இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -44 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 27-05-2024

Total Views: 19628

நந்தனும் வந்த சுவடு தெரியாமல் சென்று விட்டான். என்ன கழட்டி வைத்த கடிகாரத்தை எடுத்துச் செல்லத் தான் மறந்துவிட்டான்.

அடுத்தநாள் கேஸ் விஷயமாக வெளியே செல்ல வேண்டியிருக்க மறுநாள் திரும்பி வரும் போது நிலாவைப் பெண் பார்க்க வந்திருந்தனர்.

எவ்வளவு தாமதமாக படுத்தாலும் நேரமாக எழுந்துக் கொண்டார் ராஜி. எழுந்ததும் மகளின் அறையை அவசரமாக சென்று பார்க்க அறையில் கதவு பாதி மூடியப்படி இருக்க மகள் எப்படி படுத்திருந்தாளோ அப்படியே  உறங்கிக் கொண்டிருந்தாள். அறையில் நந்தன் இல்லை என்றதும் தான் ராஜிக்கு உயிரே வந்தது.
அவன் மட்டும் வந்ததை வளவன் பார்த்திருந்தால் அவ்வளவு தான்  இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு இருக்கும். அப்புறம் வளவன் ஷாலினி திருமணம் கேள்விகுறி தான். வளவனுக்காக பல வருடம் காத்திருக்கும் ஷாலினியின் நிலை, அவள் படும் வேதனையை யார் பார்ப்பது என அனைவரையும் பற்றி  சிந்தித்தார் ராஜி.

நிலாவின் அறைக்குள் சென்று இன்னும் காய்ச்சல் இருக்கிறதா எனத் தொட்டுப் பார்க்க ஜில்லென்று இருந்தது உடம்பு.

“ஹப்பா பத்து எருமை மாட்டைக் கூட மேச்சி கட்டிடலாம் போல. இவ ஒருத்தியை மேய்க்க முடியல, மத்தவீங்ககிட்ட வாய் ஏளூருக்கு நீளுது. நந்தன்னு சொல்லிட்டா போதும் சுவிட்ச் ஆப் பண்ண டிவி மாதிரி அடங்கிப் போய்டறா. இவளுக்கு அந்த தம்பி தான் சரி. அப்போதான் அடங்கி  இருப்பா.” என்று முனவிக் கொண்டே காபிப் போட அறைக்குப் போனார்.

வளவன் அறையில் இருந்து வரும் போதே.. யாருடனோ பேசிக்கொண்டே வந்தான்.

“சரி அப்போ நாளைக்கு நிச்சியத்துக்கு குடும்பத்தோட வந்துடு. அப்போ பேசிக்கலாம்.”



“நான் சொன்னா அம்மு கேப்பா, உனக்கு அதுல சந்தேகம் இருந்தா நாளைக்கு வரும் போது நீயே கேட்டுக்கோ.”



“சரிடா வீட்டுல சொல்லிடறேன் நீ வா” என்று அழைப்பைத் துண்டித்தவன், “அம்மா காபி” என்றான்.

“யாருடா போன்ல?”

“நகுல் தான் கால் பண்ணிருந்தான்.”

“ஓ சொல்லிருந்தா நானும் பேசிருப்பேன்ல நேரமா வர சொன்னியா..?”

“ம்ம் குடும்பத்தோட வர சொல்லிருக்கேன்.”

“ம்ம் செழியன் எப்போ வரான்?”

“அவனும் நாளைக்கு வந்துடுவான், கல்யாணத்துக்கு அப்பாவை கூட்டிட்டு வரேன்னு சொல்லிருக்கான்.”

“சரி இந்தா பிடி.”

“அம்முக்கு காய்ச்சல் எப்படி இருக்கு?”

“இப்போ இல்லை.”

“அவ ரெஸ்ட் எடுக்கட்டும் டிஸ்டர்ப் பண்ணாதம்மா.”

“ஆமா இல்லனா மட்டும் உன் தங்கச்சி எழுந்திருச்சு எல்லா வேலையும் செஞ்சிக் கிழிச்சிடுவா.. போடா ஊர் உலகத்துல இல்லாத அண்ணன் தங்கச்சி.” என சலித்துக் கொண்டாலும் எப்போதும் இவர்களின் பாசப்பிணைப்பில் பெருமைதான். அதற்கு விரைவில் பெரிய வெடிப்பு விழும் என அறியவில்லை அந்த தாய்.

பத்து மணிக்கு மேல் எழுந்த நிலாவிற்கு அறைக்குள் ஏதோ புது வாசம் வருவது போல் இருக்க, “யார் வந்துட்டுப் போனா..? இது அவர் வாசம் மாதிரியே இருக்கு.. அவர் வந்தாரோ.. ச்ச. ச இருக்காது, அம்மா, அண்ணாவை மீறியா வீட்டுக்குள்ள வரப் போறாரு. அவரைப் பத்தி யோசிச்சி யோசிச்சே இப்போ அவர் வாசம் அடிக்கிற மாதிரி கூட இருக்குது. இப்படியே இருந்தா சீக்கிரம் கீழ்பாக்கத்துல ஒரு டிக்கெட் போட்டுற வேண்டியது தான்.” என புலம்பிக் கொண்டே குளிக்கச சென்றாள்.

குளித்துவிட்டு வந்தும் கூட அந்த அறையில் பரவி இருந்த வாசம் அவள் நாசியை தொட்டுக்கொண்டே இருப்பது போல் இருக்க, திரைச்சீலையை விலக்கி விட்டு ஜன்னல் கதவுகளை திறந்து வைத்தாள்.

அப்படியாவது அந்த வாசம் தன் அறையை விட்டுப் போய் விடாதா என்ற எண்ணத்தில்.

“ஏய் அம்மு எழுந்ததும் உன்னைய யாருடி குளிக்கச் சொன்னா?”

“எனக்கு தான் இப்போ காய்ச்சல் இல்லைல அப்புறம் என்னம்மா? சும்மா எதுக்கு எடுத்தாலும் எதையாவது சொல்லாதம்மா காபி கொடு.”

“பத்தரையை தாண்டி காபி குடிக்கிற முதல் ஆள் நீ தாண்டி.”

“இருக்கட்டும் கொடு”

“இப்போ எதுக்கு ஜன்னல் கதவு எல்லாத்தையும் தொறந்து வெச்சிக்க..”

“ரூமுக்குள்ள ஏதோ வாசம் அடிக்கிற மாதிரி இருக்கு.”

“எனக்கு எந்த வாசமும் தெரியலையே”என மூச்சை இழுத்து முகர்ந்து பார்த்துவிட்டு  ராஜி சொல்ல.

“எனக்கு மட்டும் ஸ்பெஷலா அடிக்குது போம்மா போய் காபியை போடற வழியைப் பாரு.” என்றவள்.. டேபிள் மேல் இருந்த நந்தனின் கடிகாரத்தைப் பார்க்கவில்லை.

அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்த நந்தன் அப்போது தான் கையில் கடிகாரம் இல்லை என்பதை கவனித்தான். அதை கழட்டி வைத்த இடத்திற்கு இப்போதைக்குச் செல்ல முடியாத அளவிற்கு கடமை அவனை அழைக்க, நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டு கிளம்பி விட்டான்.

“பூனை.. பூனை..”

“வந்துட்டானா?” என தலையில் கை வைத்தவள், “இன்னைக்கு என்ன பாடப் போறானோ தெரியலையே” என நொந்து கொண்டே வெளியேப் போனாள்.

“ஏய் வாடி இங்க?”

“என்னது டி யா? பல்லை தட்டிக் கையில கொடுத்துடுவேன் மரியாதையா பூனைன்னு கூப்பிடு இல்லையா நிலான்னு சொல்லு."

“உன்னோட வாய்யெல்லாம் என்கிட்ட தான் அவன் நேத்து என்ன பண்ணான்? ஏன் நீ என்கிட்ட சொல்லவே இல்லை.”

“இப்போ எதுக்கு குதிக்கிற? எவன் என்ன பண்ணானோ அதை பண்ணவன் கிட்ட போய் கேளு, என்கிட்ட எதுக்கு கேக்கற?”

“அவன் ஆள் இல்லாதப்ப எதுக்கு இங்க வந்தான்? வந்ததுமில்லாம உன்னய கேவலப்படுத்திட்டுப் போயிருக்கான் என்ன நடக்குது இங்க?”

“நீ தலைகீழா நின்னு தண்ணிக் குடிச்சாக் கூட அவகிட்ட இருந்து ஒத்த வார்த்தை வாங்க முடியாது. என்னைக்கு உன் அண்ணனை மாட்டிவிட்டுருக்கா சொல்லு.” என வளவன் சொல்ல.

“அதுக்குன்னு அவன் இவளை கேவலப்படுத்தும் போதுக் கூட அமைதியா இருப்பாளா?”

“இருக்காளே”

“அப்படி அவன் உனக்கு என்ன செஞ்சான் பூனை? சொல்லு.? இவ்வளவு பேர் கேட்கறோம் எங்களைய விட அவன் உனக்கு முக்கியமா போய்ட்டானா?”

“இங்க பாரு யுகி, அவரைப் பத்தி உங்கிட்ட சொல்றதை நிறுத்தி பலவருஷம் ஆகிடுச்சு, இப்போ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத. இந்த பிரச்சனையை கேக்க அண்ணா இருக்கான் அவன் கேட்டுப்பான். நீ ஒதுங்கியே நில்லு.”

“பூனை” என யுகியும், 

“நிலா என்ன வார்த்தைப் பேசற?” என வளவனும் ஒரே நேரத்தில் கத்தினர்

“தப்பா பேசலண்ணா. இவனை விட இவன் அண்ணன் பலசாலி. என்னால இவங்களுக்குள்ள பிரச்சனை வந்துச்சுனா அதால பாதிக்கப்படறது இவன் தான். எனக்கு இவன் தான் முக்கியம். அன்னிக்கு எனக்காக அவரை அடிச்சதுக்காக எத்தனை அடி வாங்கிருப்பான். இப்பவும் அதான் நடக்கும், இவன் அடி வாங்கறதை என்னால பார்க்க முடியாது. என்னால யாரும் யார்கிட்டையும் சண்டைப் போடாதீங்க. என்ன நடக்கணுமோ அது கண்டிப்பா நடக்கும்.” என உள்ளே சென்று விட்டாள்.

நிலாவின் வார்த்தைகள் யுகியின் உயிர் வரை சென்று வலித்தது. 

யுகியின் இன்னொரு உலகம் நிலா தான் அவளுக்காக என்ன செய்ய தயாராக இருக்கிறாள். அதை பெற தான் நிலா தயாராக இல்லை. மனம் வலிக்கவும் திரும்பி நடக்கப் போனவனின் தோளில் கை வைத்து தடுத்தான் வளவன். 

“யுகி அவ ஏதோ..” 

“ப்ளீஸ் வள்ளி, அவளை பத்தி என்கிட்ட சொல்லாத உன்னைய விட எனக்கு அவளைப் பத்தி நல்லா தெரியும்.” என்றவன் அங்கிருந்திருந்து சென்று விட்டான். 

நாளை மாலை நிச்சயம். கண்ணாமூச்சிக் காட்ட வேறு வழியின்றி அவனைப் பார்க்க கிளம்பி விட்டாள் 

“ஏய் நாளைக்கு நிச்சியத்த வெச்சிட்டு எங்கடிப் போற?” 

என்று 

தடுத்துவிட்டார் கிருஷ்ணம்மாள்

​ 

என்ன  செய்ய வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும் 



“நிலா...” என்றவள் எடுத்ததும் அழுக ஆரம்பித்து விட்டாள். 

“அண்ணி இப்போ எதுக்கு அழற.?” 

“உன் அண்ணன் நேத்துல இருந்து என்கிட்ட பேசவேயில்ல.” 

“ஐயோ!! கடவுளே அடுத்தப் பிரச்சனையா? முடியல ஏன் பேசல? அண்ணா இப்போ வீட்டுல இல்லையே, யுகி வந்தான் அவன்கூட எங்கயோ போயிருக்கு.” 

“வந்ததும் என்னனு கேட்டு சொல்லு நிலா.. நானும் எத்தனை தடவை கூப்பிட்டுப் பார்த்துட்டேன் எடுக்கவே மாட்டிக்கிறாரு.” 

“சரிண்ணி கேக்கறேன்.” என்று அதற்கு மேல் ஷாலினியைப் பேசவிடாமல் அழைப்பைத் துண்டித்து விட்டாள். 

இப்போது இருக்கும் மனநிலையில் அவளின் அழுகையை கேட்டு இந்த வேதனை அடைய விரும்பாமல் துண்டித்திருக்க, யுகி வந்து போனதில் இருந்து தலை வலிக்க ஆரம்பித்திருந்தது. 

தன் மேல் அவன் வைத்திருக்கும் அன்பு அலாதியானது என்பதை நன்கு உணர்ந்தவள், அதற்காக தான் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் சண்டை வந்திடக்கூடாது என நினைக்கிறாள். இவளுக்காக சண்டைப் போட்டு நந்தனுடன் அம்மாவும் தம்பியும் வருடக்கணக்கில் பேசாமல் இருப்பதே தன்னால் தானோ என்ற குற்றவுணர்வு வாட்டி வதைக்கிறது, இதில் மீண்டும் மீண்டும் பிரச்சனைகளை இருவருக்கும் இடையில் தூண்டிவிட மனமில்லை. 

அவளை வைத்து தான் அப்போது இப்போது சண்டை வருகிறது. நிலா என்று விட்டால் யுகி எதைப் பற்றியும் யோசிப்பதில்லை சட்டென்று இருப்பவர்கள் மீது கையை வைத்து விடுவான். 

கல்லூரியில் கூட அதுபோல நிறைய சம்பவங்கள் நடந்திருக்க, நந்தனிடமும் அதை தான் செய்வான் என்று, எந்த பிரச்சனையையும் சொல்லக்கூடாது என முடிவு தான் அவனை திட்டி அனுப்பியது. அவனை திட்டிவிட்டு இவள் கவலைப்பட்டு உக்கார்ந்திருந்தாள்.




Leave a comment


Comments 1

  • A Aathi Sri
  • 1 month ago

    Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr sis 👌👌👌👌👍

  • பிரியாமெகன் @Writer
  • 1 month ago

    Tq sis


    Related Post