இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -42 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 24-05-2024

Total Views: 20662


“எல்லோரும் இப்படி கத்துனா நான் என்ன பண்ணட்டும்? நடந்தது என்னனு நிலாக்கிட்ட கேட்டா இவளும் சொல்ல மாட்டிங்கிறா, அவன்கிட்ட பேசுனா நீங்களே கல்யாணம் பண்ணி வெச்சா நடந்தது வீட்டுல இருக்கறவீங்களுக்கு மட்டும் தெரியும், இல்லனா எனக்கு சட்டம் தெரியும் என்ன பண்ணனேனு ஊருக்கே தெரிய வெச்சிடுவேன் எது பெட்டர்ன்னு நீங்களே யோசிச்சுக்கங்கன்னு சொல்றான். என்ன பண்ண சொல்ற?” என்று மார்த்தாண்டம் தனியாக கத்திக் கொண்டிருந்தார்.

ராஜி அழுதவாறே நிலாவை வயிற்றோடு அணைத்துக் கொண்டு, “என்ன அம்மு நடந்துச்சி எவ்வளவு பேர் கேக்கறாங்க, சொல்லு கண்ணு அம்மா கேக்கறேன்ல சொல்லு கண்ணு, ப்ளீஸ்..” என கெஞ்சிக் கொண்டிருந்தார்.

யார் என்ன கேட்டாலும் நிலாவின் உதடுகள் நந்தனுக்கு எதிராக ஒற்றை வார்த்தை உதிர்க்கவில்லை. எத்தனை வருடம் ஆனாலும் இதில் மட்டும் மாற்றம் என்பதே நிலாவிடம் வராது போலும்.

அழுதாள் அவனோடு திருமணம் வேண்டாம் என்றாள், ஆனால் என்ன நடந்தது? என்று மட்டும் சொல்லவேயில்லை.

“அம்முக்கு என்ன நடந்திருந்தாலும் பரவாயில்ல அவனுக்கு மட்டும் கல்யாணம் பண்ணிக் கொடுக்க மாட்டோம். நாளைக்கே அம்முக்கு வேற மாப்பிள்ளை பார்க்கறேன். வேற மாப்பிள்ளை ஏன் பார்க்கணும் என் மாப்பிள்ளை யுகி இருக்கான் அவன் கட்டிப்பான் அம்முவை." என வளவன் குதிக்க,

இருப் பக்கமும் மாட்டிக் கொண்டு தவித்தார். ஒரு பெரிய மனுஷன் என்ன சொல்ல வருகிறார் என்றுக் கூட கேக்காமல் ஆள் ஆளுக்கு குதிக்கும் போது வார்த்தைக்கு மதிப்பில்லாத இடத்தில் பேசக்கூடாது, நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டார்.

“அம்மா எனக்கு அவரோட கல்யாணம் வேண்டாமா அவரைப் பார்த்தாலே பயமா இருக்கு.”

“இல்லடா இல்ல கல்யாணம்லா இல்லை, நீ எவ்வளவு தைரியமான பொண்ணு போலீசை மிரட்டிட்டுலா வந்தில, நந்து தம்பிக்கு போய் பயப்படலாமா?”

தவறு நடந்திருந்தால் மகள் வேண்டாம் என எப்படி சொல்லுவாள் ஆண் கட்டிக் கொள்கிறேன் என்னும் போது பெண் வேண்டாம் என்பாளா. இந்த ஒற்றைச் சொல்லே ராஜியின் வயிற்றில் பாலை வார்த்ததுப் போல் இருந்தது.

ராஜியை கட்டிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதவள் அப்படியே தூங்கிப் போனாள்.

“ராஜி.. அவ தூங்கட்டும் தொந்தரவு பண்ணாத.”

“என்ன அண்ணி நந்தன் தம்பி இப்படி சொல்லி எல்லோர் தலையிலையும் குண்டைத் தூக்கிப் போட்டுட்டுப் போய்டுச்சு.”

“அத்தை அவன் சொன்னதை நீங்க நம்பறீங்களா? அவனுக்கு நிலாவை ஏதோ ஒரு விதத்துல கல்யாணம் பண்ணனும், அதுக்கு தான் இப்படி புழுவிட்டுப் போயிருக்கான். யுகி வந்ததும் இதை சொல்லி வைக்காதீங்க. அப்பறம் மறுபடியும் அவங்க ரெண்டுப் பேருக்குள்ள தான் சண்டை வரும். நந்தன் அண்ணாவை மீறி அப்பாவாலயே எதும் பண்ண முடியாது, உங்க பையனாலே பண்ண முடியுமா?” என்று வாய் தவறி வளவனுக்கு முன்பு நந்தனைத் தூக்கி வைத்து ஷாலினி பேசிவிட்டாள்.

“ஏய் என்னடி சொன்ன..? உன் அண்ணன் என்ன பெரிய அப்பாடக்காரா? அவனை எதிர்த்து என்னால எதும் பண்ண முடியாதா? அவனோட தங்கச்சி தானே உங்கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்? அம்முவை கேவலப்படுத்திட்டு போயிருக்கான் அது தெரியல உனக்கு, பெரிசா அண்ணன் புராணம் பாட வந்துட்டா.. உங்க முன்னாடியே அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேனா இல்லையான்னு பாருடி.” என்று கத்தியவன் அங்கிருந்த சில்வர்  அண்டாவை எட்டி உதைத்து விட்டுச் சென்றான்.

“கம்முனு இருக்க மாட்டியா ஷாலு? எங்க என்ன பேசணும்ன்னு ஒரு விவர மண்ணும் தெரியறதில்லை, இதுல உனக்கு கல்யாணம் பண்ணி  விளங்குன மாதிரி தான்.” என மணிமேகலை வேறு கடிந்துக் கொள்ள.

“அம்மா நான்..”

“தயவு செஞ்சி அமைதியா இரு ஷாலினி, இருக்கற பிரச்சனை போதாதுன்னு நீ வேற லூசு தனமா உளறிட்டு இருக்க... அப்படியே ஆயால உறிச்சி வெச்சி பொறந்து தொலைச்சிருக்க.” என்ற மணிமேகலை.

“ராஜி அவளை தூங்க வெச்சிட்டு நீயும் கொஞ்சம் நேரம் தூங்கி எழு. எது நடந்தாலும் நல்லதுக்குன்னு நினை, சரியா நான் போய்ட்டு சாயங்காலம் வரேன்.” என சொல்லிக் கொண்டு சென்று விட்டார். அவருடன் ஷாலினியையும் இழுத்துக் கொண்டு செல்ல, நிலாவை சோபாவில் படுக்க வைத்து தலைக்கு தலையணை வைத்தவர். பெருமூச்சுடன் கீழே அமர்ந்து விட்டார்.

மகன் என்ன முடிவு எடுப்பானோ என்று நினைத்தாலே ஈரக்கொலை ஆடியது.

எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வதா கல்யாணம்.. ஆற அமர மாப்பிள்ளை பார்த்து, நாலும் விசாரித்து ஒவ்வொன்றையும் யோசித்து செய்ய வேண்டுமே  இதெல்லாம் இப்போது சென்று வளவனிடம் சொல்ல முடியாது.

வளவனிடமும் நந்தனிடம் இந்த இருக் குடும்பமும் மாட்டிக் கொண்டு சீரழிகிறது எனத் தோன்ற, வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவர் சோபாவில் அப்படியே தலைசாய்த்துக் கொண்டார்.

தூக்கத்தில் கூட  கல்யாணம் வேண்டா வேண்டா என்று நிலா அலற தாய் பதறிப் போனார்.

“அம்மு ஒன்னுமில்லடா ஒன்னுமில்ல தூங்கு தூங்கு” என தட்டிக் கொடுத்து தூங்க வைக்க... மீண்டும் தூங்கி விட்டாள் நிலா.

கனவில், நந்தன் மீசையை முறுக்கிக் கொண்டு அவள் அருகில் வந்தவன்.

“குட்டி”

“வேண்டா, கிட்ட வராதீங்க“

“ஒரு முத்தம்டி இங்க மட்டும்!" என அவன் உதட்டைப் பிதுக்கிக் காட்ட,

“தர மாட்டேன் கிட்ட வராதீங்க.. வேண்டா..”

“நீ என்ன தரது நான் தரேன்டி.” என அவளை இழுத்து முரட்டு தனமாக இதழ் கவ்வியிருந்தான்.

“ஆஆஆஆ..." வீலென்று அலற.

“என்னாச்சி அம்மு..”

“அம்மா அவர் அவர்..” அதற்கு மேல் சொல்ல முடியவில்லை.

“எவரும் இல்லம்மா கம்முனு தூங்கு.” என சமாதானம் செய்ய,

அன்று இரவே பயங்கர காய்ச்சல் கண்டு விட்டது. அந்த அளவுக்கு நந்தனைக் கண்டு பயந்து நடுங்கினாள். அவனோடு ஒரு நாள் கழிப்பதற்குள்ளையே போதும் போதும் என்றானது. இதில் வாழ்நாள் முழுவதும் அவனுடன் என்றால் தாங்குமா பூந்தளிர்.

சிறிது வேகமாக காற்று அடித்தாலே தாங்காமல் ஓடிந்து விடும் தளிரிடம் புயலாக நந்தன் வந்தால் தாங்குமா.. வேருடன் சாய்ந்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

“வளவா அம்முக்கு காய்ச்சல் பலமா இருக்கு தூக்கத்துலையே பின்னாதிட்டு இருக்கா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வாப்பா.”

“எல்லாம் அவனால வந்துச்சு. அதட்டி பேசும் போதே வாயை ஒடச்சி வளர்த்திருந்தா இப்படி வளர்ந்து நிற்க மாட்டான்.”

“அவனை பத்தி விடுப்பா நீ நம்ப புள்ளயப் பாரு.”

“சரி அம்மு எந்திரி ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துடலாம்.”

“நான் வரல”

“காய்ச்சல் அதிகமாகிடப் போகுது ஒழுங்கா எழுந்திரி, ஒரு ஊசிப் போட்டுட்டு வந்தா சரியாப் போய்டும்.”

“இந்நேரத்துக்கு டாக்டர் இருக்க மாட்டாங்க அண்ணா காலையில போய்க்கலாம்.” என சோர்வாக சொன்னாள்.

அவள் சோர்வைக் கண்டே இன்று இரவு யாரையும் தூங்க விட மாட்டாள் என தெளிவாக புரிந்துப் போக.

“அதெல்லாம் இருப்பாங்க கிளினிக்ல இல்லைனாலும் கவெர்மென்ட் ஹாஸ்பிடல டாக்டர்ஸ் இருப்பாங்க எந்திரி..”

“அண்ணா”

“என்னம்மு எந்திரின்னு சொன்னா அடம்பிடிச்சிட்டு இருக்க போயிட்டு வா."

“ம்ம்”

“போகும் போது ஒரு சால்வையை சுத்திக்கிட்டுப் போ.. குளிர்காத்துல எச்சா காய்ச்சல் வந்துடுப் போகுது.”

“சரி போறேம்மா” என்றவள் ராஜி சொன்ன மாதிரி ஒரு சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு வாசலில் நிற்க, வளவன் வண்டியை எடுத்துக் கொண்டு வந்தான்.

“இந்த கார் புக் பண்ணி எவ்வளவு நாள் ஆகுது, இன்னைக்கு நாளைக்குன்னு டெலிவரியை டிலே பண்ணிட்டே இருக்காங்க, வந்துருந்தா அழகா கார்ல போயிருக்கலாம்.” என்று தனக்கு தானே பேசிக் கொண்டே வளவன் வண்டியை உயிர்ப்பிக்க, நிலா வண்டியில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

“அம்மு தூக்கக் கலக்கத்துல விழுந்துடாத அண்ணனை நல்லாப் புடிச்சிக்கோ.” என ராஜி எச்சரிக்கவும் தவறவில்லை. 

“சரிம்மா நான் என்ன சின்னப் புள்ளையா?”

“எனக்கு சின்னப்புள்ள தான்டி. எவ்வளவு காய்ச்சல் இருந்தாலும் இந்த வாய் மட்டும் ஓயவே ஓயாது. நேரங்காலமா போங்க இருக்கற டாக்டரும் போய்டப்போறாரு.”

“ஏறு அம்மு இப்பயே மணி 10 ஆகிடுச்சு.” என்று வளவன் வேறு அவசரப்படுத்த வண்டியில் ஏறி அமர்ந்து விட்டாள்.

காய்ச்சல் என்றாலே எப்படியாவது வீட்டில் இருந்தே சரி பண்ணிவிட வேண்டும் என நினைக்கும் ரகம் நிலா, ஏனென்றால் ஊசியைக் கண்டாலே பயம். சிறு வயதில் இருந்து இருக்கும் பிரச்சனை தான் எவ்வளவு பெரிய வயதானாலும் அந்த பயம் விடவேயில்லை. தெனாலி போல் நந்தன் என்றால் பயம் ஊசி என்றால் பயம்.

“அம்மு”

“சொல்லுண்ணா”

“தூங்கிடாத.”

“ம்ம் தூங்கல”

“பயத்துல வந்த காய்ச்சல் தான் ஒரு ஊசிப் போட்டால் சரியா போய்ட்டும்.”

“ம்ம். அண்ணா ஹெல்மெட் போடலையா..?”

“வர அவசரத்துல மறந்துட்டேன்.”

“பிடிச்சா 1000 போச்சி”

“பார்த்துக்கலாம் வா” என்றவன் வண்டியை வேகமாக ஓட்ட செக்போஸ்டில் யாருமே இல்லாததால் அதை கடந்து மருத்துவமனைக்குச் சென்று விட்டனர்.



Leave a comment


Comments 1

  • A Aathi Sri
  • 1 month ago

    Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr sis 👌👌👌👌👌👌


    Related Post