாற்றினான். "தைரியம் எல்லாம் அதிகமா தான் இருக்கு அவங்களுக்கு ... ம்ச் வந்த விஷயத்தை மறந்துட்டு இப்ப எதுக்கு இந்த தேவையில்லாத ஆராய்ச்சி ... ஆமா நீ எதுக்கு இங்க வந்தன்னு உனக்கு ஞாபகம் இருக்கா" என்று பரத் கேட்டான். 

"அதை வேற ஏன்டா கேக்கற ... தனியா சுத்தி பாத்து மைன்ட்ட ரிலாக்ஸ் பன்னலான்னு பாத்தா இவ வேற கூட சேர்ந்து வந்து இங்கையும் ஒன்னா போலாம்ன்னு டார்ச்சர் பன்றா" என்று வாசு சலிப்புடன் கூறினான். "ஆனா உன் மாமனார் இங்க வாங்க போற நிலத்த உன் பேர்ல வாங்கறதுக்காக தான் உன்னை கூட்டிட்டு வந்திருக்காரு" என்று பரத் கூற வாசு "என் கிட்ட சொல்லவே இல்லை" என்று அதிர்ச்சியுடன் கேட்டான். "அது மட்டும் இல்லை இதுல இன்னொரு பிரச்சனை இருக்கு ... அந்த நிலத்த ஏற்கனவே அவினாஷ் சார் வாங்கறதா பேசி அட்வான்ஸ் கொடுத்து அதை உங்க மாமனார் ஏமாத்தி வாங்க பாக்றாரு" என்று பரத் கூறினான். "டேய் என்ன டா என்னென்னவோ சொல்ர" என்று வாசு கேட்க "நீ எல்லாம் ஒரு அண்ணனா டா .. எனக்கு தெரியிற விஷயம் கூட உனக்கு தெரியல" என்று பரத் கேட்க "இந்த ஒரு விஷயம் தெரியலன்றதுக்காக எதுமே தெரியாதுன்னு ஆகிடாது ... அவங்க ஏதோ ப்ளானோட தான் எல்லாம் செய்றாங்கன்னு நினைக்கிறன்" என்று வாசு ஏதோ யூகித்தவனாய் கூறினான். "இப்போ நிலம் எங்களுக்கும் வேணும் உங்களுக்கும் வேணும்" என்று பரத் கூறி முடிக்கும் முன்பே "அவங்களுக்கு" என்று வாசு கூறினான். "சரி சரி அவங்களுக்கு தான் ... இப்போ இரண்டு பேருமே நிலத்தை விட்டு கொடுக்க தயாரா இல்லை ... இந்த பிரச்சனைய சண்டை இல்லாம எப்படி முடிக்றது" என்று பரத் கேட்டான். "அவ்வளவு தான சிம்பிள் ... நானே போய் அவங்களை கன்ப்யூஸ் பன்னி நிலத்தை ஸ்டார் ஹோட்டல்க்கு கொடுக்கற மாதிரி செஞ்சிட்றன் விடு ... இவங்க இங்க பிஸ்னஸ் ஸ்டார்ட் பன்னா தான என்னை இங்க கூட்டிட்டு வந்து கம்பனி பொறுப்பை கொடுப்பாங்க ... ஆரம்பத்துலே அத தடுத்துட்டா" என்று வாசு கூற பரத் சிரிப்புடன் "நீ நிஜமாவே அஞ்சனாவ லவ் பன்றியா அண்ணா" என்று கேட்டான். 

"நானும் இதே கேள்விய தான் எனக்குள்ள கேட்டுட்டு இருக்கன் ... என்னவோ அவளா வந்தா ... நா உங்களை லவ் பன்றன்னு சொன்னா ... நானும் அழகா இருக்கான்னு சரின்னு சொல்லிட்டன் ... அதுக்கு அப்பறம் அவளை என் கூட தக்க வச்சிக்க எல்லா முயற்சியையும் நான் தான் பன்னிகிட்டு இருக்கன் ... அவ அவளோட இஷ்டத்துக்கு என்னை ஆட்டி வைக்கிறா ... சில சமயம் எல்லாமே வேணா போடின்னு விலகிடலான்னு தோனுது ... சில சமயம் என்னையவே நம்பிட்டு இருக்காளே விடனுமான்னு தோனுது ... என்ன பன்றதுன்னே தெரியல ஒரே குழப்பமா போய்ட்டு இருக்கு" என்று வாசு தன் மனதில் நிறைந்திருந்தவையை வெளிப்படையாக கூறினான். "நீ எந்த மாதிரி வாழ்ந்துட்டு இருக்கன்னு உனக்கு புரியுதா" என்று பரத் கேட்க "ஏன் வாழ்றன்னே தெரியாம இருக்கன் டா" என்று வாசு கூற பரத் தன் அண்ணனை முறைத்தான்.


Leave a comment


Comments


Related Post