இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -41 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 23-05-2024

Total Views: 24263

நந்தனின் வார்த்தைகள் புரியவே அனைவருக்கும் சிறிது நேரமாகியது. புரிந்ததும் அவனை எதிர்த்து சண்டை போடக் கூடப் பலம் இல்லாமல் நிலா உடைந்து போய் கதறி விட்டாள். கண்களில் கண்ணீர் அருவிப் போல் கொட்டியது. காலை மடக்கி தரையில் அமர்ந்து அழுதாள். 

தன் பெண்ணை கேவலப்படுத்தும் அளவிற்கு இவனுக்கு நான் எதுமே பண்றதில்லையே. இவன் பண்ண விஷயத்தை வெளியே சொன்னா எல்லோரும் தப்பா நினைப்பாங்கன்னு சொல்லாம எனக்குள்ளையே மறைச்சி வெச்சேனே அதுக்கு பரிசா இது. என அழுதுக் கொண்டே அவனைப் பார்க்க அவனும் இவளை தான் பார்த்தான். 

"அவன் சொன்னா நாங்க நம்பப் போறோமா நீ அழாத நிலா?" என்று முதலில் அவளுக்கு ஆறுதலாக நின்றது வளவன் தான். 

வளவன் நந்தனின் பனியனை பிடித்து விட்டான். 

“டேய் நீ என்னவா வேணா இருந்துக்கோ. என் தங்கச்சி வாழ்க்கையில இதுக்கு மேலயும் உன்னைய விளையாட விட மாட்டேன், நுழையவும் விட மாட்டேன். ஒழுங்கா எல்லோருக்கும் முன்னாடி உண்மையை சொல்லு.” 

“அதான்டா மச்சான், உள்ளுக்குள்ள நடந்ததை சொன்னா அண்ணனா உன்னால கேக்க முடியாது. என நக்கலாக கேக்க.. வளவன் நந்தனை அடிக்கப் போக நந்தன் முகத்தை விலக்கி அடியிலிருந்து விலகிக் கொண்டான். 

“விடு வளவா.. விடு.. இங்க பாரு நந்து எதுக்கு இப்போ தேவையில்லாம பேசற.. ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளையாடக் கூடாதுப்பா, அம்மா கேக்கறேன்ல உண்மை மட்டும் சொல்லுப்பா, நம்ம வீட்டுலயும் பொண்ணு இருக்கு. அந்த பொண்ணோட கண்ணீர் நம்ப பொண்ணை வாழவிடாதுப்பா.” என பல வருடங்களுக்கு பின்பு இப்போ தான் மகனிடம் பேசினார் மணிமேகலை. 

நிலாவை அடித்ததால் உண்டான பிரச்சனையில் பேசாமல் இருந்தவர், இன்று அதே நிலாவின் மானத்தை காத்திட வேண்டும் என்பதால் பல வருஷ மௌன விரதத்தை முடித்துக் கொண்டார் மணிமேகலை. 

எது உருவாகும் அதற்கு காரணம் நந்தனின் நிலாவாக தான் இருக்கும். 

அவர் கேட்டதும் காதில் சுண்டு விரலை விட்டு குடைந்துக்கொண்டான். 

நிலா விசயத்தில் என்று அவன் மனிதனாக இருந்திருக்கிறான். பல வருடம் கழித்து தாய் பேசியதைக் கூட பொருட்படுத்தாமல்,  

“அப்பா ஊருக்கே தெரிஞ்சுப் போச்சி இதுக்கு மேல மறைக்க முடியாது. ஷாலினி கல்யாணத்தோட எங்க கல்யாணத்தையும் வெச்சிடுங்க. இவ தான் என் பொண்டாட்டி நான் முடிவு பண்ணிட்டேன், சொன்னதை செய்ங்க இல்லனா என்ன செஞ்சி அவளை பொண்டாட்டி ஆக்கிகணும்னு எனக்கு தெரியும்.” என்றவன் நிலாவை திரும்பிப் பார்த்தான். 

இவ்வளவு நாள், வார்த்தையை அளந்து பேசுகிறானே என கவலையில் இருந்தவர்களுக்கு ஒரே நாளில் ஏண்டா வாய் இவன் பேசுகிறான் என நினைக்க வைத்து விட்டான். 

அவள் கேவி கேவி அழுக அந்த அழுகையில் அவன் முகம் இறுகியது. சட்டென்று அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன். 

“எதுக்குடி அழற?” 

“உன்னை தான் கேக்கறேன்” இந்த முறை பல்லைக் கடித்துக் கொண்டு கேக்க.. அழுகை சற்று குறைய.. சொல்ல முடியாமல் தவித்தாள். 

“எதுவும் நடக்கலைன்னு தெரியும் தானே” என அவளுக்கு மட்டும் கேக்கமாறு கேட்டான். 

“ம்ம்ம்..” 

“அப்புறம் என்ன *** அழுவற..?” 

“நீ.. நீங்.. நீங்க..” 

“எவ்வளவு திமிரு இருந்தா என் முன்னால உன் அண்ணன் உக்கார்ந்து கால் மேல கால் போடுவான். 

'அதுக்கா?' என்பது போல் அவனை பார்க்க, 

கண் அடித்து, “எஸ் பேபி அதுக்கு தான் இனி அண்ணனும் தங்கச்சியும் ஓடுவீங்க பாருங்க.” என்றவன் எழுந்து நின்று,

"போய் சட்டையை எடுத்துட்டு வா" என்றான் அதட்டலாக. 

அழுதுக் கொண்டே உள்ளே சென்று அவன் கேட்ட சட்டையைக் கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கி அணிந்து கொண்டவன், "அப்பா நான் சொன்னது நினைவுல இருக்கட்டும்." என்று அங்கிருந்து சென்று விட்டான் 

, “ஏய் போங்கடி வந்துட்டாளுங்க வீட்டை எப்படி கெடுக்கறதுன்னு எவன் வூட்டுல என்ன நடக்குது, எவன் வூட்டுல என்ன ஆடுதுன்னு பார்க்கறது. என்ற கிருஷ்ணம்மாள் அவர்கள் போனதும் புழுப்புழுவென்று பிடித்துக் கொண்டார். 

“அப்பவே ஊர்க்குள்ள சொன்னாங்க எனக்கு தான் புத்தில ஏறல, ஏதோ போனா போகுதுன்னு பக்கத்துல சேர்த்த பாவத்துக்கு என் பேரனையே வளைச்சுப் போட்டுப் புட்டா. ஐய்யனார் கணக்கா இருந்த பையனை இப்படி ஆக்கிபுட்டாளுங்களே..” 

“அம்மா சத்த நேரம் சும்மா இரு. இங்க இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு நீ வேற பிரச்சனையை உண்டுப் பண்ணிட்டு, நீ முதல்ல இங்க இருந்து போ..” 

“மாட்டேன் நான் எதுக்கு போகணும்? சொல்லுடி என்ன பண்ணி என் பேரனை வளைச்சிப் போட்ட?” 

“அம்மா... உன்னைய போன்னு சொன்னேன். இதுக்கு மேல இங்க இருந்த அப்புறம் நான் வேற மாதிரி பேசிடுவேன் ஒழுங்கா போ.” 

“என்னடா பெத்தவளையே தப்பா பேசற?” 

"உன்னைய போன்னு சொன்னேன்." என மீண்டும் மார்த்தாண்டம் சத்தம் போட.. நொடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றார். 

“என்னமா நடந்துச்சு?” என மணிமேகலை நிலாவின் தோளில் கையை வைக்க, 

“எல்லாத்தையும் வெளியே வெச்சி தான் கேப்பிங்களா? உள்ளே வா அம்மு” என அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான் வளவன். 

“அண்ணா.. எனக்கு அவரோட கல்யாணம் வேண்டா அண்ணா, ப்ளீஸ்ண்ணா...” என மீண்டும் கேவி கேவி அழுக ஆரம்பித்து விட்டாள்.அவனை 

பிடிக்கும் தான் அவன் அன்பிற்கு ஏங்குகிறாள். வாழ முடியாது 

பூச்சாண்டி கூட வாழ அவள் என்ன லூசா.? 

“இப்போ யாருக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறா சும்மா அழாத அம்மு.” என்று அவளிடம் கோவத்தைக் காட்டியவன் “என்ன மாமா இதெல்லாம் ஒரு போலீஸ் ஆபிசர் மாதிரியா உங்க பையன் நடந்துக்கறான்? 

“கொஞ்சம் பொறுமையா இரு மாப்பிள என்னன்னு நிலாம்மா என்ன நடந்துச்சு? சொல்லும்மா மாமா எதா இருந்தாலும் பார்த்துக்கறேன்.”


“நீங்க என்ன பார்ப்பீங்க? இத்தனை வருசத்துல உங்க பொண்ணுக்கிட்ட பேசறதுக்கு விடவே யோசிப்பிங்க, 
உங்க பொண்ணுனா ஒன்னு, அடுத்த பொண்ணுனா ஒன்னா? எவ்வளவு தைரியமா தப்பு பண்ணோம்னு சொல்லி என் தங்கச்சிக்கு வாழ்க்கையை கெடுக்கப் பார்ப்பான்.”



Leave a comment


Comments 3

  • K Kanimozhi K
  • 1 month ago

    enaku ennavo intha nila ponnu panratha patha avlo kadupa iruku mathavangita avlo vaai pesuthula ipo Avan avaloda character ah spoil panra mathiri paraan ipo kuda vaaya thorantha solla kastam...... Konjam kooda soodu soranai ethumey ila simply crying... Entha situation la venunalaum amaithiya poruthu pogalam ... Ipdi oru situation varapo... Ipdiya behave pannuvanga...

  • K Kanimozhi K
  • 1 month ago

    enaku ennavo intha nila ponnu panratha patha avlo kadupa iruku mathavangita avlo vaai pesuthula ipo Avan avaloda character ah spoil panra mathiri paraan ipo kuda vaaya thorantha solla kastam...... Konjam kooda soodu soranai ethumey ila simply crying... Entha situation la venunalaum amaithiya poruthu pogalam ... Ipdi oru situation varapo... Ipdiya behave pannuvanga...

  • F Fajeeha Fathima
  • 1 month ago

    ஒரு காலுக்கு‌ மேல் கால் போட்டது குத்தமா ஏன்டா இப்படி பழிவாங்குற நந்தா


    Related Post