இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -48 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 02-06-2024

Total Views: 18306

செல்வராணி தன் குடும்பத்துடன் வந்து இறங்கி விட்டார் நிச்சியத்திற்கு, 

கவியரசியை திருப்பூர் பின்னிங் மில் முதலாளிக்கு திருமணம் செய்து கொடுத்திருக்க, கவிநிலாவை அண்ணன் மகன் இருவரில் யாராவது ஒருவருக்கு கொடுத்து விடலாம் என்று தான் ஆசை. ஜாதகம் ஒத்து வரவில்லை என கிருஷ்ணம்மாளே தட்டி கழித்து விட்டார். 

இனி அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போனதால் வெளியே ஜாதகம் கொடுத்திருந்தார். 

மகள் வந்ததும் நடந்த கூத்தை ஒன்று விடாமல் சொல்லிவிட்டார் கிருஷ்ணம்மாள். 

“இதுக்கு தான் சொன்னேன் அதுங்கள உள்ள விடாதன்னு கேட்டியா? இப்போ அண்ணன் வந்தது பத்தாதுன்னு, தங்கச்சியும் சேர்த்து வரப் பார்க்குற. உனக்கு இது தேவைதாம்மா. என் பொண்ணோட ஜாதகம் ஒத்து வரலைன்னு ஒதுக்கி வெச்சில அந்த சாபம் தான் இப்படி வந்து மாட்டுது உனக்கு." 

"என்னய என்ன பண்ண சொல்லறடி? என்னோட பேச்சிக்கு மதிப்பு அத்துப் போய் நொம்ப காலம் ஆகுது." 

“அதுக்குன்னு அந்த ----- வீட்டுல பொண்ணு எடுக்க போறியா?” 

“இன்னைக்கு உன் பெரிய மருமவன் பண்ண காரியத்துலையே தெரியல அவன் யார் சொன்னாலும் கேக்க மாட்டான்னு.” 

“என்னமோ அம்மா, இப்போ சொல்ற நீ மார்த்தி அண்ணாவுக்கு சொல்லிருந்தா அவனாவது சந்தோசமா இருந்துருப்பான். முப்பது வருஷம் ஆகிடுச்சி இன்னும் ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து பத்து வார்த்தை பேசிப் பார்க்க முடியல.. உன் பேரன் வாழ்க்கைக்கு இருக்குற அக்கறை உன் பையன் வாழ்க்கையிலும் இருந்துருக்கலாம்.” 

“என்னடி நானே நொந்து போய் என்னோட வேதனை உங்கிட்ட சொன்னா, நீ என்னமோ நான் கெடுத்துட்டேன்னு பேசிட்டு திரியறவ..?” 

“அதுதாம்மா உண்மை மணியா இருக்கப் போய் இவ்வளவு வருஷம் உன் பையனோட குடும்பம் நடத்துது. நானா இருந்தா எப்போவோ கிளம்பி வந்துருப்பேன்.” 

“வாயை மூடி என்ன வார்த்தை பேசற நீ.?” 

“மக வந்துடுவேன்னு சொன்னா வலிக்குது, அடுத்த வீட்டுப் பொண்ண அம்மாளும் பையனும் சேர்ந்து முப்பது வருஷமா அடிமை மாதிரி நடத்தும் போது வலிக்கலையா? என்னமோ பண்ணுங்க, நான் சொன்னா கேக்கற மாதிரி இருந்துருந்தா எல்லாமே நல்லபடியா நடந்துருக்கும்.” என்று எழுந்து சென்று விட்டார். 

ஐந்து மணி நேரம் நெருங்கிக் கொண்டிருக்க.. மார்த்தி வந்துவிட்டார். 

“என்ன ராஜி கிளம்பலாமா?” 

“நான் கார் புக் பண்ணிருக்கேன், நாங்க அதுல வந்துடறோம்.” என கையில் கடிகாரத்தைக் கட்டியவாறு சொன்னான் வளவன். 

“டேய் மாமாகிட்ட என்ன மரியாதை இல்லாமல் பேசற?” 

“இவங்க பையன் நடந்துகிட்டதை விட நான் ஒன்னும் பெருசா மரியாதை கொடுக்காம விடலாம்மா, சும்மா எதுக்கு எடுத்தாலும் என்னைய சொல்லாத.” என அவரிடம் கடிந்துக் கொண்டவன், "நாங்க கார்ல வந்துடறோம் நீங்க முன்னாடி போறதுன்னா போங்க மாமா." என்று 

கேட்டவருக்கு அவமானமாகப் போய்விட்டான். 

“வளவா நீ பண்றது சரியில்ல.” 

“சரியில்லாமலே போகட்டும் அவன் பண்ண காரியத்தை நான் பண்ணிருந்தா நீ சும்மா இருப்பியா அம்மா? என்றவன், “அம்மு கிளம்பிட்டியா?” என்றான் அவளிடம் 

கோவமாக இருப்பதை உணர்ந்து, 

“கிளம்பிட்டேண்ணா” என்று சொன்னாள்.

நந்தன் வந்ததும் மண்டபத்திற்கு கிளம்பலாம் என்றிருந்தனர். கடைசி நேரத்தில் ரோகன் கேஸ் விஷயமாக போனவன், “வேலை இருக்கிறது நீங்க ஹாலுக்கு போய்டுங்க, நான் நேரா வந்து ஜாயிண்ட் பண்ணிக்கறேன்.” என்றான். அதனால் அனைவரும் முன்னாள் கிளம்பி விட்டனர்.

பெரிய அளவில் எல்லாம் நிச்சயம் செய்யவில்லை. நெருங்கிய சொந்த பந்தங்களை அழைத்து ஒரு பார்ட்டி ஹாலில் நிச்சய ஏற்பாட்டை செய்திருந்தனர்.

ஷாலினியின் குடும்பம் முன்னால் ஹாலுக்குச் சென்று விட்டனர். 150 பேர் அமரும் குளிரூட்டப்பட்ட ஹால், ஷாலினிக்கு லெகங்கா எடுத்ததுப் போல் தான் யுகியும் வளவனும் சேர்ந்து நிலாவிற்கும் எடுத்திருந்தனர்.

இருந்த பிரச்சனையில் லெகங்காவைப் போட்டுப் பார்க்க வேண்டும் என்ற நியாபகமே இல்லை நிலாவிற்கு, இப்போது போடும் போது மிகவும் இறுக்கமாக இருக்க. அங்க வனப்புகளை எடுத்துக் காட்டியது.

இந்த நேரத்தில் போய் அது சரியில்லை இது சரியில்லை என வளவனிடம் சொன்னால் அவன் சத்தம் போடுவான் என பயந்து எவ்வளவு இறுக்கமாக இருந்தாலும் பராவாயில்லை போட்டுக் கொள்ளலாம் என்று போட்டு விட்டாள்.

அதன் ஷாலை ஒருப் பக்கம் போட்டு தான் பின் செய்ய முடியும் யார் கண்ணையும் உருத்தி விடக்கூடாது என்று பார்த்து பார்த்து பண்ணினாள். அப்படி இருந்து நந்தனிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட பெருமை அவளையே சேரும்.

அனைவரும் மண்டபத்திற்குச் சென்று விட்டனர். வந்த உறவினர்கள் எல்லோரும் நந்தனை காணவில்லை என்று கேக்க அவர்களுக்கு பதில் சொல்லவே யுகியை நியமித்திருந்தார். 

“யுகி எனக்கு ஒரு பொக்கே வேணுமே.”என நிலா அவன் முன் வந்து நிற்க,

“போய் வாங்கிக்கோ என்கிட்ட எதுக்கு சொல்ற?”

“உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்டடா சொல்ல முடியும்?”

“இப்படி சோப்பு போடுவ, அப்புறம் கேக்க வந்தவனை கேனைய மாதிரி பேசி அனுப்புவ தேவையா எனக்கு.” 

“யுகி”

“முடியாது நீயே போய் வாங்கிக்கோ.”

“டேய் உன்கிட்ட கெஞ்சறேன்னு திமிரா பண்றியா?"

“ஆமா இப்போ என்ன அதுக்கு? காலையில அவன் எவ்வளவு கேவலமா நடந்துருக்கான் இப்போ வரைக்கும் என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தெரியலையா? அப்போ யுகி என்ன செத்தா போய்ட்டான்?” என வேகமாக சொல்லிவிட, சுற்றி இருப்பவர்கள் என்னமோ என நின்றுப் பார்த்தனர்.

“யுகி ப்ளீஸ் கத்தாத..”

“அப்போ என்கிட்ட பேசாத, பேசனா இப்படி தான் கத்துவேன்.”

‘யுகி இப்படி பேசாத எனக்கு கஷ்டமா இருக்கு.” என அழுது விடுபவள் போல் சொல்ல.

நடந்துகொண்டே பேசியவன் ஒரு நிமிடம் நின்று அவளைப் பார்த்தான்.

“யுகி”

“சும்மா பாவமா மூஞ்சை வெச்சிட்டு பச்ச புள்ளையாட்டம் கெஞ்சறது. ஆனா பேசும் போது பாரு பக்கா ரவுடி.” என முனவியவன் சிறிது நேரம் கெஞ்ச விடுவோம் என சுத்தலில் விட்டுவிட்டான். ஹாலில் நந்தன் இல்லை என்ற ஒன்றே நிலாவிற்கு சுதந்திரமாக சுற்ற போதுமானதாக இருந்தது.

யுகியை எப்படியாவது பேச வைத்து விட வேண்டும் என அவனின் பின்னாலையே பாவமாக முகத்தை வைத்து கெஞ்சிக் கொண்டே அலைந்தாள்.

அவனை சமாதானம் படுத்துவதில்லையே குறியாக இருந்தவள், நந்தன் வந்ததையும் கவனிக்கவில்லை அவன் இவளை பார்த்துக் கொண்டிருந்ததையும் கவனிக்கவில்லை.

“யுகி என் செல்லம்ல.. பேசுடா”

“முடியாது”

“சரி பேசாட்டி பரவாயில்ல போய் எனக்கு பொக்கே வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு பேசாம இரு.”

“எவனுக்கு சப்போர்ட் பண்ணியோ அவன்கிட்ட போய் கேளு போ.”

“நானா நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணலையே.” என்று சொல்லிக்கொண்டே திரும்பியவள் ஷாக் அடித்ததுப் போல் அதிர்ந்து நின்றாள்.

அவள் பின்னால் கையைக் கட்டிக்கொண்டு நந்தன் நின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் நிலாவின் கால்கள் தானாக பின்னோக்கிச் செல்ல அவளை காரின் பின் பக்கம் இழுத்து நிறுத்தியவன்.

“என்னடி டிரஸ் இது?”

“லெ.... கா....ங்..க”

“என்ன காவா வேணா இருக்கட்டும் ஒழுங்கா இப்போ போய் மாத்திட்டு வர..”

“டிரஸ் எடுத்துட்டு வரல.." அவன் அருகாமையில் வேறு மனம் காலையில் நடந்த நிகழ்வால் தாறுமாறாக எண்ணம் தோன்ற வார்த்தைகள் டிஸ்க்கோ ஆடியது.

“கிளம்பு வீட்டுக்கு”

“இப்போவா..?”

“பங்சன் உனக்கா நடக்குது?”

“இ.ல்.ல”

“அப்புறம் என்ன வேலை இங்க கிளம்பு?”

“அண்ணா தேடுவான்.”

“உன் நொண்ணணுகா” என ஏதோ சொல்ல வர, அதற்கு மேல் அவனை சொல்ல விடக்கூடாது என அவன் வாயை தன் கைக் கொண்டு மூடியவள்.

“நிச்சியத்துக்காக யுகியும், அண்ணாவும் தேடி தேடி எடுத்துருக்காங்க. இப்போ மாத்துனா பீல் பண்ணுவாங்க. ரெண்டு மணி நேரம் தானே ப்ளீஸ்.” என்றாள் கெஞ்சலாக.

ஒரு வேகத்தில் அவன் வாயை மூடிவிட்டாள், அவன் இப்போது ஏதாவது பேசினால் கை வைத்ததற்காக அரைமணி நேரம் புலம்பி தள்ளுவாள் என்று நந்தனுக்கு நன்கு தெரியும்.


Leave a comment


Comments 2

  • P Priyarajan
  • 1 month ago

    👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕

  • F Fajeeha Fathima
  • 1 month ago

    ஆனா ஊனா இவன் ஒருத்தன் அந்த பொண்ணை போட்டு நோண்டிக்கிட்டு சும்மா தான் இரேன்டா நந்தா.. இனி என்ன நடக்க போகுதோ சூப்பர் யூடி என்ட் தாங்க்யூ அக்கா


    Related Post