இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 30 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 21-05-2024

Total Views: 15559

அத்தியாயம் 30

"எங்கடா இருப்பான்...?" என சுரேந்தர் கேட்க.

"அவன் எங்கடா இருப்பான்... கழுதை கெட்டா குட்டி சுவருங்கிற மாதிரி... எங்கேயாச்சும் ஒரு டாஸ்மாக்ல விழுந்து கிடப்பான்... போய் பாத்துக்கலாம் வா..." என வாசு கூற.

"சுரேன்... நீ ரிஸ்க் எடுக்கறேன்னு எனக்கு தோணுது... அவனே ரவுடின்னு சொல்றாங்க... இப்ப அவன போய் பார்த்து என்ன பண்ண போற நீ...?" என சுந்தர் கேட்க.

"நீ அங்க வந்து தெரிஞ்சிக்க..." என்றான் சுரேந்தர்.

வண்டி அவன் ஊருக்குள் நுழைந்ததும் இந்தரின் விழிகள் கூர்மையானது.

உடலில் ஒரு இறுக்கம் தானாக வர அவன் யாராக இருப்பான் என அவன் விழிகள் அலசி ஆராய்ந்தது.

கை முஷ்டிகள் இறுக அமர்ந்து இருந்தான்.

இருபக்கமும் அவன் விழிகள் ஆராய்வது பார்த்த வாசு "ஏன்டா இப்படி பன்ற...?" என கேட்க.

"வாய மூடிட்டு வா..." என அவனை எரிந்து விழ "என்னவோ பண்ணு போ..." என்றான் அவன்.

சற்று தூரம் வந்ததும் ஒரு டாஸ்மாக் கடை இருக்க அங்கு வண்டியை நிறுத்தி ட்ரைவர் பாண்டி இங்க யாரென ஒருவரிடம் விசாரிக்க அவனோ வேறு ஒரு இடத்தை கூறி அங்கு போகுமாறு கூற அவன் கூறிய இடத்தை கேட்டதும் வாசுவிற்கு ஒருமாதிரியாக இருந்தது.

அது கள்ளச்சாராயம் தயாரிக்கும் இடம் சற்று பெரிய காடுதான் அவன் கூறிய இடம்.

வாசு சற்று தயங்க இந்தரோ.. "இன்னைக்கு அவன பார்த்தே ஆகனும் வாசு...." என முடித்துவிட்டான்.

"தேவை இல்லாத வேலை பாக்கற சுரேன்..." என்க.

"ஆமா.. இருக்கட்டும் வண்டிய எடு... இல்லனா நீ கிளம்பு நான் இங்க யார்கிட்டையாவது வழி கேட்டு போய்க்கிறேன்..." என்க.

"நானே வரேன்..."என்றுவிட்டு வண்டியை எடுத்தான் வாசு.

"நீங்க பன்றது எதுவும் சரி இல்ல... உங்க அப்பா என்ன சொல்வாருன்னு நானே பயந்து போய் இருக்கேன்..." என சுந்தர் கூற.

"கொஞ்ச நேரம்தான் வந்த வேலைய முடிச்சிட்டு உடனே கிளம்பிடலாம்...." என்றான் இந்தர்.

ஒற்றையடிப்பாதையாக ஒரு மண்ரோடு போக அதில் வண்டியை செலுத்தினான் வாசு வழி எங்கும் கருவேல மரங்கள் இருபுறமும் இருக்க அதை பார்த்தபடி சென்றான் இந்தர்.

சற்று உள் சென்றதும் ஆங்காங்கு ஆண்கள்     அமர்ந்து இருக்க புதிதாக வந்த இவர்களை சற்று கூர்ந்துதான் பார்த்தனர்.

வண்டியை மெதுவாக நிறுத்திவிட்டு "அண்ணா...." என ஒருவரை அழைக்க கையில் பாக்கெட்டுடன் இருந்த அவர் அவனை திரும்பி பார்த்தார்.

"அண்ணா.... இங்க பாண்டிங்கிறது... மார்க்கெட்ல கூட பூ வண்டி ஓட்டுவாரே அவரு...." என இழுக்க.

"யாரு.... அந்த பூ மார்க்கெட்ல ஒரு பொம்பளை பிள்ளைக்கிட்ட வம்பு பண்ணி... ஜெயிலுக்கு போனானே அவனா....?" என கேட்க.

அந்த வார்த்தைகள் இந்தருக்கு இன்னும் அதிக கோபத்தை வரவழைக்க பற்களை கடித்தபடி அமர்ந்து இருந்தான்.

"ம்ம்ம்ம் அவன்தான்..."என வாசு கூற. 

அவரோ "அந்தா அங்கன வெள்ள சட்டையும் புளூ கலர்ல பெரிய கட்டமா போட்ட லுங்கி கட்டிட்டு பேசிட்டு இருக்கான் பாரு அவன்தான்...." என்க.

வாசுவிற்கு பின்னால் அமர்ந்து இருந்த இந்தர் தலையை மட்டும் முன்னால் நீட்டி பார்த்தான்.

அவன் விழிகள் கோபத்தில் சிவக்க சுந்தரோ "ஏன்டா ஒரு டாக்டரா இருந்துகிட்டு... இப்படி இந்த மாதிரி கள்ளச்சாராயம் காய்ச்சர இடத்துக்கலாம் வரலாமாடா...?" என கேட்க?

"ஏன் டாக்டரா இருந்தா இங்கலாம் வர கூடாதுன்னு ஏதாச்சும் சட்டம் இருக்குதா என்ன... அவங்களும் மனுஷங்கதான்... அடிபட்டா அவங்களுக்கும் வலிக்கும்... நீ இந்தமாதிரி டாக்டர் டாக்டர்னு சொல்லி காட்டாம இரு..." என்றவன் "தேங்க்ஸ்ணா...." என அவரிடம் கூறிவிட்டு "வண்டிய எடு..." என்க.

ம்ம்ம்ம் என்றவன் வண்டியை இயக்க இரண்டு நிமிடத்தில் வண்டி பாண்டியை நெருங்கி இருந்தது.

கையில் பாட்டிலுடன் ஒரு கல்லின் மேல் அமர்ந்து தன் கூட்டாளிகளுடன் ஏதோ பேசுவதும் பின்பு வாயில் முழு பாட்டிலை சரிப்பதுமாக இருந்தவன் வண்டி சத்தத்தில் திரும்பி பார்க்க தன்னை நோக்கித்தான் அந்த வண்டி வருகிறது என நன்றாகவே புரிந்தது.

புதிய முகங்களை கண்டவன் தன் சகாக்களை அழைத்து "யாருடா நம்மள பாக்க அதும் இங்க வர மாதிரி இருக்கு...?" என கேட்க.

ஒருவன் மட்டும் "வண்டி ஓட்டிட்டு வரவன தெரியுது... நம்ம பக்கத்து ஊருதான் அதான் அந்த ஊர் தலைவரு தர்மர் இருக்காரே அவரோட ஒரே புள்ள...." என்க.

"அவனுங்களுக்கு நம்ம ஊர்ல என்ன வேலை...?" என்றான் பாண்டி.

"ஏதாச்சும் சோலியா வந்து இருப்பானுங்கடா... நீங்க வேலைய பாருங்க..." என்க.

"டேய்... வண்டி நம்மள பார்த்துதான் வருது..." என்றான் பாண்டி.

"வரட்டும்டா...." என்றான் இன்னொருவன்.

வண்டி அருகில் வந்ததும் வாசு வண்டியை நிறுத்த இந்தரும் சுந்தரும் இறங்கினர்.

வாசு வண்டியைவிட்டு இறங்கி "இங்க பாண்டிங்கிறது...?" என. வாசு இழுக்க .

"ஏன் நான்தான் என்ன வேணும்...." என்றபடி எழுந்து வந்தான் பாண்டி.

நடையில் ஒரு தெனாவட்டும் பேச்சில் ஒரு நக்கலும் இருக்க வாசுவின் முன் வந்து நின்றவனை எட்டி அவன் நெஞ்சில் உதைத்தான் இந்தர்.

அவனின் இந்த திடீர் செயலை பாண்டியின் சகாக்கள் மட்டும் இல்லை  வாசுவும் சுந்தரும் கூட எதிர்பார்க்கவில்லை.

இந்தர் உதைத்ததில் நிலைதடுமாறி விழுந்தவன் தட்டு தடுமாறி எழுந்து நிற்கவே முடியாமல் நின்றவனை மீண்டும் உதைக்க போக அவனை தடுத்தனர் வாசுவும் சுந்தரும் "என்ன பண்ணிட்டு இருக்க இந்தர்...?" என கேட்க.

"ம்ம்ம்ம்... என் பொண்டாட்டிக்கு கேட்க நாதியில்லன்னுதான கண்ட நாயெல்லாம் அவள உரசி பாக்குது... அதான் நான் இருக்கேன்னு காட்ட வந்துருக்கேன்..."என்க

வாசு அதிர்ந்தான் என்றால் சுந்தருக்கு மயக்கம் வாராத குறைதான்.

"ஏய்..." என்றபடி பாண்டி எழுந்து வர மீண்டும் ஒரு உதை விட்டவன் அவன் வலது கையை பிடித்து முறுக்க வலி பொறுக்க முடியாமல் அவன் கத்த அந்த சத்தத்தில் சற்று கூட்டம் கூடியது அந்த இடத்தில்.

போதையில் இருப்பவர்கள் சிலரும் நன்றாக இருப்பவர்களும் அவனை தடுக்க முயல பாண்டிக்கு அடித்த சரக்கெல்லாம் சட்டென போதை இறங்கியது.

"யாருடா நீ...?" என கேட்டபடி மீண்டும் அடிக்க வர.

"என் அருவி மேல கைய வப்பியாடா... இந்த கையா வச்சுது... இந்த கையா...?" என்றபடி மேலும் முறுக்க "வேண்டாம் விட்டுருடா..." என்றபடி அவன் கத்த.

"இப்படிதான் அன்னைக்கு அவளும் கத்தி இருப்பா...." என்றபடி அவனை அடி பொளந்து கட்டிவிட்டான்.

"இனி அவள மட்டும் இல்ல வேற எந்த பொண்ணையும் தப்பா நினைக்கக்கூடாது..." என்றவன் அவனை மேலும் துவைக்க "டேய் போதும்டா வா போய் அவன தடுத்து நிறுத்தலாம்... இல்லனா அவன் கொலையே பண்ணாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்ல..." என சுந்தர் கூற.

வாசு வேகமாக சென்று அவனை தடுக்க பார்க்க அவனை தள்ளியவன் மேலும் அவனை அடிக்க ஆரம்பிக்க சுரேனின் பின்னால் இருந்து ஒருவன் யாரும் சுதாரிக்கும் முன் அவனது தோள்பட்டையில் ஒரு கட்டையை கொண்டு தாக்க அடி சற்று பலமாக பட்டதில் வலி உயிர் போனது சுரேனிற்கு.

அதற்குமேல் போறுக்காமல் வாசுவும் சுரேனை அடித்தவனை அடிக்க ஆரம்பித்தான்.

சுந்தர்தான் "டேய் வாசு வா இவன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்...," என கத்த சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு கையில் இருந்த கட்டையை கீழே போட்டவன் அடிபட்டதில் சுருண்டு படுத்து இருந்தவனை தூக்கி வண்டியில் அமரவைத்து கைத்தாங்கலாக பிடித்து கொண்டு மருத்துவமனை நோக்கி வண்டியை செலுத்தினான் வாசுதேவன்...

வீட்டிலோ கையில் திகம்பரன் கொடுத்த மருந்து பாட்டிலுடன் சமையல் செய்யும் இடத்திற்கு விரைந்தாள் மகிழா...



Leave a comment


Comments


Related Post