இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 33 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 26-05-2024

Total Views: 14636

அத்தியாயம் 33

அருவியிடம் பேசிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தான் வாசுதேவன்.

அங்கு மகிழா இருப்பதால் அவன் அறைக்கு செல்லவே விருப்பம் இல்லாமல் இருக்க மகிழாவின் நடவடிக்கையில் அவனுக்கு ஏதோ மனது உறுத்த அவளை காண அங்கு செல்லும்படி ஆனது.

உள்ளே சென்றவன் கண்டது அங்கிருந்த அவனது  அலமாரியில் எதையோ தேடியபடி இருந்த மகிழாவைத்தான்.

அவனது உடைக்கு கீழே கையைவிட்டு அவள் ஏதோ துழாவியபடி இருக்க அதை பார்த்த அவனுக்கு கோபம் வழ "ஏய்....." என கத்தினான்.

அவனை அந்நேரம் எதிர்பாராதவள் விதிர்த்து திரும்ப "என் ட்ரஸுக்கு கீழ என்னடி தேடிட்டு இருக்க....?" என கேட்க.

"அது... அது... வந்து மைனரே என்னோட..." என அவள் ஏதோ கூற வரும் முன் "நிறுத்துடி.... என் ட்ரஸுக்கும் கீழ உன்னோட பொருள் என்ன இருக்கு நீ இங்க கட்டியிருந்த துணியோட வந்த மறந்துட்டியா....?" என நக்கலாக கேட்க.

"மைனரே... நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க...நான். ஏன் அப்படி செஞ்சேனா...." "போதும் நிறுத்துடி... உன் கதைய கேக்க எனக்கு நேரமும் இல்ல... உன்ன மாதிரி ஒரு மானங்கெட்ட ஜென்மம்கிட்ட பேச எனக்கு விருப்பமும் இல்ல... நீ ரொம்ப நாளைக்கு இங்க இருக்கப்போறது இல்ல... உன் ஆட்டம் கூடிய சீக்கிரமா முடிஞ்சும் போய்டும் என் மனசு மாறும்... இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காச்சும் ஒருநாள் சேர்ந்து வாழுவோம்ங்கிற எண்ணம் ஏதாச்சும் உன் மனசுல இருந்தா அத இப்பவே பெட்ரோல் ஊத்தி அழிச்சுடு இல்ல ரொம்ப கஷ்டப்படுவ என் மனசுல என்னைக்கும் சுசிலாவுக்கு மட்டும்தான் இடம் அத யாராலயும் மாத்த முடியாது நீ என்ன நாடகம் நடத்தினாலும் எங்கிட்ட உன் பருப்பு வேகாதுடி...." என்க.

"அப்பறம் எதுக்கு என்னைய
இந்த வீட்டுல வச்சுருக்கீங்க....?" என்க.

"ஓ எதுத்து பேசற அளவுக்கு வந்துட்டியா...உனக்கெல்லாம் வெக்கமாவே இல்லையாடி... நீ என்ன பண்ணி இந்த வீட்டுக்குள்ள வந்து இருக்கேன்றது மறந்து போச்சா.... என் பெரியப்பாவ பத்தி சாதாரணமா எடை போட்டின்னா உன்னைவிட முட்டாள் யாருமே இல்லடி பைத்தியக்காரி.... உன்னை பத்தியும் என் பெரியப்பாவுக்கு தெரியும் உன் குடும்பத்தை பத்தியும் என் பெரியப்பாவுக்கு தெரியும்டி காரணம் இல்லாம இத்தன நாள் இந்த வீட்டுக்குள்ள நீ இருக்கல அத புரிஞ்சி நடந்துக்க நீ இங்க இருக்கவரைக்கும் உன் வாலை சுருட்டிட்டு இருக்கனும் இல்ல நீ இதுவரைக்கும் பாக்காத வாசுதேவன பார்ப்ப..." என்க.

"என்ன மெரட்டுறியா....?" என்றாள் அவள். 

அவளின் வார்த்தைகளில் கொஞ்சமும் பயம் இல்லை.

அவள் கண்களில் ஒரு நாகப்பாம்பின் விஷம் தெரிய.

"வேணாம் மகிழா... உனக்குள்ள இருக்கறது அத்தனையும் விஷம்னு இங்க எல்லோருக்குமே தெரியும் இந்த வீட்டுல இருக்க பொம்பளைங்கள தவிர என் பெரியப்பா அமைதிக்கு பின்னாடி பெருசா ஏதோ இருக்கு நீ புள்ளப்பூச்சி அமைதியா ஒதுங்கிக்க இல்லனா இதோட பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்...." என்க.

அவனை நக்கலாக ஒரு பார்வை பார்த்தவள் தன் முந்தானையை ஒருகையால் சுத்திவிட்டு அதை சுழற்றியபடி அங்கு இருந்த ஒரு மர இருக்கையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்தவள் அவள் முன்னால் நிற்கும் அவனை பார்த்து எள்ளலாக சிரிக்க ஆரம்பித்தாள்.

அவளின் நக்கல் கலந்த சிரிப்பு அவனுக்கு கோபத்தை வரவழைக்க. 

"ஏய் போதும் நிறுத்து...." என்றான்.

அவளோ அடக்கமாட்டாமல் சிரித்தவள் "நீ என்ன பெரிய இவனா...இந்த ஊர்ல உன்னையும் உன் குடும்பத்து உள்ளவங்களையும் ஒன்னும் பண்ண முடியாதா... பைத்தியம்... பைத்தியம்... உன் பெரியப்பா பெரிய ஆளுதான நான் இங்க வந்தும் என்னை ஒன்னுமே பண்ண முடியல காரணம் என்ன தெரியுமா ஏன்னா நீ ஓவரா பில்டப் கொடுத்தியே உன் பெரியப்பனுக்கு அந்த ஆளு ஒரு பல்லு புடுங்கின பாம்பு என்னையும் எனக்கு பின்னாடி இருப்பவங்களையும் உங்களால ஒன்னுமே பண்ண முடியாது நான் ஓப்பன் சேலஞ்சாவே சொல்றேன் ஆமா உங்கக்குடும்பத்த பழி வாங்கதான் நான் அந்த அருவிக்கூட நெருங்கி பழகினேன் அவதான் துருப்பு சீட்டு நான் உங்க வீட்டுக்குள்ள உள்ள வரதுக்கு இதோ உங்க எல்லோர் முன்னாடியும்தான் உள்ள வந்தேன் உங்க பல்லு போன பெரியப்பாவால என்ன பண்ண முடிஞ்சிது ஒன்னும் இல்ல இனி உன் குடும்பத்துல இருக்க ஒவ்வொருத்தரும் அழுவாங்க கண்ணீர் விடுவாங்க அவங்க கண்ணீர பார்த்து நீயும் உன் வீட்டு ஆம்பளைங்களும் தடுக்க முடியாம கையாலாகத்தனத்தால உங்கள நீங்களே தற்கொலை பண்ணிக்கிற மாதிரி பண்ணல நான் மகிழாவே இல்ல இன்னைல இருந்து உன் குடும்பத்துல இருக்கவங்களுக்கு அழிவு காலம்...." என்றாள் அத்தனை திமிராக.

அவளை பார்க்கவே பிடிக்கவில்லை அவனுக்கு.

அதுவும் அவன் வீட்டு பெண்களை இழுக்கவும் அவனுக்கு கோபம் வர "ஏய்...." என அவள் அருகில் சென்றவனை "பொறு வாசு ஏன் அவசரப்படற...?" என்ற குரல் தடுத்து நிறுத்தியது.

அந்த குரல் யார் என்று அவனுக்கு தெரியாமல் இல்லை.

திரும்பியவன் முன்னால் தர்மனும் சக்கரவர்த்தியும் நின்றிருந்தனர்.

அவர்களை எதிர்பாராத மகிழா அதிர்ந்து இருக்கையில் இருந்து எழ.

"நீ ஏம்மா எழற உக்காரு நாம பேச வேண்டியது இன்னும் நிறைய இருக்கே...?" என்றார் சக்கரவர்த்தி.

தர்மனோ "பாவம் அருவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பறவ அவள நம்ப வச்சு ஏமாத்த உனக்கு எப்படி மனசு வந்துச்சு...?" என கேட்க.

"அது துரோகத்தோட ரத்தம்டா தர்மா பின்ன எப்படி இருக்கும்னு நினைக்கற நீ...?" என்க.

இப்போது வாசு மற்றும் தர்மனுக்கும் அதிர்ச்சியாகியது.

"நீங்க என்ன சொல்றீங்கண்ணா...?" என அதிர்ச்சியாக கேட்க.

"இன்னுமா தர்மா உனக்கு புரியல மேடம் வேற யாரும் இல்ல நம்ம எதிரி இருக்கானே அவன் பொண்ணு..." என்க.

கேட்டிருந்த மற்ற இருவருக்கும் அதிர்ச்சியோ அதிர்ச்சி.....

அருவியின் செயல் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவனும் அவள் கொடுத்த முத்தத்தில் லயித்துதான் இருந்தான். 

அவள் அந்த முத்தத்தை முடிக்கும் எண்ணமே இல்லாமல் அவனுள் உறைந்து மயங்கி நின்றாள்.

நீண்ட நெடிய முத்தம் இருவருக்கும் இத்தனை வருடங்களாக பிரிந்து இருந்த ஏக்கம் அத்தனையும் அந்த நீண்ட முத்தத்தில் தீர்க்க முடிவு செய்து இருவரும் உறைந்து நிற்க.

பட்டென அவன் மூளையில் ஏதேதோ வந்து போனது.

பதினேழு வயதில் அவன் காரணமாக அவன் குடும்பத்து ஆட்கள் அத்தனை பேரும் அவமானப்பட்டு வெளியேறியதும் நிழற்படமாக வந்து போக சட்டென அவளை விட்டு விலகி நின்றான்.

அவனது விலகல் அவளுக்குத்தான் ஏதோ செய்தது.

அவனிடம் மயங்கி நின்றவள் கண்விழித்து "மாமா...." என அழைக்க.

சுவற்றோடு சுவராக சாய்ந்து நின்று கண்மூடி நின்றவன் "மயிலு... இங்க இருந்து போ எனக்கு உன்ன பார்க்க பிடிக்கல உங்கூட பேச பிடிக்கல பழசு எதையும் நான் மறக்கல என்னால மறக்கவும் முடியல நீ பண்ண துரோகம் இன்னும் என் கண்ணவிட்டு மறையல நான் என் கோபத்தால உன்ன குத்தி குத்தி கிளறரதுக்கு முன்னாடி நீ இங்க இருந்து போய்டு என் வாழ்க்கையில இருந்தும்தான்..." என்றவனின் கண்களின் ஓரம் நீர்த்துளிகள் வழிந்தோட.

அவனின் நிலையை அறிந்து இதயமே வெடித்து சிதறுவதுபோல உணர்ந்தவள் மாமா என ஓடி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

"என்ன மன்னிச்சுடு மாமா நான் பண்ணது தப்புதான் ஆனா அன்னைக்கு நீ என் ரூம்ல இருந்ததே எனக்கு தெரியாது..." என்க.

"ப்ளீஸ்டி எனக்கு எதையும் ஞாபகப்படுத்தாத என் வாழ்க்கைல நீ வராத நான் பழச மறந்து உங்கூட ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழுவோம்னு எனக்கு நம்பிக்கை இல்ல போய்டு இங்க இருந்து போய்டு இல்ல நீ போக வேணாம் நான் போய்டுறேன்..." என்க.

"முடியாது நான் இனி ஒரு நிமிஷம் கூட உன்னைவிட்டு இருக்க மாட்டேன்..." என்க.

"அப்போ உனக்கான நரகத்துக்கு நீ தயாரா இரு..." என்றான் அவன்.

"பரவால்ல நீ இருக்கற இடம் நரகம்னா எனக்கு அந்த நரகமே போதும்..." என்க.

அவன் உடல் இறுகியது......



Leave a comment


Comments


Related Post