இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 31 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 24-05-2024

Total Views: 12386

        அத்தியாயம் 31

இரவு மணி ஏழைக்கடந்தும் வெளியில் சென்ற மூவரும் திரும்பி வராததால் பெண்கள் முவரும் ஒருவித கலக்கத்துடன் இருந்தனர்.

அருவியை பற்றி கூறவே வேண்டாம்.

அவளது கண்கள் அடிக்கடி அவளது அனுமதியின்றி வாசலை நோக்கி சென்றது.

கைகள் வேலையில் இருந்தாலும்  கவனம் என்னவோ வாசலில் இருந்தது.

மகிழாவை அவர்கள் எந்த வேலைக்கும் அழைக்கவும் இல்லை அவளிடம் எந்த வேலையும் கூறவும் இல்லை.அதனால் அவள் அறையைவிட்டு எதற்காகவும் வெளியே வரவும் இல்லை.

அருணா, பத்மினி மற்றும் அருவி மட்டும் சமையல் செய்யும் ஆட்களிடம் ஏதோ கூறிக் கொண்டும் அவர்களுக்கு உதவிக் கொண்டும் இருந்தனர்.

நாளை நடக்க இருக்கும் விருந்திற்கு இன்றிலிருந்தே உறவினர்கள் வர ஆரம்பிக்க அவர்களை வரவேற்கும் பணியில் இருந்தனர் தர்மனும் சக்ரவரத்தியும்.

அருவியை அழைத்த பத்மினி மொட்டை மாடியில் காய வைத்திருக்கும் மிளகாய் வற்றலை எடுத்துக்கொண்டு வருமாறு பணிக்க அவளும் சரி என மேலே ஏறி வற்றலை எடுத்துக்கொண்டு திரும்பும் போது எதேச்சையாக அவள் பார்வை பின்னால் இருக்கும் கேட்டிற்கு செல்ல அங்கு மகிழா பின் கதவை  கொஞ்சமாக திறந்தபடி உள்ளிருந்தே தலையை மட்டும் வெளியே நீட்டி யாரிடமோ எதையோ வாங்கிக்கொண்டு அதை தன் முந்தானையில் மறைத்தபடி சுற்றிலும் பார்வையை வைத்து கொண்டு உள்ளே வர அவளின் நடவடிக்கையே அருவிக்கு சந்தேகத்தை வரவழைத்தது.

முதல்ல அவள போய் பாக்கனும்... என நினைத்தவள் வேகமாக படியிறங்க.. அவள் கண்டது என்னவோ கையில் கட்டுடன் வண்டியில் இருந்து இறங்கும் சுரேனைதான்.

அப்போதுதான் வாசுதேவனின் வண்டியும் உள்ளே நுழைய அவன் பின்னால் கையில் கட்டுடன் இறங்கிய சுரேனை பார்த்ததும் அவளுக்கு பக்கென ஆக "அத்தை... அத்தை...." என கத்தியபடி கையில் வைத்திருந்த மிளகாய் வற்றலை கீழே போட்டபடி அவன் அருகில் வர அவளையே பார்த்திருந்தவன்... அவள் முன் வந்து நின்று "ஒருத்தன் நம்மள பார்க்கற பார்வைய வச்சே அவன் எந்த நோக்கத்தோட பார்க்கறான்னு தெரிஞ்சிக்கனும்... அதவிட்டுட்டு மூலையில போய் முடங்கிட கூடாது.... இதக்கூட யோசிக்க முடியாது... தத்தி...." என்றுவிட்டு அவளை தாண்டி உள்ளே செல்ல எத்தனித்தவனை "நில்லுடா...." என்ற குரல் அப்படியே நிறுத்த "போகும்போதே சொல்லிதான்டா அனுப்பினேன்.... என்னடா இது... யார்கிட்ட போய் அடிவாங்கிட்டு வர்றீங்க...?" என்ற சக்கரவர்த்தியின் குரலில் கோபம் ஆத்திரம் என என்ன இருந்ததோ அதையும்தாண்டி அவனின் கைகளில்தான் அவரது பார்வை பதிந்து இருந்தது.

"அதுவந்து அப்பா...." என வாசு இழுக்க "என்னடா பண்ணிட்டு வந்து இருக்கீங்க... நாளைக்கு ஊர்க்காரவங்க முன்னாடியும் உறவுக்காரவங்க முன்னாடியும் இப்படி உடைஞ்ச கையோடதான் இவன் நிப்பானா...?" என தர்மன் கேட்டார்.

தாங்கள் இத்தனை சொல்லியும் கேளாமல் வெளியே சென்று சண்டை இழுத்துக்கொண்டு வந்து நிற்கிறான்களே என்ற கோபம் அவரது குரலிலும் வெளிப்பட பத்மினிதான் "ஏன்டா சொன்னப்பேச்சு கேக்க மாட்டேன்றீங்க... நாளைக்கு வரவங்க எல்லோரும் துக்கம் விசாரிக்கற மாதிரி விசாரிப்பாங்களே... அவங்க கேக்கற கேள்விக்கு பதில் சொல்லியே நாள் போய்டும்டா...." என தன் மனக்குமுறலை ஆற்ற அருணாவோ வேகமாக மகனின் அருகில் வந்தவர் அவன் கட்டுப்போட்ட கையையும் அவனையும் மாறி மாறி பார்த்துவிட்டு அவன் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைக்க அங்கிருந்த அத்தனை பேருக்குமே அதிர்ச்சிதான் ஏனென்றால் அருணா எப்போதுமே அவனை ஏதும் கூறுவதில்லை.

அவன் செய்வது சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு ஆணித்தரமாக உண்டு.

ஆனால் இன்று மகன் தாங்கள் எவ்வளோ எடுத்து  கூறியும் கேளாமல் வெளியே சென்று கையை உடைத்து கொண்டு வந்தது அவருக்கு கோபத்தையே வரவழைக்க அடித்துவிட்டார்.

"அத்தை...." என அருவியும் "அண்ணி...." என தர்மனும் கத்திவிட்டனர் அவனை அடித்ததை பார்த்து.

சுந்தருக்குத்தான் அவரின் செயல் அதிக கோபத்தை தர "அம்மா... எதுக்கு அவன அடிக்கிறீங்க... அவன் எதுக்காக சண்டை போட்டான்னு தெரியுமா....?" என கூற வந்தவனை "சுந்தர்..." என்ற அழுத்தமான குரல் தடுக்க "எக்கேடோ கெட்டுப்போங்க...." என்றபடி தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

சுரேனை சுற்றி இருந்த அனைவரின் பார்வையும் அவனின் மேல் இருக்க அவனின் பார்வையோ கண்களில் கண்ணீரோடு நின்றிருந்த அருவியின் மேல் விழுந்தது.

சுற்றி நின்றிருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் தன் அறைக்குள் நுழைய வாசுவோ இந்தர் என அழைத்தபடி அவன் பின்னால் சென்றான்.

அருவி அழுதுகொண்டே வீட்டின் பின்புறம்  ஓடியவள் அங்கிருந்த கிணத்து மேட்டில் துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கண்ணீர் வடிக்க "அருணா... அருவிய போய் சமாதானம் பண்ணு....அவ முன்னாடி அவ புருஷன அடிப்பியா நீ... என்ன ஆச்சு உனக்கு....தலைக்கு உசந்த புள்ளைய கை நீட்டி அடிக்கற அளவுக்கு வந்துட்ட....?!என சக்கரவர்த்தி கேட்க.

அவர்  விழிகளிலும் உவர்நீர்.

"எனக்கு என்ன ஆசையா அவன அடிக்கனும்னு.... நல்லா போனான் எப்படி திரும்பி வந்துருக்கான் பாருங்க... இப்போல்லாம் அவன் உங்க பேச்சுக்கு கூட அசையிறது இல்ல...உங்கிக்கிட்டயும் பயம் இல்ல அவனுக்கு.... எப்படியோ கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு சந்தோஷப்பட்டேன்.... அதுலயும் விருப்பம் இல்லாதவன்போல நடந்துக்கிறான்.... அவன் இன்னும் பழச மறக்கல போலங்க.... அதான் அருவிய பார்த்தாலே எரிஞ்சு விழறான்...." என்க.

அவரின் தோளை தொட்ட பத்மினி "அக்கா அவன் சரியாகிடுவான்... நீங்க வேணா பாருங்க... அருவியும் அவனும் நல்ல மனம் ஒத்த தம்பதிகளா வாழத்தான் போறாங்க...  டஜன் கணக்குல புள்ளக்குட்டிய பெத்து போட்டு நமக்கு  ஆயா வேலை வைக்காம ஓய மாட்டா இந்த அருவி...." என்க.

அத்தனை துன்பத்திலும் சற்று புன்னகை தழுவியது அனைவரின் இதழ்களிலும்.

இத்தனை கலவரங்கள் இங்கே நடந்துகொண்டு இருக்க மகிழாவோ வெளியே தலை காட்டவில்லை.

அவர்களுக்கு அவளைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லை.

 வீட்டில் இருக்கும் பொருளுக்கு என்ன மதிப்போ அதுதான் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்தது.

அவளும் பெரிதாக  இவர்களுடன் கலக்க விருப்பம் இல்லாமல் ஒதுங்கியே இருக்க மற்றவர்கள் அவளைப்பற்றி எண்ணாமல் விட்டனர்.

ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என அவர்கள் உணரும் தருணம் வெகு தொலைவில் இல்லை என்பது அவர்கள் அறிய வாய்ப்பில்லைதானே....?!!?!"

"சரி... சரி... எல்லோரும் போய் அவங்கவங்க வேலைய பாருங்க..." என சக்கரவத்தி கூற.

"அண்ணா...." என அழைத்த தர்மன் இப்போது வாசுவை பார்த்தார்.

அவனுக்கு எப்படி அடிபட்டது என இப்போது நீ கூறியே ஆகவேண்டும் என்ற அழுத்தம் அவர் விழிகளில் இருக்க அதை உணர்ந்து கொண்டவன் நடந்ததை விவரிக்க இப்போது தர்மனுக்குத்தான் அதிக கோபம் வந்தது.

"ஏன்டா அறிகெட்டவனே அவன எதுக்குடா அங்க கூட்டிட்டு போன... ஏதோ வந்தது கையோட போச்சு... பெரிய அடிதடியா இருந்தா என்ன பன்றது.... நம்மள சுத்தி என்ன நடந்துட்டு இருக்குன்னு உனக்கு நல்லாவே தெரியும் வாசு.... ஆனாலும் நாங்க எச்சரிக்கையா இருங்கன்னு சொல்லியும் கேக்காம இப்போ போய் கைல உடைச்சிட்டு வந்து இருக்கீங்க.... உங்கள என்ன சொல்றதுன்னு தெரியில வாசு.... ஆனா எங்க பொறுமைய ரொம்ப சோதிக்காதீங்க... அவ்வளவுதான் சொல்லுவேன்... பத்மா போய் அருவிய அழைச்சிட்டு வா... அண்ணி நீங்க போய் அவன சரிபண்ணுங்க...." என்க.

"அவன் கோபப்படுவான் தம்பி...." என்றார் அவர்.

"அதெல்லாம் அவன் ஒன்னும் சொல்ல மாட்டான்...." என்க.

பத்மினியோ "ஏன்.... நீங்க போலாம் இல்ல... அவன் உங்க பேச்சுக்குத்தான் தலையாட்டுவான்...." என்றார்.

"யாரு நான் சொன்னா தலையாட்டுவானா.... நல்லா என் தலைய வெட்ட வேணா செய்வான்....." என்க.

"ஆள் ஆளுக்கு என்ன பேசிட்டு இருக்கீங்க.... அதெல்லாம் அவன யாரும் போய் சமாதானம் பண்ண வேணாம்.... அவன அவன் பொண்டாட்டி போய் சமாதானம் பண்ணுவா.... வாசு நீ போய் அருவிய கூட்டிட்டு வா...." என்க.

"சரிப்பா...." என்றவன் அருவியை தேடிப்போனான்.

அறையிலோ ஜன்னல் வழியாக அருவி அழுதுகொண்டு இருப்பதை பார்த்திருந்தான் சுரேந்தர்.

அவளது அழுகை அவனுக்கும் வலியை கொடுத்தாலும் நான் அழுதது விட இவ அழுகை ஒன்னும் அத்தனை பெருசு இல்ல என்றே எண்ணினான்.

வாசு போய் கூறியதும் வேகமாக உள்ளே வந்தவள் அவர்களது அறைக்குள் நுழைந்து அவன் எதிர்பாரா நேரம் அவன் இதழோடு இதழ் பொருத்தி இருந்தாள் அருவி....... 



Leave a comment


Comments


Related Post