இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே - 14 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 28-05-2024

Total Views: 9736

இதயம் - 14

வாசு அஞ்சனாவை பற்றி கூறிக் கொண்டிருக்க வாசு மற்றொரு விஷயத்தையும் கூறினான். "இன்னொரு கேவலமான விஷயம் இப்ப நடந்தது ... என்னை கம்பனி விஷயமா பேசனுன்னு கூட்டிட்டு வந்து ஒருத்தவங்களை ஏமாத்தி அந்த நிலத்தை எடுத்துக்க நினைக்கிறதோட அதை என் பேர்லே எழுத திட்டம் போட்டு என்னை கூட்டிட்டு வந்திருக்காங்க ... இவ என்னடான்னா என்னை குடிக்க வச்சி என்னையவே அடைய திட்டம் போட்டு ரூம்க்கு கூட்டிட்டு போய்ட்டா ... நல்ல வேலை கொஞ்சம் தெளிவா இருந்ததால நா பரத் ரூம்க்கு வந்துட்டன்" என்று கூறிய வாசு "ஆமா பரத் எங்க ... நீயாரு" என்று கேட்க அதையெல்லாம் கேட்கும் மனநிலமையில் யாழிசை இல்லை வாசு முதலில் கூறியதை ஜீரணிக்க முடியாமல் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள். 

"ஹேய் மேடம் உன்னை தான்" என்று வாசு யாழிசையின் கையை பிடிக்க யாழிசை அதிர்ச்சியில் இருந்து சற்று மீண்டு "உங்களை அடையனுன்னா ... புரியல ... கல்யாணம் பன்னிக்கவா" என்று தாம் நினைத்தது தானா அல்ல வேறா என்று தெரிந்துக் கொள்ள கேடௌடாள். "கல்யாணமா" என்று கூறி வாசு சத்தமாக சிரித்தவாறே "ஷீ வான்ட்ஸ் டு மேக் எ லவ் வித் மி" என்று கூறினான். "அதுல உங்களுக்கு விருப்பம் இல்லையா" என்று யாழிசை கேட்க "எப்படி இருக்கும் ... கல்யாணத்துக்கு முன்ன எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை ... கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு நாள் கூட கண்டிப்பா வெயிட் பன்ன மாட்டன்" என்று வாசு கூற அவனை நினைத்து சிரிப்பதா இல்லை அவன் கொள்கையை பாராட்டுவதா என்று தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் யாழிசை. "நா கேட்ட கேள்விக்கு நீ பதிலே சொல்லல" என்று வாசு கேட்க யாழிசை "யாழிசைன்னு அப்போவே சொன்னனே" என்று கூறினாள். "ஓஓ மறந்துட்டன் போல" என்று நினைத்தவன் அமைதியாகினான். "நீயும் அஞ்சனாவும் ரொம்ப வருஷமா லவ் பன்றிங்க ... இத்தனை வருஷத்துல ஒரு டைம் கூட நீ அவளை ஹக் கிஸ் பன்னதில்லையா" என்று யாழிசை கேட்க வாசு "ஒரே டைம் ஒரே ஒரு டைம் ... அவளோட பர்த்டே அன்னைக்கு ரொம்ப அடம் பிடிச்சி ஒரே ஒரு கிஸ் கேட்டா நா அவ கன்னத்துல தான் கொடுக்க நினைச்சன் ... ம்ச் .. பட் அவ உதட்டுல வாங்கிக்கிட்டா" என்று கூறினான். யாழிசை ஏன் இவை எல்லாம் கேட்கிறாள் என்று அவளுக்கும் புரியவில்லை அவள் கேட்பதற்கான பதிலை எல்லாம் அவன் ஏன் சொல்கிறான் என்று வாசுவிற்கும் புரியவில்லை. ஆனால் இருவரும் வெகு நேரம் வாசு மற்றும் அஞ்சனாவின் காதல் கதையை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். 

யாழிசைக்கு வாசு பேச பேச ஒன்று மட்டும் விளங்கியது. அஞ்சனா வாசுவை தான் சொல்ல செய்யும் கேட்பார் கிளிப்பிள்ளை போல் வாசுவை மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறாள் என்று. அவளுக்கு உண்மையாகவே வாசு மேல் காதலா அல்ல வேறெதாவது வாசுவை திருமணம் செய்துக் கொள்வதனால் உள் நோக்கம் இருக்கிறதா என்பது அவளுக்கு விளங்கவில்லை. அஞ்சனாவின் தந்தை பணத்தாசை பிடித்தவர். அப்பேர்ப்பட்ட மனிதர் தன் மகளுக்காக ஒரு நடுத்தர குடும்ப மருமகனை தேர்ந்தெடுக்க என்ன அவசியம் இருக்கிறது. கண்டிப்பாக ஏதோ இருக்கிறது என்று நினைத்த யாழிசை வாசுவிடம் பேசத் தொடங்கினாள். முழுதாய் இரண்டு மணி நேரம் கடந்த பிறகு யாழிசையின் அறை கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. அவசரமாக கதவை திறக்க ஓடிய யாழிசை அப்பொழுது தான் கதவு வெளிப்புறம் பூட்டி கிடப்பது நினைவு வந்தது. "அண்ணா டோர் லாக் ஆகி இருக்கு" என்று கூற அவினாஷ் கதவை திறந்து விட்டான். யாழிசை அவினாஷ்ஷை ஆர்வமாக பார்த்தவாறு உள்ளே வந்து "என்ன ஆச்சி" என்று கேட்க அவினாஷ் "ப்ளான் சக்ஸஸ்" என்று கூற யாழிசை ஆனந்தத்தில் அவினாஷ்ஷை அணைத்துக் கொண்டாள். "உனக்கு எப்படி இப்படி ஒரு ஐடியா தோனுச்சி" என்று அவினாஷ் கேட்க "நம்ம எதிரிங்க நம்ம கண்ண குத்த ப்ளான் பன்னா நம்ம அவங்க விரலையே பிடுங்கி அவங்க கண்ணையே குத்த வைக்கனும் ... நாளைக்கு ஏன்டா இந்த ப்ளான்ன போட்டோம்ன்னு மயில்சாமியும் அவன் மகளும் கதறனும்" என்று யாழிசை கோபமாக கூறினாள். 

"ஆனா அதுக்காக வாசுவையே யூஸ் பன்னுவாங்கன்னு நா நினைக்கவே இல்லை" என்று அவினாஷ் ஆச்சரியத்துடன் கூற யாழிசை "இல்லை கண்டிப்பா இதுல வாசுவ சிக்க வைக்க அவங்க நினைச்சிருக்கவே மாட்டாங்க ... ஏன்னா வாசு மயில்சாமிய பொறுத்தவரைக்கும் மருமகன் ... மருமகன் இமேஜ் அசிங்கப்பட்றத அந்த ஆள் ஒத்துக்கவே மாட்டான் ... இது எனக்கும் பரத்க்குமான ப்ளான் ... பரத் நா கால் பன்னி எடுக்கலன்னா என்ன அர்த்தம் அவன் பரத்தை மயக்கத்துல விழ வச்சிருக்கான்னு தான அர்த்தம்" என்று யாழிசை கூற அவினாஷ் "ஆனா இதுக்குள்ள வாசு எப்படி இன்வால்வ் ஆனான்" என்று சந்தேகமாக கேட்டான். "அவனை அஞ்சனா ஏமாத்தி ரூம்க்கு கூட்டிட்டு போய் இருக்கா அவர் அவ கிட்ட இருந்து தப்பிச்சி பரத் ரூம்ன்னு நினைச்சி இங்க வந்துட்டாரு" என்று கூறினாள். "சரி கேமரால பதிவாகாம இவனை எப்படி இங்க இருந்து மாத்தறது" அவினாஷ் கேட்க "அவனை ஏன் மாத்தனும் நா போறன்" என்று யாழிசை கூற அவினாஷ் "எப்படி" என்று கேட்டான். "பால்கனி வழியா தான் ... உன் ரூம் பால்கனி ஓபன்ல தான இருக்கு" என்று யாழிசை கேட்க அவினாஷ் "ஆமா" என்று கூறினான். "தென் வொய் ... நா உன் ரூம்க்கு போறன் ... வாசுவ தூங்க வச்சிரு" என்று மடமடவென பால்கனியை திறந்துக் கொண்டு வெளியில் சென்றாள் யாழிசை "பாப்பா பாத்து" என்று அவினாஷ் பதறிக் கொண்டு ஓட வாசுவும் அவன் பின் எழுந்துச் சென்றான். 

யாழிசை பத்திரமாக மற்றொரு அறைக்குள் நுழைந்ததும் அவினாஷ் நிம்மதி பெருமூச்சு விட்டான். "யாழு ... ஏன் என்னை விட்டு போய்ட்டா ... இவ்வளவு நேரம் யாழு எனக்கு எவ்வளவு அழகா கம்பனி கொடுத்தா தெரியுமா ... யாழு ... யாழு ... யாழு" என்று சிறுபிள்ளை போல் வாசு கீழே அமர்ந்து கை கால்களை உதறிக் கொண்டு அழுதான். "அடேய் வாடா உள்ள ... வெளியில நின்னா காய்ச்சல் வரும்" என்று அவினாஷ் வாசு கையை பிடித்து தூக்க முயல "காய்ச்சல் வந்தா யாழு வருவா இல்லை ... அப்பன்னா நா வர மாட்டன் இங்க தான் இருப்பன்" என்று வாசு அடம்பிடிக்க அவினாஷ் "இங்கேயே இரு ... உன்னை பேய் வந்து தூக்கிட்டு போகட்டும்" என்று கூறி விட்டு அறைக்குள் சென்றான். வாசு அங்கும் இங்கும் தலையையும் பார்வையையும் சுழற்றி இருளில் மிளிர்ந்த வெளிச்சத்தை கண்டு புன்னகைத்தவன் "பேய் எல்லாம் இந்த வெளிச்சத்துல வருமா" என்று புலம்பினான். "பேய் வராது ரத்தகாட்டேரி வரும்" என்று அவினாஷ் உள்ளிருந்து குரல் கொடுத்தான். வாசு அமைதியாக எழுந்து உள்ளே சென்று கட்டிலில் படுத்து விட்டான். அவினாஷ் பெருமூச்சுடன் மெத்தையில் விழுக வாசு "காலையில யாழு வருவாளா" என்று கேட்க "வருவா வருவா" என்று கூறிய அவினாஷ் "ஒரு அண்ணன் கிட்ட என்ன கேக்கறான் பாரு" என்று புலம்பியவாறே கண்யர்ந்தான். 

காலை ஏழு மணி போல் யாழிசையின் அறை கதவு வேகமாக தட்டப்பட உறக்கம் கலைந்து எழுந்தமர்ந்த வாசு "கம்மிங்" என்று குரல் கொடுத்தான். அவினாஷ் வாசுவிற்கு முன்பே எழுந்து விட்டான் ஆனால் வாசு சென்று கதவை திறக்க வேண்டும் என்பது தானே அவர்களின் திட்டம் என்பதால் அமைதியாக படுத்திருந்தான். வாசுவின் தலை வெட்டி போட்டுவிடலாம் என்பது போல் வலிக்க வாசு தன் தலையை இரு உள்ளங்கையால் அழுத்தி பிடித்தவாறே சென்று கதவை திறந்தான். வாசு கதவை திறந்ததும் பளீச் பளீச்சென பத்திரிக்கை நிருபர்களின் புகைப்படம் எடுக்கும் ஒளி வாசு மேல் மின்னல் போல் பட்டுத் தெறித்தன. வாசு தற்பொழுது தான் போதையின் வீரியத்தில் இருந்தும் உறக்கத்தில் இருந்தும் தெளிந்து எழுந்தான். அதற்குள் அவன் முகத்தில் வெளிச்சம் படவும் தன் கையை வைத்து கண்ணையும் முகத்தையும் மறைத்துக் கொண்டு என்ன நடக்கிறது என்று புரியாமல் தவித்து போய் நின்றான். 

"ஹேய் ஜஸ்ட் ஸ்டாப் இட் ... வாட்ஸ் கோயிங் ஆன் இயர் ... வௌய் ஆர் யூ கிளிக் லாட்ஸ் ஆப் பிக் ஆஃப் மீ" என்று வாசு கோபமாக கேட்கவும் சில விநாடிகள் புகைப்படம் எடுப்பது நிறுத்தப்பட்டது. வாசு குழப்பமாக கையை விலக்கிக் கொண்டு "வாட் டூ யூ வான்ட்" என்று கோபமாக கேட்க "உள்ள இருக்க 'இசை ஸ்டார்ஸ்'ஓட ஓனர் யாழிசைய கூப்டுங்க" என்று ஒருவன் கூற "யாழிசையா ... உங்களுக்கு என்ன பைத்தியமா இந்த ரூம்ல யாழிசை இருக்காங்கன்னு உங்களுக்கு யார் சொன்னா" என்று வாசு கோபத்தில் கத்த "வீ நோ ஆல் ... ஹோட்டல் கட்ட நிலத்துக்காக மயில்சாமி சார் மருமகனான உங்களை மயக்கி அவங்களுக்கு சாதகமா நிலத்தை எழுதி வாங்கிக்கிட்டாங்க ... நைட் புல்லா நீங்க இரண்டு பேரும் ஒரே ரூம்ல ஸ்டே பன்னி இருக்கிங்க" என்று மற்றொருவன் கூற வாசு "வாட் நான்சன்ஸ்" என்று கத்த "என்னை பாக்கனுன்னு எல்லாரும் ரொம்ப ஆர்வமா இருக்கிங்க போல" என்று கேட்டவாறே பத்திரிக்கையாளர்களின் பின்னால் நின்று யாழிசை கேட்க அனைவரின் கழுத்தும் யாழிசையை நோக்கி திரும்பியது. மொத்த பத்திரிக்கை கூட்டமும் திரும்பி அவளை புகைப்படம் எடுக்க யாழிசை புகைப்பட வெளிச்சங்களை கண்டும் சிறிது கூட இமையை அசைக்காமல் அப்படியே நின்று அனைவரையும் முறைத்தாள். 

யாழிசையின் இமைக்காத கண்களையும் அவளின் கோபத்தையும் கண்ட வாசுவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. அத்தோடு அவளின் பயமில்லாத நிமிர் தைரியத்தையும் கண்டு வாசு திகைத்து போய் நின்றிருக்க உள்ளிருந்து அவினாஷ் எழுந்து வந்தான். "நீங்க எப்படி வேற ரூம்ல இருந்து வரிங்க" என்று ஒருவன் கேட்க "கதவை திறந்து தான்" என்று யாழிசை நக்கலாக பதில் கூறினாள். "உங்க ரூம்ம விட்டு நீங்க எப்படி வேற ரூம்ல இருந்து" என்று ஒருவன் தடுமாற்றத்துடன் நிறுத்தினான். "நா என் அண்ணன் ரூம்ல தங்கிட்டன் ... என் அண்ணன் என் ரூம்ல தங்கனான்" என்று யாழிசை கூறினாள். "சரி நீங்க இந்த ரூம்ல இல்லன்றதுக்கு என்ன ஆதாரம்" என்று மற்றொருவன் கேட்க "நா இந்த ரூம்ல தான் இருந்தன்றதுக்கு உங்க கிட்ட என்ன ஆதாரம் இருக்கு" என்று யாழிசை கேட்க அனைவரும் விழித்தனர். மயில்சாமி அனைத்தையும் பார்த்து கோபத்துடன் அவன் செட் செய்த ஆளை அறைக்கு அழைத்தான். 

"அதான் நீங்க தேடி வந்த ஹாட் ந்யூஸ் இல்லன்னு ஆகிடுச்சி இல்லை அப்பறம் என்ன எல்லாரும் எடுத்த போட்டோஸை டெலீட் பன்னிட்டு போய் வேலைய பாருங்க" என்று அவினாஷ் கூறி வாசுவையும் யாழிசையையும் உள்ளே அழைத்துக் கொண்டு கதவடைத்தான். கதவடைத்ததும் அண்ணனும் தங்கையும் காரணமே இன்றி சிரிக்க வாசு தான் ஒன்றும் புரியாமல் விழித்தான். இவ்வளவு நேரம் இங்கே என்ன நடந்தது என்பது கூட அவனுக்கு விளங்கவில்லை. "இங்க என்ன நடக்குது" என்று வாசு சிரித்துக் கொண்டிருந்தவர்களை பார்த்து கேட்க யாழிசை "ப்ரஸ் மீட்" என்று கூறினாள். "பாப்பா சும்மா இரு விளையாடாத ... அவனே டென்ஷன்ல இருக்கான் ... நா போய் பரத்த பாக்கறன் ... நீ எல்லாத்தையும் சொல்லு" என்று அவினாஷ் அங்கிருந்து நகர்ந்து விட்டான். வாசு யாழிசையை குழப்பமாக பார்க்க யாழிசை "என்ன" என்று கேட்டாள். 

"இங்க என்ன நடக்குது" என்று வாசு கேட்க யாழிசை அவனை முறைத்தவாறே சென்று சோபாவில் அமர்ந்து "எல்லாம் உன்னாலையும் உன் மாமனாராலையும் தான்" என்று கடுகடுப்புடன் கூறினாள். சற்று முன் அவினாஷ்ஷிடம் இருந்த தளர்ந்த யாழிசையின் குணம் அவினாஷ்ஷுடனே சென்றிருக்க தற்பொழுது கோபமான திமிர் நிறைந்த யாழிசை வெளியில் வந்திருந்தாள். "நீ எல்லாம் பரத்க்கு அண்ணன் ... பரத் எவ்வளவு பொறுமையா ... எவ்வளவு ஜென்யூன்னா ... எவ்வளவு நல்லவனா இருக்கான் ... ஆனா நீ ச்சை ... நிலத்துக்காக மாமனார் காதலி கூட சேர்ந்து எப்பேர்பட்ட வேலைய பாத்திருக்க ... என் பேர்ர நாசம் பன்ன உனக்கு எப்படி மனசு வந்தது" என்று யாழிசை கோபமாக கேட்க வாசு தன் மேல் காரணமே இல்லாமல் குற்றச்சாட்டை சுமத்தும் யாழிசை மேல் ஏக கோபம் பொங்கியது. "ஏய்" என்று வாசு கோபம் கொண்டு யாழிசையின் கழுத்தில் கை வைத்து சிறிது இறுக்கி பிடித்தான். "இன்னொரு வார்த்தை என்னை பத்தி தப்பா பேசன கொலை பன்னிடுவன் ... உன்னை அசிங்கப்படுத்தி அந்த நிலத்தை வாங்கனுன்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது அண்ட் பரத் என்னோட தம்பி என் குணத்துல பாதி தான் அவனுக்கும் இருக்கும் ... அவன் நல்லவன்னா நானும் நல்லவன் அவன் கெட்டவனா நானும் கெட்டவன்" என்று கூறினான். யாழிசை அவனின் கழுத்து இறுக்கத்திற்கெல்லாம் சிறிதும் அசையவே இல்லை. அவனின் கோப விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

"இதுவரைக்கும் என் நிழலை கூட ஒருத்தனும் தொட்டது கிடையாது ... நீ என் கழுத்தையே பிடிச்சிருக்க ... உன்னை நா சும்மா விட்றுவன்னு நினைக்கிறியா" என்று யாழிசை கேட்க "உன்னால என்ன பன்ன முடியுமோ பன்னுடி" என்று வாசு யாழிசையின் கழுத்தை விட யாழிசை "ஓகே கெட் ரெடி" என்று கூறி எழுந்து நின்றவள் வாசுவை நெருங்க வாசு அவளின் பார்வை மாற்றத்தை அறிந்து பின்னால் நகர்ந்தான். 


Leave a comment


Comments


Related Post