இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 32 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 22-05-2024

Total Views: 14052

சந்தியாவை தேடி வந்த அபிநந்தன் அறையில் அவள் இல்லாது போக மீண்டும் வெளியே வந்து செவிலியரை பார்த்து “சந்தியா எங்கே?” என்று கேட்க


“மேடம் ரவுண்ட்ஸ் போயிருக்காங்க சார்.. நீங்க இங்க வெயிட் பண்ணுங்க மேடம் வந்ததும் சொல்றேன்.” என்று சொல்லி இருக்கையை கை காட்ட அதில் அமர்ந்தான் அபிநந்தன்.


அபிநந்தன் முகத்தில் தெரிந்த குழப்பமும் பயமும் எதுவோ இருக்கிறது என்று தோன்ற அவனை பின் தொடர்ந்து வந்த முகில் அவன் சந்தியா அறையை காட்டி பேச அதை கவனித்து சற்று தள்ளியே நின்று நோட்டமிட துவங்கினான் முகில்.


 அடுத்த ஐந்தாறு நிமிடங்கள் கழிய சந்தியா ரவுண்ட்ஸ் முடித்து வந்தாள். வரும் வழியிலேயே செவிலியர் நந்தன் வந்ததை கூறியிருக்க நேராக காத்திருப்போர் இருக்கையில் வந்து அவனை அழைத்துக் கொண்டு கேண்டீனுக்கு வந்தாள் சந்தியா.


இவர்களை தொடர்ந்து வந்த முகில் செய்திதாள் கொண்டு தன் முகத்தை மறைத்தபடி இவர்கள் பேச்சு கேட்கும் தொலைவில் அமர்ந்து கொண்டான்.


“என்னாச்சு அபி? உன் முகம் வாட்டமா இருக்கு என்னடா அபிலாஷாவை பத்தி ஏதாவது பேசனுமா?” என்று சரியாக கணித்து கேட்க ஆம் என்று மேலும் கீழும் தலையசைத்தான்.


“அது வந்து லாஷாக்கு இப்போ எப்படி இருக்கு சந்தியா ரிப்போர்ட் கேட்டு போக தான் வந்தேன்…” என்றிட


“அதுக்கா உன் முகத்துல இவ்வளவு பயம் பதட்டம் எல்லாம்?” சந்தியா ஆச்சரியமாக கேட்க


“ச்ச்… நீ சாதாரணமா கேட்டுட்ட சந்தியா… குழந்தை ஆசையோட இருக்கிற லாஷாக்கு தெரியாம இதை மறைக்க நான் படுற பாடு எனக்கு மட்டும் தான் தெரியும். அவளுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை பரிபூரணமா குணமாகிட்டா னு நீ சொல்ற வரைக்கும் என் மனசு ஒவ்வொரு நொடியும் இப்படி தான் அடிச்சிட்டே இருக்கும்.” என்று அபிநந்தன் பேச பேச


‘அவள் மீது இத்தனை காதலா?’ என்று சந்தியா வியக்க ‘அப்படி என்ன பிரச்சினை அபிக்கு?’ என்று கூர்ந்து கவனித்தான் முகில்.


“சொல்லு சந்தியா நேத்து லாஷாவோட செக்கப் ரிசல்ட் என்ன? நேத்தே உன்னை பார்க்க எத்தனை முறை கால் பண்ணினேன் நீதான் ஏதோ சர்ஜரி அது இதுன்னு இன்னைக்கு வர சொன்ன லாஷாக்கு ஏதாவது இம்ப்ரூமெண்ட் தெரியுதா?” என்று ஆர்வமாக கேட்க


மெல்லிய புன்னகையுடன் “இம்ப்ரூவ் ஆகிருக்குனு தான் சொல்லனும் அபி.. ஆமா நேத்து நடந்த டெஸ்ட்ல அவ யூட்ரஸ் கட்டி முன்ன இருந்த அளவை விட குறைஞ்சிருக்கு. ஆனா இன்னுமே அபியால ஒரு கருவை சுமக்க முடியாது. அது அவளுக்கே ஆபத்தா முடியலாம். என்று சொல்ல அபிலாஷா வயிற்றில் இருந்த கட்டி குணமானது கேட்டு மகிழ்வதா இல்லை இதை கேட்டு வருந்துவதா என்று புரியாமல் விழித்தான் அபிநந்தன்.


“ஓ… அந்த அபிக்கு இப்படி பிரச்சினை வேற இருக்கா? இது அவளுக்கே தெரியாது போலவே… நேரம் கிடைக்கும் போது இதை நமக்கு சாதகமா பயன்படுத்தனும்.” என்று முகில் திட்டமிட்டு கொண்டு இருக்க


“அபி… உங்கிட்ட ஒன்னு கேட்கனும்டா…” சந்தியா சொல்ல


“ம்ம் கேளு சந்தியா…”


“இல்ல… உன்னை சின்ன வயசுல இருந்தே எனக்கு தெரியும். மாமா இருந்த வரைக்கும் நீ எதுக்குமே ஏங்கினது கிடையாது நீ ஆசைப்பட்ட எல்லாத்தையும் அவர் உன் கண் முன்னே கொண்டு வந்து தந்திடுவாரு. நீயும் கூட அவரோட சக்திக்கு தகுந்த மாதிரி தான் ஆசை படுவ. ஆனா மாமா இறந்த அப்பறம் நீ எதுக்குமே ஆசை பட்டதே கிடையாது.


அத்தை அச்சு நான் உன் படிப்பு இதுதான் உன் உலகம்.. அதாவது நான் சில வருஷம் முன்னாடி வரைக்கும் உன்னை இப்படித்தான் பார்த்திருக்கேன். பட் சடனா அபிலாஷா மேல எப்படி டா இப்படி ஒரு லவ்… அதுவும் ரொம்ப ஷார்ட் பீரியட்ல?” என்று ஆர்வமாக கேட்க


தன்னவள் நினைவில் மெல்லிய புன்னகை கீற்றை இதழில் மலர விட்டான் அபிநந்தன்.


“எங்களோட மேரேஜ் எப்படி நடந்ததுனு உனக்கு தெரியாதுல சந்தியா?” என்று கேட்க


“அதான் அச்சு சொன்னாளே” சந்தியா சொல்ல


“ம்கூம்… அவளோட யூகத்தை தான் அவ சொன்னா.. ஆக்சுவலா மேரேஜ் முன்னாடி நானும் அபியும் லவ் பண்ணவே இல்ல.” என்று அபிநந்தன் சொல்லியிருக்க சந்தியாவோடு முகிலும் அதை கேட்டு அதிர்ந்தான்.


“என்னடா சொல்ற?” அப்பட்டமான அதிர்ச்சியை முகத்தில் காட்ட


“ஆமா சந்தியா… அச்சு சொன்ன மாதிரி நானும் லாஷாவும் எதிர்பாராம மீட் பண்ணி அவ மோகன்ராம் சார் ஃபேமிலிக்கு க்ளோஸ் அது மூலமா என்னை சந்திச்சு பேசினாள். நானும் என்னையே அறியாம ஏற்ப்பட்ட ஒரு ஆர்வத்துல பழகினேன். என்னை மட்டும் இல்லாம லாஷா என் குடும்பத்தோடவும் பழக விரும்பினா. ஒரு நாள் திடீர்னு என்னை காதலிக்கிறதா சொன்னா… எனக்கு கொஞ்சம் ஷாக் தான்… 


ஆனாலும் அச்சு அம்மா என் குடும்ப சூழல்னு சாக்கு சொல்லிட்டு இருந்தேன். அப்போ கூட ‘நீ என்னை காதலிக்க வேண்டாம் உனக்கும் சேர்த்து நான் உன்னை காதலிக்கிறேன் எவ்வளவு காலம் ஆனாலும் காத்திட்டு இருப்பேன்’ னு சொன்னா. அப்போ தான் அவளோட வீட்ல வேற அலையன்ஸ் பாக்குறாங்க வேணாம்னு சொன்னாலும் கேட்கலனு ஃபீல் பண்ணினா. நானும் ‘நீதான் என்னை காதலிக்கிறயே அதை சொல்லி கொஞ்சம் டைம் கேளு’ னு சொன்னேன்.


அவளும் ‘அதை சொல்லியும் கூட அவங்க அதை நம்பலை நீங்க நேர்ல வந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்’ னு சொல்லி கூப்பிட்டா. நான் அவங்க வீட்டுக்கு போனப்போ தான் அவளோட சித்தப்பா சித்தி அத்தை மாமா எல்லாரும் என்னை ரொம்பவே அவமானப் படுத்துற மாதிரி பேசவும் என்னால அதை பொறுத்துக்க முடியல லாஷாவை எங்க கையோட கூட்டிட்டு வந்திட்டேன். அப்பறம் அம்மா தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சாங்க..” என்று முடிக்க


“அப்போ அபிலாஷாவை லவ் பண்ணவே இல்லையா அபி?” என்று சந்தியா கேட்க


மந்தகாச புன்னகை சிந்திய அபிநந்தன் “லாஷாவை முதல் முறை என் ஆஃபிஸ்ல பார்த்த அன்னைக்கே என் மனசுல முழுசா பதிஞ்சுட்டா சந்தியா… ஆனா அவகிட்ட சொன்ன மாதிரி என் குடும்பம் சூழல்னு அதை சொல்லாம தயங்கினேன் தான்… ஆனா லாஷா மேல இருந்த காதலை அவ வீட்ல தெரியபடுத்தி அவங்க சம்மதம் வாங்க தான் நான் அவ வீட்டுக்கு போனேன்.


பட்… அன் எக்ஸ்ப்பெக்ட்டட் ஏதேதோ நடந்தது. அவங்க என்னை மட்டும் அவமானப்படுத்தல என்னோட லாஷாவோட காதலை அவனமானமா பேசினாங்க. அது மட்டும் இல்ல இத்தனை காலம் இப்படி பட்ட உறவுகளை நம்பியா லாஷா இருந்தா னு எனக்கு அவளை நினைச்சு வருத்தம் கவலை.. அவளை இனி நல்லபடியா பார்த்துக்க தோணவும் தான் நான் அவளை எங்கூடவே கூட்டிட்டு வந்திட்டேன்.” என்று நந்தன் விளக்கம் சொல்ல


“இவ்வளவு காதல் அபி மேல இருக்கே… அதை அவகிட்ட சொல்லிருக்கியா அபி?” சந்தியா தன் நண்பன் குணம் அறிந்து கேட்க


“சொல்லனும் னு அவசியம் வரலை சந்தியா… என்னோட காதல் சொல்லி தான் தெரியனுமா? என்னை முழுசா புரிஞ்சவளுக்கு என்னோட நடவடிக்கைகள் மூலம் தெரியாதா?” என்று தன்னவளை நினைத்து பெருமிதமாக கேட்டான் அபிநந்தன்.


ஆனால் அளவுகடந்த காதல் சொல்லப் படாமல் போவது எத்தனை பெரிய தவறு என்று இன்னும் சில நாட்களில் காலம் அவனுக்கு உணர்த்த காத்திருக்க அதை தாங்கும் சக்தி அபிநந்தனுக்கு உள்ளதா என்பதே ஆண்டவனுக்கே வெளிச்சம்.


இங்கே சந்தியாவிடம் அபிநந்தன் பகிர்ந்தவை யாவும் கொஞ்சம் திரித்து அலுவலகத்தில் அபிலாஷாவிற்கு தெரிய வைக்கப்பட்டது முகில் மூலமாக… 


மருத்துவமனையில் இருந்து நேராக அலுவலகம் வந்து அபிலாஷாவை இளக்காரமாக பார்த்தான் முகில்.


“என்ன முகில் எதுக்கு பர்மிஷன் இல்லாம வந்த என்ன விஷயம்?” என்று அபிலாஷா கேட்க நக்கலாக சிரித்தவன்,


“உன்னை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு அபி…” என்று ‘உச்’ கொட்ட


“ச்ச்… என்ன விஷயம் முகில்? எனக்கு நிறைய வேலை இருக்கு” எரிச்சல் அடைந்தாள் அபிலாஷா. 


“சரி சொல்றேன்… இல்ல… என் நந்தன் அப்படி இப்படி.. என்னை அப்படி பார்த்துக்கிறாரு இப்படி தாங்குறாருனு அவ்வளவு கதை அளந்தியே… கடைசில போனா போகுதுன்னு உன்னை பரிதாப பட்டு கல்யாணம் பண்ணிருக்கான் உன் நந்தன்.” என்று கேலியும் கிண்டலுமாக சொல்ல சுர்ரென்று கோபம் வந்தது அபிக்கு.


“பார்த்து பேசு முகில்… என் நந்தனை பத்தி என்ன தெரியும் உனக்கு? எதை வைச்சு இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க? கதை அளந்தேன் அது இதுன்னு சொல்றே?” என்று கோபமாக கேட்க


“இன்னைக்கு உடம்பு சரியில்லாம இருக்கிற என் ஃப்ரண்டை பார்க்க ஹாஸ்பிடல் போனேன். அங்கதான் உன் புருஷன்… அவனோட ஆசை நாயகிகிட்ட உங்க கல்யாணம் நடந்த விதத்தை பத்தி சொல்லிட்டு இருந்தான் நீ நான் சொன்னா நம்ப மாட்டன்னு தெரியும். அதான் செல் ஃபோன்ல வீடியோ எடுத்திட்டு வந்திருக்கேன்.” என்று காட்டினான்.


அதுவும் சந்தியாவிடம் ‘எங்க மேரேஜ் எப்படி நடந்ததுனு தெரியுமா?’ என்று கேட்டதிலிருந்து அவன் தங்கள் திருமணம் நடந்த விதத்தை கூறியதும் சந்தியா ‘அப்போ நீ அபிலாஷாவை லவ் பண்ணவே இல்லையா?’ என்று கேட்டது வரை மட்டுமே தன் செல்போனில் படம் எடுத்து வந்து காட்டி இருந்தான் முகில்.


அதை வாங்கி பார்த்த அபிலாஷா “அப்போ என்னை நீங்க லவ் பண்ணவே இல்லையா நந்து? அதுவும் இதுவரை என்கிட்ட கூட சொல்லாம இன்னைக்கு சந்தியாகிட்ட ஷேர் பண்ணிருக்கீங்க… நான் உங்களுக்கு அவ்வளவு தான் இல்ல?” என்று மனதோடு கேட்டுக் கொண்டவள் மனம் உடைந்து போனாள் அபிலாஷா.


  • தொடரும்…

Leave a comment


Comments


Related Post