இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 7 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 03-06-2024

Total Views: 13490

அத்தியாயம் 7



      சிறிது நேரத்தில் முரளி, அன்பழகன் வந்து விட்டனர். ஓட்டலுக்கு  கொஞ்சம் தள்ளியிருந்த மரத்தடியில்  கட்டியிருக்க திண்ணையில்  சென்று நண்பர்கள் மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.  அப்போது அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் இவர்கள் அருகில் வந்தார். 
   
    "தம்பி நீங்க வீரராகவன் பையன் கார்த்திகேயன் தானே" என்றார்.  

   கார்த்தி பதில் சொல்லும் முன் அன்பு  "பெரிசு உனக்கு இவன் தம்பியா?..." என்றான். 

    "அது இல்லப்பா" என்று பேச ஆரம்பிக்கவும் 

   "என்னாது அப்பாவா?...  பெரிசு நான் உனக்கு அப்பாவா?.." 
   
    "அது ஒரு பேச்சுக்கு கூப்பிடறதுப்பா" என்றார் பெரியவர். 

    "திரும்பவும் அப்பாவா?..." என்றான். 

   "அய்யோ பேராண்டி  நான் கேட்க வந்ததையே மறந்திடுவேன் போல" என்றார் பெரியவர். 

    "ஆங்...   இது சரி இப்ப சொல்லுங்க நீங்க அப்படி என்ன முக்கியமான விஷயம் கேட்க வந்தீங்க?.... "

  " அதுவா பேராண்டி இவ்வளவு வருஷமா எங்க எங்க போனாரு எப்படி இருந்தார் என்று தான் கேட்க வந்தேன்" என்றார். 

   " அதை கேட்டு நீங்க என்ன பண்ணப்பபோறிங்க?..." என்றான் அன்பு. 

   " அதுவா பேராண்டி எந்த ஊருக்கு போனாரு அங்க என்னென்ன இருக்குன்னு கேட்டு பொது அறிவை வளர்த்துக்கத்தான்" என்றார். 

  " பொது அறிவு வளர்த்து நீங்க என்ன  டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு எழுதி கவர்மென்ட் வேலைக்கா போகப்போறீங்க?... " என்று கேட்டதும் கார்த்தியும் முரளியும் வாய் விட்டு சிரித்தனர். 

   பெரியவர் தலையில் அடித்துக்கொண்டு  "உங்ககிட்ட பேச வந்தேன் பாரு என்னை தான் அடிச்சுக்கனும்" என்று அங்கிருந்து சென்றார். 

  " ஏன்டா இப்படி பண்ண விசாரிக்க வந்தது குத்தமாடா?..." என்றான் கார்த்தி. 

   "நீ வேறடா அந்த பெரிசு விவகாரமான ஆளு நம்ப ஒரு வார்த்தை பேசுனா அது ஆயிரம் வார்த்தையா திரிச்சு கதை பண்ணிடும் அதான் அப்படி பேசினேன்"  என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே புல்லட் வண்டி சத்தம் கேட்க. 

   " டேய் நீங்க பேசிட்டு இருங்க எனக்கு கடையில் வேலை இருக்கு" என்று எழுந்து சொல்ல பார்த்தவனை கை பிடித்து தடுத்தான் முரளி. 

   "அவனை பார்த்தா உனக்கு என்ன பயம் இப்படி வண்டி சத்தம் வச்சே ஓடுற" என்றான். 

    "டேய் விடுடா அவன் கிட்ட வந்துட்டான் அப்புறம் சொல்லுறேன்" என்றான். 

   இவர்கள் பேசிவதை புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்த கார்த்தி யாரை பற்றி பேசுறாங்க என்று திரும்பி பார்க்க சிறிது தொலைவில் புல்லட் வண்டியில் ஆஜானுபாகுவான உருவத்தில் சற்று கருமை நிறத்தில் ஒருவன் அமர்ந்து இருந்தான்.  அவனிடம் ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார். 

   அந்த முகம் அவனுக்கு பழகிய முகமாகத்தான் இருந்தது ஆனால் யார் என்று நினைவு வரவில்லை. 

   "டேய் விடுடா அவன் முகத்தை பார்த்தே கண்டுபிடித்து விடுவான். அப்புறம் இரண்டு தட்டு தட்டினால் எல்லாத்தையும் உளறிடுவேன்" என்றான் அன்பு. 

  " யாருடா அது?" என்றான் கார்த்தி 

    "டேய் கார்த்தி அவனை உனக்கு தெரியலையா?..." என்று ஆச்சரியத்துடன் கேட்டான் முரளி. 

  " இல்லைடா பார்த்த முகமாகத்தான் இருக்கு ஆனால் தெரியவில்லை" என்றான் கார்த்தி. 

  " அவனுக்கு எப்படி அவனை அடையாளம் தெரியும் அம்பி மாதிரி இருந்தவன் இன்னைக்கு அய்யனார் மாதிரி இருந்தால்  எப்படி தெரியும்" என்றான் அன்பு. 

   அவன் சொல்வதை கேட்டவனுக்கு அன்று காலை கயல்விழி பேசியது நியாபகம் வரவும்  "இளவரசனாடா" என்றான் ஆச்சரியமாக 

   நண்பர்கள் "ஆமாம்" என்று தலையாட்டினார்கள். 

  " எப்படிடா இப்படி ஆனான் நம்ப கூட விளையாட கூப்பிட்டால் கூட ஒதுங்கி போவான்  இப்ப இப்படி பாடிபில்டர் மாதிரி இருக்கான்." 

    "அதுக்கு நீ தான் காரணம்" என்றான் அன்பு. 

    "நான் காரணமா?.. அவளும்  அப்படி தான் சொன்னா  இப்ப நீயும் நான் தான் காரணம் சொல்லுறாய்" என்றான். 

  " நீயே தான் காரணம் நீ ஊரை விட்டு போனதும் அதுவரை இருக்கிற இடமே தெரியாமல் இருந்தவன்  நீ ஊரை விட்டு போக காரணம் ஆக இருந்தவங்களை எல்லாம் இவனும் உன் தம்பி பிரண்ட்ஸ் என்று போய்  வெளுத்து வாங்கிட்டான்." 

   " அதுக்கு பிறகு இப்படி உடம்பை பாடிபில்டர் மாதிரி மாத்திட்டான்.   யாரும் உன் குடும்பம் பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசினா அவங்க அடுத்த ஆறு மாதம் எழுந்து நடக்காத மாதிரி பண்ணிட்டான்.  மாமாகிட்ட உன்னை பத்தி சும்மா விசாரித்தாக்கூட அவங்களை உண்டு இல்லை என்று பண்ணிட்டு இருந்தான்." 

  " மாமா நீ போனதுக்கு அப்புறம் ரொம்ப கவலையில் வயல் பக்கம் கூட போகுறது குறைச்சிட்டார். இவன் ஸ்கூல் போகறதுக்கு முன்ன அவங்க அப்பாவை கூட்டிட்டு போய் என்னென்ன வேலை செய்யனும் சொல்லி விட்டுட்டு ஸ்கூல் போயிட்டு வந்து திரும்ப எல்லா வேலையும் நடந்ததா என்று பார்த்திட்டு வருவான்.  இவனை பார்த்து உன் தம்பியும் வயக்காட்டுக்கு போக ஆரம்பித்தான்." 

   "காலேஜ் படிக்கற அப்பவும் இப்படியே தான் பண்ணான்.  படித்து முடித்ததும் போங்க் லோன் போட்டு கோழி பண்ணை வச்சான்.  இப்ப அதையும் பார்த்திட்டு உங்க நிலம் மொத்தமும் அவன் தான் பார்த்துக்கிறான்" என்றான் அன்பு. 

  " ஏன்டா அவன் லோன் போட்டான் அப்பாகிட்ட கேட்டா அவரே கொடுத்து இருப்பாரே" என்றான் கார்த்தி 

 " அங்கிள் அப்படி தான் சொல்லி இருக்கார் ஆனா அதை மறுத்திட்டு அவன் லோன் போட்டான் என்று என் அப்பா சொன்னார். அதே மாதிரி வேலை செய்ததற்கு  ஒரு ரூபாய் கூட எடுத்தது இல்லையாம்.  என் அப்பா கேட்டதற்கு சாப்பிடுற சாப்பாடு போட்டு இருக்கிற துணி தங்கி இருக்கிற வீடு படித்த படிப்பு எல்லாமே மாமா கொடுத்தது அதுக்கே இன்னும் அதிகமாக உழைக்கனும் என்று சொல்லிட்டு போனானாம்" என்றான் முரளி. 

   "ஆக அவன் தன்னை ஒரு வேலைக்காரனாகத்தான் நினைச்சுட்டு நன்றி கடனாக எல்லாம் செய்யுறான் அந்த குடும்பத்தில் ஒருத்தனா நினைச்சு செய்யலை.  இதுக்கு எல்லாம் காரணம் அத்தை தான் அவங்க தான் பேசிப்பேசி இவனை இப்படி ஆக்கியிருக்காங்க" என்று வறுத்தமான குரலில் கூறினான். 

  அதற்குள் இளவரசன் தன் புல்லட் வண்டியை நிறுத்தி விட்டு இவர்களை நோக்கி வந்தான்.  

   " அத்தான்" என்று குரலில் அவ்வளவு பாசம் நிறைந்து இருந்தது.  கார்த்தி அவனை நெருங்கி கட்டிக்கொண்டான்.  

   " அரசு எப்படிடா இப்படி மாறுன அடையாளமே தெரியலை உன்னை பார்த்தா எனக்கே பயமாக இருக்கு" என்றான் கார்த்தி. 

    "அத்தான்" என்று பாவமாக முகத்தை வைத்து பார்த்தான் இளவரசன். 

    அதை கண்ட அன்பு முரளியின் காதில்  "ஏன்டா இவன் ஊரில் இருக்கிறவனை முறைச்சே ஓட வைப்பான் ஆனால் கார்த்தியை பார்த்து பேச்சு வராமல் இப்படி பாவமாக நிக்குறான்" என்றான். 

   கார்த்திக்கேயன் ஆறடிக்கு மேல் உயரமாக இருந்தான்  என்றால் இளவரசன் ஆறடி உயரம் இருந்தான் அவன் தோளில் கை போட்ட கார்த்தி 

     "எப்படிடா இவ்வளவு உயரம் வளர்ந்த அப்பொழுது எல்லாம் குள்ளமாகத்தானே இருந்த இப்ப என்ன என்று பார்த்தா என் உயரத்திற்கு கொஞ்சம் தான் குறைவாக இருக்க" என்று பேசிக்கொண்டே இருக்க பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான் இளவரசன். 

   அவன் பதில் சொல்லாமல் இருப்பதை கண்ட கார்த்தி அவன் முகத்தை பார்க்க அவன் கண்கள் கலங்கி இருந்தன.   
 
  " டேய் அரசு என்னடா" என்று கேட்டதும் கார்த்தியை கட்டிக்கொண்டு  "ஏன் அத்தான் வீட்டை விட்டு போனீங்க.  அப்படி போன நீங்க கோபம் குறைந்ததும் திரும்ப வீட்டுக்கு வந்து விடுவீங்க என்று எதிர்ப்பார்த்தேன்.  அப்பவும் வரவில்லை இவ்வளவு வருஷம் கழிச்சு வந்து இருக்கிங்க அப்பவும் மாமாகிட்ட என்னென்னவே சொல்லி இருக்கிங்க அதெல்லாம் உண்மையான அத்தான்." 

  " கண்டிப்பாக அதெல்லாம் நீங்க செய்து இருக்கமாட்டீங்க. என் அத்தான் பத்தி எனக்கு தெரியும்.  தப்பு செய்த எங்களை வீட்டை விட்டு வெளியே துரத்தாமல் நீங்க ஏன் அத்தான் வீட்டை விட்டு வெளியே போனீங்க" என்றான் இளவரசன். 

  " அரசு என்னடா பேசுற நீங்க என்ன தப்பு பண்ணீங்க" என்றான் கார்த்தி. 

  " அப்பா தானே அத்தான் காரணம் எதையும் சரியாக புரிந்துக்காமல் யார் என்ன சொன்னாலும் கேட்டுட்டு வந்து அத்தை கிட்ட சொல்லி அவங்க கேட்டுத்தானே பிரச்சனை ஆகி வீட்டை விட்டு  போனீங்க" என்றான். 

  "அரசு மாமாவுக்கு இதுக்கு எந்த சம்பந்தமும் இல்லை  அதனால் நீ வறுத்தப்படாத, அப்புறம் என்னென்னவே கேள்வி பட்டேன்  கோழி பண்ணை எல்லாம் கடன் பட்டு வச்சு இருக்கியாம்" என்றான் கார்த்தி. 

  " அது அத்தான்..." என்று தயங்கினான் இளவரசன். 

 " அது எல்லாம் எனக்கு தெரியும்  அப்புறம் பேசிக்கலாம் சண்முகம் மாமாகிட்ட சொல்லுறேன் பாங்க்கில் இன்னும் எவ்வளவு கட்டனுமே வாங்கிட்டு போய் கட்டிவிடு" என்றான் கார்த்தி. 

  " இல்லை அத்தான் இன்னும் மூன்று மாதம் தான் கட்டனும் நானே கட்டிடுறேன்" என்று சொன்னவன் "நீங்க ஏன் அத்தான்  உங்க வீட்டுக்கு வராமல் அங்க தனியாக இருக்கிறேன் என்று சொல்லி  இருக்கீங்க" என்றான் அரசு. 

  " என்னது உங்க வீடா?... என்ன அரசு பேச்சு இது" என்று கண்டிக்கும் குரலில் கேட்டாள் கார்த்தி. 

  " ஆமாம் அத்தான் அது உங்க வீடு தானே" என்றான் இதுவரை இருந்த அமைதியான குரல் போய் இப்போது உறுதியான குரலில் கூறினான். 

  " அரசு உன் பேச்சும் சரியில்லை உன் நடவடிக்கையும் சரியில்லை இப்பதான் இவனுங்க சொன்னாங்க இதுக்கெல்லாம் அத்தை தான் காரணம் என்று தெரியும் அவங்க கிட்ட முதலில் பேசிட்டு அப்புறம் உன்னை கவனிக்கிறேன்" என்றவன். 

   "கொஞ்ச நாள் நான் தனியாகவே இருக்கேன் இப்ப நான் நம்ப வீட்டுக்கு வந்தா படிச்ச நீயே நாங்க தானே காரணம் என்று சொன்ன அதே மாதிரி தான் வீட்டில் இருக்கறவங்க எல்லாம் நினைச்சு என்னை பார்த்து பார்த்து வறுத்தப்பட்டு உடம்பை கெடுத்துப்பாங்க.  அதனால் தான் வரவில்லை" என்று சொன்னேன்.  

   " அப்புறம் நம்ப வீட்டில் இருக்கிறவங்களை பத்திரமாக பார்த்துக்கிற உரிமை உனக்கு இருக்கு வேலைக்காரனாக இல்லை அந்த வீட்டு பிள்ளை என்ற உரிமையில் அதை நியாபகம் வச்சுட்டு இனி எதையும் செய்"  என்று கட்டளை குரலில் கூறியவன்   "அப்பாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனீங்களா?..." என்றான். 

  " ஆன்...   சரவணன் கூப்பிட்டு போயிட்டு வந்துட்டான் பிரசர் கொஞ்சம் அதிகமாக இருக்கு என்று சொல்லி இருக்காங்க அத்தான்" என்றான் அரசு. 

  " சரி பத்திரமாக பார்த்துக்க இப்ப எங்காவது வெளியே போயிட்டு இருந்தியா?.. " என்றான் கார்த்தி. 

  " இல்லை அத்தான் ஒரு வேலையா சென்னைக்கு நேற்று போயிட்டு இப்ப தான் வந்தேன் வந்ததும் மாமா சொன்னார் நீங்க வந்திட்டிங்க என்று உங்களை பார்க்க கிளம்பின அப்ப தான் அம்மா அன்பு அண்ணா கடைக்கு வந்து இருக்கிங்க என்று சொன்னாங்க அதான் இங்க வந்தேன்" என்றான். 

   பேசிக்கொண்டு இருக்கும் போது கடையில் வேலை செய்பவர் டீயும் ஸ்நாக்ஸ்சும் கொண்டு வர அதை வாங்கி உண்டு கொண்டே இளவரசனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அவனை அனுப்பி வைத்தான். 
  





Leave a comment


Comments


Related Post