இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 34 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 30-05-2024

Total Views: 12082

அத்தியாயம் 34

அவளின் பதிலில் தொய்ந்து சுவற்றில் சாய்ந்து  அமர்ந்தான் சுரேந்தர்.

"மயிலு வேணாம்... நான் உனக்கு வேணாம்...நீ உனக்கு பிடிச்ச மாதிரி  ஒரு வாழ்க்கைய அமைச்சுக்க... உன்ன பாக்க பாக்க எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வருது.... அதனால அடக்க முடியாத கோபமும் வருது...எங்க உன்ன கஷ்டப்படுத்திடுவனோன்னு எனக்கு பயமா இருக்குடி... அதனால நான் வேணாம் உனக்கு..." என அவன் கூறி முடிக்கும்முன் அவன் உதட்டில் கைவைத்து மேலே பேசாதே என தடுத்தாள் அவள்.

அவன் தொய்ந்து அமர்ந்ததை பார்த்து தாங்க முடியாது அவளும் அவன் அருகில் அமர்ந்தவள் "போதும் மாமா... இதுக்குமேல பேசாத நீ என்ன கொன்னே போட்டாலும் சரி இனி என் வாழ்க்க உங்கூடத்தான்.... அத நீயே நினைச்சாலும் மாத்த முடியாது மாத்தனும்னு நீ நினைக்காத..." என்க.

"சொன்னா கேளுடி...என்ன விட்டு தூரப்போ எனக்கு நீ வேணாம்..."என்க.

"அப்படியா....அப்ப என் கண்ண பார்த்து மயிலு இந்த மாமனுக்கு உம்மேல அன்பு இல்ல... அவனுக்கு உங்கூட வாழ விருப்பம் இல்லன்னு சொல்லு நான் விலகிடறேன்..." என்க.

"என்னால முடியாது...." என்றான் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு.

அவன் தாடையை பிடித்து அவளுக்கு நேராக திருப்பியவள் "உன்னால முடியாதுன்னு எனக்கு தெரியும் மாமா..." என்க.

"ஓவர் கான்ஃபிடன்ட் வைக்காத அப்பறம் ஏமாந்து போனா நீதான் வருத்தப்படுவ..." என்றான் அவன்.

"நான் கண்டிப்பா ஏமாற மாட்டேன்.... மாமா ஏன்னா எனக்கு உம்மேல நம்பிக்கை இருக்கு..." என்க.

"அப்படியா... ஒருவேளை நான் மெட்ராஸ்ல யாரையாவது விரும்பி இருந்தா..." என அவன் கேட்க.

"அதெல்லாம் அப்படி நீங்க செஞ்சிருக்க மாட்டீங்க... ஒருநாளும் என்ன மறக்க மாட்டீங்க..." என்க.

அவளை ஆழ்ந்து நோக்கியவன் கண்களில் வர்ஷினி வந்து போக.

"இல்லடி... நான்..." என அவன் ஏதோ கூறும்முன் "எதுவும் பேசாத மாமா... நான் இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன்... இனி நீ என்னைய மயிலுன்னு கூப்படவே மாட்டேன்னு நான் நினைச்சிட்டு இருந்தேன்.... உங்கூட ஒரு வாழ்க்கைய நான் நினைச்சி பாக்கவே இல்ல.... ஏன்னா எம்மேல உனக்கு கோபம்..." என்றவள் அவள் கழுத்தில் இருந்த தாலியை வெளியே எடுத்து "இத உங்கையால வாங்கற பாக்கியம் எனக்கு இந்த ஜென்மத்துல இல்லன்னு நினைச்சேன் மாமா... ஆனா நீ எனக்கு கிடைச்சிருக்க... எல்லாம் அந்த முருகன் அருளாலதான்... நாளைக்கு காலையிலயே போகனும் மாமா.... போய்ட்டு வந்துதான் ஊருக்கு போகனும்.... இதுக்குமேல இன்னைக்கு ஒன்னும் சொல்லாத... எது சொல்றதா இருந்தாலும் நாளைக்கு சொல்லு... அது திட்டறதா இருந்தாலும் சரி.... என்றவள் அவனை நெருங்கி அவன் மார்பில் தலைசாய்த்து கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

ஏதோ ஜென்ம ஜென்மமாய் காத்திருந்து இன்று அந்த ஏக்கம் தீர்ந்ததுபோல இருந்தது அவளது நடவடிக்கை.

எதுவும் பேசாமல் அவளை பார்த்தவன் அவள் கழுத்தில் தொங்கிய தாலியை எடுத்து பார்த்தான்.

மஞ்சள் கயிறில் மஞ்சள் கிழங்கு சேர்த்து கட்டப்பட்டிருக்க அதற்கு அவள் கொடுக்கும் மரியாதையை எண்ணி அவனுக்கு வியப்பாக இருந்தது.

பெருமூச்சு ஒன்றை விட்டவன் அவளது மாராப்பை வேகமாக தள்ளிவிட அதிர்ந்து விலகியவள் "என்ன மாமா பன்ற...?" என கேட்க.

அவனோ அவள் பேசியது காதில் விழாதவன்போல மார்பில் இருந்த புடவையை விலக்கி அவன் பெயரை பச்சைக்குத்தி இருக்கும் இடத்தை வருட அவளுக்குத்தான் அவன் விரல் பட்டு உள்ளுக்குள் ஏதேதோ செய்ய கண்களை மூடியவள் "மாமா.... இப்படி பண்ணாத ஒரு மாதிரி இருக்கு..." என்க.

அவளது மூடிய விழிகளையும் அவள் இருந்த மோனநிலையையும் கண்டவன் அங்கு தன் உதடுகளை வைத்து எடுத்தான்.

அதற்கே அவள் உடல் சிலிர்த்து கூச அவனோ "என்னடி இப்படி சிலிர்த்துப்போய் இருக்க... இதெல்லாம் முன்னாடியோ பழக்கமோ....?" என அவன் கேட்ட நொடி சப்பென அவன் கன்னத்தில் அறைந்தவள் விழியில் வழிந்த நீரை துடைக்க கூட எண்ணாமல் "இனி என் மூஞ்சில முழிக்காத...." என கூறிவிட்டு அவனை திரும்பி பார்க்காமல் ஓடினாள்.

ஓடும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனின் விழிகளும் நீரால் பளபளத்தது.

வாசுவின் அறை.

"அண்ணா.. நீங்க என்ன சொல்றீங்க...?" என தர்மன் கேட்க.

"ஏன் பதட்டப்படற தர்மா... மேடம் யாருன்னு இன்னுமா உனக்கு தெரியல...?" என கேட்க.

தர்மனோ அவளை உற்று பார்த்தார்.

அவருக்கு அவளது முகம் யாரையோ ஞாபகப்படுத்தியது.

"அண்ணா... இவ... இந்த பொண்ணு...?" என அவர் இழுக்க.

"ம்ம்ம்ம்... அந்த வஜ்ரவேலுவோட பொண்ணு... அந்த திகம்பரனுக்கு தங்கச்சி... இன்னும் அவனுக்கே இவ அவன் தங்கச்சின்னு தெரியல...." என்க

கேட்டிருந்த தர்மனுக்கு அதிர்ச்சி என்றால் வாசுவிற்கு நெஞ்சுவலியே வந்துடும் போல இருந்தது.

"அப்பா என்ன சொல்றீங்க நீங்க...?" என கேட்க.

"ஆமாடா வாசு இவ வேற யாரும் இல்ல அந்த வஜ்ரவேலுவோட        பொண்ணுதான்.... இவ அம்மா அவனோட அப்பவே வந்துட்டா... இங்க வந்துதான் இந்த ரெண்டு புள்ளைகங்களும்...." என்க.

"ஆனா... அண்ணா... இவ அப்பான்னு ஒருத்தன் இருந்து அவன் இறந்து வேற போய்ட்டான்... அவனுக்கு சம்பிரதாயம் எல்லாமே இவ அண்ணன்தான பண்ணான்..." என கேட்க.

"எல்லாமே நடிப்பு தர்மா இவ அம்மாவுக்கும் அவனுக்கும் சின்னவயசுல இருந்தே பழக்கம்...." என்றார் சக்கரவர்த்தி.

"அப்பா... எப்படி இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருங்க... ஆனா இவ எங்கக்கூடதான படிச்சா...." என கேட்க.

"டேய்... இவ அம்மாவ கூட்டிட்டு வந்ததே அவன்தான்... யாருக்கும் தெரியாமத்தான் அவன் போக்குவரத்து எல்லாமே... ஏன் இந்த விஷயம் அந்த திகம்பரன் அம்மாவுக்கு கூட தெரியுமே....?!" என்க.

"தெரிஞ்சும் எப்படிப்பா...?" என அவன் கேட்க.

"அவங்க குடும்ப விஷயம்டா வாசு அதெல்லாம், அதுல நாம தலையிட வேணாம்.... நமக்கு இப்ப இருக்க ஒரே வேலை இவளயும் இவள இங்க அனுப்பினவனையும் தூக்கறதுதான்...." என்க.

அவளிடம் இருந்து வெடித்து சிதறியது சிரிப்பு.

அதை பார்க்க பிடிக்காதவன் "ஏய்... ஒழுங்கா வாய மூடிக்க இல்ல இப்பவே உன்ன கொன்னு புதைச்சிடுவேன்...." என்க.

"அப்போ உன் சுசிலா உனக்கு வேணாமா மைனரே...?" என்க.

"ஏய்...." என்றபடி அவள் கழுத்தை அழுத்தி பிடித்து இருந்தான் வாசுதேவன்.

இந்தரிடம் கோபப்பட்டு வெளியேறியவள் யாரையும் பார்க்காது மொட்டை மாடிக்கு சென்று அங்கு ஒரு மூலையில் அமர்ந்து தலையை முட்டிக்காலுக்குள் விட்டு அமர்ந்து கொண்டாள்.

அவனின் வார்த்தைகள் இன்னும் அவள் காதில் எதிரோலிப்பது போல இருக்க இருகைளால் காதுகளை இறுக்க மூடிக்கொண்டாள்.

அப்போது ஒரு உருவம் அவள் அருகில் வந்து அவள் தலையை வருடி கொடுத்தது.

ஓங்கி உயர்ந்த மரங்கள் நிறைந்திருந்த காடு.

விலங்குகள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை இருந்ததை அதன் அடர்த்தியான மரங்களே கூறிவிடும்.

அங்குதான் சுசிலா வாயில் துணியுடன் பின்னால் கரங்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தாள்.

அவளின் தந்தையோ எங்கெங்கோ தேடி அவள் கிடைக்காத பட்சத்தில் சக்கரவர்த்தியை தேடி வந்திருந்தார்.....



Leave a comment


Comments


Related Post