இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே - 15 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 01-06-2024

Total Views: 11370

இதயம் - 15

யாழிசையின் கோபமான பார்வை சட்டென மாறி வாசுவை நோக்கி எழுந்து அவள் நடக்க வாசு அவளின் பார்வை மாற்றத்தை உணர்ந்து அவளின் ஒற்றை அடிக்கு இரண்டடி பின் நகர்ந்தான். யாழிசை அவனின் பின்னடையை கண்டு நகைத்தவாறே "என்னை பாத்தா பயமா இருக்கா" என்று கேட்டாள். அவளின் நக்கலான வார்த்தையை கேட்டதும் வாசுவின் கால்கள் அப்படியே தரையில் ஊன்றி நின்றது. தற்பொழுது வாசுவின் குழப்பமான பார்வை மாறி நக்கலான பார்வை தோன்றியது. வாசுவின் பார்வை மாற்றத்தையும் அவன் ஆனி அடித்தாற்போல் நிற்பதை பார்த்தவள் புன்னகைத்து விட்டு "உண்மைய சொல்லு உனக்கும் இந்த ப்ளான்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்று கேட்டாள். 

"நீ எந்த ஆங்கில்ல நின்னு எந்த மாடுலேஷன்ல கேட்டாலும் எனக்கு தெரியாது" என்று வாசு கூற யாழிசை "அப்பறம் எதுக்கு என் ரூம்க்கு வந்த" என்று கேட்க "நா பரத் ரூம்ன்னு நினைச்சி தான் வந்தன்" என்று வாசு கூற யாழிசை "சரி" என்று அவள் வேறேதோ கேட்கும் முன்பே அஞ்சனா "வாசு" என்று கத்தியவாறே அறை கதவை திறந்தாள். வாசு அஞ்சனாவின் குரல் கேட்டு திரும்ப போக யாழிசை சட்டென வாசுவின் சட்டை காலரை பிடித்திழுத்தாள். வாசு யாழிசையின் திடீர் செயலில் அதிர்ந்து அஞ்சனா பக்கமாக திருப்பிய தலையை யாழிசை நோக்கி திருப்ப யாழிசை வாசுவின் பின்னந்தலையை அவன் திருப்பாதபடி இறுக்கி பிடித்துக் கொண்டு அவனை ஒட்டியும் உரசாமலும் நின்றிருந்தாள். அது பின்னிருந்து பார்க்க இருவரும் முத்தமிடுவது போல் இருக்க அஞ்சனா கோபமாகச் சென்று வாசுவின் தோளை பற்றி அவளை நோக்கி இழுத்தாள். யாழிசையும் வாசுவை விட அஞ்சனா இழுத்ததில் தடுமாறிய வாசு பொத்தென தரையில் விழுந்தான். அஞ்சனா கோபமாக யாழிசையை அடிக்க கை ஓங்க அதற்கெல்லாம் அசறுவேணா என்றபடி யாழிசை அஞ்சனாவின் கையை தட்டி விட்டாள். அஞ்சனா தன் கையை தட்டி விட்ட யாழிசையின் மேல் இன்னும் கோபமாக பாய போனவளை கீழே விழுந்து கிடந்த வாசு வேகமாக எழுந்து நின்று தடுத்தான். 

"நீ என்னை தொடாத ... எவ்வளவு தைரியம் இருந்தா என்னை விட்டு இவ கூட ... ச்சை ... நேத்து நா அவ்வளவு போதை ஏத்தி உன்னை அடையனுன்னு நினைக்கும் போது கூட தட்டி விட்ட உன்னை நல்லவன்னு நம்பனன் ஆனா நீ ... இவளுக்காக என்னை தட்டி விட்டு வந்திருக்க ... சொல்லு ... என் கிட்ட இல்லாதது இவ கிட்ட என்ன இருக்கு" என்று அஞ்சனா கோபமாக வாசு சட்டையை பிடித்து இழுத்து கத்தினாள். "நா எதுமே பன்னல அஞ்சு என்னை நம்பு" என்று வாசு கெஞ்சலுடன் கூறினான். "என்ன நம்பனும் ... அதான் என் கண்ணு முன்னாலயே பாத்தனே... அப்பறம் எப்படி நம்ப சொல்ர" அஞ்சனா கேட்க "அஞ்சு அவ" என்று வாசு பதில் கூறும் முன்பே "அதான் அவனுக்கு உன் மேல விருப்பம் இல்லை என் மேல தான்னு தெரிஞ்சி போச்சி இல்லை அப்பறம் எதுக்காக கேள்வி கேட்டுட்டு நிக்கிற ... கிளம்பு ... எங்களுக்கு வேலை இருக்கு" என்று யாழிசை திமிராக கூறினாள். "ஹேய் ... எங்களுக்குள்ள நீ யார் டி" என்று அஞ்சனா கோபமாக யாழிசையை பார்த்து கேட்க வாசு  "ஏய் ஒழுங்கு மரியாதையா அமைதியா இரு ... தேவையில்லாம எங்களுக்குள்ள பிரச்சனை உண்டு பன்னாத" என்று யாழிசையை எச்சரித்தான். 

 "அவ வந்ததும் மறுபடியும் வேதாளம் மாதிரி மலை ஏறிட்டியா ... அவ எல்லாம் ஒரு ஆள்ன்னு அவளுக்கு பயந்து ... அவ முன்னாடி என்னை விட்டு கொடுக்கறது எனக்கு அசிங்கமா இருக்கு தேவ் ... ப்லீஸ் ... நீ கிஸ் கேட்ட நா கொஞ்சம் பிஹுவ் பன்னன் அதுக்கு போய் இப்படி கோச்சிகிட்டது சரியில்லை" என்று யாழிசை பொய்யான அழுகையுடன் தலையை கவிழ்ந்துக் கொண்டாள். "கிஸ் ... தேவ் ... கோச்சிகிட்டு" என்று அஞ்சனா உச்சக்கட்ட கடுப்பில் கை விரல்களை மடக்கி தன் கையை மேலே உயர்த்தி தன் கடுப்பை வெளிப்படுத்தியவாறே வாசுவை பார்க்க வாசுவோ யாழிசையின் செய்கையில் மொத்த உலகமே இரண்டாக பிரிந்து கிடப்பது போல் அதிர்ச்சியின் உச்சத்தில் நின்றிருந்தான். "வாசு" என்று அஞ்சனா கடுப்பாக அவனை உலுக்க யாழிசை "இதோ பார் அஞ்சனா ... தேவையில்லாம அவனை டிஸ்ட்ரப் பன்னாம எங்களுக்கு நடுவுல வராம விலகிடு" என்று கூற அஞ்சனா வாசு கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் செல்ல முற்பட யாழிசை வாசுவின் மறுகையை பிடித்துக் கொண்டாள். 

"விடு டி" என்று அஞ்சனா கத்த யாழிசை "என் ஆளை நீ எங்கடி இழுத்துட்டு போற விடு" என்று கூறினாள். அஞ்சனா தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு "வாசு அவ கையை உதறி விட்டுட்டு வா" என்று கூற வாசுவும் யாழிசையின் கையை உதறி விட்டு அஞ்சனாவுடன் வெளியேறினான். யாழிசை வாசு உதறிச் சென்ற கையை பார்த்து புன்னகைத்தவள் பெருமூச்சுடன் சென்று கட்டிலில் விழுந்தாள். 

பரத்தை பார்க்கச் சென்ற அவினாஷ் இன்னமும் மயக்கம் தெளியாமல் கட்டிலில் படுத்தவாறு இருந்த பரத்தின் அருகில் சென்று அமர்ந்து அவன் முகத்தில் தண்ணீர் தெளித்தான். பரத்தின் மயக்கம் தெளிந்து எழுந்தமர்ந்து அவினாஷ்ஷை குழப்பத்துடன் பார்த்தான். "நீங்க என் ரூம்ல ... என்ன விஷயம் ரொம்ப நேரம் தூங்கிட்டனா" என்று பரத் கேட்டான். "ஆமா ரொம்ப நேரம் தூங்கிட்ட" என்று கூறிய அவினாஷ் "எழுந்து போய் ப்ரஷ் ஆகிட்டு யாழு ரூம்க்கு வா ... பேசனும்" என்று பரத்தின் தோளை தட்டி கூற பரத்தும் சரி என்று எழுந்துச் சென்றான். அவினாஷ் அங்கேயே அமர்ந்து பரத்தின் வருகைக்காக காத்திருந்தான். பரத் குளித்து முடித்து உடைமாற்றிக் கொண்டு வரும் வரை அவினாஷ் அங்கேயே இருக்கவும் பரத் "ஏன் இங்கேயே இருக்கிங்க" என்று குழப்பமாக கேட்டான். "அங்க உன் அண்ணனும் என் தங்கச்சியும் இருக்காங்க" என்று அவினாஷ் கூற "என் அண்ணன் அங்க என்ன பன்றான்" என்று பரத் குழப்பமாக கேட்டான். "உனக்கு நடந்த விஷயம் தெரியாது" என்று தொடங்கிய அவினாஷ் நேற்று இரவு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூற பரத் "ச்சை இவ்வளவு அசிங்கமாவா அவங்க நடந்துப்பாங்க" என்று கோபமாக கேட்டான். 

"சரி வா ... அங்க இரண்டு பேரும் என்ன கலவரம் பன்னிட்டு இருக்காங்கன்னு தெரியல" என்று கூறிய அவினாஷ் பரத்துடன் உள் நுழைய போக அஞ்சனா வாசுவை இழுத்துக் கொண்டு வெளியில் சென்றாள். "டேய்" என்று பரத் தன் அண்ணனை அழைக்கும் முன் அவினாஷ் "வேணா கூப்டாத" என்று கூறி தடுத்து விட்டான். யாழிசை விட்டத்தை பார்த்து படுத்துக் கொண்டிருப்பதை கண்டு அவினாஷ் "பாப்பா அவனை எதுக்கு அவ கூட அனுப்பி விட்ட" என்று கேட்டான். "நா போங்கன்னு வெத்தலைபாக்கா கொடுத்தனுப்பனன் அவன் தான் போனான்" என்று யாழிசை கூற "நீ நடந்தத எல்லாம் சொன்னியா இல்லையா" அவினாஷ் கேட்க "எங்க அதுக்குள்ள தான் வந்து இழுத்துட்டு போய்ட்டாளே" என்று யாழிசை அஞ்சனா மேல் குறைபட்டுக் கூறினாள்.

"சரி இப்போ பிரச்சனை முடிஞ்சதா இல்லையா" என்று பரத் கேட்க "அந்த மயில்சாமி மூலமா நம்ம நினைச்ச லேன்ட் நமக்கே கிடைச்சாச்சி" என்று ஆனந்தத்துடன் யாழிசை குதிக்க அவினாஷ் புன்னகைத்தான். "எப்படி" என்று பரத் ஆர்வமாக கேட்க அவினாஷ் "உன்னை மயங்க வச்சி உன்னை யாழிசை ரூம்க்குள்ள விட்டு இரண்டு பேரையும் சேர்த்து அசிங்கப்படுத்தனுன்றது தான் அவங்களோட திட்டம் அதுக்கு குறுக்க நா இருக்க கூடாதுன்னு லேண்ட் ஓனர் கிட்ட காசு பேசி என்னை இங்க இருந்து அனுப்பிட்டான். அவங்க ப்ளான் என்னவோ கரெக்ட்டா தான் போய்ட்டு இருந்தது ஆனா எப்போ வாசு யாழிசை ரூம்க்குள்ள நுழைஞ்சானோ அப்போவே அவங்க ப்ளான் ப்ளாப் ஆக ஸ்டார்ட் ஆகிடுச்சி ... யாழு சொன்ன மாதிரி நா நேரா அந்த ஓனர் வீட்டுக்கு போய் அவனை லெப்ட் ரைட்ன்னு நாலு விட்டன் அவன் உண்மைய அப்படியே கக்கிட்டான் அதை அப்படியே வீடியோ எடுத்து 'லேண்ட்ட எனக்கு ரெஜிஸ்டர் பன்னலன்னா உன் லேண்ட்ட வேற யார்க்குமே விக்க முடியாதப்படி இந்த வீடியோவ விட்டு குழறுபடி பன்னுவன் உன்னையையும் தூக்கி உள்ள போட்றுவன்'னு மிரட்னன் அவன் இன்னைக்கே நமக்கு லேண்ட் கொடுக்கறதா ஒத்துகிட்டான்" என்று அவினாஷ் கூற பரத் "கடைசியில என் ஹெல்ப் இல்லாமலே பிரச்சனை முடிஞ்சது" என்று சோகமாக கூற யாழிசை "ஒரு பெரிய ஹெல்ப் நீ இதுக்கு மேல தான் எனக்கு பன்னனும்" என்று கூற பரத் என்ன என்று கேட்டான். 

"உன் அண்ணன நா எவ்வளவு டீஸ் பன்னாலும் என்னை என்னன்னு கேக்க கூடாது ... நா உன் அண்ணனை எவ்வளவு கேவலமா பேசனாலும் என் கிட்ட சண்டைக்கு வரக் கூடாது" என்று யாழிசை கூற அவினாஷ் "எதுக்கு பாப்பா இப்ப இது" என்று கேட்டான். "எல்லாம் காரணமா தான் அண்ணா ... அந்த மயில்சாமி வாசுவ வச்சி ஏதோ கேம் விளையாட்றான் ... வாசுவ அவ்வளவு சீக்கிரம் பணத்தாசை புடிச்ச மயில்சாமி ஏத்துக்க வாய்ப்பே இல்லை" என்று யாழிசை அடித்துக் கூற பரத் "உனக்கு மட்டும் தான் அப்படி தோனுது" என்று கூறினான். "இல்லை பரத் ... அவனுக்கு அவன் பொண்ணு மேல இருக்க பாசத்தை விட பணத்து மேல இருக்க ஆசை தான் அதிகம் ... அதனால அவன் கண்டிப்பா வாசுவ மனசார ஏத்துக்க வாய்ப்பே இல்லை ... நீ நல்லா யோசிச்சி சொல்லு அவனுக்கு தேவையானது உங்க வீட்ல இல்லை உங்க வீட்டாளுங்க கிட்ட ஏதோ ஒன்னு இருக்கும்" என்று யாழிசை கூற "அப்படி எதும் விலை அதிகமான பொருள் எனக்கு தெரிஞ்சி இல்லை" என்று பரத் யோசனையுடனே கூறினான். "கண்டிப்பா நம்ம வாசுவ அவங்க வலையில இருந்து மீட்டெடுத்தே ஆகனும்" என்று யாழிசை கூற அவினாஷ் "சரி சரி அதை பத்தி அப்பறம் பேசலாம் இப்ப வாங்க நிலத்த வாங்க போவோம்" என்று அவினாஷ் கூற மூவரும் அங்கிருந்து கிளம்பினர். 

தனியாக அழைத்துச் சென்ற அஞ்சனா வாசுவிடம் "எனக்கு துரோகம் பன்ன உனக்கு எப்படி வாசு மனசு வந்தது" என்று கேட்டாள். "ஐய்யோ அஞ்சு ஏன் புரிஞ்சிக்க மாட்டின்ற ... நா போதையில பரத் ரூம்ன்னு நினைச்சி தான் உள்ள போனன் பட் எழுந்திரிக்கும் போது அவினாஷ் தான் கூட இருந்தாரு ... அந்த பொண்ணு அங்க இல்லைவே இல்லை" என்று வாசு முடிந்தளவு அஞ்சனாவிற்கு புரிய வைக்க முயற்சித்தான். "ஆனா நா உள்ள பாக்கும் போது நீயும் அவளும் ஒட்டி நின்னு என்ன பன்னிட்டு இருந்திங்க ... கண்ல தூசி ஊதி விட்டன்னு சொன்ன நா கண்டிப்பா கொன்றுவன் வாசு" என்று அஞ்சனா கூறினாள். "அது அவளா தலைய பிடிச்சி வச்சிகிட்டா அஞ்சு" என்று வாசு நடந்ததை விளக்க முயற்சிக்க அஞ்சனா கோபமாக "திரும்ப திரும்ப பொய் சொல்லாத வாசு" என்று கத்தினாள். "ஏய் நா சொல்ரது தான் உண்மை அத நீ நம்பனாலும் சரி இல்லன்னாலும் சரி" என்று கோபமாக தன்னை புரிந்துக் கொள்ள முயற்சி கூட எடுக்க மாட்டின்றாளே என்ற கடுப்பில் அங்கிருந்து சென்று விட்டான். 

மயில்சாமி தான் ஏற்பாடு செய்த ஆளை திட்டி தீர்த்து விட்டு "நைடே அவ ரூம்க்கு போன ஆள பத்தி ஏன் என் கிட்ட சொல்லவே இல்லை ... அவன் என் மாப்பிள்ளை அவன் பேர் நாசமாகி இருந்தா என்ன பன்றது ... என் பொண்ணு தாங்கி இருப்பாளா ... அந்த யாழிசை எப்படா சான்ஸ் கிடைக்கும்ன்னு பாத்துட்டு இருக்கா அவ கிட்டையே என் மாப்பிள்ளை போய் மாட்டி ... ச்சை ... இப்ப என் மாப்பிள்ளைய அவ பக்கம் இழுக்க திட்டம் போடுவாளே இப்ப என்ன பன்றது ... இல்லை உடனே கல்யாணத்தை முடிக்கனும்" என்று புலம்பினார். "நீங்க அவ பேர் எப்படினாலும் கெட்டா போதும்ன்னு சொன்னிங்க அதனால தான் நா அவர் உள்ள போனத நா சொல்லல ... அவர் உங்க மாப்பிள்ளைன்னு எனக்கு தெரியாது சாரி சார்" என்று அவன் கூற மயில்சாமி அவனை அனுப்பி விட்டு அஞ்சனா அறைக்குச் சென்றார். 

அஞ்சனா அழுதுக் கொண்டிருப்பதை கண்ட தந்தையின் உள்ளத்தில் உதிரம் கசிந்தது போல் மயில்சாமிக்கு வலித்தது. எதற்காகவும் கண்ணீர் விடவே கூடாது என்று அவள் கேட்பதை எல்லாம் வாங்கி குவித்தவர் தற்பொழுது தன் மகள் அழுதுக் கொண்டிருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவள் அருகில் சென்று ஆறுதலாய் தன் நெஞ்சை தன் மகளுக்கு தலையணையாக்கிக் கொண்டார். "நீ ஏன்ம்மா அவரை குடிக்க வச்ச" என்று மயில்சாமி கேட்க "அவனை சீக்கிரம் கல்யாணம் பன்னிக்கனுன்னு தான்ப்பா நா அப்படி ஒரு விஷயத்தை பன்னன் ஆனா அவன் அதை புரிஞ்சிக்கவே மாட்டின்றான்" என்று அழும் மகளுக்கு என்ன சமாதானம் கூறுவது என்று சுத்தமாக தெரியவில்லை. "நீ கவலைபடாதம்மா ... இன்னும் பத்தே நாள்ல நா நீ விருப்பப்பட்ட மாதிரி வாசுவோட கல்யாணத்தை முடிச்சி காட்றன்" என்று மயில்சாமி தன் மகளுக்கு வாக்குறுதி கொடுத்தார். 


Leave a comment


Comments


Related Post