இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 5 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 20-05-2024

Total Views: 16896

 "அதனால் தான் பேசறதை தவிர்த்தேன்.  அதுவும் இல்லாமல் இப்போ அந்த வீட்டுக்கு போனா என்னை அனுதாப பார்வை பார்த்து வைப்பாங்க இயல்பாக இருக்க முடியாது.   அதான் கொஞ்ச நாள் தாத்தா வீட்டில் இருக்கேன் அங்கே வந்தும் தெந்தரவு பண்ணாதீங்க என்று சொன்னேன்." 

    "கயலை பத்தி தெரியும் இல்ல உங்களுக்கு" என்றவனின் பேச்சை இடைமறித்து

  " எல்லாம் தெரியும் பூனைக்குட்டி மாதிரி உன்னையே சுத்திட்டு இருப்பா அவளையும் தான் என்னவே சொல்லியிருக்க கண் கலங்கிட்டு போகுதுடா"  என்றான் அன்பு. 

    "டேய் ஓவரா உன் தங்கச்சிக்கு சப்போர்ட் பண்ணாத  நீ சொன்னதை போல  பூனைக்குட்டி மாதிரி சுத்திட்டு இருந்தா நான் என்ன ஆவேன் நினைத்து பார்த்தாயா?... " என்றான் கார்த்தி. 

    "பார்த்தேன் பார்த்தேன் அதைத்தான் கொஞ்ச நேரத்திற்கு முன் பார்த்தேனே என்றான் சிரிப்புடன் அன்பு. 

    "அவன் முதுகில் அடித்து சும்மா இருடா" என்றான் முரளி. 

   "என்ன பார்த்தடா" என்றான் புரியாமல் கார்த்தி. 

    முரளி அன்பழகன் இருவரும் வாய் பொத்தி  சிரித்தனர். 

   அதை கண்ட கார்த்தி "என்னடா சிரிக்கிறீங்க"  என்றான் 
  
   "பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு பச்சபுள்ள மாதிரி நிக்கிறான் பாருடா" என்றான் அன்பு. 

   "டேய் நான் என்ன பண்ணேன்" என்றான் கார்த்தி. 

  "ஆங்..  நீயும் கயலும் கொஞ்ச நேரத்திற்கு முன் என்ன பண்ணிட்டு இருந்திங்க" என்றான் அன்பு நமட்டு சிரிப்புடன். 

   "பேசிட்டு இருந்தோம்" என்றான் கார்த்தி. 

  "பேசிட்டு மட்டும் தான் இருந்திங்களா வேறு எதுவும் பண்ணலையா?..."  என்று அன்பு கேட்கவும். 

   அப்போது தான் அவன் எதை சொல்லுகிறான் என்று புரிந்தது.  அதுவும் அவர்கள் பார்த்து வேறு இருக்கிறார்கள் என்றதும் வெட்கத்தில் முகம் சிவந்தது.  ஏற்கனவே சிவந்த நிறத்தில் இருப்பவனின் முகம் மேலும் சிவக்க 

   அதை கண்ட அன்பு " டேய் இங்க பாருடா மச்சானுக்கு வெட்கத்தில் முகம் ஜொலிக்குது" என்று கிண்டல் செய்தான். 

    "டேய் சும்மா இருடா" என்று கூறியவன் தன்னை சமன்படுத்த தலைகோதி ஆழ மூச்செடுத்தான். 

   "அன்பு கொஞ்சம் நேரம் சும்மா இருடா அடுத்து என்ன என்று பேசிடனும் இல்லைனா யாராவது சொதப்பிட்டா அவ்வளவு தான்.  இப்ப எவ்வளவு வேலை இருக்கு அதையும் பார்க்க போகனும் பேசிட்டா ஆபிஸ் கிளம்பலாம்" என்றான். 

   "ஆமாம்டா இவன் பண்ண வேலையில் எல்லாம் மறந்துவிட்டது.  சீக்கிரம் சொல்லு கார்த்தி கேட்டுட்டு கிளம்பறேன்"  என்றான் அன்பு. 

   சிறிது நேரம் பேசியவர்கள் பின்னர் முரளி தன் உடன் படித்த நண்பர்கள் புதியதாக திறக்க உள்ள கம்பெனியில் முக்கிய பொறுப்பேற்று உள்ளதால் அங்கு பணிகள் நடைபெற்று வருவதை பார்க்க சென்றான். 

    அதே கம்பெனியில் கேன்டீன் வைக்க அன்பழகனுக்கு அனுமதி கிடைத்துள்ளதால் அங்கு கேன்டீன் வைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்ய அவனும் கிளம்பிச்சென்றான். 

    அன்பழகன், கார்த்திக்கேயன், முரளி மூவரும் பதிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள் அதுமட்டும் இல்லாமல் சிறுவயது முதலே நண்பர்கள். 

   கார்த்தி, முரளி இருவரும் நன்றாக படிப்பவர்கள் இருவரும் முதல் இரண்டு ரேங்க் எடுப்பவர்கள்.  ஆனால் அன்பழகன் சுமாராகத்தான் படிப்பான்.  நண்பர்கள் சொல்லி கொடுத்தாலும் ஏறாது. 

   பதிரெண்டாம் வகுப்பில் பாஸ் செய்த அன்பழகன்  தந்தை ஓட்டல் வைத்து இருப்பதால் கேட்டரிங் படிப்பை தேர்ந்தெடுத்து மூன்று ஆண்டுகள் சென்னையில் படித்தான். 

    பின் சிறு அளவில் தந்தை வைத்து இருந்த ஓட்டலை விரிவு படுத்தி இருந்தான்.  பஸ் செல்லும் மெயின் ரோடு அருகில் ஓட்டல் இருந்ததால் நன்றாக விற்பனை நடைபெறுகிறது.  இப்போது பத்து பேர் அவர்கள் ஓட்டலில் பணி செய்கிறார்கள். 

   முரளியின் மூலமாக இப்போது கேன்டீன் வைக்கவும் கிடைக்கவே அந்த வேலையும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.  

   இந்த நேரத்தில் தான் வேலை விஷயமாக மும்பை சென்று திரும்பும் வழியில் தான் தண்ணீர் கேன் வாங்க இறங்கிய முரளி தன் நண்பனை கண்டது.  வரமாட்டேன் என்றவனை வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான்.

    நண்பர்கள் இருவரும் சென்றபின் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் கட்டிலில் படுத்து  சிந்தனையில் இருந்த போது  "அண்ணா" என்ற குரல் சிந்தனையை கலைத்தது யார் பார்த்தவனின் விழிகள் விரிந்தன. 

   அமிர்தவள்ளி திறந்து இருந்த கதவுக்கு வெளியில் அவனின் அன்புத்தங்கை அமிர்தவள்ளி நின்று இருந்தாள். 

   அவன் கடைசியாக பார்த்த போது பத்து வயது குழந்தை முகம் மாறாமல் புசுபுசு என்று கன்னங்கள் உப்பி இருந்த தங்கை இன்று சராசரி உயரந்துடன் கொஞ்சம் பூசினார் போன்று மாநிறத்தில் அழகாக இருந்தாள்.  

    அவனின் அனுமதிக்காக நின்று இருந்த அமிர்தவள்ளி அண்ணன் பார்வை தன் மீது இருந்தாலும் சிந்தனையில் இருப்பதை அறிந்தவள் மீண்டும்  "அண்ணா" என்று அழைக்கவும் சிந்தனை கலைந்தவன்
    
     "வா" என்று கூறி  எழுந்து நின்றவனை வேகமாக வந்து கட்டிக்கொண்டாள் வள்ளி. 

   கார்த்தி அமைதியாக நின்று இருந்தான்.  "ஏன் அண்ணா எங்களை விட்டு போனாய்  நான் தினமும் உன்னை கேட்டு அழுத்திட்டே இருந்தேன் என்னை பார்த்து அம்மா அப்பா அண்ணன் எல்லாம் அழுவாங்க அப்புறம் அத்தை வந்து தான் என்னை சமாதானம் பண்ணுவாங்க."  

   "அவங்க தான் அண்ணன் சீக்கிரம் வருவாங்க நீ இப்படி அழுதா அண்ணனுக்கு பிடிக்காது அழக்கூடாது நீ அழுவதால் அம்மா அப்பா அண்ணன் எல்லாரும் அழறாங்க பாரு  உனக்காக உன் அண்ணன் சீக்கிரம் வருவாங்க அப்படி என்று என்னை சமாதானம் செய்வாங்க." 

    "நான் அழுவதை பார்த்து அம்மா அப்பா அண்ணன் எல்லாம் அழுவதால் அழுவதை நிறுத்திட்டேன்.  ஆனால் அத்தை கிட்ட தினமும் கேட்பேன் அண்ணன் இன்னைக்கு வருவாரா என்று அத்தை என்னை சமாதானம் படுத்துவாங்க." 

  " ஏன் அண்ணா எங்களை பிடிக்காமல் தான் விட்டுட்டு போயிட்டையா?.."  என்றால் கண்ணீருடன் 

   அதை கேட்டவனுக்கும் கண்கள் கலங்கின மற்றவர்களிடம் காட்டிய கோபத்தை தங்கையிடம் காட்ட முடியவில்லை.  

   " இல்லடா குட்டிமா  அண்ணன் அப்ப இருந்த கோபத்தில் தப்பு பண்ணிட்டேன்.  சாரிடா குட்டிமா அண்ணன் எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கேன் அப்ப புரியலை இப்ப தான் தெரியுது." 

    "என்னையும் வருத்திட்டு உங்களையும் வருத்தப்பட வைத்து இருக்கேன்.  இனிமேல் கண்டிப்பாக உங்களை விட்டு போகமாட்டேன்டா"  என்றான் கலங்கிய குரலில் கார்த்தி. 

  " அப்ப ஏன் அண்ணா நம்ப வீட்டுக்கு வராமல் இங்க இருக்கிங்க வாங்க அண்ணா நம்ப வீட்டுக்கு போகலாம்."என்றாள். 

   " குட்டிமா அண்ணன் கொஞ்ச நாள் கழித்து வரேன்  அதுவரைக்கும் அண்ணனை தெந்தரவு பண்ணாதடா" என்றான். 

   " அப்பா அம்மா ரொம்ப வருத்தமா இருக்காங்க அண்ணா நீங்க நம்ப வீட்டுக்கு வந்துட்டா எல்லோரும் பழையபடி சந்தோஷமாக இருக்கலாம் அண்ணா" என்றாள் வள்ளி. 

    "இல்ல குட்டிமா நான் இப்ப வந்தா நம்ப பையன் வாழ்க்கையை நாமே கொடுத்திட்டோம் என்று என்னை பார்க்கும் போது எல்லாம்  வருத்தப்படுவார்கள்டா அதான் கொஞ்ச நாள் நான் தாத்தா வீட்டில் இருக்கேன்." 

  " இப்ப இரண்டு நாள் வருத்தப்பட்டாலும் நம்ப பையன் வந்துட்டான் நம்ப கண் எதிரில் தான் இருக்கான் கொஞ்சம் சரியாகிடுவாங்க"  என்றான். 

   கார்த்தி கூறியது வள்ளிக்கு சரியாகப்படவே " சரி ஆனால் சீக்கிரம் வந்து விடனும்"  என்றாள். 

  " சரி குட்டிமா உன்னை பற்றி சொல்லு நீ இப்ப என்ன படிக்கிற"  என்று கேட்டது அவளும் அவளின் படிப்பில் இருந்து சரவணன் கயல்விழி இளவரசன் என்று எல்லோரும் படித்து வேலைக்கு செல்லப்போவது என்று நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தாள். 

   அனைத்தையும் வெளியில் புன்னகை முகத்துடன் மனதில் வேதனை உடனும் கேட்டு கொண்டு இருந்தான். 

   இவை அனைத்தையும் அவன் இழந்து இருக்கிறான் அல்லவா. 

    சிறிது நேரம் பேசிய பிறகு  "சரி குட்டிமா நேரம் ஆச்சு நீ கிளம்பு தனியாக வந்தாயா?...." என்றான்.

   "இல்லை அண்ணா நீ வந்ததை சரவணன் அண்ணன் சொன்னார் உடனே கிளம்பினேன் ஆன அந்த கயல் நீ என்கிட்டே பேசமாட்ட திட்டுவாய் அப்புறம் அடிக்கக்கூட செய்வாய் என்று சொன்னாள். அதனால் சரவணன் அண்ணன் கூட வந்தார் வெளிய நிக்கிறாரு" என்றாள். 

 " ஓஓஹே...  அவள் அப்படியா சொன்னாள் இனி அந்த கயல் கூட சேராத குட்டிமா"  என்றவன் மனதில் அடியேய் குள்ளவாத்து என் தங்கச்சியை பயமுறுத்தின உன்னை பார்க்கும் போது இருக்குடி உனக்கு பனிஷ்மெட்  என்று நினைத்தான். 

  " குட்டிமா நான் தாத்தா வீட்டுக்கு போயிடுவேன் நீ அங்க தனியாக வரவேண்டாம் நானே அப்பப்ப வந்து பார்க்கிறேன் அப்புறம் இப்ப நான் உங்கிட்ட பேசியதை யாருக்கும்  சொல்லாதடா" என்றான். 

   "சரி அண்ணா" என்றவள் அப்போது தான் தான் எடுத்து வந்த பையை தேடினாள்.  அது அவள் நின்ற வாசற்படி அருகில் இருக்கவும் ஓடிச்சென்று எடுத்து வந்தவள் அண்ணனை அமரவைத்தவள் அந்த பையில் இருந்ததை எடுத்து திறக்க  கம கம வாசனை அவனின் மூக்கை அடைந்தது. 

   " குட்டிமா அத்தை கொடுத்தாங்களாடா" என்றான் அந்த வாசனை வைத்தே 

   "ஆமாம் அண்ணா நீ வந்தது தெரிந்ததும் அத்தை செய்தாங்க. அம்மா எதுவும் சமைக்கவே இல்லை அத்தை தான் எடுத்து வந்து கொடுத்து சாப்பிட சொன்னா யாரும் சாப்பிடலை." 

    "அத்தை தான் இவ்வளவு நாள் எங்க இருக்கான்னு தெரியாமல் வருத்தப்பட்டோம் இப்ப தான் பையன் வந்துட்டான் இல்லையா." 

  " இனி அவன் எங்கையும் போகமாட்டான் இப்ப நம்ப மேல் கோபத்தில் இருக்கான் கொஞ்ச நாளில் சரி ஆகி வீட்டுக்கு வந்துடுவான் என்று சொல்லி எல்லாரையும் சாப்பிட வச்சாங்க. அப்படியே உங்களுக்கும் கொடுத்தாங்க"  என்றவள் பேசிக்கொண்டே இட்லியை மட்டன் குழம்பில் புரட்டி எடுத்து ஊட்டி விட மறுக்காமல் வாங்கிக்கொண்டான். 

   ரசித்து ருசித்து உண்டான் பத்து ஆண்டுகள் வீட்டுச்சாப்பாடு இழந்து இருந்தான் அல்லவா அதுவும் அவனின் அத்தை சமையல் என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.  இட்லியும் மட்டன் குழம்பும் அவனுக்கு மிகவும் பிடிக்கும் அதனால் தான் அவனுக்காக அத்தை செய்து கொடுத்து இருக்கிறார். 

    அன்னையின் மீது எவ்வளவு அன்பு வைத்து இருக்கிறானே அதே அளவு அவனின் அத்தை மீதும் வைத்து இருக்கிறான்.   அவனை பொருத்த வரை அவரும் இவனுக்கு அன்னை தான் அந்த அளவுக்கு பிடிக்கும். 

    அத்தையின் நினைவில் கண் கலங்கியது. தங்கைக்கு அவன் எடுத்து ஊட்ட அவளும் மறுப்பு சொல்லாமல் வாங்கிக்கொண்டாள்.

    உண்டு முடித்ததும் தான் எடுத்து வந்த தாத்தா வீட்டு சாவியை அண்ணனிடம் கொடுத்தவள்  "வீடு சுத்தம் செய்து தான் இருக்கு அண்ணா.  வாரவாரம் மல்லிகா அக்கா தான் சுத்தம் பண்ணுவாங்க நேற்று தான் சுத்தம் செய்தாங்க.  இனி தினமும் வந்து சுத்தம் செய்வாங்க. 
  
   " மல்லிகா அக்கா வீட்டுக்காரர் ராஜா அண்ணன் தான் அங்க தோட்டத்தை பார்த்துகிறார் அதனால் அங்க தான் இருப்பார்  உங்களுக்கு எதுனா வேண்டும் என்றால் அவரை அனுப்புங்க அண்ணா" என்றாள். 

    பின் தயங்கிய குரலில்  "அத்தை உங்களுக்கு தினமும் சாப்பாடு எடுத்து வரேன் என்று சொன்னாங்க அதனால் வெளியே சாப்பிட வேண்டாம் என்று சொல்ல சொன்னாங்க அண்ணா"  என்றாள். 

   "சாப்பாடு எல்லாம் வேண்டாம் என்று சொல்லு குட்டிமா நான் பார்த்துக்கிறேன்.  இப்ப நீ கிளம்பு என்று அவளை அனுப்பி வைத்தான். 

    சிறிது நேரம் கழித்து முரளியின் தாயிடம் சொல்லிவிட்டு நடந்தே தன் தாத்தா ரங்கசாமி வீட்டிற்கு சென்றான். 




Leave a comment


Comments


Related Post