இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -45 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 29-05-2024

Total Views: 19131

நிச்சய வேலையை வளவனும் யுகியும் மும்முரமாக செய்துக் கொண்டிருந்தனர். ஷாலினிக்கு மெகந்தி போட ஆள் வந்திருக்க,  மணிமேகலை நிலாவையும் போட்டுக் கொள்ள சொன்னார்.

“இல்லை அத்த எனக்கு வேண்டாம். இதுல பெருசா ஆசையில்லை. என்னோட கல்யாணத்துக்கு வைப்போம்ல அப்போ பார்த்துக்கலாம்  விடுங்க.” என சாதாரணமாக சொல்ல.

'இவள் கல்யாணம்ன்னா நந்துவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்றாளா? இல்லை கல்யாணம் நடக்கும்ன்னு பொதுவா சொல்றாளா? ஒன்னும் புரியலையே.' என்பது போல் பார்த்தார். அன்றைய நாள் இதே பரபரப்புடன் சென்று விட்டது.

அடுத்த நாள் தான் நிலாவிற்கு  இடியாக விடிந்தது. காலையில் எப்போதும் போல் எழுந்தவளை வளவன்,

“அம்மு நகுல் பேமிலி இன்னைக்கு வராங்க நீ சேலைக் கட்டிக்கோ.” என்றான்.

“அவங்க வந்தா நான் எதுக்கு அண்ணா சேலைக் கட்டணும்? நகுல் என்னைய என்ன புதுசாவா பார்க்குறாரு?”

“புதுசோ, பழசோ சேலைக் கட்டுனு சொன்னா கட்டு. எதுக்கு இவ்வளவு கேள்வி கேக்கற?”

“அண்ணா நீ சொல்றதே சரியில்லையே ஏதாவது விஷயமா?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல நம்ப ஊருக்கு வராங்க. நம்ப எப்படி இருக்கனும்னு ஒன்னு இருக்குல்ல, இப்போ கட்ட முடியுமா? முடியாதா? முடியாதுன்னா சொல்லிடு நான் எதுவும் சொல்ல மாட்டேன்.” என படபடவென்று பேசினான்.

அவன் படபடப்பே ஏதோ தவறு நடக்கப் போகிறது என  நிலாவை பயமுறுத்த, அண்ணனுக்காக தலையை ஆட்டினாள்.

சரியாக பத்துமணி என்னும் போது நகுலன் குடும்பம் வந்து  இறங்கி விட்டது.

வளவனை தவிர மற்ற அனைவருமே அவர்கள் நிச்சியத்திற்கு வந்திருப்பதாக தான் நினைத்தனர்.

“அம்மா அம்மு ரெடியாகிட்டாளா? நீ காபி போட்டு வை. நீயே கொண்டு வந்துடாதம்மா, அம்மு வந்ததும் அவகிட்ட கொடுத்து அனுப்பு.” என்றதும் தான் தாயிக்கு சந்தேகம் வந்தது.

“வளவா.. என்ன நடந்துட்டு இருக்கு, நீ என்ன பண்ணனும்ன்னு நினைக்கற?”

“அம்மா ஓபனாவே சொல்றேன். நகுலுக்கு பாப்பாவை பிடிச்சிருக்குன்னு முன்னாடியே என்கிட்ட சொன்னான். அப்போ பாப்பா முடிவு தான் பெருசுன்னு சொல்லிட்டேன். ஆனா இப்போ நடக்கறதைப் பார்த்தா பயமா இருக்கு. இவ அந்த நந்தன் சொல்றான்னு அவன் பக்கம் துணையா நின்னாலும் நின்னுடுவா. இவளை நம்ப முடியாது அதான் இன்னைக்கே பொண்ணுப் பார்க்க வர சொல்லிட்டேன்.”

“இது அவளுக்கு தெரியுமாடா?”

“உனக்கே இப்போதானே சொல்றேன்.”

“டேய் தெரிஞ்சா ஆடுவாடா, அதுமில்லாம ஜாதகம் பார்க்க வேண்டாமா வளவா? எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு பண்ணுனா எப்படிடா? பொட்டப்புள்ள சமாச்சாரம், நந்து தம்பி சும்மா இருக்கும்மா?” 

“எந்த காலத்துலம்மா இருக்க ஜாதகம் அது இதுன்னுட்டு.. அந்த நந்தன் வந்து சொல்லும் போதும் இதெல்லாம் சொல்லல்ல, அவன் அம்முக்கு மாப்பிள்ளை ஆகறதுக்கு சும்மா இருந்துடலாம்.” 

“உனக்கு ஒருத்தனை பிடிக்கலைன்னு இப்படி பண்ணக் கூடாது வளவா.”

“ஆமா அவனை எனக்கு பிடிக்காது தான் அதுக்காக என் தங்கச்சி வாழ்க்கையில யோசிக்காம முடிவு எடுக்க மாட்டேன். நகுலன்க்கு என்ன குறைச்சல்ம்மா மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறான். அப்பா அம்மா டீச்சர், ஒரு அக்கா அதுக்கும் கல்யாணமாகி வெளிநாட்டுல இருக்கு. இதை விட நல்லக் குடும்பத்தை நீயே தேடுனாலும் கிடைக்காது.”

“எனக்கு அவங்க பேமிலி பத்தி கவலையில்லடா ஆனா உன் தங்கச்சி..”என்று இழுத்தவர் சமையலறை வாசலில் நிழல் ஆடவும் நகுலின் அம்மா எதுவும் வந்துவிட்டாரோ என பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு திரும்பிப் பார்க்க நிலா தான் நின்றிருந்தாள்.

அவளைப் பார்த்ததும் இருவரும், “அம்மு” என ஒரு சேரக் கத்த.

அவர்களை பேச வேண்டாம் என கை நீட்டி தடுத்தவள். “எதுவா இருந்தாலும் அவங்க போனதும் பேசிக்கலாம்.” என முடித்து விட்டாள்.

“அப்போ காபி..”

“வீட்டுக்கு யாராவது வந்தா காபி கொண்டு போய் கொடுப்பேன்ல.. அது மாதிரி நினைச்சிக்கறேன்.”

நிலா அவ்வாறு சொல்லும் போதே இருவருக்கும் புரிந்து போனது, இந்த திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை என்று.

ராஜியிடம் காபியை வாங்கிக் கொண்டு வெளியேப் போனாள்.

கார் ஒன்று நிலாவின் வீட்டு வாசலில் நிற்பதை மாடி மேலிருந்து பார்த்த நந்தன். யாராக இருக்கும் என தாடையை தடவியவாறு யோசித்தவன். வேகமாக கிளம்பி கீழே இறங்கி வந்தான்.

“நந்து சாப்புட்டுப் போப்பா..”

“வந்து சாப்பிடறேன் பாட்டி.” என்றவன் வீட்டின் பின்புறம் சென்று நிலாவின் வீட்டிற்கு முன் நின்றான்.

அவன் மனதில் சந்தேக விதை விழுந்து விட்டாலே அந்த சந்தேகத்தை தீர்க்கும் வரைக்கும் ஓயமாட்டான்.

நேற்று வைத்து சென்ற கடிகாரத்தை எடுப்பதுப் போல், வந்தவர்கள் யார்? என அறிய முயன்றான்.

“எங்களுக்கு நிலாவை ரொம்ப பிடிச்சிருக்கு, உங்க விருப்பம் என்னனு சொன்னா வளவன் கல்யாணத்தோடையே இவங்க கல்யாணத்தையும் வெச்சிக்கலாம்.” என நகுலனின் தாய் சொல்லிக் கொண்டிருக்க. அதைக் கேட்டதும் நந்தனிற்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோவம் வந்ததோ.. அடக்க முடியாத அளவிற்கு கோவத்தில் கண்களில் சிவப்பு ஏறிக் கொண்டே போனது. தன்னை முயன்று அடக்கினான்.

“நிச்சியம் முடியட்டும் ஆண்டி நான் சொல்லி அனுப்பறேன்.” என்றான் வளவன் அவன் சொல்ல சொல்லவே.

“வியா.. வியா.. என்னோட வாட்ச் நேத்து நைட் உன்னோட ரூமுலையே வெச்சிட்டுப் போய்ட்டேன் எடுத்துட்டு வா..“ என அனைவருக்கும் கேக்க வேண்டும் என்றே சத்தமாக சொல்லிக் கொண்டு உள்ளே வந்தான்.

அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டனர்.

நந்தன் குரலைக் கேட்டதும் நடுங்கத் தொடங்கி விட்டாள் நிலா. அவளது பயமெல்லாம் இவர்களுக்கு முன் வாட்சைக் கேட்டு வந்ததற்கு அல்ல. நகுலன் குடும்பம் தன்னைப் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களையும் சும்மா விடமாட்டான் தன்னையும் சும்மா விடமாட்டான் என்ற பயம் தான்.

“டேய் நீ எப்போடா இங்க வந்த? எல்லோருக்கும் முன்னாடி எங்களைய கேவலப்படுத்தனும்னு கண்டதையும் சொல்றியா?” என வளவன் நந்தனின் சட்டையைப் பிடிக்க,

“கூல் மச்சான் எதுக்கு இவ்வளவு கோவப்படற? அதிக டென்ஷன் உடம்புக்கு ஆகாது அப்புறம் என் தங்கச்சி தானே கஷ்டப்படுவா.” என்று வளவனின் கையை விலக்கி விட்டவன்.

“போய் வாட்சை எடுத்துட்டு வாடி.”என்றான் நிலாவிடம் உரிமையாக.

அடுத்த நொடி வரைக்கும் நிலா அங்கு நிற்பளா என்ன? நந்தன் சொன்னதும் அம்பாக அறைக்குப் பாயிந்து விட்டாள் மகராசி.

“என்ன வளவா இது? யார் இந்த பையன்?”

“நீங்க தப்பா நினைச்சிக்காதீங்க ஷாலினியோட அண்ணன் தான் ஆண்டி.”

“அந்த தம்பிக்கு உன் தங்கச்சி பெட்ரூம்ல என்ன வேலை?”

“அவன் சும்மா சொல்றான் ஆண்டி, பாருங்க பாப்பா வந்து எதும் இல்லைன்னு தான் சொல்லும்.” என்று வளவன் சொல்லி வாய் மூடவில்லை. கையில் கடிகாரத்தை தூக்கிப் பிடித்தவாறு, 'இவன் எப்போ எனக்கே தெரியாம ரூமுக்கு வந்தான்னு தெரியலையே.' என யோசித்துக் கொண்டு வர தூக்கிப் பிடித்த கடிகாரத்தை அங்கிருந்த அனைவருமே பார்த்தனர்.

அவர்களின் அதிர்ச்சிப் பார்வையைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த நந்தன்.

நிலாவின் கையில் இருந்த கடிகாரத்தை வாங்கி கையில் கட்டியவன். “நான் யாருன்னு சார் இன்ட்ரோ கொடுத்தாரு நீங்க யாருன்னு சொல்லலையே.”

“நாங்க நிலாவை என் பையன்னுக்கு பொண்ணுப் பார்க்க வந்துக்கோம்.”

“ஓ“ என்று தாடையை தடவ,

'நிலா அவனை விட்டு தள்ளிப் போ. அவன் ஏதோ விபரீதமா பண்ணப் போறான். போ நிலா போய்டு..' என  நிலாவின் மனம் கூப்பாடு போட்டது.

மனம் கூப்பாடு போட்டு என்ன பயன்? கால்கள் நகர வேண்டுமே.. ஆணி அடித்ததுப் போல் கால்கள் அங்கையே நிற்க, யாரும் எதிர்பாரா நேரம் பார்த்து நிலாவின் இடது கையைப் பிடித்து தன்னை நோக்கி சுண்டி இழுத்தவன், அனைவருக்கும் முன்பு நிலாவின் இதழில் இதழ் பதித்து விட்டான்.


Leave a comment


Comments 3

  • P Priyarajan
  • 1 month ago

    Yen da yen... Avala patha unakku pavama therilaya....

  • F Fajeeha Fathima
  • 1 month ago

    ஏன் நந்தா ஏன்? இந்த புள்ள பாவம் பா இவனை வெச்சிட்டு

  • A Aathi Sri
  • 1 month ago

    Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr sis 👌👌👌👌👌👌👌😍


    Related Post