இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -47 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 31-05-2024

Total Views: 18823

அன்று முத்தம் கொடுத்தான் என நினைத்து நினைத்து ஏங்கினாள். அது உண்மையா? பொய்யா? என்றுக் கூட இதுநாள் வரையிலும் கூட தெரியவில்லை. ஆனால் இன்று உண்மையாகவே முத்தம் கொடுத்து விட்டான். இதழ்களில் இன்னும் அவன் தீண்டிய குறுகுறுப்பு அவளை இம்சை செய்தது. அவளையும் அறியாமல் கையை உதட்டை தடவி தடவிப் பார்த்தாள்.

“அம்மு...”

“ஏய் உன்னைய தாண்டி கூப்பிடறேன் இடிச்ச வெச்ச புளியாட்டம் உக்கார்ந்து இருக்க..”

“ஹா சொல்லும்மா”

“போய் ரெடியாகு ஆறு மணிக்கு எல்லோரும் வரதுக்குள்ள மண்டபத்துக்குப் போகணும்.”

“இப்போ தானேம்மா மணி 12 ஆகுது.”



“நெனப்பு தாண்டி. மணி 3 ஆகுது. கனா கண்டுட்டு இருந்தா அப்படி தான் இருக்கும்.”

“3 மணியா!!! நாலு மணி நேரமாவா இப்படியே உக்கார்ந்து இருக்கேன்.”

“என்னடி இன்னும் யோசிச்சிட்டு இருக்க? டிரஸ் எடுத்து கட்டில வெச்சிருக்கேன் ஓடிப் போது குளிப் போ."

“ம்ம் போறேன் விரட்டிட்டே இருக்காதீங்க.” என குளிக்கச் சென்று விட்டாள்.

குளிக்கும் போது நந்தன் கொடுத்த முத்தம் அவள் அதரத்தில் இன்னும் மிச்சம் இருப்பது போல் மீண்டும் மீண்டும் தோன்ற மெதுவாக வருடி விட்டுக் கொண்டாள். அது உள்ளுக்குள் ஒரு புது உணர்வைக் கொடுத்தது என்னவோ உண்மை தான்.

“நந்தா இன்னைக்கு நைட் உன் சிஸ்டருக்கு நிச்சியம் தானே, நீ என்ன இங்க இருக்க? உன் கடமை உணர்ச்சிக்கு அளவு இல்லையா? போடா போய் கிளம்பு.”

“அதில்ல சார் அந்த ரோகன் கேஸ் விஷயத்தில ஒரு எவிடன்ஸ் கிடைச்சது அதை முடிச்சிட்டுப் போய்டுலாம்ன்னு தான் பார்த்தேன்.”

“ஹா அதை பத்தி சொல்லணும் நீ. அந்த கேஸை முடிக்கறதுக்குள்ள உன்னைய முடிச்சிடுவான்ங்க போல, அவங்கயெல்லாம் பெரிய பெரிய அரசியல்வாதீங்களோட தொடர்புல இருக்கறவீங்க. கேஸை நீ டீல் பன்றேன்னு தெரிஞ்சதும் உன்னைய சேர்ந்தவீங்களை அட்டாக் பண்ணுவாங்க பார்த்துக்கோ நந்தா. நம்ப அவங்களை பேஸ் பண்ணிடலாம் வீட்டுல பொண்ணுங்களை அட்டாக் பண்ணுனா என்ன பண்ண முடியும்? நம்ப குடும்பத்தை முதல்ல சேபிட்டி பண்ணிடனும்.”

“அதுக்கு பயந்து தானே சார் இந்த கேஸை யாரும் எடுக்கல. எனக்கு அந்த பயமெல்லாம் இல்லை.. நீங்க இந்த கேஸைக் கொடுக்கும் போதே இதெல்லாம் நான் யோசிச்சிட்டு தான் கேஸை கையில எடுத்தேன். பார்த்துக்கலாம் சார்.”

“இளம் ரத்தம் கொதிக்குது.. பார்த்துப்பா அவங்க ரொம்ப மோசமான ஆளுங்க. எப்படியாவது எலெக்ஷன்க்குள்ள முடிக்கப்பாரு அப்போ தான் எல்லோரும் தப்பிப்போம்.” 

“நான் பார்த்துக்கறேன் சார்..”

“சரி நேரங்காலமா கிளம்பி வீட்டுக்குப் போ நிச்சியத்துக்கு ஏதாவது ப்ரோடெக்சன் தேவைப்படுதா?”

“அதெல்லாம் வேண்டாம் சார். நம்ப பசங்க பங்சனுக்கு வருவாங்கள பார்த்துக்கறேன். நீங்களும் இயர்லியா வந்துடுங்க சார்.”

“நான் மேரேஜ்க்கு வந்துடறேன், கலெக்டர் கூட மீட்டிங் இருக்கு. நீயும் தான் அட்டன் பண்ணனும், உன்னால வர முடியாதுல அதான் நான் போயிட்டு வரேன். நீ கிளம்பு.” என்றார் கமிஷ்னர்.

அவரிடம் விடைப் பெற்றவன், தன் கூலரைக் கண்ணில் மாட்டிக் கொண்டு காரில் ஏறினான்.

அவன் காரில் ஏறிய தோரணையை கமிஷ்னரே ரசித்துப் பார்த்தார் அந்த அளவிற்கு கம்பீரம் அவனிடம் கொட்டிக் கிடந்தது.

காரின் ஓட்டுநரிடம் சில பொருட்களை வாங்க சொல்லி நந்தன் அனுப்பியிருக்க, அவர் வரும் வரை இருக்கையில் தலை சாய்த்து கண் மூடி அமர்ந்து விட்டான்.

ஒருப் பக்கம் நிலாவின் மீது பயங்கர கோவம், நேற்று பிரச்சனையில், ‘இவள் தான் என்னோட பொண்டாட்டி’ என்று அனைவருக்கும் முன்பு சொல்லியும், ‘எப்படி அடுத்தவனுக்கு முன் சீவி சிங்காரிச்சிட்டு நிற்குறா?’ என்ற கோவம்.

இன்னொருப் பக்கம் அவள் மென் இதழைத் தீண்டி சென்ற தித்திப்பு, ஒரு வேகத்தில் தான் அனைவருக்கும் முன் முத்தமிட்டான். ஆனால் அந்த சுவை மீண்டும் மீண்டும் வேண்டும் போல் இருக்க, கேஸ் பைலில் கவனத்தை திருப்ப முயன்றான்.

அதுவும் முடியாமல் போனது. “ராட்சசி என்னடி பண்ணி வெச்சிருக்க என்னைய? வீட்டுக்கு வந்து பேசிக்கறேன்.” என தலையை கோதிக் கொண்டவனின் முகத்தில் மந்தக்காசப் புன்னகை தோன்றியது.

இது காதல் தான், நிலாவின் மீது தனக்கு இருப்பது வெறுப்பு அல்ல காதல் தான் என உணரவே பல வருடம் ஆகிவிட்டது.

நந்தனின் துக்கமோ, கவலையோ சந்தோஷமோ, கோவமோ எந்த உணர்வாக இருந்தாலும் அதை நிலாவிடம் மட்டும் தான் காட்டத் தோன்றியது. இவ்வளவு நாள் அவளை நெருங்காமல் இருந்ததற்கும் ஒரு காரணம் இருந்தது என்றால், இப்போது அவளை இந்த அளவிற்கு நெருங்குவதற்கும் காரணம் இருந்தது அவனிடம்.

இருக்கையில் தலை சாய்த்து கண்களை மூடி இருந்தவன் மிருதுவாக, “வியா” என்றான்

அந்த பெயர் சொல்லும் போதே நாவு தித்திப்பது போல் இருந்தது. காதல் வந்துவிட்டால் காட்டு எருமைக் கூட எலி தானே நந்தன் மட்டும் என்ன அதில் விதிவிலக்கா?

கண்ணை மூடி நிலாவை கண்ணுக்குள் கொண்டு வந்து ரசித்துக் கொண்டிருக்க ஓட்டுனர், “போலாமா சார்?” என்றார்.

“ஹா போங்க..” என்றவன் கண்களை மட்டும் திற்கவில்லை.


Leave a comment


Comments 2

  • A Aathi Sri
  • 1 month ago

    Enna sis ithu konjam big ud podunka 👍👍👍👍

  • P Priyarajan
  • 1 month ago

    👌👌👌👌👌👌epi chinnatha irukku nxt periya ud ah podunga😉💕💕💕💕💕💕💕😍😍😍😍😍


    Related Post