இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 37 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 02-06-2024

Total Views: 15693

அத்தியாயம் 37

"என்ன சொல்றீங்க... எனக்கு புரியலயே...?" என திகம்பரன் கேட்க.

அவன் அருகில் வந்தவரின் முகம் பார்க்கவே கொடூரமாக இருந்தது.

அத்தனை கோபம் கண்களில்

"எங்கிட்டயே நடிக்கிறியா திகம்பா...." என்றவர் அவன் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைக்க சர்வமும் ஆடிப்போனது அவனுக்கு.

"எதுக்கு அடிக்கிறீங்க...?" என அவன் தம்பி முன்னால் வர.

ஆள்காட்டி விரலை வாயில் வைத்து ஷ்ஷ்ஷ்.....என்றவர் "அந்த மகிழா விஷயத்துல தலையிடாதன்னு உன் அண்ணன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்... கேக்கல...இப்ப அவ வாழ்க்கையவே கெடுத்துட்டு வந்து நிக்கிறான்... உங்ககிட்ட நான் ஏற்கனவே சொல்லிட்டுதான் இருக்கேன்.... அந்த சக்கரவர்த்திய பத்த.... அவன உங்க யாராலயும் எதுவும் பண்ண முடியாதுன்னு.... அவன என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்... சும்மா அந்த அருவி மேல ஆசைய வச்சிட்டு... அவளுக்காக நீ மகிய வாழ்க்கைய கெடுப்பியா...?" என திகம்பரனை பார்த்து கர்ஜிக்க.

திகம்பரனின் தம்பியோ "யாரோ ஒருத்திக்காக இவனையே அடிப்பியா... அப்படி என்ன அவ உனக்கு முக்கியமா போய்ட்டா... கண்டவளுக்காக நீ பெத்த பையன அடிக்கிற... அதுவும் தலைக்கு உசந்தவன... ஆமா... அவ மேல எதுக்கு இவ்ளோ அக்கறை உனக்கு...?" என கேட்க.

வஜ்ரவேலு அவன் அருகில் வந்தவர் அவன் கன்னத்திலும் ஒன்று வைக்க அடிவாங்கிய கன்னத்தில் கையை வைத்தபடி "அப்பா...." என அவனும் கத்தினான். 

"வாயமூடு யாரப்பார்த்து யாரோ ஒருத்தின்னு சொன்ன... அவளுக்கு அப்பன் நான் இருக்கேன்டா..." என்க.

வாங்கிய அடியில் வலித்த கன்னத்தை விட வஜ்ரவேலுவின் வார்த்தைகள் அவர்கள் இருவருக்கும் பெரும் வலியை கொடுத்தது.

இருவரும் அவரையே அதிர்ச்சியாக பார்க்க "என்ன சொல்றீங்க...?" என கேட்டான் சிறியவன்.

"இப்பக்கூடவாடா புரியல... அந்த மகிழா உங்க அப்பாவோட பொண்ணு... அப்ப உங்க ரெண்டு பேருக்கும் தங்கச்சின்னு சொல்றாரு... இதக்கூட புரியாம இத்தன நாளா இந்த ஊர்ல இருக்கீங்க...." என வஜ்ரவேலுவின் மனைவி காளியம்மாள் கூறினார்.

பெயரை போலவே காளி அவதாரமாக நின்றிருந்தவரை பார்த்ததும் வஜ்ரவேலுவுக்கே உள்ளுக்குள் பயம் தொற்றிக் கொண்டது.

மெல்ல நடந்து வந்தார் கண்டாங்கி புடவை கட்டியிருக்க முடியையும் கொண்டையிட்டு இருந்தார்.

கருநீலக்கண்ணனின் நிறத்தில் இருந்தவர் நெற்றியில் சிவப்பு வண்ண பெரிய பொட்டு வைத்திருக்க உக்கிரமாக இருந்த முகம் பார்க்க நிஜமாக காளியம்மனே நேரில் வந்தது போல இருந்தது வஜ்ரவேலுவிற்கு.

மெதுவாக நடந்து வந்தவர் வஜ்ரவேலுவை நக்கலாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து தன் கணவனை கூர்மையாக பார்க்க அவரும் சலிக்காமல் அவரது பார்வையை எதிர்கொண்டார்.

"உன் பொண்ணுக்காக என் பசங்கள அடிப்பியா... யார் கொடுத்த தைரியம் இது... நீ அனுபவிக்கிற இந்த சொத்து எல்லாமே என்னால உனக்கு வந்ததுன்னு மறந்துட்டியா...?" என கேட்க. 

"சொத்து உன்னோடதா இருக்கலாம்... ஆனா அத இத்தன வருஷமா கட்டிக்காப்பாத்தி அத அடுத்த நிலைக்கு கொண்டு போனது நானு... அத மறந்துட்டியா நீ...?" என கேட்டார் வஜ்ரவேலு.

"என்வீட்டுல என் அப்பார பார்த்தாவே தானா  இடுப்புல துண்ட கட்டிட்டு எழுந்து நின்னுதெல்லாம் மறந்துட வேணாம்...ஏதோ என்னய கட்டிக்கிட்டதால இன்னைக்கு உனக்குன்னு ஒரு அடையாளம் இருக்கு...உன்ன பழைய மாதிரி சோத்துக்கு லாட்டரி அடிக்க வைக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது... சிங்கக்குட்டி மாதிரி ரெண்டு பசங்க இருக்கானுங்க... என் பேச்ச மீற மாட்டானுங்கன்னு உனக்கு நல்லாவே தெரியும்... ஆனாலும்... என் முன்னாடி என் பசங்க மேல கைய வைக்க உனக்கு எவ்ளோ தைரியம்... திகம்பா... பரமா.... இந்த ஆளு இனி உங்க மேல கைய வச்சா... வச்ச கைய எடுத்துடுங்கடா..." என அனல் பொங்க கூற.

திகம்பரனோ வஜ்ரவேலுவை நக்கலாக பார்த்தபடி வந்தவன் "அம்மா... எங்களுக்கு தெரியாம நிறைய விஷயங்கள் இருக்கு போல... ஏன் இத்தன நாளா சொல்லல... அப்பவே சொல்லி இருந்தா... இந்த ஆள இத்தன நாளா ஆடவிட்டு வேடிக்க பார்த்துட்டு இருந்துருக்க மாட்டோமே...பல்லு புடுங்கின பாம்பு மாதிரி வீட்டோட இல்ல உக்கார வச்சிருப்போம்..." என்க.

"இப்ப மட்டும் என்ன... இது உங்க வீடு... இந்த சொத்து பத்து ஆஸ்தி எல்லாம் என் அப்பாரு எனக்கு கொடுத்தது... இது எனக்கு அப்பறம் உங்க ரெண்டு பேருக்கும் வந்து சேரும்... வெறும் நிர்வாகம் மட்டும்தான் இந்த ஆளோட வேலை... அதனால உங்ககிட்ட ரொம்ப வாலு ஆட்டினா ஒட்ட நறுக்கிடுங்க... நான் எதுவும் கேக்க மாட்டேன்..." என்க.

"அதான் நீங்களே சொல்லிட்டீங்களே இனி நாங்க பார்த்துக்கிறோம்...." என்றான் பரமசிவன் திகம்பரனின் தம்பி.

"வேணாம் காளி... இது நல்லதுக்கு இல்ல..." என வஜ்ரவேலு கூற.

"உன் ஓடுகாலி மகளுக்கு நீ இவ்ளோ சப்போர்ட் பண்ணி துள்ளி குதிக்கும்போது... என் சிங்கக்குட்டிக்கு நான் எவ்ளோ துணையா நிப்பேன்... இனி உன் ஆட்டம் எங்கிட்ட செல்லாது... போ... போய்... அந்த சக்கரவர்த்தி கை காலுல விழுந்து... உன் மவள காப்பாத்திக்க... அப்படியே உன் வப்பாட்டியையும் அவளுக்கு பிறந்த அந்த குடிகார பையனையும் முடிஞ்சா காப்பாத்திக்க...." என்க.

"காளி இதுக்கு நீ பதில் சொல்லனும்...." என வஜ்ரவேலு கர்ஜிக்க "ஷு.... என் அம்மாகிட்ட இந்த மாதிரி பேசற வேலை எல்லாம் வச்சிக்காத.... அப்பறம் பேச வாய் இருக்காது..." என்றான் திகம்பரன்.

அவர்களை முறைத்து பார்த்துவிட்டு "உங்கள பார்த்துக்கிறேன்...." என்றுவிட்டு அவ்விடம் விட்டு அகல மகன்கள் மூவரும் காளியம்மாவின் புறமாக திரும்பினர்.

"அம்மா... என்ன நடந்துச்சு... ஏன் இத்தன நாளா எங்ககிட்ட அந்த ஆளுக்கு இன்னோர் குடும்பம் இருக்கறத மறைச்சீங்க....?" என பரமசிவன் கேட்க.

அங்கே இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்த காளியம்மாள் முப்பது வருடங்களுக்கு முன்னால் நடந்ததை கூற ஆரம்பித்தார்.

வாசுவின் வீடு

சக்கரவர்த்தி யின் குரலில் மூவரும் திரும்பி பார்க்க" இங்க நடந்தது எதுவும் உங்க அம்மாங்களுக்கோ... இல்ல அருவிக்கோ... தெரிய கூடாது.. வாசு நீ இவள குடோனுக்குள்ள தூக்கிட்டு போய் கட்டிப்போட்டுடு.... இவ எங்கேன்னு உங்க அம்மாங்க கேட்டா... அவ அம்மாள பாக்க போய் இருக்கறதா சொல்லிடுங்க... இவ அம்மா இப்போதைக்கு இங்க வரமாட்டா.... தர்மா நம்ம பசங்கள்ட்ட சொல்லி... இவனுங்க ரெண்டு பேருக்கும் துணையா போக சொல்லு... நான் உயிரோட இருக்கற வரைக்கும் இந்த ஊர்ல ஒரு கெட்டது நடக்க கூடாது... நடக்கவும் விட மாட்டேன்.... சீக்கிரம் கிளம்புங்க உங்க அம்மா ரெண்டு பேரும் சமையல் செய்யற இடத்துல இருக்காங்க... அவங்களுக்கு சந்தேகம் வரதுக்குள்ள அருவியும் சுசிலாவும் வீட்டுல இருக்கனும்... வாசு இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்ச பிறகு ஊர் அறிய உனக்கும் சுசிலாவுக்கும் கல்யாணம்...." என்க.

"அப்பா அவள முதல்ல நான் கண்டுபிடிச்சிடறேன்பா...." என்க.

"இந்த ஊருக்குள்ள நீ காலடி எடுத்து வைக்கும்போது நீ சுசிலாக்கூடத்தான் வர..." என்றார் அவர்.

"கண்டிப்பாப்பா..." என்றவன் அவரை அணைத்து விடைபெற இது அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான் சுரேந்தர்.

சக்கரவர்த்தியை  காணும் பொழுது அவன் கண்களில் கோபக்கனல் கொழுந்துவிட்டு  எரிய அவரை எரிக்கும் கண்களோடு பார்த்துக் கொண்டே வெளியேறினான்.

அவனின் பார்வையும் அவனது எண்ண ஓட்டத்தையும் அறிந்து கொண்ட சக்கரவர்த்திக்கு சிரிப்புதான் வந்தது.

வெளியேறிய நால்வரும் அங்கு நின்றிருந்த வேலுவையும் பரணனையும் காண அவர்களோ கண்களில் கலக்கத்தோடு நின்றிருந்தனர்.

"வேலு...." என்ற குரலில் திரும்பி பார்த்தவர் "ஐயா... சுசிலாவ காணும்... அருவியத்தான் பாக்க வரதா இவன்கிட்ட சொல்லி இருக்கு... எனக்கு பயமா இருக்கு...
"என கண்களை துடைத்துக் கொள்ள சக்கரவர்த்தி அவர் அருகில் சென்று அவர் கையை பிடித்து கொண்டவர் "உம்பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது... அதுக்கு நான் பொறுப்பு... நீ கவலைப்படாத... இன்னைக்கு பொழுது விடியறதுக்குள்ள உன் பொண்ணு உன்வீட்டுல இருப்பா...." என்க.

அவரை கை எடுத்து கும்பிட்டவர் "ஐயா... உங்கள நம்பித்தான் நாங்க இருக்கோம்... நாளைக்கு விஷேசத்துக்கு இன்னைக்கே ஊர் மக்கள் யாரு வீட்டுலயும் சோறாக்கல... இங்க வந்துதான் சாப்ட்டு போறாங்க... ஊருக்கு ஒன்னுன்னா நீங்கதான் முன்ன நின்னு செய்யுறீங்க... என் பொண்ணையும் எங்கிட்ட ஒப்படைச்சிடுங்க ஐயா... நாங்க இந்த ஊரவிட்டே போய்டுறோம்...." என்க.

தர்மனோ "வேலு... என்ன பேச்சு பேசிட்டு இருக்க... சுசிலா என் வீட்டு மகாலட்சுமி... அவள தொலைக்க மாட்டோம் வாசு கிளம்புங்க..." என்க.

அவனோ "அங்க... என மகிழாவின் அறையை காட்ட "நாங்க பார்த்துக்கிறோம்.... சுசிலா, அருவி ரெண்டு பேரும் விடியறதுக்குள்ள இங்க இருக்கனும்...." என்க.

இளவட்டங்கள் இரண்டும் வாசுவின் ஜீப்பை நோக்கி செல்ல தர்மனின் வார்த்தையில் குழம்பி நின்றார் சுசிலாவின் தந்தை வேலு......



Leave a comment


Comments


Related Post