இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -46 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 30-05-2024

Total Views: 19216

“டேய் என்னடா பண்ற விடுடா விடுடா.” என வளவன் ஒருப் பக்கமும், நகுலன் ஒருப் பக்கமும் நந்தனை அடிக்க அவர்களை ஒரு தோள் குலுக்களில் தள்ளி நிறுத்தியவன் நிலாவை விட்டு விலகினான். 

என்ன நடந்தது தான் நினைத்தது நிஜம் தான் என பிரம்மை புடித்தது போல் நின்றவளை உலுக்கி, 

"எவ்வளவு தைரியம் இருந்தா கண்டவன் முன்னாடி இப்படி மேக்கப் போட்டுட்டு வந்து நின்னுருப்பா.. உன்னைய அப்பறம் பேசிக்கறேன்டி. ஏய் என் பொண்டாட்டிக்கு நீ என்னடா மாப்பிள்ளைப் பாக்கறது? இனி எவனையாவது மாப்பிள்ளைன்னு கூட்டிட்டு வந்தா அவங்க முன்னாடி இதை விட கேவலமா பண்ணுவேன். ” என்றவன் நிலாவைப் பிடித்துக் கொண்டு பலமாக அழுத்தினான் 

, “ஆஆஆ” என கத்திவிட்டாள் 

. என்று அவளது கையை விட்டுவிட்டு கழுத்தைப் பிடித்து விட்டான். 

எனக்கு தெரியாது அண்ணா தான் என மனம் வராமல் அமைதியாக அவனைப் பார்த்தவாறு நின்றாள். 

“ச்சை” என நிலாவை உதறி தள்ளியவன் வளவன் பக்கம் திரும்பி, “நீ பண்றதுக்கு பேர் என்னனு தெரியுமா?” என்றான். 

“டேய் நந்தா எங்க குடும்பத்தைக் கெடுக்கணும்னே கங்கணம் கட்டி அலையறியா? நாலுப் பேரு கூடி இருக்கற சபையில் என் அம்முவோட மானத்தை வாங்கிட்டியேடா.“ என்று நந்தன் கன்னத்தில் அறைந்து விட்டான் வளவன். 

“அண்ணா என்ன பண்ற..? விடு இதுக்கு தான் என்ன பிரச்சனை வந்தாலும் யார்கிட்டயும் சொல்றது இல்லை. மாறி மாறி அடிச்சிக்கவா நான் எல்லாக் கஷ்டத்தையும் தாங்கிட்டு நிற்கறேன்.” நந்தன் முன்னாடி பேச தான் பயபுள்ளைக்கு உதறும் மற்றவர்களை கிழித்து தொங்கவிட்டு விடுவாள். 

“ஒரு நிமிஷம் எல்லோரும் அமைதியா இருக்கீங்களா?” என கத்திய நகுலன், “என்ன வளவா கூப்புட்டு வெச்சி அவமானப் படுத்தறீயா..?” 

“அப்படிலாம் இல்ல நகுல், இவன் என் தங்கச்சி வாழ்க்கையை சீரழிக்கணும்னே இதெல்லாம் பண்ணிட்டு இருக்கான்.” 

“அதுக்குன்னு எல்லாருக்கும் முன்னாடி முத்தம் கொடுக்கறான். யாரும் இல்லாதப்ப என்ன பண்றானோ? அவளைப் போய் என்னால எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்?” 

“டேய் உன்னய எவன்டா கல்யாணம் பண்ணிக்க சொல்லி வெத்தலைப் பாக்கு வைச்சு அழச்சா? அடுத்தவன் பொண்டாட்டிக்கு புருஷன் ஆகணும்னு நினைக்கறதுலாம் என்ன மாதிரியான வேலைன்னு தெரியுமா?” 

“வளவன் இதுக்கு மேல நீங்க எங்களை அவமானப்படுத்த முடியாது. போதும் நாங்க கிளம்பறோம்.” என நகுலனின் தந்தை பேச. 

“உங்கிட்ட பிரண்ட்ஷிப் வெச்சிக்கிட்டதுக்கு நல்லா செஞ்சிட்டடா போதும்..” என நகுலன் வெளியே நடக்க அவன் பின்னாலயே தாய் தந்தை இருவரும் சென்று விட்டனர். 
நடந்த கூட்டத்திற்கு நிலா தான் நந்தன் மீது கோவப்பட வேண்டும் அவளோ, 'இவன் இனி என்ன செய்வானோ?' என பயந்து நடுங்க, அவள் பயந்ததுப் போல் தான் நந்தனும், “உனக்கு இருக்குடி தனியா மாட்டும் போது பேசிக்கறேன்.” என்று அங்கியிருந்து சென்று விட்டான் 

அவன் போனதும் தலையில் கை வைத்து சோபாவில் அமர்ந்து விட்டான் வளவன். 

நந்தன் செய்ததை வளவன் திருப்பி செய்ய வெகுநேரம் ஆகாது. அதற்கு ஷாலினியை வைத்து வாய்ப்பு அதிகம் இருந்தது ஆனால் அதை செய்ய வளவனுக்கு மனமில்லை.

நந்தனின் கோபத்தை ஷாலினியின் மீதுக் காட்டலாம், அதற்காக அவன் நிலாவை கேவலப்படுத்திச் சென்றது போல் தானும் ஷாலினியை கேவலப்படுத்தினால் அவளை காதலிப்பதில் மட்டும் அல்ல தன்னுடைய வளர்ப்புக் கூட தப்பாக போய்விடும் என அதை செய்யக்கூட யோசிக்கவில்லை வளவன்.

அவனின் சந்தேகமெல்லாம் ‘எப்படி இவனுக்கு நிலாவை பெண்ப் பார்க்க வந்தது தெரிந்தது?’ என்பது மட்டும் தான். நந்தனுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக தானே தன் தாயிடம் கூட விஷயத்தை சொல்லவில்லை.

ஷாலினியிடம் பேசினால் எங்கு கோவத்தில் பெண் பார்க்க வருவதை சொல்லி விடுவோமோ என பயந்தே அவளிடம் பேசாமல் ஆட்டம் காட்டினான். இப்படி ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தும்.. கடைசியில் இப்படி ஆகிவிட்டதே என கவலையாக இருந்தது.

ராஜி எதுவும் நடக்காதது போல் மாலை விசேஷத்திற்கு கட்டுவதற்கு சேலையை எடுத்து வைக்க சென்றுவிட்டார்.

“அம்மா அம்மா..”

“ஏண்டா கத்தற.?”

“அவன் இவ்வளவு பண்ணிட்டு போயிருக்கான் நீ எதுமே பேசாம இருக்க, எங்களைய கொன்னுப் போட்டாவாது ஏன்னு கேள்வி கேப்பியா? இல்லை அப்பவும் அப்படி தான் இருப்பியா?”

“இப்போ எதுக்கு வார்த்தையை விடற..? நேத்து அந்த தம்பி சொல்லிட்டுப் போகும்போதே எனக்கு தெரியும். அதை மீறி நிலாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாதுன்னு. நீ தான் அவசரப்பட்டு அவங்களை வர வெச்சு இப்போ அவமானப்பட்டு நிற்கறோம்.”

“அதுக்குன்னு அவனுக்கு அம்முவை கொடுக்க சொல்றியா..? இதுக்கு என் கையாலையே விஷம் வெச்சி என் தங்கச்சியைக் கொன்னுடுவேன்.”

“வளவா...”

“சும்மா கத்தாதம்மா இது தான் நெசம், நிலா கல்யாணமே ஆகாம வீட்டுல இருந்தாலும் பராயில்ல, என் தங்கச்சிக்கு கடைசி வரைக்கும் சம்பாரிச்சிப் போட என் உடம்புல தெம்பு இருக்கு.. அவனுக்கு மட்டும் கொடுக்க மாட்டேன்.” என கத்திவிட்டு சென்று விட்டான்.

என்ன நடக்கிறது என்றே புரியாமல் மழுங்க மழுங்க முழித்துக் கொண்டு  உக்காந்திருந்தாள் நிலா.

வளவன் சென்று யுகியிடம் சொல்ல, அவனோ, “இதுக்கு வந்து கேட்டாக் கூட உன் தங்கச்சி என்னைய தாண்டா பேசுவா.. அவ எல்லாத்துக்கும் பிரிப்பேரா தான் இருக்கா." என்றவனுக்கும் உள்ளுக்குள் அவ்வளவு கோவம், ‘எல்லா விசியத்தையும் என்கிட்ட சொல்றவ இவன் விசியம்ன்னு வந்துட்டா மட்டும் ஜகா வாங்கிடறா.. இவளை இங்க வரவே விட்டுருக்கக் கூடாதோ..’ என தோன்றாமல் இல்லை.

“அதுக்குன்னு உன் அண்ணனுக்கு கொடுக்க சொல்றியா?”

“அவனுக்கு என்ன குறை?”

“யுகி இதுக்கு மேல ஒத்த வார்த்தைப் பேசுனாலும் உனக்கும் எனக்கும் இடையில இருக்கற கடைசி பேச்சு வார்த்தை இதுவா தான் இருக்கும் சொல்லிட்டேன்.” என அங்கிருந்து சென்று விட்டான்.

யுகியின் மூலம் வீட்டில் இருந்தவர்களுக்கும் விஷயம் பரவி விட்டது.

“நந்து... நந்து...”

மாடியிலிருந்து இறங்கி வந்தவன் என்ன என்றுக் கூட கேக்கவில்லை.

“என்ன பண்ணிட்டு வந்து இருக்க..? வளவன் வீட்டுக்குப் போய்..” என மார்த்தி ஆரம்பிக்கும் போதே கையை காதில் வைத்து குடைய ஆரம்பித்து விட்டான்.

“நான் பேசிட்டு இருக்கேன்.”

“அதான் எதுக்கு பேசறீங்கன்னு தெரியல.”

“நீ பண்றது எதுவும் நல்லதுக்கு இல்லை நந்து. ஒரு பொறுப்பான போலீஸ் மாதிரி நடந்துக்க. உன்னைய பார்த்து நாலுப் பேரு திருந்தனும் நாலுப் பேரு கெட்டுப் போகக்கூடாது.”

“இப்போ எதுக்கு கிளாஸ் எடுத்துட்டு இருக்கீங்க..?”

“நாலுப் பேருக்கு முன்னாடி நிலாவை நீ நடத்துன விதம் தப்பு நந்து.”

“நேத்தே அவளுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைங்கன்னு நானும் நாலுப் பேருக்கு முன்னாடி அதுவும் உங்க வருங்கால மாப்பிள்ளை முன்னாடி சொன்னதா தான்   நியாபகம்.”

“அதுக்குன்னு இப்படி பண்ணுவியா?”

“இதுக்கு மேலையும் பண்ணுவேன்..”

“இது என்ன பதில் நந்து. சமூகப் பொறுப்புல இருக்கறவன் நடத்துக்கற மாதிரியா பேசற.?”

“நான் கல்யாணம் பண்ணி வைங்கன்னா யோசிச்சி தான் சொல்லுவேன்னு தெரியும் தானே. என் பொண்டாட்டிக்கு அவன் என்ன மாப்பிள்ளைப் பார்க்குறான்? இனி இதுக்கு மேல் நடந்துச்சி நான் அதுக்கு மேல பண்ணுவேன். குடும்ப மானம் யாருக்கும் முன்னாடி போகக்கூடாதுன்னு நினைச்சீங்கனா சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கிற வழியைப் பாருங்க.” என அனைவருக்கும் முன்பு சொன்னவன், மேலே சென்று காக்கி உடை அணிந்துக் கொண்டே கிளம்பி விட்டான்.

“என்னடி இவன் இப்படி பேசிட்டுப் போறான்? அவன் கட்டிக் கொடுக்க மாட்டேன்னு சொல்றான், இவன் கட்டுனா அவளை தான் கட்டுவேன்னு சொல்றான்.. யார் பக்கம் நிற்கறதுன்னே தெரியல.”

“வளவன் கிட்ட பேசிப் பார்ப்போம்ங்க. நிலா நம்ப வீட்டுக்கு வர நம்ப கொடுத்து வெச்சிருக்கணும்.”

“அம்மா என்ன பேச்சு பேசறீங்க.?” மணிமேகலையின் பேச்சைக் கேட்டதும் துள்ளிக் கொண்டு வந்தான் யுகி.

“நான் என்னடா தப்பா பேசிட்டேன்?”

“உன் பெரிய பையன் லட்சணம் தெரிஞ்சும் அவளை கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கறீங்க. பூனை சந்தோஷமா இருக்கக் கூடாதுன்னு எப்போல இருந்து காத்துட்டு இருக்க?” 

“நிலா வந்தா மாறிடுவான்டா.”

“கிழிப்பான் 28 வருஷம் மாறாதவன் தான் இதுக்கு மேல மாறப் போறானா? அவன் சொல்றான்னு நிலாப் பக்கம் உங்க பார்வை திரும்புச்சி அப்புறம் நானும் வளவனும் மனுசனா இருக்க மாட்டோம்.” என யுகி தனியாக கத்திவிட்டு சென்றான்.

அவன் போனதும், “அப்பா இன்னிக்கு நிச்சியம் நடக்கும் தானே..” என ஷாலினி மெதுவாகக் கேக்க,

“அவனவனுக்கு அவனவன் கவலை. இங்க என்ன பிரச்சனை போய்ட்டு இருக்கு, உனக்கு நிச்சயம் நடக்குமா? நடக்காதான்னு? தான் கவலையோ கம்முனு இருடி.”

“அம்மா ஏற்கனவே வளவன் கோவமா இருந்தாரு, இப்போ அண்ணா வேற இப்படி பண்ணி வெச்சிருக்காரு அதான் பயமா இருக்கு.”

“நந்தன் மாதிரி ஒரு அண்ணனோ புருசனோ, மகனோ இருந்தா இப்படி தான் நித்தமும் பயந்துட்டே இருக்கனும். இதெல்லாம் நம்ப தலைவிதி.” என்று அவர் வேலையை பார்க்கப் போய்விட்டார்.

எல்லோரும் ஒரு அளவிற்கு நந்தனின் மைண்ட் செட்டிற்கு மாறி விட்டனர். வளவன் யுகி, நிலாவைத் தவிர.

நிலாவிற்கு நந்தனை பிடிக்கும் தான், அதற்காக திருமணம் செய்து வாழும் அளவிற்கு பிடிக்குமா என்றால் சத்தியமாக இல்லை என்று விடுவாள்.

கொட்டும் அருவியை பார்க்க கோடிக் கண்கள் வேண்டும் அதன் அழகை ரசிக்க தான் செய்கிறோம். அழகாக இருக்கிறதே என அருகில் சென்றால் அடித்து சென்றுவிடும், நந்தனும் அதுபோல தான் தூர இருந்து கண் குளிரப் பார்த்துக் கொள்ளலாம். அருகில் சென்று குடும்பம் நடத்த வேண்டும் என்றால் என்ன சொல்வது.. அவன் பெயரைக் கேட்டாலே கால்கள் தன்னால் ஆடும் போது அவனுடன் ஒரே வீட்டில், ஒரே அறையில், ஒரே படுக்கையில் என யோசிக்கும் போது மூச்சுவிடக் கூட மறந்து போனது நிலாவிற்கு.

அத்துப்படி... அவன் வாசனையை நூறுப் பேரு நிற்கும் இடத்தில் கூட தனியாகக் கண்டுக் கொள்வாள். அதெல்லாம் அவன் மீது இருக்கும் ஆசை, பாசத்தால் என்று அர்த்தம் இல்லை, அவன் மீது இருக்கும் பயம். அது ஒன்று தான் அவன் சொல்வதற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் அனைத்தையும் பார்த்து பழகிக் கொண்டாள். இது இப்போது அல்ல சிறு வயதில் இருந்தே இதுதான் அவளது பலகீனம்.  

முத்தம் கொடுத்துவிட்டுப் போனவன் அவன் வேலையைப் பார்க்கச் சென்று விட்டான். 

அதை வாங்கியவள் அவனை அன்றி வேறு நிந்தனை இல்லாமல் தவிக்கிறாள்.



Leave a comment


Comments 3

  • A Aathi Sri
  • 1 month ago

    Semmmmma sis 👌👌👌👌

  • P Priyarajan
  • 1 month ago

    Intresting waiting for nxt ud👌👌👌💕💕💕💕💕

  • S Sweety
  • 1 month ago

    Pavam nila 🥺innum nanthu ennala panna poranoo


    Related Post