இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 32 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 25-05-2024

Total Views: 13357

அத்தியாயம் 32

கிணத்து மேட்டில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள் அருவி.

அவள் அழுவதை அவனது அறையில் இருந்து நன்றாக பார்க்க முடியும்.

எவ்வித சலனமும் இல்லாமல் பார்த்தவன் வாசு அவளை தேடி சென்றதை பார்த்ததும் திரும்பி ஜன்னல் கதவை தாழிட்டான்.

அவனது தோள்பட்டையை பார்க்க அத அதிக வலியை கொடுத்தது.

"எதுல அடிச்சான் இந்த வலி வலிக்குது....?"என தடவிக் கொண்டவனுக்கு அருவியின் நினைவுதான்.

"இடியட்.... அவன இழுத்து வச்சு நாலு அறைவிடாம அழுதுட்டு இருந்துருக்கா...." என இப்போதும் அவள்மீதுதான் கோபம் வந்தது அவனுக்கு.

அவளது அழுகை அவனுக்கு வலியை கொடுத்தாலும் தான் அழுததில் கால்வாசி இல்லை அவளது வலி என்றே எண்ணத் தோன்றியது அவனுக்கு. 

அவள் முதுகு குலுங்குவதை பின்னால் இருந்து பார்த்தான் வாசுதேவன். 

அவளை நெருங்கியவன் "அருவி..." என அழைக்க.

திடுக்கிட்டு திரும்பியவள்  வேகமாக எழுந்து அவன் சட்டை காலரை பிடித்துக் கொண்டு "வாசு...., மாமாவ அந்த பாண்டிய பாக்க கூட்டிட்டு போனியா....?"என கேட்க.

"அது அருவி...." என அவன் இழுத்தான்.

"ஏன்டா இப்படி  பண்ண.... கைல அடிபட எப்படி நீங்க ரெண்டு பேரும் விட்டீங்க...?(" என கேட்க.

"ஓ மேடமுக்கு சார் மேல அவ்ளோ பாசமா....?" என அவன் கேட்க.

பட்டென அவன் சட்டையில் இருந்து கையை எடுத்துக் கொண்டாள்.

"மன்னிச்சிடு வாசு.... அது மாமாவ அப்படி பார்த்ததும் மனசு கேக்கல... அதான்...." என தலை குனிந்து கூற.

"அவன் பாண்டியதான் பாக்க போனான்னு உனக்கு யாரு சொன்னா....?" என அவன் கேட்க.

"யாரும் சொல்ல தேவ இல்ல... அதான் உன் அண்ணா  சொன்னாரே...."என கூறினாள்.

"ம்ம்ம்ம்.... இதெல்லாம் நல்லா கண்டுபிடி... அவன் உன்மேல வச்சிருக்க அன்ப மட்டும் புரிஞ்சிக்காத..." என்க.

"என்ன வாசு சொல்ற... காமெடி பண்ணாத..... உன் அண்ணாவுக்கு என்ன பார்த்தாவே புடிக்காது.... இப்போவரைக்கும் என்னைய திட்டிட்டுதான் இருக்காரு.... ஊருக்கு கூட்டிட்டு போய் என்ன கொடுமப் படுத்துவேன்னு என்கிட்டயே சொன்னாரு.... இதுல நீ வேற அவரு என்மேல அன்பா இருக்காருன்னு சொல்லிட்டு இருக்க...."என்க.

"உனக்கு அவன தெரிஞ்சிது அவ்ளோதான் அருவி...." என்றான் வாசுதேவன். 

"புரியல நீ என்ன சொல்ல வரேன்னு...." என அவள் புரியாமல் கேட்க.

"அது புரிஞ்சாதான் நீ இங்க நின்னு பேசிட்டு இருக்க மாட்டீயே... இந்நேரம் உன் மாமன் ரூம்லதான இருந்துருப்ப...." என அவன் கூற.

"என்னென்னு சொல்லு வாசு.... இத்தன நாளா அவுக இங்க வரல... அப்படியே வந்தாலும் என்ன பார்த்தே கோபப்படுவாரு.... அதும் இல்லாம பழசெல்லாம் இன்னும் மறக்கல... அதுக்கு என்னைய பழி வாங்குவேன்னும் என்கிட்ட சொன்னாரு இதுல அவரு என்மேல அன்பா இருப்பாருன்னு நான் எப்படி நான் தெரிஞ்சிக்கிறது....?" என கேட்க.

"நீ அவன் உன்மேல படர கோபத்த பாக்கற அருவி... ஆனா நான் அதத்தாண்டி அவன் உன்மேல வச்சிருக்க அன்ப பாக்கறேன்...." என்க.

"சும்மா பொய் சொல்லாத வாசு...." என்றாள் அவள்.

"உனக்கு இன்னும் புரியல அருவி... இன்னைக்கு அவன் அடிவாங்கி கைல கட்டுப்போட்டுட்டு வந்து இருக்கான் அது யாருக்காக உனக்காகத்தானே இன்னுமா அவன் அன்பு உனக்கு புரியல..." என கேட்க.

"அந்த பாண்டியே ஒரு ரவுடி அவன்கிட்ட போய் மாமாவ கூட்டிட்டு போய் இருக்க பாரு உன்னத்தான் சொல்லனும்...." என்றாள் அவள்.

"அந்த பாண்டிய உன் மாமன் அடிச்சு தொங்க விட்டுட்டான் என் பொண்டாட்டிய இந்த கையாடா தொட்டுச்சின்னு பிரிச்சு மேய்ஞ்சிட்டான்...." என்க.

அவள் கண்களில் ஒளி.

"வாசு நிஜமாதான் சொல்றியா...?" நெஞ்சில் கைவைத்து கொண்டவள் "என்னய... என்னய...அவரு பொண்டாட்டின்னு சொன்னாரா?" என கேட்டாள் கண்களில் கண்ணீர் கோடுகள்

"எதுக்கு இப்ப அழுகை... நீ அவன் பொண்டாட்டிதான அப்ப அவன் உன்ன அப்படித்தான சொல்லுவான்...?" என கேட்க.

உடனே அவள் முகம் கூம்ப "மாமாவுக்கு என்னைய புடிக்கல வாசு..." என்றாள்.

"பைத்தியம் மாதிரி பேசினா எனக்கே உம்மேல கோபம் வந்துடும்....அண்ணன் பொண்டாட்டின்னு பாக்கறேன் இல்லன்னா நல்லா பேசிவுட்டுடுவேன் போய் முதல்ல அவன சமாதானப்படுத்து அவனுக்கு நீன்னா உசுரு..." என்றான்.

கிழே குனிந்தபடி "எனக்கும்தான்..." என்றாள் அவள்.

"அப்போ ஏன் என்னைய கட்டிக்க சரின்னு சொன்ன..?" என அவன் கேட்க.

"அது மாமா என்னைய மறந்து இருப்பாருன்னு நினைச்சேன்... அவுக வாழ்க்கைல வேற யாராச்சும் இருப்பாங்கன்னு நினைச்சேன்... அவுக உயிர காப்பாத்தற டாக்டரு நான் வெறும் பனென்டுதான்... அவுக வசதிக்கு நான் ஏணி வச்சாலும் எட்டாதுன்னு புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல வாசு.... அதும் இல்லாம பழச நினைச்சு பார்த்தா மாமா என்னைய கண்டிப்பா கட்டிக்காதுன்னு தெரியும்... முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படலாமா வாசு அதான் என் ஆசைய உள்ளுக்குள் வச்சிக்கிட்டு...." என அவள் முடிக்கும் முன் 

"அவன மனசுல வச்சிட்டு எங்கூட குடும்பம் நடத்துவியா அருவி....?" என அவன் கேட்க.

"வாசு... என்ன பேச்சு பேசற பெரிய மாமாவ யாராச்சும் எதுத்து பேச முடியுமா அவரே கேக்கும்போது நான் என்ன பண்ணட்டும் சொல்லு..." என கேட்க.

"சரி நடந்தது நடந்து போச்சு இனி அத மாத்த முடியாது நாளைக்கு நைட்டே நீங்க மெட்ராசுக்கு கிளம்பனும்னு அவன் சொல்லிட்டு இருந்தான் அவன்கூட நீ சந்தோஷமா வாழ்ந்தா எங்க எல்லோருக்கும் சந்தோஷமாத்தான இருக்கும் அருவி இங்கன பேசிட்டு  இருக்க நேரம் நீ போய் அவன பாரு அப்பா வேற உன்னையத்தான் அவன சமாதானம் பேச போக சொன்னாரு..." என்க.

"பயமா இருக்கு..." என்றாள் அவள்.

"அவன் என்ன சிங்கமா புலியா பயப்பட உன் புருஷன்தான் போய் தைரியமா பேசு அதேமாதிரி பழச அவனுக்கு ஞாபகப்படுத்தாத..." என்க.

"ம்ம்ம்..." என்றவள் வாசு மகி என ஏதோ கூற வந்தவளை "என் வாழ்க்கய நான் பார்த்துக்கிறேன் அருவி நீ போய் அவன பாரு..." என்க.

பெருமூச்சு ஒன்றைவிட்டபடி வீட்டினுள் நுழைந்தாள்.

உள்ளே வந்தவளின் பார்வை சக்கரவர்த்தியையும் தர்மனையும் பார்க்க.

உறவினர்களிடம் பேசிக் கொண்டு இருந்தவர்கள்
போ என தலையாட்ட அவன் அறையை நோக்கி சென்றாள்.

அவன் அறை கதவு தாழிடப்படாமல் இருக்க மெல்ல திறந்து உள்ளே சென்றவள் கண்டது ஒரு கையை தலைக்கை கொடுத்து கண்மூடி படுத்து இருக்கும் சுரேனைத்தான்.

அவளின் கொலுசொலி கூறியது அவள்தான் என.

ஆனாலும் கண்களை மூடி அமைதியாக படுத்து இருந்தான் சுரேன்.

மெல்ல அவன் அருகில் சென்றவள் "மாமா..." என அவன் தோள்மேல் கைவைக்க வேகமாக எழுந்தவன் "வெளிய போடி...." என்க.

"மாமா..." என மீண்டும் அழைக்க "என்ன அப்படி கூப்ட்ட உன்னைய கொன்னுடுவேன்டி...." என்க.

"அப்படித்தான் கூப்டுவேன்..." என்றாள் அவள்.

"என்னடி கொழுப்பா... திமிரு கூடிப்போச்சா... இப்ப நீ வெளிய போகல இங்க என்ன நடக்கும்னே தெரியாது..." என்க.

"ஏன் மாமா இவ்ளோ கோபம்..." என அவள் கேட்க.

அவள் கழுத்தை தன் ஒருகையால் நெறித்தவன் அவளை சுவற்றோடு சுவராக ஒட்டி நிறுத்தி "இங்க பாருடி மயிலு...என் கோபத்தை கிளறாத அடிவாங்கிட்டுதான் போவ..." என்றான் அவன்.

அவள் கழுத்தை நெறித்து கொண்டு இருந்தவனை காதலாக பார்த்தாள் அருவி.

எத்தனை நாட்களாக இந்த அழைப்பிற்கு ஏங்கி இருக்கிறாள்.

இன்று தன்னை மறந்து அவளை மயிலு என அழைத்து இருக்கிறானே.

அவள் பார்வையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது கண்டு அவன் புருவங்கள் சுருங்கியது.

"என்னைய மயிலுன்னு கூப்ட்டியா மாமா...?!!" என கண்களில் கண்ணீரோடும் உதட்டில் சிரிப்போடும் அவள் கேட்க.

அவளின் நிலை கண்டு அவனுக்கே ஒருமாதிரி இருக்க "அது.... அது..." என அவன் இழுக்க அவன் கையை விலக்கி அவன் உதடுகளில் தன் உதட்டை வைத்து அழுத்தி இருந்தாள் அருவி.

அவனோ அவளிடம் இதை எதிர்பார்க்கவில்லை.

எத்தனையோ முறை அவன் கொடுத்து இருந்தாலும் இன்று அவளாக கொடுத்ததில் அவனும் அந்த முத்தத்தின் சுவையை அறிந்து அவளிடம் மெய்மறந்து நின்றான்.... 



Leave a comment


Comments


Related Post