இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 6 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 24-05-2024

Total Views: 16835

கவிதை 6


    ஏற்கனவே அவன் வந்த விஷயம் ஊரில் நிறைய பேருக்கு தெரியவே அவனை அடையாளம் தெரிந்தவர்கள் நிறைய பேர் நலம் விசாரித்தனர். 

    பதினேழு வயதிலேயே நல்ல உயரமும் தாயின் செக்க சிவந்த நிறத்தில் இருந்தவன் இன்று இன்னும் உயரமாய் உயரத்திற்கு ஏற்ற உடலமைப்பும் அடர்ந்த மீசை தாடி தலைமுடி கழுத்துக்கு கீழே வளர்ந்திருந்ததை ஸ்டைலாக கோதிக்கொண்டு நடந்தவனை நிறைய பேர் எப்படி கண்டுபிடித்தனர் என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. 

    பைக்கில் வந்த ஒருவன் இவனின் அருகில் வந்து வண்டியை நிறுத்தி விட்டு "கார்த்தி" என்று கட்டிக்கொண்டான். 

    கார்த்திக்கு அவனை அடையாளம் தெரியவில்லை குள்ளமாக உடல் எடை போட்டு இருந்தவனை என்ன யோசித்தும் நியாபகம் வரவில்லை. 

   "என்னடா யாரு என்று தெரியலையா?...  நான் தான் சர்க்கரை" என்றான்.  அவன் பெயர் சக்கரவர்த்தி நண்பர்கள் சர்க்கரை என்று அழைப்பார்கள். 

    "டேய் சர்க்கரை ஆளே அடையாளம் தெரியலையேடா" என்றான் கார்த்தி. 

    "என்னடா பண்ணுறது எல்லாரும் உயரமா வளருவாங்க என்றால் என் உடம்பு குறுக்காக வளருது"  குண்டாக உள்ள உடலை காட்டிச்சொன்னான்.  "என் தாத்தா மாதிரி உடம்பாம் கிழவி பெருமையா சொல்லுது நானும் எவ்வளவே முயற்சி பண்ணேன் உடம்பு குறையமாட்டுது" என்று பேசிக்கொண்டு இருந்தவன் 

  " நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் பாரு நீ எப்படி இருக்க கார்த்தி இவ்வளவு நாள் எந்த ஊரில் இருந்த ஐயா பாவம்டா ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தார்"  என்று கார்த்தியை பேசவிடாமல் அவனே பேசிக்கொண்டு இருந்தான். 

   விட்டால் இன்னைக்கு முழுவதும் பேசுவான் இவன் அப்ப இருந்த மாதிரியே தான் இப்பவும் இருக்கான் என்று நினைத்தவன் அவன் பேச்சை இடையிட்டு 

   " டேய் இப்படி பேசிட்டு இருந்தால் நான் எப்படிடா பதில் சொல்லுவேன்" என்றான் கார்த்தி. 

    "ஹிஹி ஹிஹி" என்றவன் "சரி சொல்லுடா" என்றான். 

   "நான் நல்லா இருக்கேன்  நான் வந்துட்டேன் இல்ல அப்பாவை பார்த்துக்கிறேன்  ஆமாம் என்னை எப்படிடா கண்டுபிடித்த" என்றான் கார்த்தி. 

    " அது என்ன பெரிய விஷயமாடா இந்த ஊரிலியே நீ தான் நல்ல கலரா இருப்ப அப்புறம் ஊருக்கே தெரியும் நீ வந்திட்ட என்று இப்ப நடந்து வந்த நடையை வச்சே சின்ன குழந்தை கூட சொல்லு உன் தாத்தா அப்பா நடக்கும் போது இருக்கும் அந்த கம்பீரம் உன் நடையிலும் இருக்கே அதை வச்சு தான் கண்டுபிடித்தேன்"  என்னும் போதே அவனின் போன் ஒலித்தது எடுத்து பார்த்தவன் 

  " கார்த்தி நான் அப்புறம் வந்து பேசுறேன் இப்ப முக்கியமான வேலை இருக்கு" என்று கூறிவிட்டு போனை ஆன் செய்து பேசிக்கொண்டே வண்டி ஓட்டி சென்றான். 

   கார்த்தியின் மனதில் பழைய நினைவுகள் வந்து போயின.  இந்த சக்கரவர்த்திக்கு சுத்தமாக படிப்பு ஏறாது எட்டாம் வகுப்பு வரை படித்தவன் பெயில் ஆகிவிட படிப்பை நிறுத்தி விட்டு தங்கள் நிலத்தில் வேலை செய்யவைத்துவிட்டார் அவனின் தந்தை. 

   ஓரளவுக்கு வசதியான குடும்பம் தான் சில ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். 
 அவன் வீட்டில் மூன்று பெண்களுக்கு பிறகு பிறந்தவன் இவன்.  ஒரே பேரன் என்று ரொம்ப செல்லம். இவன் பாட்டி  எதாவது செய்து கொடுத்து கொண்டே இருப்பார் அப்படி சாப்பிட்டு சாப்பிட்டு அப்பவே குண்டாகத்தான் இருப்பான் இப்பவும் அப்படியே தான் இருக்கான். 

    தன் தாத்தா வீடு அந்த ஊரின் கடைசியில் இருந்தது வீட்டுக்கு பின்னே இரண்டு ஏக்கர் விளைநிலம் இருந்தது.  அதில் பயிர் செய்யாமல் தென்னைமரம் மாமரம் கொய்யாப்பழமரம் என பழமரங்கள் வைத்து இருந்தனர். 

    வீட்டிற்கு வந்தவனை எங்கிருந்தே வேகமாக வந்த ராஜா ஓடிவந்து   "ஐயா வாங்க" என்று வரவேற்றான். 

   அவனிடம் பேசிக்கொண்டே வீட்டினுள் சென்றான்.  வீடு சுத்தமாக இருந்தது.   அங்கு தாழ்வாரத்தில் கயிற்று கட்டில் இருந்தது அது அவனின் தாத்தா படுக்கும் கட்டில் அதில் சென்று அமர்ந்தான். 

   அதில் எவ்வளவு நாட்கள் தாத்தாவுடன் படுத்து கதை கேட்டு தூங்கியிருக்கான் அவை அனைத்தும் ஞாபகம் வந்தது.   

   ராஜா வேகமாக ஏற்கனவே பறித்து வைத்து இருந்த இளநீரை வெட்டி கார்த்தியிடம் கொடுக்க அதை வாங்கி குடித்தவன் நீங்க போய் வேலையை பாருங்க அண்ணே என்று ராஜாவை அனுப்பி வைத்து விட்டு வீட்டை சுற்றி பார்த்தான்.  சிறிய வீடு தான் ஒரு படுக்கை அறை சமையல் அறை இன்னொரு சிறு அறை அந்த அறையில் மரத்தால் ஆன அலமாரி இருக்கும் அதில் தான் பணம் வைத்து இருப்பார்.  அந்த அறையில் வேறு எதுவும் இருக்காது காலியாக இருக்கும் எப்போதும் அந்த அறை பூட்டியே இருக்கும். 

   குளிக்கும் அறை பின் கதவை திறந்து கொண்டு செல்லவேண்டும். பெரிய கிணறு ஒன்று இருக்கு அதில்   மோட்டர் போடும்போது தண்ணீர் வந்து விழும் இடத்தில் கொஞ்சம் பெரிய தொட்டி அதில் இறங்கி பிள்ளைகள் குளிப்பார்கள். 

   அனைத்தும் பார்த்து விட்டு மீண்டும் கட்டிலில் படுத்தவன் சிறிது நேரத்தில் உறங்கிப்போனான்.  நன்றாக உறங்கியவனின் காலில் எதுவே ஊர்வது போல் இருக்க தட்டி விட்டு மீண்டும் திரும்பி படுத்தான்.  மீண்டும் சிறிது நேரத்தில் அவனின் முகத்தில் அதே உணர்வு வந்ததும் தூக்கம் கலைந்தது ஆனால் கண் திறக்காமல் படுத்து இருந்தான். 

    அவனுக்கு யாரின் வேலை என்று புரிந்துவிட்டதே அதனால் தூங்குவது போல அசையாமல் இருந்தான். 

    இன்னும் அதிகமாக  குறுகுறுப்பு செய்தவளை கண்களை திறவாமலே இழுத்து தன் அருகில் போட்டு இறுக்கிக்கொண்டு அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். 

    நன்றாக தூங்கி கொண்டு இருக்கிறான் என்று தான் சிறுவயதில் செய்வது போல குறுகுறுப்பு  செய்தாள் கயல்விழி. அவன் தட்டி விட்டு மீண்டும் தூங்கவே முகத்தை பார்த்தவள் அவன் நன்றாக தூங்குகிறான் என்றே அவனை எழுப்ப முகத்தில் தன் கையில் இருந்த சிறு குச்சியால் குறுகுறுப்பு செய்தாள். 

    ஆனால் அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவே இல்லை.  சில வினாடிகள் ஆனது அவளுக்கு என்ன நடந்தது என்று புரிய, புரிந்த பிறகு அவனிடம் இருந்து விலக நினைக்க அவனே உடும்பு பிடி பிடித்து இருந்தான்.    கொஞ்சம் கூட விலக முடியவில்லை. 

   அவனின் கைகள் அவளை தனக்குள் இன்னும் இன்னும் என்று இறுக்கி அணைத்தது. 

   அவளுக்கு பேச்சே எழவில்லை மெல்ல திக்கி திக்கி  "அ..த்...தா..ன்..  அத்.. தான்.."  என்றாள்.  அவனிடம் எந்த அசைவும் இல்லை. 

   "அத்தான் அத்தான்" என்று அழைத்தவள் அவன் அசைவதாக இல்லை என்பதை அறிந்தவள் அவனின் கன்னத்தை அழுந்த கடித்தாள். 

   அதுவரை தூங்குவது போல அவளின் வாசத்தை அனுபவித்து கொண்டு இருந்தவன் அவள் கடித்ததும் அலறியடித்து எழுந்து நின்றான். 

    வலித்த கன்னத்தை தடவிக்கொண்டு  "ஏய் நீ எப்படி இங்க வந்த அதுவும் இல்லாம கட்டிலில் படுத்து இருக்க என்னையும் கடித்து வச்சு இருக்க" என்றான் கோபமாக. 

   "என்னது நான் படுத்தேனா?.. உன்னை சாப்பிட எழுப்ப வந்த என்னை இழுத்து கட்டிலில் போட்டுட்டு இப்ப நான் வந்து படுத்தேன் என்கிற" என்றாள். 

   "என்ன உன்னை நான் இழுத்தேனா?.. நான் ஏன்டி உன்னை இழுக்கப்போறேன்.  நீயே வந்து படுத்துட்டு கடிச்சும் வச்சுட்டு என் மேல் பழி போடுறியா?.. "  என்றான். 

   " யாரு நான் பழி போடுறனா எதுக்கு?.. " என்றாள். 

  " எதுக்கா இப்படி அழகா ஹீரோ போல இருக்குறவனை மயக்கத்தான் உரசிட்டே இருக்க"  என்றான். 

   அதை கேட்டவள் கோபமாக சுற்றுமுற்றும் பார்க்க அங்கு சிறு கொம்பு ஒன்று சுவரில் சாய்த்துவைக்கப்பட்டு இருக்க அதை எடுத்தவள்  "உன் அத்தை இந்த வெயிலில் அலையவேண்டாம் என்று சாப்பாடு எடுத்திட்டு வந்து உன்னை எழுப்புனா இழுத்து படுக்கவச்சுட்டு இறுக்கி பிடிச்சுக்கிட்டு இருந்த உன்னை எத்தனை வாட்டி அத்தான் அத்தான் கூப்பிட்டும் எழாமல் இருந்துட்டு இப்ப இவரை மயக்க வந்தேனா" என்று அவனை அடிக்கப்போக அவன் ஓட என்று சிறிது நேரம் அந்த தாழ்வாரத்தை சுற்றிக்கொண்டு இருந்தனர். 

    " அத்தான் நில்லு" என்று கத்திக்கொண்டே  துரத்திக்கொண்டு இருந்த நேரத்தில் 

   " நினைச்சேன்டி இப்படித்தான் எதாவது பண்ணுவே என்று,  உப்பு டப்பாவை மறந்து வச்சுட்டேன் உள்ள போய் எடுத்துட்டு வரதுக்குள்ள பையை தூக்கிட்டு வந்திட்டு இங்க வந்து சாப்பாடு கொடுக்காம வம்பு பண்ணிட்டு இருக்க"  என்று அருகில் வந்து நின்ற மகளின் முதுகில் ஓர் அடியை போட்டார் லலிதா. 

   " அம்மாமா....". என்று முதுகை தடவிக்கொண்டவள் " நான் எதுவும் பண்ணலை இந்த அத்தான் தான்"  என்றவள் அதற்கு மேல் சொல்லாமல் நிறுத்தி கார்த்தியை முறைத்தாள். 

    அவனே அத்தையின் தோளில் கை போட்டு அனைத்துக்கொண்டு அவளை பார்த்து கண்ணாலே சொல்லு என்று கூறி சிரித்தான். 

   " ஏய் என்னடி எதுவே சொல்ல வந்து நிற்த்திட்ட" என்றார் லலிதா. 

   " அத்த  என் மேல் என்ன பழி போடலாம் என்று யோசிக்கரா அத்தை.  அவ யோசித்து சொல்லட்டு நீங்க சொல்லுங்க அத்தை எப்படி இருக்கீங்க" என்றான் கார்த்தி. 

   "பாரு இவள் பண்ணதுல உன்னை விசாரிக்க கூட இல்லை.  நான் நல்லா இருக்கேன் கார்த்தி கண்ணா நீ எப்படி இருக்க" என்றார். 

   " நான் நல்லா இருக்கேன் அத்தை"   என்றவன் அவரின் கையை எடுத்து கன்னத்தில் வைத்துக்கொண்டான். 

    லலிதா மற்றொரு கையாள் அவனின் தலையை தடவிக்கொடுத்தார்.  அவனின் கண்கள் கலங்கின. 

   " கார்த்தி கண்ணா என்ன இது" என்று கூறி அவனை அணைத்து முதுகை தட்டிக்கொடுத்தார்.

    இவர்களை ஆஆ...  என்று பார்த்துக்கொண்டு இருந்தாள் கயல்விழி. 

   அதைக்கண்ட கார்த்தி  "ஏய் என்ன இங்க வேடிக்கை" என்றான். 

   "ஆங்....   இங்க  சிவாஜி கணேசன் சாவித்திரி பாசமலரை தோற்கடிக்கற மாதிரி அத்தை மருமகன் பாசமலர் படம் ஓடுது அதை பார்த்துட்டு இருக்கேன்" என்றாள் கயல்விழி. 

    "அடிங்க புள்ள இவ்வளவு வருஷம் கழிச்சு வந்து இருக்கு வீட்டு சாப்பாடு சாப்பிடாமல் நாக்கு செத்து போயிருக்கும் எடுத்து வந்த சாப்பாட்டைக்கூட போடாமல் வம்பு பண்ணிட்டு இருந்தவ இப்ப கிண்டல் பண்ணிட்டு இருக்க போய் வாழையிலை பறிச்சுட்டு வாடி"  என்று சொல்லவும் வேகமாக பின்பக்கம் சென்றாள் கயல்விழி. 

   அவள் திரும்பி வந்த போது அதுவரை பேசிக்கொண்டு இருந்தவர்கள் அவளைக்கண்டதும் பேச்சை நிறுத்தியிருந்தனர். 

   அங்கிருந்த பாயை போட்டு அவனை அமரவைத்தவர் சமைத்து வந்ததை வாழையிலையில் ஓவ்வொன்றாக எடுத்து வைத்தார். மீன் வறுவல், சிக்கன் 65, மட்டன் தொக்கு,  முட்டை,  சாதம் வைத்து மீன் குழம்பை ஊற்றினார். 

    அதை கண்டவள்  "அம்மா ஓரு வேளைக்கா இவ்வளவு சமைச்ச" என்றாள். 

   கையில் கரண்டியை எடுத்து அவளை நோக்கி  "ஒழுங்கா எழுந்து போடி இல்லைனா உதைவாங்குவ" என்றது எழுந்து தூரமாக சென்று இருவருக்கும் ஒழுங்கு காட்டிவிட்டு தோட்டத்தின் பக்கம் சென்றாள். 

     "ஏன் அத்தை இவ்வளவு செய்தீங்க எதாவது ஒன்னு செய்தால் போதும் இல்லையா?..." என்றான். 

   "அவதான் அப்படி சொல்லுறா என்றாள் நீயும் அதையே சொல்லாமல் சாப்பிடு கார்த்தி" என்றார் லலிதா. 

   கண்கலங்கியது அவனுக்கு  அதை துடைத்துக்கொண்டே சாப்பிட்டான். 
சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.  பிறகு மூவரும் அங்கிருந்து கிளம்பினர். 

    கார்த்தி நேராக அன்பழகன் ஓட்டல் சொல்ல அங்கு இருந்த அன்பழகன் தந்தை வரவேற்று பேசிக்கொண்டு இருந்தார். 

   


    


Leave a comment


Comments


Related Post