இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே - 13 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 24-05-2024

Total Views: 13759

இதயம் - 13

வாசு போதையில் ஏதேதோ முனங்கியவாறு படுத்துக் கொண்டிருந்தான். வாசுவின் வாந்தி எல்லாம் சுத்தம் செய்தவள் வாசுவின் சட்டையை கழட்டினாள். வாசு "அஞ்சு வேணா அஞ்சு" என்று கூறியவாறே எழுந்தமர்ந்தான். யாழிசை அவனின் புலம்பலை கேட்டதும் அப்படியே அவன் கையை பிடித்து இழுத்துச் சென்று குளியலறையில் அமர வைத்து தண்ணீரை வாசுவின் தலை மேல் ஊற்றினாள். வாசு குளிர்ந்த நீரை மேலே ஊற்றியதால் குளிரால் மார்பின் குறுக்கே கையை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான். "அஞ்சு குளிருது" என்று போதை இன்னும் தெளியாமல் வாசு புலம்ப கையில் இருந்த பக்கெட்டை கீழே போட்ட யாழிசை "டேய் இங்க பாரு ... கண்ணை திறந்து என்னை நல்லா பாரு ... என்னை பாத்தா அஞ்சனா மாதிரி இருக்கா ... பாரு" என்று தொங்கிபோன வாசுவின் தலையை நிமிர்த்த யாழிசை அவனின் சட்டை காலரை பிடித்து இழுத்து ஆட்டி கூறினாள். வாசு சற்று போதை தெளிந்ததால் குரல் வேறு மாதிரி இருக்கவும் நிமிர்ந்து பார்த்தான். அது அஞ்சுவல்ல என்று யாழிசையின் முகம் தெளிவாய் தெரியவே வாசு பதறிக் கொண்டு எழுந்து நின்றான்.  

"ஐய்யய்யோ யார் நீ" என்று பதறிக் கொண்டு எழுந்த வாசு திடீரென எழுந்ததால் தடுமாறி முன்னால் யாழிசை மேல் சாய யாழிசை பட்டென பின்னால் நகர்ந்துக் கொண்டாள். குப்புற விழுந்த வாசு தட்டு தடுமாறி அரை போதையில் எழுந்து "யார் நீ" என்று மீண்டும் கேட்டான். போதை மயக்கம் மட்டுமே தற்பொழுது தெளிந்திருக்க வாசுவின் கால்கள் இன்னமும் ஆட்டம் தான் ஆடிக் கொண்டிருந்தது. "இப்பவாவது தெளிஞ்சதே" என்று கூறிய யாழிசை "ட்ரஸ்ஸ மாத்திட்டு வந்து சேரு" என்று கூறி விட்டு வெளியில் சென்றாள். வாசு தாம் எப்படி இங்கு வந்தோம் என்ற சிந்தித்தவாறே உடையை கழற்றினான். உடையை மாற்றக் கூறினாள் மாற்றுடை எங்கே என்று தேடியவன் யாழிசை வைத்திருந்த டீஷர்ட்டையும் பேண்டையும் மாட்டிக் கொண்டு வெளியில் வந்தான். 

யாழிசை குளியலறையில் இருந்து வெளியில் வந்ததுமே பரத்திற்கு அழைத்தாள். பரத் மயக்கத்தில் இருந்ததால் அழைப்பை எடுக்கவில்லை. சரி லெமன் ஜுஸையாவது ஆர்டர் கொடுப்போம் என்று நினைத்தவள் ஹோட்டல் லேன்லைனை எடுக்க அதுவோ வேலை செய்யவில்லை. கடுப்பான யாழிசை வெளியிலாவது செல்வோம் என்று சென்று கதவை திறக்க முயன்றாள். ஆனால் கதவு திறந்தபாடில்லை. 'கதவை யாரோ லாக் பன்னி இருக்காங்க' என்று நினைத்த யாழிசை பரத் அழைப்பை ஏற்காதது லேன்லைன் வேலை செய்யாதது கதவு பூட்டப்பட்டிருப்பது அனைத்தையும் பொறுத்தி பார்த்த யாழிசைக்கு தன்னை யாரோ ட்ராப் செய்து வைத்திருப்பது புரிந்தது. அவள் மட்டும் உள்ளே இருந்திருந்தால் பரவாயில்லை தற்பொழுது வாசு வேறு அவளுடன் இருக்கிறான். காலை கதவை திறக்கும் போது வாசுவையும் தன்னையும் சேர்த்து வைத்து தான் தவறான செய்தியை பரப்ப மயில்சாமி ஏற்பாடு செய்திருக்கிறான் என்பதை அரை நொடியிலே யூகித்து விட்டாள் யாழிசை. 'பழைய ஐடியா' என்று நொச் கொட்டிய யாழிசை உடனே அவினாஷ்ஷிற்கு அழைத்தாள். பாதி வழி சென்றுக் கொண்டிருக்கும் போது அழைத்த தங்கையின் அழைப்பை காரை ஓரமாக நிறுத்தி விட்டு ஏற்றான் அவினாஷ். "அண்ணா எங்க இருக்க" என்று யாழிசை கேட்க யாழிசை கேட்ட கேள்வியை தவிர்த்து "பாப்பா நீ இன்னும் தூங்காம நீ என்ன பன்ற" என்று கேட்டான். "அண்ணா என்னை அந்த மயில்சாமி ட்ராப் பன்னி வச்சிருக்கான் ... கொஞ்சம் ஹோட்டல்க்கு சீக்கிரம் வரியா" என்று யாழிசை கூறவும் அவினாஷ் பதட்டமாகினான். "என்னம்மா சொல்ர" என்று பதட்டமாக கேட்ட அவினாஷ்ஷிடம் யாழிசை "பதட்டப்படாத ... எனக்கு ஒன்னும் இல்லை ... நா சொல்ர மாதிரி செய்" என்று கூறினாள். அவினாஷ்ஷும் அவள் கூறியதை கேட்டு சரி என்று "உன்னோட ஆட்டம் என் தங்கச்சிய அசிங்க படுத்துர அளவுக்கு மீறிடுச்சா ... நேரா மோத முடியலன்னு குறுக்கு வழியில போற இரு நாளைக்கு இருக்கு உனக்கு" என்று நினைத்தவன் மீண்டும் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். 

உடையை மாற்றிக் கொண்டு வெளியில் வந்த வாசு யாழிசை கூறியவைகளை கேட்டு அதிர்ந்து வாய் மேல் கை வைத்துக் கொண்டு நின்றிறொருந்தான். யாழிசை அவன் நிற்பதை பார்த்து சிரித்தவாறே மீண்டும் வீடியோவை ஆன் செய்து வைத்து விட்டு வாசு அருகில் சென்றாள். வாசு யாழிசை தன்னை நெருங்குவதை பார்த்ததும் பின்னால் நகர்ந்தவன் படியில் கால் வைத்து தடுக்கி விழச் சென்றான். யாழிசை வாசுவின் கையை பிடித்து முன்னால் இழுக்க வாசு மொத்தமாய் அவள் மேல் விழ யாழிசை தரையில் விழுந்தாள். வாசுவின் மொத்த எடையும் யாழிசை மேல் இருக்க யாழிசை "அப்பா" என்று என்று முனங்கினாள். 

வாசு அவசரமாக எழுந்து நின்றான். "கைய கொடு" என்று முகத்தை சுழித்தவாறே யாழிசை தன் கையை நீட்ட வாசு தயக்கத்துடன் யாழிசையை நோக்கி கையை நீட்டினான். யாழிசை அவன் குடித்திருப்பதை உணர்ந்து கையை இழுத்துக் கொண்டவள் "நானே எழுந்துக்றன்" என்று எழுந்து நின்றாள். வாசு குழந்தை போல் முகத்தை திருப்பிக் கொண்டு கோபமாக கட்டில் மேல் அமர்ந்தான். யாழிசை வாசுவிடம் "நா பேசனதெல்லாம் கேட்டியா" என்று கேட்டாள். "ம்ம்ம் கேட்டனே ... யாரையோ ஒழிச்சி வைக்க சொன்ன ... கண்ணாமூச்சி ஆட்றியா" என்று வாசு குழந்தை போல் சிரிப்புடன் கேட்க யாழிசை "சுத்தம்" என்று சலித்துக் கொண்டாள். "ஆமா நீ யாரு" என்று வாசு சந்தேகமாக கையை முகவாயில் தட்டி யோசிப்பது போல் கேள்வி கேட்க யாழிசை "நானா ... நான் நான் தான்" என்று யாழிசை கூறினாள். "என் பேர் வாசு ... உன் பேர் என்ன" என்று வாசு கேட்க "யாழிசை" என்று யாழிசை கூறினாள். "ஓஓஓ ... யாழு ... ம்ம்ம் நைஸ் நேம் ... நீ இங்க என்ன பன்ற ... என்னை மாதிரியே தெரியாம வந்து மாட்டிகிட்டியா" என்று கேட்டான். "உன்னை மாதிரி தெரியாமலா ... நீ என்ன தெரியாம மாட்டிக்கிட்ட" என்று யாழிசை கேட்க வாசு "ம்ச் ... அது ஒரு பெரிய கதை" என்று கூறினான். "ஓஓஓ" என்றதோடு யாழிசை அமைதியாகிட வாசு "நீ லவ் பன்னி இருக்கியா" என்று கேட்டான். "ம்ம்ம் ... இப்பவும் லவ் பன்றனே ... என்னையவும் என் அண்ணனையும்" என்று யாழிசை தயங்காமல் கூறினாள். 

"அதில்லை உன் வாழ்க்கை துணையா தேர்ந்தெடுத்து லவ் பன்னி இருக்கியா" என்று வாசு கேட்க "இல்லை ... என் வாழ்க்கைக்கு என் அண்ணன் ஒருத்தனே துணையா போதும்" என்று யாழிசை கூற வாசு "வாவ் ... வாட் எ பாலிஸி ... நானும் அப்படியே இருந்துக்கலாம்" என்று முதலில் யாழிசையின் கொள்கையை பாராட்டி விட்டு பின் சோகமாக தன் நிலமையை நினைத்து சலித்தவாறே கூறினான். "ஏன் லவ்ல எதாவது பிரச்சனையா" என்று யாழிசை கேட்க "லவ்வே பிரச்சனை தான்" என்று வாசு பட்டென கூறினான். "என்ன ... புரியல" என்று யாழிசை கேட்க "அவ பேர் அஞ்சனா ... என்னோட ஜூனியர் ... முழுசா ஒரு வருஷம் என் பின்னாலே சுத்தனா ... நா கண்டுக்கவே இல்லை ... ஆனா என் காலேஜ் பேரவல் அப்போ" என்று நிறுத்திய வாசு அந்நிகழ்வினை நினைத்து பார்த்தான். யாழிசையும் ஆர்வமாய் "பேரவல்ல" என்று கேட்டாள். அவளும் அங்கே தான் இருந்தாள் என்ன நடந்தது என்று அவளும் அறிவாள் ஆனால் வாசு மூலமாக அவன் எண்ணத்தோடு பொருந்தி அந்நிகழ்வை மீட்டு பார்க்க விரும்பி அவனை ஆர்வமாய் கவனிக்கத் தொடங்கினாள். 

அன்று வாசுவிற்கு கடைசி நாள். அவனின் சக மாணவர்கள் அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் அங்கிருந்து நகர்ந்ததும் மாணவர்கள் அனைவரும் கூச்சமின்றி கூச்சலிட்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த நேரம் அஞ்சனா ஒரு ஓரமாக நின்று ஜுஸ் அருந்தியவாறு நின்றிருந்த வாசுவிடம் சென்றாள். வாசு அஞ்சனாவை பார்த்ததும் நகர்ந்துச் சென்றான். அஞ்சனா விடாமல் வாசு பின்னாலே சென்றாள். வாசு 'விட மாட்டா போலையே' என்று நினைத்து வெளியில் செல்ல போக அஞ்சனா திடீரென அங்கிருந்த பாடலை நிறுத்தி விட்டு மைக்கை எடுத்தவள் "வாசு ஒரு நிமிஷம்" என்று கூறினாள். அங்கிருந்த அனைவரும் மேடை மேல் நின்றிருந்த அஞ்சனாவை தான் பார்த்தனர். சித்தார்த் வாசுவை கூட்டத்தில் தேடி இறுதியில் வாசலுக்கு முன் கண்டு பிடித்தவன் வேகமாக வாசு அருகில் ஓடினான். "டேய் என்னடா மைக் எடுத்துட்டா" என்று சித்தார்த் கேட்க "அதான் டா எனக்கும் புரியல" என்று வாசுவும் அஞ்சனா அத்தனை பேர் முன்னிலையில் தன் பெயரை கூறியதும் அனைவரும் அவனையே பார்ப்பதை பார்த்ததும் சிறிது கூச்சத்துடனும் பதட்டத்துடனும் அஞ்சனாவை பார்த்தான். 

"உனக்கே தெரியும் .. நா ஒரு வருஷமா உன் பின்னால தான் சுத்திட்டு இருக்கன் ... ஆனா நீ என்னை அவாய்ட் பன்ற ... நீ அவாய்ட் பன்ன பன்ன தான் நா உன்னை நெருங்கனுன்னு ஆசைப்பட்றன் ... எனக்கு நீ வேணும் ... ஐ லவ் யூ வாசு" என்று அஞ்சனா தைரியமாக மைக்கில் அனைவர் முன்பும் கூற வாசு ஆடி போய் நின்றான். அவளின் தைரியத்தையும் அவளின் வார்த்தைகளையும் உள்வாங்கியவனால் அவளின் காதலை மறுக்க மணமே இல்லாமல் வெட்கத்துடன் தலையை தாழ்த்திக் கொண்டு நெற்றியை நீவியவாறே புன்னகைத்தான். "ஹேய் வாசுக்கு ஓகே" என்று கூட்டத்தில் வாசுவின் உடன் பயின்றவர்கள் கூச்சலிட்டனர். அஞ்சனாவும் ஓடி வந்து வாசுவை அணைத்துக் கொண்டாள். 

"அன்னைக்கு என் லைப்போட சந்தோஷம் என் கைக்கு வந்து சேர்ந்துருச்சின்னு நினைச்சன் ... உனக்கு ஒன்னு தெரியுமா அவ என்னை சுத்தி சுத்தி வரும் போதும் அவ என் கிட்ட அத்தனை பேர் முன்னால ப்ரப்போஸ் பன்னும் போதும் நம்மள இந்த அளவுக்கு காதலிக்கிற பொண்ணு நமக்கு கிடச்சது வரம்ன்னு நினைச்சன் ... இனி அவ தான் என் லைப் ... அவ தான் எல்லாமே ... அவளோட விருப்பம் சந்தோஷம் தான் எல்லாமேன்னு நினைச்சிட்டு இருந்தன் ஆனா அதெல்லாம் இல்லை உன் வாழ்க்கையோட சந்தோஷத்தை இழந்த தருணம் தான் அதுன்னு இப்ப நினைக்க வச்சிட்டா" என்று வாசு கூறினான். "உன்னை ரொம்ப டார்ச்சர் பனேறாளா என்ன" என்று யாழிசை பரிதாபத்துடன் கேட்க வாசு "டார்ச்சர்ன்னு சொல்ல முடியாது ... ஆனா ஒரு வகையில இதுவும் டாச்சர் தான் ... என்னோட விருப்பம் போல என்னை இருக்க விட மாட்டின்றா ... என்னோட சுயகவுரவத்தோட என்னை இருக்க விட மாட்டின்றா ... அவ விருப்பம் போல இருன்னு நா அவளை எந்த கேள்வியையும் கேக்கறதே இல்லை ஆனா அவ 'இவ கூட பேசாத' 'அதை பன்னாத', 'இதை பன்னாத'ன்னு என்னை கன்ட்ரோல் பன்றா ... என் உழைப்புல வந்து வாழுன்னு சொன்னா இல்லை எங்கப்பா சொத்தை பாத்துக்கோ உங்க வீட்டை விட்டு வான்னு சொல்ரா ... இதெல்லாம் நல்லாவா இருக்கு" என்று முடித்தான் வாசு. 

"ஏன் அஞ்சனா விருப்பப்பட்றதுல என்ன தப்பிருக்கு ... பொண்ணுங்க கல்யாணம் பன்னி புருஷன் வீட்டுக்கு போய் புது இடம் புது சூழல் புது மனுஷங்களை அனுசரிச்சி போற மாதிரி ஏன் உங்களால போக முடியாதா" என்று யாழிசை கேட்க வாசு கசந்த புன்னகை ஒன்றை சிந்தி விட்டு "பொண்ணுங்களுக்கு இது தான் விதிமுறைன்னு நம்ம சொசைட்டி நமக்கு ஆழமா மனசுக்குள்ள விதிச்சிருச்சி ... அதையும் மீறி புது மாற்றத்தை கொண்டு வந்தரலான்ற எண்ணத்தோட எதாவது ஒரு பையன் வீட்டோட மாப்பிள்ளையா போய்ட்டா அவனை வேலையில்லாதவன், வீட்டோட தங்கிட்டான், வேலை செய்ய தெரியாதவன்னு ஆயிரம் பேர் சொல்லி அவமானப்படுத்துவாங்க ... பொண்ணுங்களுக்கு இருக்க பொறுமை குணம் பசங்களுக்கு ரொம்ப கமி ... முதல்ல அவனை வீட்டோட மாப்பிள்ளையா கூட்டிட்டு போற குடும்பத்துல இருக்கவங்க தன்னோட மகனா பாக்கனும் முதல் மூனு நாள் நல்லா பாத்துகிட்டு அப்பறம் அவனை அவமானப்படுத்தக் கூடாது... அவன் வீட்டோட இருக்கான்னா அவனுக்கு அந்த பொண்ணு அவ்வளவு முக்கியம்ன்னு அர்த்தம் அவளுக்காக அவன் எவ்வளவு வேணா பொறுத்துப்பான் ஆனா அதுவே அவன் சுயகவுரத்தை சீண்டிட்டா அவ்வளவு தான்" என்று வாசு கூறினான். "இதெல்லாம் பொண்ணுங்க அனுபவிக்கிறதில்லன்னு நினைக்கிறிங்களா" என்று யாழிசை கேட்க "நான் தான் முதல்லே சொல்லிட்டனே பொண்ணுங்களுக்கு இது தான் விதின்னு வாழ்ற பக்குவத்தை நம்ம சமூகம் நமக்குள்ள ஆழமா விதைச்சிருச்சின்னு ... நம்மளே நினைச்சாலும் அதை நம்மளால மாத்த முடியாது" என்று வாசு கூறினான். 

"போதை தெளிஞ்சிருச்சா தெளிவா பேசற" என்று யாழிசை கேட்க "ஹான் போதையா ... நா குடிக்கவே இல்லை ... அக்சுவலா நா குடிக்கவே மாட்டன் பஸ்ட் டைம் அவ கட்டாயப்படுத்தி ஊத்திட்டா" என்று வாசு கூற யாழிசை "இப்போ தான் புரியுது நீ ஏன் அவ உன்னை டார்ச்சர் பன்றான்னு சொல்ரன்னு" என்று அப்பொழுது தான் முழுதாக புரிந்தது யாழிசைக்கு வாசுவின் விருப்பத்திற்கு மாறாக தான் தன் எண்ணங்களை நிவர்த்தி செய்துக் கொள்கிறாள் அஞ்சனா என்பது. மற்றொரு விஷயம் வாசு கூறியதும் யாழிசை அதிர்ச்சியில் உறைந்து விட்டாள். 


Leave a comment


Comments


Related Post