இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -39 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 21-05-2024

Total Views: 22612

அவர் போனதும், "என்னடி இதெல்லாம். நேத்து ஏதோ தம்பிக்கூட வரேன்னு சொன்னதும் சரின்னு சொன்னேன். அதுக்குன்னு பத்து மணிக்கு வந்து நின்ன, இன்னைக்கு என்னன்னா வண்டிய சரிப் பண்ணிட்டாங்கன்னு யாரோ கொண்டு வந்து கொடுக்கறாங்க, என்ன நடக்குது இங்க?”

“அம்மா நேத்துப் போகும் போது வண்டி கீழே விழுந்து, முன்னாடி லைட், பிரேக் வையர், எல்லாம் அந்து போச்சி. அதான் இப்போ சரிப் பண்ணிக் கொண்டு வந்தாங்க. இதை ஏன் நீங்க நேத்து கேக்கல?”

“நந்தன் தம்பிக்கூட வரேன்னு சொன்னதும் நான் என்னக் கேக்கறதுன்னு அமைதியாகிட்டேன்.”

“ரொம்ப தாம்மா உங்க தொம்பிக்கு சொம்பு தூக்கறிங்க.”

“நான் என்னடி சொம்பு தூக்கனேன்?”

“பின்ன அவர்கூட வந்தா ஏன்? எதுக்குன்னு? கூட கேக்க மாட்டிங்களா?”

“தம்பியைப் பத்தி ஊரே எவ்வளவு நல்ல விதமா பேசுது, நம்ப வீட்டுல இருந்துட்டு தப்பா நினைக்க முடியுமா?”

“இதுதான் சொம்பு தூக்கறதுன்னு சொல்றது”

“அப்போ நான் சொம்பு தூக்கறேனே வெச்சிக்கோ.”

“என்னமோ பண்ணுங்க இன்னைக்கு இன்டெர்வியூ போகணுமே.”

“அது நந்தன் தம்பி வேண்டாம்னு சொல்லிடுச்சா மார்த்தி அண்ணா இப்போ தான் கூப்புட்டு சொன்னாரு.”

“அவர் சொல்லியா அப்ளிகேஷன் போட்டேன், இது என்னமா புதுசா இருக்கு? நான் எங்க போகணும் வரணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன் அவர் யாரு முடிவு பண்றதுக்கு?” 

“அவங்க வேண்டாம்னு சொன்னா ஆயிரம் அர்த்தம் இருக்கும். நீ ஒன்னும் போக வேண்டாம் குளிச்சுட்டு வந்து அவிச்சு வெச்ச இட்லியை முழுங்கு.”

“அதையும் உன் தொம்பிக்கே கொட்டு.” என்று விட்டு மேலே அறைக்குச் சென்று விட்டாள்.

கோவம் கோவம் கோவம், யார் மீது காட்டுவது, ‘எப்படி அவன் சொல்லலாம், என்னோட ஆசைக்கு கூட மதிப்பு இல்லாம போய்டுச்சு.’ என்று கவலையாக இருக்க, அவன் மீது காட்ட முடியாதக் கோவத்தை பொருள்களின் மீதுக் காட்டினாள்.

“இப்போ இதை எதுக்கு தூக்கிப் போடற.?” என சட்டையை மடக்கி விட்டவாறு வளவன் வந்து கேக்க.

“அண்ணா அவர் சொன்னா நான் வேலைக்கு போகக்கூடாதா?”

“நந்தனை எனக்கும் பிடிக்காது தான், ஆனா அவன் சொன்னா அர்த்தம் இருக்கும் நிலா. உன் நல்லதுக்கு தான் சொல்லிருப்பான். நீ கம்பெனியைப் பத்தி சரியா விசாரிச்சிருக்க மாட்ட.”

“நீயும் ஆரம்பிக்காத அண்ணா. அந்த கம்பெனிக்கு பெங்களூருல இருக்கும் போதே அப்ளிகேஷன் போட்டுட்டேன். நல்லா விசாரிக்காமலா போடுவேன்.”

“போலீஸுக்கு தெரியாதா நமக்கு தெரியப் போகுது?"

“இப்போ என்ன சொல்ல வர, நான் அங்க இன்டெர்வியூ போகக்கூடாது அதானே, பொண்ணுக் கட்டப் போறோம்னதும் ரொம்ப மாறிட்டண்ணா, விடு எல்லாம் இருக்கிறது தான்.” என்று கோவமாக சொல்லிவிட்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

இன்னும் இரண்டு நாளில் நெருங்கிய சொந்தங்கள் அக்கம் பக்கத்தினர், தொழில்முறை நண்பர்களை மட்டும் அழைத்து நிச்சயத்தார்த்தம் நடத்தி விடலாம் என முடிவு செய்திருந்தனர்.

இன்று அதற்கு உடை எடுக்க போகிறார்கள் நந்தன் வரவில்லை என்று சொல்லிவிட்டான்.

மற்றவர்கள் மட்டும் சென்று வர முடிவு செய்திருந்தனர். அதற்காக வளவன் தயாராகிக் கொண்டிருக்க, அப்போது தான் குளித்துவிட்டு கீழே வந்த நிலா நைட்டில் இருக்கவும்,

“என்ன அம்மு நீ கடைக்கு வரலையா?" என்றான் வளவன்.

“நான் எதுக்கு நீங்க போய் எடுத்துட்டு வாங்க, எனக்கு வேற வேலை இருக்கு.”விட்டேத்தியாக பதில் சொன்னவளின் முதுகிலையே ஒன்று விட வேண்டும் போல் இருந்தது ராஜிக்கு.

“வேற என்ன வேலை இருக்கு உனக்கு?” 

“என்னவோ வேலை இருக்கு நான் வரலைன்னா விடுங்களேன்.”

“நீ இன்டெர்வியூக்கு போக வேண்டாம்னு சொன்ன கடுப்புல வரலைன்னு சொல்ற, இதெல்லாம் தப்பு அம்மு.” என சரியானக் காரணத்தைக் கண்டு வளவன் கேக்க.

“இதுலையாவது என் விருப்பத்தை சொல்ல விடுங்க. இதுக்கு நான் பெங்களூருலயே இருந்துருப்பேன்.”

“இப்போ என்ன வர மாட்ட அதானே?”

“ம்ம்”

“சரி இருந்துக்கோ.”

“அப்போ நீ மட்டும் அவங்களோட போய்ட்டு வா வளவா, நான் வேற எதுக்கு?”

“அம்மா நீயும் படுத்தாத வந்து சேரு.”

“சரிடா நீ டென்ஷன் ஆகாத நான் போய் கிளம்பறேன்.” என்று ராஜி உள்ளேப் போய்விட,

யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை, நான் வரமாட்டேன் என்ற முடிவுடன் சோபாவில் அமர்ந்து டிவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அரைமணி நேரத்தில் யுகி, ஷாலினி என மாறி மாறி அலைபேசியில் அழைத்துப் பார்த்து விட்டனர். நிலா அவள் பிடிவாதத்தில் உறுதியாக இருக்க, ஷாலினி உடை மாற்றிக் கொண்டு வேக வேகமாக வளவன் வீட்டிற்கு செல்ல கீழ் இறங்கி வந்தாள்.

நந்தன் ஸ்டேஷன் செல்வதற்கு ஷூ போட்டுக் கொண்டிருந்தவன்,

“ஷாலு நில்லு எங்க இவ்வளவு அவசரமா போற..?”

“ஐயோ போற அவசரத்துல இவனை கவனிக்கலையே..”

“அது அண்ணா”

“உங்கிட்ட கேக்கறேன்?”

“என்கேஜ்மெண்ட் டிரஸ் எடுக்க இன்னைக்கு கடைக்குப் போறோம்ல அண்ணா..”

“ம்ம்”

“அதுக்கு நிலா வரலைன்னு சொன்னாளா, அதான் கூப்பிடப் போறேன்.”

“ஏன் வரலையா?” என்று கேக்க துடித்த நாக்கை அடக்கிக் கொண்டவன், ’எவ வந்தா எனக்கு என்ன?’ என்பது போல் முகத்தை வைத்திருக்க.

“போகட்டுமா அண்ணா?” என்றாள் பாவமாக.

“ம்ம் போ”

விட்டால் போதும் என்று ஓடிவிட்டாள். ஷாலினி வீட்டிற்கேச் சென்று அழைத்தாள்.

“நிலா ஓவரா பண்ணாத.”

“இல்லை அண்ணி எனக்கு ஒரு மாதிரி இருக்கு. அங்கப் போனா ரொம்ப லேட்டாகும், அதான் நீங்க போய்ட்டு வாங்க கல்யாணத்துக்கு எடுக்க வந்துடறேன்.”

“நீ இல்லாம எப்படி அம்மு, உனக்கு எடுக்க வேண்டாமா?”

“அதுக்கு தான் நீங்க இருக்கீங்களே இவ்வளவு நாளும் யுகி தானே எனக்கு செலக்ட் பண்ணுவான், அவனே இன்னைக்கும் பண்ணட்டும். ப்ளீஸ் அண்ணி இந்த ஒருதடவை மட்டும் போய்ட்டு வாங்க.” என்று கெஞ்சி கூத்தாடி அனுப்பி வைத்து விட்டாள்.

இவ்வளவு நாட்களுக்கு பின் மீண்டும் அவள் ஆசைகள் முடக்கப் பட்டுவிடுமோ என்ற பயம், அதை நந்தனிடம் சொல்ல முடியாது. அதனால் தான் இவர்களிடம் அந்த கோபத்தைக் காட்டுகிறாள்.

அனைவரும் உடை எடுக்க 10 மணிக்கு மேல் தான் கிளம்பினர். அதில் முதல் ஆளாக கிருஷ்ணம்மாள் தான் கிளம்பினார். அங்குப் போய் ஏதாவது ஓரண்டை இழுக்கலாமா? என்று.

எல்லோரும் போனதும் வீடே ஒரு மாதிரி இருக்க, நிலா நடப்பதும் நிற்பதும், கதவை திறந்து மூடுவதுமாக, நேரத்தை ஓட்டியவள் எது செய்தும் நேரம் போனது போல் தெரியாததால் டிவி முன்பு அமர்ந்து விட்டாள். அதுவும் கூட சற்று நேரத்தில் அலுத்துவிட்டது.

“ச்சை இதுக்கு நான் கூடவே போயிருக்கலாம், சும்மாவே இருக்க முடியல.” என்று மடித்து அடுக்கி வைத்த துணியை எடுப்பதும் கலைப்பதும் திரும்ப மடிப்பதுமாக நேரத்தை ஒட்ட வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

“பார்டா ஒரு மணிக்கு டான்னு வந்துட்டாங்க. பரவால்லயே சீக்கிரம் துணி எடுத்துட்டாங்க.” என்று ஆவலாக கதவை திறக்க.

போலீஸ் உடையில், கண்ணில் கருப்பு கண்ணாடியுடன் நின்ற நந்தனைப் பார்த்ததும் பதட்டமும், பயமும் ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.

“என்னடி பார்த்துட்டே நிற்கற? உள்ளே கூப்பிடற ஐடியா இருக்கா? இல்லையா?”

“ஹா வாங்க” என்று ஒதுங்கி அவனுக்கு வழி விட, ஷூவை வாசலிலையே கழட்டி விட்டு உள்ளேச் சென்றான்.

“அப்புறம்”

“அப்புறம்ன்னா” என்று முழித்தவள் வீட்டிற்கு வந்தவனுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்.

“ம்ம் குட் வெளிய வெயில் அதிகம் நானே கேக்கலாம்ன்னு இருந்தேன். ஐஸ் வாட்டரா இருந்துருக்கலாம்.”

“எடுத்துட்டு வரேன்”

“ம்ம்” என்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

நிலா குளிர்ந்த நீருடன் வர..

“இது ரொம்ப ஜில்லுன்னு இருக்கு.” என்றான் உடனே அதில் தண்ணீர் கலந்துக் கொடுத்தால், “ஜில்லுன்னே இல்லையே” என்றான்.

அவன் கேக்கும் பதத்தில் குளிர்ந்த நீர் கொடுப்பதற்குள் சோர்ந்துப் போய்விட்டாள் நிலா.

'டேய் ஒரு தண்ணிக்கு இத்தனை அக்கப்போராடா..?' என்று வடிந்த வியர்வையை துடைத்துக் கொண்டாள்.

“மதியம் வீட்டுல தான் சாப்பிடுவேன்.” என்று ஆரம்பிக்கும் போதே அவன் என்ன சொல்ல வருகிறான் எனப் புரிந்து விட,

“சாப்பாடு ரெடியா தான் இருக்கு வாங்க சாப்பிடலாம்.” என்று அவனுக்கு சொல்லும் வாய்ப்பைக் கூடக் கொடுக்கவில்லை நிலா.

‘அவனுக்கு மட்டுமான உபசரிப்பு இது’ என அகந்தைக் கொண்டவன், கையைக் கழுவிவிட்டு அமர்ந்தான்.

அவளுக்கு மட்டும் தானே என அரிசியும் பருப்பையும் ஒன்றாக போட்டு சாதம் செய்திருந்தாள் அதற்கு தொட்டுக்க தயிரும், ஊறுகாயும் வைக்க.

அப்பளம் பொறி என்று ஏதோ பொண்டாட்டியிடம் கேப்பது போல் உரிமையாக கேட்டு வாங்கி சாப்பிட. நிலாவிற்கோ தன் கையால் சமைத்ததை எந்த குறையும் சொல்லாமல் சாப்பிடுகிறானே என்று பயங்கற சந்தோசம்.

இவளும் அள்ளி அள்ளி வைக்க போதும் என்றால் கையை தட்டின் குறுக்கே காட்டுவான் அதை வைத்து தான் கண்டுக் கொள்ளுவாள்.

நந்தன் பேச வேண்டும் என நிலாவும் நினைக்கவில்லை அவனும் பேசவில்லை.

சாப்பிட்டு முடித்து கைக் கழுவியவன், “ஐஸ்கிரீம் இருக்கா?” என்றான்.

'இவன் என்ன இங்க விருந்துக்கா வந்துருக்கான்? அப்பளம் பொறி, ஐஸ்கிரீம் இருக்கான்னு கேட்டுட்டு இருக்கான்.' என பேந்த பேந்த முழித்தவள். “இல்லை வாங்கிட்டு வரட்டுமா?” என்றாள்.

“ஹும்” என்று அவன் சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்து நீட்ட,

“என்கிட்ட இருக்கு”

“ஏது?”

“அது பெங்களூருல இருக்கும் போது பார்ட்டைம் ஜாப் பார்த்தேன் அதுல வந்த அமௌன்ட்.”

அப்போ சரி என்பது போல் எடுத்த பணத்தை சட்டைப் பையினுலையே வைத்துவிட்டு சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.

அவன் அருகில் இருந்தாலும் அவஸ்தையாக இருக்கிறது, தூரப் போனாலும் அவஸ்தையாக இருக்கிறது. இந்த உணர்வுக்கு பெயர் தெரியாமல் அந்த அவஸ்தையை ஒவ்வொரு சொட்டாக ரசித்துப் பருகினாள்.

அவளுக்கு தெரியும் வளவனின் பணம் என்றால் ஒன்று பணத்தைக் கொடுத்திருப்பான் இல்லையென்றால் ஐஸ்கிரீமே வேண்டாம் என்று விடுவான், இத்தனை வருடத்தில் இன்று தான் வீட்டின் உள்ளே வரைக்கும் வந்திருக்கிறான். அதற்கான மரியாதையை கொடுக்க வேண்டும் என ஓடி ஓடி உபசரித்தாள்.

“ஐஸ்கிரீம்?” என அவனிடம் நீட்ட.

“அருண் இல்லையா?”

“இல்லை, அமுல் தான் இருந்துச்சு.”என்று சாக்லேட் கோனை கொடுக்க.

“வெண்ணிலா இல்லையா?”

“இருந்துச்சு, நான்தான் இதை வாங்கிட்டு..”

“எனக்கு வெண்ணிலா தான் புடிக்கும்.” என அவளை அடிப்பார்வைப் பார்த்துக் கொண்டு சொல்ல,

“நான் போய் மாத்திட்டு வரவா?” என பாவமாக கேட்டாள். சின்ன வயதில் வெண்ணிலா என்றாலே பிடிக்காது. அப்படியே இருப்பான் என நினைத்து தான் சாக்லேட் வாங்கி வந்திருந்தாள்.

ஒரு மனிதனின் பிடித்தங்கள் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை மாறிக் கொண்டே இருக்குமாம்.

இன்று பிடிக்காமல் போனது, நாளை பிடிக்கும் இன்று மிகவும் பிடித்ததை நாளை அளவுக்கு அதிகமாக வெறுப்போம். மனிதனின் மனம் குரங்கு போன்றது மரம் விட்டு மரம் தாவுவது போல் நிலை இல்லாமல் தவிக்கும், அதற்காக அனைவருமே அப்படி இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. அன்று வெண்ணிலா பிடிக்கவில்லை என்று சண்டையிட்டான், இன்று வெண்ணிலா தான் வேண்டும் என அடம்பிடிக்கிறான் இதில் எந்த நந்தன் உண்மை என தெரியாமல் முழித்தாள்.

“ம்ம் போய் வெண்ணிலா வாங்கிட்டு வா.” என்றவன் தொலைக்காட்சியை உயிர்பித்து செய்தியை வைத்தான்.

நிலா கடைக்குப் போவதற்குள் இருந்த இரண்டு வெண்ணிலா ஐஸ்கிரீமையும் யாரோ வாங்கி சென்றிருக்க, இப்போது கடை கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தாள்.

எட்டுக் கடை ஏறியதும் ஒன்பதாவது கடையில் தான் வெண்ணிலா இருக்க அதை வாங்கி கொண்டு வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தாள்.

“எதுக்கு இவ்வளவு அவசரம்?”

“உங்களுக்கு டைம் ஆகிடுமேன்னு தான்.”

“எதுக்குடா இங்க இருக்க கிளம்புனு சொல்றியா.?”

“ஐயோ அப்படிலாம் இல்லைங்க.” என்று அழுது விடுபவள் போல் சொன்னாள்.

“இன்னிக்கு மதியத்துக்கு மேலே பிரீ தான்.” என்றவன் இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு, “எனக்கு போதும்” என்று மேஜையின் மீது வைத்து விட,

“இந்த ரெண்டு வாய் சாப்பிட வாடா நாயா பேயா அலைஞ்சி வாங்கிட்டு வந்தேன்.” என்பது போல் அவனைப் பார்க்க, அவனோ அன்றைய நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தான்.

‘ஸ்பூன் வேணா வேற மாதிரி இந்த ஐஸ்கிரீமை நம்ப சாப்பிட்டுவோமா?’ என்று வரை யோசித்தவள். பின்பு என்ன நினைத்தாளோ அவன் சாப்பிட்ட அதேப் ஸ்பூனில் சாப்பிட, செய்திதாளை கீழே இறக்கி அதைப் பார்த்த நந்தன் முகம் ஜொலித்தது. அது எதனால் என்று அவன் தான் அறிவான்.

இப்போதைக்கு கிளம்புவது போல் தெரியவில்லை, வேலையில்லனா துணி எடுக்க கூப்பிட்டப்பவே போயிருக்க வேண்டியது தானே என்று எண்ணியவள் சாப்பாட்டை சமையலறையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டாள்.

“வியா?”

“ம்ம்”

“இங்க வா” என்ற அடுத்த நொடி அம்பாக அவன் அருகில் வந்து நிற்க.

“உக்கார்” என்றான்.

“இல்லை பராவில்ல சொல்லுங்க”

“உக்கார்ன்னு சொன்னேன்.” என அழுத்தமா சொல்லவும் டக்கென்று அவன் அருகில் அமர்ந்து விட்டாள்.

"என்ன கோவமா?" என்று புருவத்தை உயர்த்தியவனைப் பார்த்ததும் தலையை குனிந்துக் கொண்டவள்,“எதுக்கு?” என்றாள் மெலிதாக.

“எதுக்குன்னு உனக்கு தெரியாது?”

“இல்லை” என தலையை ஆட்ட, அவள் வாய் திறந்து பேசாததில் கோவம் கொண்டவன்.

“நீ என்ன சின்னக்குழந்தையா ஒவ்வொரு தடவையும் சொல்லிட்டு இருக்க, வாயை திறந்து பேசிப் பழகு. மத்தவீங்ககிட்ட வாய் கிழியுதுல, என்கிட்ட மட்டும் தான் இப்படின்னு தெரியும்டி. மத்தபடி நீ பக்கா ரவுடி..” 

'மத்தவீங்களும் நீயும் ஒன்னு இல்லடா.' என கத்தி சொல்ல வேண்டும் போல் இருந்தது.

“உன்கிட்ட தான் பேசறேன்.” என்று சற்று நந்தனின் குரல் உயரவும்,  நடுங்க ஆரம்பித்து விட்டாள். கை நடுங்குவதைப் பார்த்துவிட்டால் அதற்கும் பேசுவானோ என்று பயந்து நடுங்கும் கையை மற்றொரு கைக் கொண்டு அடக்கி மறைத்துக் கொண்டாள்.

“அது. கோவமில்ல..”

“அப்புறம் எதுக்கு டிரஸ் எடுக்க போகல.”

“அந்த கம்பெனிக்கு நல்லா விசாரிச்சிட்டு தான் அப்ளிகேஷன் போட்டேன்.” என்று கால் கட்டை விரலைப் பார்த்துக்கொண்டே சொன்னாள்.

“என்னோட கண்ணைப் பார்த்து பேசு.”

“ஹா”

“அதென்ன பழக்கம் நான் பேசிட்டு இருக்கும் போது என்னையப் பார்க்காமல் எங்கையோ பார்த்து பேசறது ஹும்..” என்று அழுத்தமாக கேக்க.

“அது..”

'ஐயோ இன்னைக்குன்னு பார்த்து இவ்வளவு இம்சைப் பன்றானே.'

“உன்னைய தான் பாருன்னு சொன்னேன்.” என்றதும் தலையை உயர்த்தி அவனைப் பார்த்தவள் அவன் பார்வையின் வீரியம் உள்ளுக்குள் உணர்வு பிழம்பை உருவாக்க அதை தாங்க முடியாமல் மீண்டும் கண்களை தாழ்த்தப் போனாள்.

அவளது தாடையை இறுகப் பற்றியவன், “பாருடி.."

“ஹும்ஹும்”

“இனி என்கிட்ட பேசும்போது கண்ணைப் பார்த்து பேசல, கண்ணை நோண்டிடுவேன்.”

'ஹா இது என்ன புது ரூல்சா இருக்கு.' என முழித்தவளுக்கு அவன் பிடித்திருக்கும் இடம் வலித்தது.

வலியில் முகம் சுருக்க, சட்டென்று கையை எடுத்துவிட்டான்.

வெளியில் மற்றவர்களிடம் அவன் காட்டும் முகமே வேறு. துளி சிரிப்பைக் கூடப் பார்க்க முடியாது, பார்வை அடுத்தவர்களை துளையிட்டுவிடும் அந்த அளவிற்கு துளைத்தெடுப்பான். ஆனால் நிலாவிடம் மட்டும் ஏனோ பழைய நந்தனாகவே இருந்தான். அப்படி இருக்க தான் அவனுக்கு பிடித்திருந்தது.

சிறு வயதில் இருந்து இப்போது வரைக்கும் கூட அவளை மட்டும் தான் உரிமையாக டி போட்டு அழைப்பான்.

அது வேற யாரிடமும் இருக்காது. முறை வழியில் பெண்கள் இல்லாமல் இல்லை. செல்வராணி பெண்கள் இரண்டு பேர் அவர்களின் பிரிவிலையே இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் கூட இந்த அளவிற்கு உரிமை எடுத்துக் கொள்ளவில்லை, இது அவனே அறியாத ஒன்று. அறியும் போது நிலாவின் நிலை இதைவிடக் கூட மோசமாகலாம்.

அவள் வலியில் இன்பம் கண்டது ஒரு காலம் என்றால், அவள் முகம் சுருக்களில் கூட வேதனைக் கொள்கிறது இந்தக் காலம் போல. அவளுக்கு வலிகளைக் கொடுக்கக் கூடாது என்று நினைப்பவன் தான் மிகப்பெரிய வலியைக் கொடுக்கப் போகிறான்.

“வலிக்குதா.?”

“ம்ம்”

“அந்த கம்பெனி தப்பானதுன்னு நான் எப்போ சொன்னேன். நீ அவ்வளவு தூரம் தனியா போய்ட்டு வர முடியாதுன்னு தான் வேண்டாம்னு சொன்னேன்.” 

'இது என்னடா இன்னைக்கு இவ்வளவு ஷாக் குடுக்கறான். எனக்கு வலிச்சா இவனுக்கு கொண்டாட்டமால இருக்கும், அதை விட்டுட்டு வலிக்குது சொன்னதும் கையை எடுக்கறான் அவ்வளவு தூரம் போய்ட்டு வர முடியாதுன்னு அக்கறையா பேசறான் ஒன்னும் சரியில்லையே.' என்று உள்ளுக்குள் தோன்ற வெளியே தலை ஆட்டி வைத்தாள்.

“தலை லைட்டா வலிக்கிற மாதிரி  இருக்கே.” என அவளை ஓரக் கண்ணால் பார்த்தவாறு சொன்னான்.

'இன்னும் என்னடா பண்ணனும் நான், உனக்கு வேலை செய்யவே தனி ஆள் போடணும் போலையே.'

“தலையை பிடிச்சு விடு” 

"விட்டா குளிக்க வைன்னு சொல்லுவான்.”

“அது கல்யாணத்துக்கு அப்புறம் சொல்றேன் இப்போ தலையை பிடிச்சி விடு.”

“என்ன கல்யாணம்? யாருக்கு கல்யாணம்?” என்று அலறியே விட்டாள் நிலா.

“அது நடக்கும் போது தெரியும், இப்போ சொன்னதை செய்.” என அவளது கையை எடுத்து தலையில் வைத்தவன், அவள் விரல் தனியாக ஆடுவதைப் பார்த்து அதில் அழுத்தம் கொடுத்தான்.

“என்னடி நரம்பு தளர்ச்சியா?”

“இல்ல”

“அப்புறம் எதுக்கு இந்த ஆட்டம் போடுது?”

"அது அது சும்மா," 'ஐயோ கடவுளே வெளியேப் போனவீங்க வாங்களேன் இவன் என்னோட உயிரை வாங்கறான்.'

“என்ன ரொம்ப இம்சை பன்றனா?” என அவள் மனதைப் படித்ததுப் போல் கேள்வி கேக்க.

“ஹா அதெல்லாம் இல்ல” என்றாள் அவசரமாக.

“அப்போ அழுத்து”

“ம்ம்” மெதுவாக அவன் நெற்றியின் இருப்பக்கமும் பட்டும் படாமலும் அழுத்தினாள்.

“பொறும பொறும இதைவிட வேகமாக அழுத்துனா வலிப் போய்டும். வேகமா அழுத்துடி எருமை.”

'என்னது எருமையா? இன்னும் என்ன என்ன பேச்சு வாங்கப் போறேனோ தெரியலையே.' என்றவாறே அழுத்தம் கொடுத்து அழுத்தினாள்.

பத்து நிமிடம் சென்றிருக்கும், “ஹா போதும் போதும் தலைக்கு எண்ணெய் வெச்சி ஆயில் மசாஜ் பண்ணி விடு.”

'இன்னும் வேற ஏதாவது வேணுமா?' என்று கேக்க துடித்த நாக்கை அடக்கிக் கொண்டவள், எண்ணெய் எடுக்கப் போக.. அதற்குள் சட்டையை கழட்டி சோபாவில் போட்டு விட்டு வெறும் பனியனுடன் நின்றான். அதைப் பார்த்ததும் அரண்டு விட்டாள் நிலா.

“என்னடி?”

“என்ன சட்டையெல்லாம் கழட்டிடீங்க.?”

“எண்ணெய் டிரஸ்ல பட்டு டிரஸ் ஸ்பாயில் ஆகவா.?”

'அதுக்குன்னு வயசுப் புள்ள இருக்கற வீட்டுல டிரசை கழட்டிட்டு நின்னா பார்க்கறவீங்க என்ன நினைப்பாங்க?' என்ற பதட்டம் வேறு தொற்றிக் கொள்ள, இதில் ஆயில் மசாஜ் எங்கு செய்வது. அதை அவனிடம் சொன்னால், ‘அப்போ என்னைய சந்தேகப்படுறியான்னு கேப்பான்னே முடியலடா சாமி.’ 

ஏற்கனவே கைகால் அவனின் அருகில் நிற்கும் போது தடதடவென்று ஆடும்.  இதில் இவன் வேறு அழிச்சாட்டியம் செய்துக் கொண்டிருந்தால் எப்படி சிந்தாமல் சிதறாமல் எண்ணெயை அவன் தலையில் வைப்பது என்ற சந்தேகம் பயம் அனைத்தும் சேர்ந்து வந்தது.

"ஏய் பண்றியா? இல்லையா?" அவள் யோசனையாக நிற்கவும் கோவமாக கேட்டான்.

“ஹா வைக்கிறேன் சேர்ல உக்காருங்க.”

அவனும் நாற்காலி பார்த்து அமர.. வறண்ட தொண்டைக்கு நீர் ஊற்றி ஆற்றவில்லை என்றால் இப்போதைக்கு நிலையாக இருக்க முடியாது என்று தோன்ற தண்ணீர் குடிக்க சமையலறைக்குச் சென்றாள்.

அந்த சமயம் வீட்டின் அழைப்புமணி அடிக்க,

'ஐயோ யாருன்னு தெரியலையே, இவர் வேற மேலே டிரஸ் இல்லாம இருக்காரே.' என்று பதறியவளால் நிம்மதியாக தண்ணீர் கூடக் குடிக்க முடியவில்லை. கதவை திறக்க வேகமாக ஓடி வர, அதற்குள் நந்தனே கதவை திறந்து அவளது ஜோலியை முடித்திருந்தான்.


Leave a comment


Comments 2

  • A Aathi Sri
  • 1 month ago

    Semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma sis 👌👌👌👌👌👌👌❤️

  • F Fajeeha Fathima
  • 1 month ago

    இன்னைக்கு பெரிய பெரிய எபி கொடுத்ததுக்கு நன்றி 🥰 ஸ்டோரி ரொம்ப நல்லா இருக்கு நந்தன் என்ன இப்படி இறங்கிட்டான் 🤔


    Related Post