இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 36 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 01-06-2024

Total Views: 10301

அத்தியாயம் 36

சுரேன் அடித்த அடியில் அவள் சுருண்டு விழுந்ததை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி என்றால் சக்கரவர்த்தியோ அவனை ஆழமாக பார்த்துக் கொண்டே இருந்தவர் அவன் அருகில் வர அவனோ அதனை கவனியாமல் மீண்டும் அவளை அடிக்க பாய வாசுவும் தர்மனும் அவனை தடுத்து நிறுத்த அப்போதும் அவன் திமிறிக்கொண்டு இருந்தான்.

"ஏன்டி... எவ்ளோ தைரியம் உனக்கு... எங்க வீட்டுக்கு வந்து எங்களையே மெரட்டுவியா... தொலைச்சி கட்டிடுவேன் ராஸ்கல்... யாரு முன்னாடி உக்காந்து கால்மேல கால் போட்டு பேசிட்டு இருக்க... எங்க வீட்டு பெரியவங்க இந்த ஊர்ல எப்படி மரியாதையான ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்க... உன்ன..." மீண்டும் துள்ளியவனை "நிறுத்துடா... எதுக்கு இப்படி துள்ளிட்டு இருக்க அவளால சில காரியம் ஆக வேண்டி இருக்கு..." என்க.

"போதும் நிறுத்துங்க... உங்க காரியம் ஆக வாசுவோட வாழ்க்கைதான் கிடைச்சுதா... என் வாழ்க்கைய கெடுத்தது பத்தாதுன்னு... இவன் வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துட்டு இப்ப வந்து பேசுங்க..." என்க.

"எனக்கு தெரியும் என்ன பண்ணனும்னு... நீ அமைதியா அருவிகூட வாழப்பாரு... அவள அழ வச்சா நான் மனுஷனா இருக்க மாட்டேன்..." என்க.

"இப்ப மட்டும் எப்படி இருக்கீங்க...?" என்றான் அவன்.

"இந்தர்... அமைதியா இரு..."என்ற தர்மன் அவள் சுருண்டு விழுந்ததை பார்த்து "அந்த பொண்ணு மயங்கிட்டா போல.." என்றவர் அவள் அருகில் செல்ல வாசுவோ "அப்பா... அதெல்லாம் சும்மா நடிப்பு... எதுக்கும் கிட்ட போகாதீங்க..." என தடுக்க "நம்ம வீட்டுல என்னடா பண்ணிட முடியும்... நீங்க பக்கத்துல இருக்கும் போது..." என்க.

"சொன்னா கேக்க மாட்டீங்க... இருங்க... நானே போய் பாக்கறேன்..." என்றான் அவன்.

"இருடா..."என்றவர் அவள் அருகில் சென்று அவள் தோளை தொட பட்டென திரும்பியவள் கையில் சிறிதாய் ஒரு கத்தி அதை தர்மனை குத்த வரும்போது இந்தர் பாய்ந்து அதை தடுத்தவன் அவளுக்கு மீண்டும்  ஒரு அறைவிட்டு கைகளை முறுக்கியபடி "வீட்டுக்கு விளக்கு ஏத்த ஒரு பொண்ண கட்டினா இது விஷமா வந்து நிக்குது... இதுல உன் பெரியப்பாவுக்கும் பங்கு இருக்குடா வாசு..." என்றான்.

"அவர நீ குறை சொல்லலனா... உனக்கு தூக்கம் வராது... ஆமா... நீ எப்படி இங்க வந்த..." என கேட்க.

அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது  அந்த சுசிலாவோட அப்பா வந்து இருக்காருடா..." என்க.

இப்போது மற்ற மூவரின் முகமும் மாறியது.

அவர்களின் முக மாற்றமே ஏதோ சரியில்லை என கூற அதை அறிந்தவன் அவளை ஒரு கையால் பிடித்துக் கொண்டே "ஏன்டா... என்ன ஆச்சு...?" என கேட்க.

"இந்தர்... இவ சுசிலாவ கடத்திட்டாடா..." என்க.

"ஆமா...நான் வரும் போது கூட காதலி பூ நாருன்னு ஏதோ கேட்டுச்சு... என்னடி பண்ண அந்த பொண்ண..." என கேட்க.

"நீ என்ன கொன்னே போட்டாலும் நான் சொல்ல மாட்டேன்..." என்றாள் அவள்.

"அப்ப அப்படியே கிடந்து சாவு..." என்றவன் "வாசு... போய் ஒரு கயிறு எடுத்துட்டு வா..." என்க.

"இந்தர் நீயா இப்படி பேசற அந்த குடோன்ல இருக்கவன்ன கொல்ல கூடாதுன்னு சொன்னியே...?!"என்க.

"ஆமாம்பா... ஆனா இவள மாதிரி விஷத்த எல்லாம் சும்மா விடக்கூடாதுன்னு இப்ப தோணுது... அதும் இல்லாம அருவி..." என கூற.

மூவருக்கும் சட்டென ஒரு பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது.

வாசுதான் "என்னடா அருவிக்கு என்ன...?"என கேட்க.

"அவளையும் காணும்டா..? அம்மாக்கிட்ட இருப்பான்னு நினைச்சேன்... ஆனா அவங்க வந்து எங்கிட்ட கேக்கறாங்க..." என்க.

அவன் அருகில் வந்த சக்கரவர்த்தி "என்னடா சொல்ற...?" என கேட்க.

இந்தர் கூறியதை கேட்ட அவளுக்கோ சுசிய மட்டும்தான தூக்க சொன்னோம் சாயங்காலம் கூட இங்கதான இருந்தா என எண்ண ஐயோ இப்ப இத அண்ணன்கிட்ட சொல்லனுமே என அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

தர்மனோ "வாசு எனக்கு தெரியாது...இப்பவே போங்க ரெண்டு பேரும் அவங்க ரெண்டு பேரும் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வர்றீங்க... இல்ல இந்த வீட்டுல உங்களுக்கு இடம் இல்ல... இது நம்ம ஊரு இங்க எல்லோருமே அண்ணன் தம்பியாத்தான் பழகிட்டு வர்றாங்க... எப்ப இந்த வஜ்ரவேலு ஊருக்குள்ள வந்தானோ... அப்ப இருந்து இந்த ஊருக்கு சனி புடிச்சிட்டு.... பஞ்சம் பிழைக்க வந்த நாய்க்கு இந்ந ஊர்ல பங்கு வேணுமாம்..." என தர்மன் பேச.

தன் தந்தையை பற்றி பேசியதும் எங்கிருந்துதான் அத்தனை கோபம் வந்ததோ அவளுக்கு சுரேன் பிடித்து இருந்த கையை தள்ளியவள் தர்மன் சட்டையை பிடித்து "யாரப்பார்த்து பஞ்சம் பிழைக்க வந்த நாய்ன்னு சொன்ன...?" என கத்தினாள்.

அவளது அங்கு இருந்த அத்தனை பேருக்கும் அதிர்ச்சியை தர அவ்வளவுதான் சக்கரவர்த்தி அவள் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்தார்.

சிறுவயது முதல் மண்வெட்டியும் அருவாளும் பிடித்த கரம் காப்பு காய்த்து போய் இறுகி இருந்தது.

அதில் வாங்கிய அடி அத்தனை வலுவாக இருக்க இப்போது நிஜமாகவே அவள் மயங்கி இருந்தாள். 

"இவள பிடிச்சு கட்டிப் போடுங்கடா... உங்க அம்மாங்க யாரும் இங்க வராம பார்த்துங்க... நம்ம பசங்கள வர சொல்றேன்... முதல்ல ரெண்டு பேரையும் கண்டுபிடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வர்றீங்க... எனக்கு தெரியாது நாளைக்கு இங்க நடக்கற விருந்து எந்த பிரச்சனையும் இல்லாம நல்லபடியா நடக்கனும்..." என்க.

"தர்மா...." என அழைத்தார் சக்கரவர்த்தி தன் தம்பியை அவள் சட்டையை பிடித்ததும் அதிர்ச்சியில் உறைந்தவர் சக்கரவர்த்தியின் குரலுக்கே அசைந்து கொடுத்தார்.

"விடுடா... இவ சாக்கடை தெரியாம அதுல கைய வச்சிட்டோம்னு நினைச்சிக்க..." என்க.

அவரோ அமைதியாக இருந்தார்.

அவரின் தோளை தொட்டவர் "இப்ப நமக்கு நிறைய வேலை இருக்குப்பா... அவனுங்க எல்லோரையும் கையும் களவுமா பிடிக்கனும்... இன்னைக்கு ராத்திரி எப்படியும் கோவிலுக்கு வருவானுங்க.... எனக்கு தெரிஞ்சு இவ மேல அந்த வஜ்ரவேலுவுக்கு பாசம் அதிகம்... இவள இந்த மாதிரி பிளான் பண்ணி கல்யாணம் செய்ய வச்சது அவனுக்கு தெரியாமத்தான் இருக்கும்.... நாம இன்னைக்கு  கோவிலுக்கு போகனும்பா மனச தளரவிடாத எதுவா இருந்தாலும் பிரச்சனை எல்லாம் முடியட்டும்..."  என்க.

அவரின் கையை பிடித்து அழுத்தியவர் "வாங்கண்ணா போகலாம்..." என்றார்.

இந்தரோ அவரையே பார்த்துக் கொண்டு இருந்தான். 

இதுவரை அவர் இப்படி மனம் வருந்தி அவன் பார்த்தது இல்லை.

இன்று சிறுபெண் ஒருத்தி அவர் சட்டையில் கைவைத்ததை அவனாலே தாங்கிக் கொள்ள முடியாத போது அவரின் நிலை சொல்லவா வேண்டும்.

ஊரில் பெரிய மனிதர் அவர் இல்லாமல் ஒரு சாதாரண வீட்டு விசேஷம் கூட நடக்காது எப்போதும் ஊர் மக்கள் நலனுக்காக பாடுபடும் தர்மனை அவரைவிட வயதில் பெரியவர்கள் கூட மரியாதை நிமித்தம் எழுந்து கொள்வார்கள் பணிந்துதான் பேசுவார்கள் அப்படி இருக்கையில் இது அங்கு இருந்த யாராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

ஆனால் இப்போது வருந்துவதற்கு நேரம் இல்லை. 

சுசிலாவையும் அருவியையும் கண்டுபிடிக்க வேண்டும் அதுவும் உயிரோடு என நினைத்தவர்கள் அந்த அறையைவிட்டு வெளியே செல்ல எத்தனிக்கும்போது வாசு என்ற சக்கரவர்த்தியின் குரிலில் மூவரும் அவரை திரும்பி பார்த்தனர்.

வஜ்ரவேலு வீடு

"ஏன் இப்பிடி கத்திட்டு இருக்கீங்க.... என்ன பிரச்சனை உங்களுக்கு...?" என திகம்பரன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டே கேட்க.

அவன் அருகில் வேகமாக சென்றவர் "மகிழா... நிஜமா விரும்பித்தான் அந்த வாசுவ கட்டிக்கிட்டாளா....?" என கேட்க.

"ஆமா அதுக்கு என்ன இப்ப...?" என கேட்க.

"உண்மைய சொல்லு திகம்பரா... உனக்கு அந்த சக்கரவர்த்திய பத்தி தெரியல... அவன் சாதாரணமா அந்த வீட்டுக்குள்ள மகியா விட்டுருக்க மாட்டான்...." என்றார் பற்களை கடித்து கொண்டே.

"ஏன் இப்ப அதனால என்ன.... இதுல உங்களுக்கு என்ன பிரச்னை.... அவ விரும்பினா கட்டிக்கிட்டா... ஆமா எதுக்கு இப்ப இதெல்லாம் எங்கிட்ட வந்து கேட்டுட்டு இருக்கீங்க...?" என கேட்க.

"ஏன்னா.... இத செய்ய சொன்னவன்கிட்டதான கேக்க முடியும்...?" என வஜ்ரவேலு கேட்க.

இப்போது திகைப்பது திகம்பரனின் முறையாயிற்று...



Leave a comment


Comments


Related Post