இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -38 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 20-05-2024

Total Views: 21440

'முன்னாடியெல்லாம் திட்ட அடிக்க மட்டும் தானே செய்வாரு, இதென்ன புது பழக்கமா இருக்கு கிஸ் பண்றது, இதுவும் பழிவாங்க தானா?' என்று, அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை. அவன் நினைவு தான் எதற்கு அழைத்துச் சென்றான் எதற்கு கூடையே வைத்துக்கொண்டான், எதற்கு முத்தம் கொடுத்தான் என்ற கேள்விகளும் மாறி மாறி வந்துக் கொண்டே இருந்தது.

முத்தம் கொடுத்தானா? இல்லை நீயே சொல்லிக்கறியா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. 

உதட்டில் இன்னமும் கூட ஈரம் மிச்சமிருந்ததுப் போல் இருந்தது. தூக்கக் கலக்கத்தில் இருந்தது எவ்வளவு பெரிய தப்பு என்று மண்டையை கொட்டிக் கொண்டே இருந்தாள்.

இப்போது இருந்தே மேல் அறையில் படுத்துக் கொண்டாள். அங்கிருந்து பார்த்தால் நந்தனின் அறையில் விளக்கு எரிவதும் எரியாமல் இருப்பதும் தெளிவாக தெரியும். அவன் அறையை எட்டிப் பார்த்தாள், அவன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

'முதல் முதலா முத்தம் கொடுத்தா தூக்கம் வருமா? எனக்கு வரல, அவன் மட்டும் நிம்மதியா தூங்கறான் அப்போ முத்தமே கொடுக்கலப் போல நான் தான் முத்தம் கொடுத்துட்டாங்கன்னு சொல்லிட்டு திறியறனா?' என்று ஒரே குழப்பமாக இருந்தது.

கடைசியில் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கனவு தான் வந்திருக்கிறது என்ற முடிவுடன் தூங்கினாள்.

எத்தனை பேர் அன்பை கொட்டிக் கொடுத்தாலும் அன்பே காட்டாத ஒருவரிடம் தான் அதை எதிர்பார்க்கும். அது தான் மனித இயல்பு.

நிலாவும் அப்படி தான், இங்கு இருக்கும் போது மார்த்தாண்டம் முதல் ஷாலினி வரை அவள் மேல் உயிராக தான் இருந்தனர். ஆனால் அவளோ பொருட்டாகக்  கூட மதிக்காத நந்தனிடமும் கிருஷ்ணம்மாளிடமும் தான் மற்றவர்கள் கொடுத்த அன்பைத் தேடினாள்.

அவர்களும் தன்னை பாசமாக நடத்தினால் எப்படி இருக்கும் என்று பல இரவுகள் கனவு கண்டு ஏங்கியிருக்கிறாள்.

விவரம் தெரிய ஆரம்பித்தப் பிறகு தன்னைப் போல தானே நந்தனுக்கும் அந்த ஆசை இருக்கும் அம்மாவும் தம்பியும் பேசாமல் இருந்தால் கஷ்டப்படுவானே என்று தோன்ற யுகியிடம் சென்று நந்தனிடம் பேசச் சொன்னாள்.

“ப்ளீஸ் பூனை இதை மட்டும் என்கிட்ட சொல்லாத. என்னால முடியாது. வேற எது வேணாலும் சொல்லு கேக்கறேன்." என கை எடுத்துக் கும்பிட. அதற்கு மேல் அவனை வற்புறுத்தப் பிடிக்காமல் விட்டுவிட்டாள்.

ஆனால் நந்தன் மீது பயம் இருந்தாலும் அதையும் தாண்டி பாசம் அதிகம் இருந்தது. யுகியை நண்பனாக பார்க்க முடிந்தவாளால் நந்தனை அப்படி யோசிக்கக் கூட முடியவில்லை.

இங்கிருந்து பெங்களூரு போவதற்கு முன்புக் கூட அவன் அடித்ததற்காக செல்ல வேண்டும் என்பது ஒருக் காரணமாக இருந்தாலும், தனக்கு கிடைக்காத அன்பு வேறு ஒருப் பெண்ணிற்கு கிடைக்கிறதைப் பார்க்க முடியாமல் தான் இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று எண்ணியிருந்தாள்.

இங்கிருந்து சென்றப் பிறகு யுகி, நந்தன் இருவரது பிரிவும் அவளை பாடாய்படுத்து விட்டது.

படிப்பில் கவனத்தை செலுத்த முடியவில்லை, பிரிவு துயரில் உடல் காய்ச்சல் கண்டது. மனமும் உடலும் சேர்ந்து சோர்ந்து போனது. பழைய நிலைக்கு திரும்ப ஆறு மாதம் ஆனது.

நிலாவை பார்க்காமல் இருக்க முடியாமல் யுகி பெங்களூரு வந்துவிட்டான். ஆனால் நந்தன் அவனைப் பார்க்க முடியாதே.

ஒவ்வொரு நாளும் நந்தனைப் பற்றிய நினைவு தான். அருகில் இருக்கும் போது தெரியாத அன்பும் பாசமும் பிரிவில் தான் தெரியும்.

பிரிவு ஒன்று தான் ஒருத்தர் மேல் இருக்கு உண்மையான அன்பை உணர வைக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் நிலா தான். 

நந்தன் மட்டும் உஷாவை காதலிக்கவில்லை என்றால் கண்டிப்பாக நிலா ஊரை விட்டு சென்றிருக்க வாய்ப்பில்லை. அவன் விருப்பம் உஷாவாக இருக்கும் போது அவனுடைய அன்பை உஷாவிற்கு தான் தருவேன் என்னும் போது காதல் என்றால் என்ன என்றே தெரியாத காலத்தில்லையே ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் மீது எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளவில்லை நிலா.

இப்போது வரைக்கும் நந்தன் மீது வைத்திருக்கும் அன்பிற்கு அவள் பெயர் வைத்துப் பார்த்ததில்லை.

அடுத்த நாள் காலையிலையே கான்ஸ்டிபிள் வீட்டின் கதவை தட்டினார்.

கதவை திறந்த ராஜி, “யார் நீங்க?”என்றார்.

“அது பொண்ணோட வண்டியைக் கொண்டு வந்தேன்.”

“எவ்வளவு ஆச்சிண்ணா?" என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தாள் நிலா.

“அது எனக்கு தெரியாதும்மா ஐயாகிட்ட தான் கேக்கணும்.”

“ஓ, வண்டியில என்ன? என்ன? டேமேஜ்ன்னு சொல்லுங்க அண்ணா.” 

“அதும் தெரியாதும்மா ஐயா வண்டியை கொடுக்க சொன்னாங்க கொடுத்துட்டேன். இருங்க அவருக்கு கால் பண்ணி சொல்லிடறேன்.”

“ம்ம் கால் பண்ணி என்கிட்ட கொடுங்க அண்ணா.”

“சரிம்மா” என்றவர் நந்தனுக்கு அழைத்தார்.

“சார்”

“ம்ம்”

“வண்டியை நீங்க சொன்ன மேடம்கிட்ட கொடுத்துட்டேன் சார். அவங்க என்ன என்ன டேமேஜ்ன்னு கேக்கறாங்க பணம் எவ்வளவு செலவு ஆகிச்சின்னு கேக்கறாங்க.”

“நீங்க சொல்ல வேண்டாம் எதா இருந்தாலும் சார்கிட்ட கேட்டுக்கோங்கன்னு சொல்லிடுங்க.”

“சரிங்க சார் நானும் அப்படி தான்..” என்றவரிடம் நிலா கையை நீட்ட, “மேடம் போன் கேக்கறாங்க கொடுக்கறேன் சார்.” என சொல்லிக்கொண்டே நிலாவிடம் கொடுத்து விட்டார்.

“வேண்டாம் ஐயப்பன், நான் பேசிக்கறேன்.”

“இல்லை நீங்க சொன்னிங்கன்னா தானே பணத்தைக் கொடுக்க முடியும்.” என தயக்கத்துடன் கேட்டாள்.

“மூடிட்டு போனை வைடி.”

“ஹா”

“வேற ஏதாவது சொல்லறதுக்குள்ள நீயே வெச்சிட்டா நல்லா இருக்கும்.” என்றதும் பதறிக் கொண்டு அலைபேசியை ஐயப்பனிடம் கொடுக்க அவர் வாங்கி அழைப்பை துண்டித்துவிட்டு.

“சரிம்மா, நான் வரேன்.” என்று கிளம்பி விட்டார்.



Leave a comment


Comments 2

  • K Kanimozhi K
  • 1 month ago

    I just want to share my thoughts here.... Athu epdi worst and worst ah heroine and avanga family complete ah oru Manishangala kuda hero mathikala , physical and mental ah torcher panran ipdi pantavan mela attraction varathuna... Heroine is completely dump .. with no brain

  • K Kanimozhi K
  • 1 month ago

    I just want to share my thoughts here.... Athu epdi worst and worst ah heroine and avanga family complete ah oru Manishangala kuda hero mathikala , physical and mental ah torcher panran ipdi pantavan mela attraction varathuna... Heroine is completely dump .. with no brain


    Related Post